ஞாயிறு, 23 நவம்பர், 2014

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு?


தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எவ்வாறு? நம் உடம்பிலுள்ள எதிர்மறை சக்திகளை ஆத்ம சக்தியில் அடக்கி ஒடுக்கி உடன்பாட்டு சக்திகளை அபிவிருத்தி செய்து தன் அறிவைக் கொண்டு சமனப்படுத்தி ஒளியை அதாவது ஜோதியை காண்பதே மெய்யறிவின் சாதனையாகும், அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது நிலை " ப்ரத்தியாகாரம்" என்ற சாதனையின் விளக்கத்தையும் அறிய வேண்டும், தன்மனதினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ சக்தி பெற்றவன் தான் ப்ரத்தியாகாரம் எனும் கட்டுப்பாட்டினை அடைய முடியும், இந்த பலன்களை ஆசையுடைய பொருள்களை நிதர்ஸனம் செய்தும், புலன்களை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் பயிற்சியாகும், இதனையே திருவள்ளுவர் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர் ஒழுக்கம் நெறி நின்றார் நீடுவாழ்வார் - என்கிறார் ஐம்புலங்களை அடக்கி ஒழுக்க நெறி நிற்பவர் நீண்டகாலம் தன்மையர் என்கிறார், இன்னும் ஒருபடி மேல் சென்று பத்திரகரியார் ஆங்காரம் உள்ளக்கி ஐம்புலங்களை சுட்டருத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று புலம்புகிறார். எனவே தூங்காமல் தூங்கி சுகம் பெற தன் இச்சையை இச்சைப்படி விடாது கட்டுக்குள் கொண்டுவரும் சாதனைதான் ப்ரத்தியாகாரம் என்பது, இப்படி ஆற்றல் ஒன்றுபடுத்தி சாதனை புரிந்தால் எல்லாமே கட்டுக்குள் அடங்கும். உடல், உள்ளம், அறிவு இம்மூன்றம்ஒன்றோடொன்று ஒன்றி நின்றால் சாதனையில் வெற்றி பெறமுடியும், இந்திரியங்களையும் பல விஷயங்களிலிருந்தும் விலகி ஆண்டவனிடம் திருப்ப வேண்டும், அப்பர் தேவராத்