திங்கள், 3 நவம்பர், 2014

உன்னையே நீ அறிவாய்


உன்னையே நீ அறிவாய் ஆத்மீகர்கள் இறுதிகாலத்தில் எண்ணுகிற எண்ணத்திற்கு ஏற்ப அவனுக்கு அடுத்தபிறவி வாய்க்கிறது. அதனால் பிறவா நிலை எனும் பேரின்ப நிலை எய்த இடைவிடா ஈஸ்வர சிந்தனையுடையவனாக இருப்பதுதான் விசேசம். தாராள குணமும் சரளமான சுபாவமும் ஒருவனுக்கு அவனவன் தவத்தின் பயனாக வந்தவை என்பதை அறியவும், எந்த உணர்ச்சிக்கும் இடம் கொடாது சித்தம் கலங்காது நிலையான திறம் பெற்றவனே உண்மையான ஆன்மீகவாதியாக வாழமுடியும். இவற்றிக்கெல்லாம் வழிவகுக்கும் மனோசக்தியும் தேவரகசியங்களையும் பெறக்கூடியதே தியானம். மனிதனாக பிறந்த எவருக்கும் உலக விதிப்படி மூன்று கடமைகள் உண்டு. முதல் கடமை பெற்றோர்கள் நம்மை பிறப்பித்து வளர்த்தனால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு, அவையாதெனில் நற்குலத்து நங்கையை மணந்து தன் வம்சத்திற்கு வளமளிக்கும் மக்களைப் ெப்ற்று பித்ருக்குகளை அளிக்க செய்து,மற்றொன்று உலகமனைத்தும் சிறந்த பண்பாட்டை பரப்பவல்ல திருமறைகளை முனிவர்கள், சித்தர்கள்நமக்கு அறிய பொக்கிசமாக தந்துவிட்டு போனதை அவர்களுக்கு பிரதி உபகாரமாக செய்ய வேண்டிய கடமை அந்த மறைகளை ஓதி எங்கும் பெருண்மைகளை பரவச் செய்து சித்தர்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் அவர்கள் ஆசியை பெறவேண்டும். மூன்றாவதாக இறைவன் அளித்துள்ள நன்மைகளை உலகுக்கு பயன்படுத்தி உயர்ந்த பொருட்களை தேவர்களுக்கு கொடுப்பதாகிய வேள்விகளை செய்து இறைவனின் அனுக்கிரம் பெறவேண்டியதாகும். மூன்றுகடமைகளுடன் பிறந்த மனிதனுக்கு உத்தமகுணம் மற்றும் சத்துவகுணம் அமைந்தவனாக ஆகிறான். அபூர்வ சத்துவகுணம் கொண்டவன், பொறுமையும், பொறுப்பும் நிதானமும் உடையவனாகவும் இருப்பான். மண்ணுயிரும் தன்னுயிர் போல் பாவிக்கும் உத்தமகுணமுடையவனாய் ஈகை, இரக்கம், தர்மகுணத்தவனாய், அடியார்களிடம்அன்பு செலுத்துபவனாகவும், சாஸ்திர சம்பந்தங்களை கற்றுணர்ந்து அவற்றினை ஆராய்ந்து அதன் பேருண்மைகளை பிறர்க்கு போதிக்கும் குணமுள்ளவனாகவும் சாஸ்திர சம்பந்தங்களுக்கு விரோதமாக நடக்காதவனாய், குருவிடம் பக்தி செலுத்துபவனாகவும், பெரும் நிலை எய்த தவம் போன்ற பரமார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவனாகவும் இருப்பான். இரண்டாவதான ரஜோகுணம் - அதிகார தன்மையும் தான் என்ற மமதையும் எதையும் சாதித்திட வேண்டும் என்ற பிடிவாதமும், துஸ்டத்தனமான மனிதர்களின் சகவாசமும், தன்னைவிட பலம் குறைந்தவனை தன் அதிகாரத்தால் அதட்டி பணிய வைப்பதும், எந்தநேரமும் பணமே பெரிதெனவும் அதை சம்பாதிப்பதிலேயே காலம் கழிப்பனாகவும், கொடூர செயலையுடைய தெய்வங்களை ஆராதிப்பனும் ஆவான். மூன்றாவதாக தமோ குணமுடையவன் - மிருகங்களையும் தன்னைவிட பலம் குறைந்தவர்களை வதைப்பதும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவனுமாயும், பொய், களவு, சூது செய்பவனும் மயக்கமுறும் கள், போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாயும், புலால் உண்ணுவனுமாகவும், எதையும் பகுத்தறிந்து செயல்படாதவனாகவும் சோம்பல் உடையவனாகவும் நியாயத்திற்கு புறம்பானவனாகவும் பூத பிசாசு கணங்களை பூசிப்பதும் எப்போதும் கெடுதலே செய்து வனதேவதைகளை வணங்குவனாகவும், நிதானமின்றி நடப்பவனாகவும் இயற்கை விதிகளுக்கு புறம்பாக நடப்பவனுமாக இருப்பான். எனவே நற்குணமுடைய பெரியோர்களுடன் கூட்டு கொள்ள வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறுகிறார், சாத்மீக குணமும் தெய்வீக பண்பும் பெரியவர்கள் கூட்டுறவும் பெற்றால் அவர்களது அன்பும், பரிவும் நம்மை உத்தம குணங்களை உண்டாக்கி இறையருள் பெறச்செய்யும், பெரியவர்களின் கூட்டு சேர்ப்பதால் குரு அருள் பெறமுடியும், குருவின் அருளின்றி ஞான நெறிகளையும் தெய்வ சக்திகளையும் பெறமுடியாது. எல்லாவற்றிக்கும் ஒளி விளக்காய் திகழும் குருவின் பாதாசாரங்களை சரணடைந்தால் புரியாத விசயங்களையும் புரிகின்றபடி வழிகாட்டுவார். தானம் - மானம் குலம் திருவாய்த்தாலும் தானே வருமோ முக்தி குருவின்றி ஏது முக்தி ? குருவின் அருள் கிடைத்தால் எல்லா பாவங்களும் கதிரவனைக்கண்ட பனிபோல் விலகும். குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும என்ற விதிப்படி, காமகுரோதாதி, துர்குணங்களற்றவாய், வேதாந்த, சித்தாந்தங்களை சாஸ்திரப்பியாசம் செய்து அதன் உண்மைப் பொருளை உணர்ந்தவராய், பனிரெண்டு வருடம் பிரம்ம நிஸ்டை செய்து பிரம்ம சொரூபமாகவே விளங்குபவராக உள்ளவர்எவரோ அவரே சத்குருவாகும். குருமார்கள் எண் வகையானவர்கள் எனவே அவர்களை அஸ்ட குருமார்கள் என்பார்கள். போத குரு ; சாஸ்திரங்களை போதிப்பவர் வேதகுரு : தத்துவார்த்தைகளை கூறுபவர் நிசித்த குரு: வசிகம் போன்ற வித்தைகளை போதிப்பவர் காமியக்குரு : இம்மை, மறுமை இன்பத்தை போதிப்பவர் சூசக குரு : நித்யம்,அநித்தியம் எனும் விவேகத்தை போதிப்பவர் வாசக குரு: ஆன்மாவில் விருப்பம் உண்டாக செய்பவர் காரணகுரு: ஜீவப்பிரம்ம ஜக்கியத்தை ஞான உபதேசம் செய்பவர் விகிதகுரு : சீடர்தம் ஐயம் நீக்குவது நித்தியமாயுள்ள மோட்சம் அடைய அருள் செய்பவர் இவ்வாறு ஒவ்வொரு குருவிடம் ஒவ்வொரு சக்தியும் சித்தியும் இருக்கும். அந்த சித்திகளைநாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் , இதற்கு பணிவும் குருபக்தியும் இருந்தால்தான் முடியும் ஒரே மனத்துடன் இடைவிடாது, யோகத்தை பயிலவேண்டும். தியானம் உடல் வலிமைக்கும் மன அமைதிக்கும் தியானம் உதவுகிறது. தியானத்தினால் யோகம் அறிய தகுந்தது, யோகத்தின் சாதனையே வாயுவை கட்டுப்படுத்துவதுதான், இந்த வாயு நாசமடைந்தால் பிணமாகிறது, உயிரற்ற உடலால் செயலாவத யாதொன்றும் இல்லை. ஜீவனிருக்கும் உடல்தான் எல்லா இயக்கங்களையும் செய்ய முடியும். இந்த ஜீவனான பிராணனை தன் வசத்தில் கட்டுப்படுத்தி தன் வழியே செயல்பட வைத்தது, நம் சித்த கணங்களை சாதனைகளால் சாதித்து அற்புதமான சக்தியினை உணர்த்தி மகிமையைக் காட்டியவர்கள் நம் சித்த பெருமக்கள். பஞ்ச பூத சக்தி தத்துவத்தை அறிந்து அவர்கள் தன் உடலே பஞ்ச பூத சக்தியினால் இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அதை தன் வயப்படுத்தி, தானே தனக்கு ஒரு முடிவை ஏற்படுத்த சக்தியுடையவனாயிருந்தார்கள் சித்தர்கள். இறந்த உடலில் ஜீவன் விலகி விட்டபின் அந்த உடல் எந்த விதமான செயலையும் செய்யாது ஜடமாகிவிடுகிறது. உடலில் ஜீவன் உள்ளளவும் அவன் செயற்கரிய செயலகளை செய்தான், உலகம் போற்றும் விஞ்ஞானத்தையும்,மருத்துவத்தையும் கண்டறிந்தான். ஜீவன் பிரிந்த பின் கீழே ஜடமாக கிடக்கிறான், இதை அறிந்த அவன் அறிவு இது எப்படி நிகழ்கிறது தூங்கும் போது கூட ஒடிக்கொண்டிருக்கும் மூச்சு இறந்த பின்னர் அதனுள் இயங்குவது இல்லை. என்று சிந்திக்கின்றான். அந்த ஆராயும் உள்ளமே, ஆத்ம விசாரம் என்பதாகும், இந்த உடலில் மூச்சு (ப்ராணன்) உள்ளளவும்இயக்கம் இயங்குகிறது. வேலைப் பழு அதிகமாகும் போது கூடுதலான மூச்சும் ஓய்வின்போது குறைவான மூச்சும் நடைபெறுகிறது. ஓவ்வொரு நாளும் மூச்சைக் குறைத்து தன்வசப்படுத்துகிறான், அப்படி தன் வயப்படுத்தியவன் தான் அற்புதங்களையும் நிகழ்த்தும் சித்தனாம். "உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லிரேல் விருத்தரும் பால ராவர் மேனியும் சிவந்திடும் அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே. சிவவாக்கியர் யமம், நியமம், நேம நிஸ்டங்களை அனுசரித்து சாதனை புரிந்து வாயுவை பிரம்ம மந்திரத்தில் ஏற்றுவது சாத்தியமாகும்போது அபூர்வ சக்திகடளை பெறும் நிலை உண்டாகிறது, குருதீட்சை : ஈசன் கொடாததை குரு கொடுப்பார் என்பது வாக்கு. குருவே சகல கல்வி வித்தைகளுக்கும் என்றும் குறையாத நிதி , பாவப் பிணியைப் போக்கும் பரம பருசனான வைத்தியர், சகலத்திற்கும் ஆச்சாரியார் இவரே சுவாமிநாதன், குரு பிரம்மா குருவிஷ்ணு, குருதேவே மகேஷ்வரன் , இத்தகைய குரு நமக்கு கிடைக்க வேண்டும், குரு தன் சிடனுக்கு பலவிதமான தீட்சயைகள் மூலம் அனுகிரகம் செய்விப்பார்,. குரு சீடனை ஞானக்கண்ணால் ஸ்பரிசிப்பது நயன தீட்சை, விரல்களால் தொட்டு ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சை உள்மனதால் நேசிப்பது மானஸ தீட்சை மந்திர உபதேசம் செய்து கொடுப்பது வாசக தீட்சை யோக மார்க்கத்தால் சிடனின் இதயத்தில் பிரவேசிப்பது யோக தீட்சை ஹோமம் செய்து அக்கினியால் தீட்சை கொடுப்பது அவந்திரி தீட்சை மனத்தால் மானசீகமாக சங்கல்பம் செய்து உபதேசிப்பது ஞான தீட்சை குண்டலினி சக்தியை கிளப்பும் தந்திரங்களை போதிப்பது கிரியா தீட்சை வேத ஆகமங்கள் பயிற்றுவித்து அனுகிரகம் செய்வது சபீசா தீட்சை தன் பாதத்தை தலையில் வைத்து உபதேசிப்பது திருவடி தீட்சை உலக ஜீவர்கள் உய்யும் பொருட்டு மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட ஆண்டவனாக காட்சியளிக்கிறார், மனம் வடிவமில்லாத ஒன்றை பற்றாது, கொடி எப்படி கொம்பை பற்றி படர்வதைப்போல் மனம் நாம ருப நாட்டமுடையது.நாம் இறைவனைப் போய் அடையலாம் என்று என்ன தவமிருந்தாலும் முடியாது, ஆனால் அவனே கருணை மிகுதியால் நம்மிடம் ஓடோடி வளந்து ஆட்கொள்ளுவான். யோகத்தின் முடிவே ஞானம், யோகம் பல படித்தரங்களை கொண்டது, அவை குருவின் மூலம்அறிந்த சாதனை புரிய வேண்டும். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் இவை விரிவாக உள்ளது, அவை யமம்,நியமம், ஆசனம்,பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற விதிகளின்படி கையாண்டு மனிதனாக பிறந்த நமக்கு மனம் வாக்கு, காயம் முதலியனவாற்றில் மாசு படிந்துள்ளது, இந்த மாசு நீங்கினால் தான் மேன்மை அடைய முடியும் பூமியிலிருந்து தங்கம் வெட்டி எடுத்து அக்கினியிட்டு தூயதாக்குவதுபோல் நம் எண்ணங்களிலும் அக்கினி என்ற நெருப்பை எழுப்பி அதை யமம், நியமம், என்ற கிராமப்படி எரித்து அந்த மாசுக்களை அக்ற்ற வேண்டும், இதனை அவ்வை : பிறந்தலொன்றின்றிப் பிறவாமை வேண்டி அறுத்துருவ மாற்றியிரு. என்கிறார், பிறப்பை கொடுக்கும் விரோதமான எண்ணங்களையும் செயலையும் அதன் மூல காரணங்களையும் அடியோடு அழித்து விடு என்கிறார், அவ்வாறு செய்வதின் மூலம் பிறவியை கொடுக்கும் பாவத்தை செய்யாமல் ஒழித்து விடலாம்.இந்த சரீரத்தில் ஆத்மா உள்ளது, அதுவே தாழ்வை அடைந்து பிறக்கிருதியின் குணங்களால் மூடப்பட்டிருக்கிறது, அப்படிமூடப் பட்டிருப்பதால் தனக்குள்ளே இருக்கும் ஆன்மாவை காண்பது அரியதாகிறது, அவ்வாத்மா இது என்னுடையது என்று எண்ணிக்கொணட, தான் செய்த கருமங்களின் பயனில் கட்டுண்டு தாழ்மை அடைந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளத் தெரியாமல் சுற்றி சுற்றி வருகின்றது, பற்றற்றான் பற்றிய இறைவனை பற்றினால்தான் ஆத்ம ஞானம் அடையமுடியும், எல்லாக் காலங்களிலும் சாத்மீக உணவாகவே உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும், ஒருவேளை உண்பவன் யோகி இருவேளை உண்பவன் போகி மூன்றுவேளை உண்பவன் ரோகி என்பார்கள், எல்லாவற்றிக்கும் ஒரே சீராக உடலை வைத்திருப்பதற்கும் தியானத்தில் சாதனை புரிவதற்கும் கட்டுப்பாடு அவசியம், மனிதன் மூன்றின் சேர்க்கையால் உண்டானவன், மனம், ஆத்மா, தேகம் ஆகியவற்றால் உண்டானவன், ஆத்மாவை தவிர மற்ற இரண்டும் நோய்களுக்கு காரணமாகின்றன. தேகத்திற்கு வரும் வியாதிகளால் உடல் பாதிக்கப்படுகிறது, எனவே அதை நவீன விஞ்ஞானமும் நிருபித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு காரணமாயிருக்கின்ற புற இச்சைகளை அகற்ற வேண்டும், மனிதனுக்கு நான்கு நிலைகளுடைய மனம் உண்டு, புறமனம், நடுமனம், அடிமனம் செயலற்றிருக்கும் மனம் என்பன. புறமனம் சிற்றின்பத்தை விருத்தியுடையது,மனஒடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது, நடுமனம், விருத்தி, மனம் ஆத்மாமவில் லயமாவது யோகம், இது அடிமனம், நான்காவது மனம் பிரம்ம நிஷ்டையிருப்பது, எனவே மனத்தை அடக்கி ஆன்மாவில் லயத்திருக்க உடலுடன் மனத்தையும் சீர்செய்யவேண்டும், அப்போதுதான் உன் உள்ளே இருக்கும் ஆன்மாவை நாம் காண இயலும். திருச்சிற்றம்பலம் மேலும் சில ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக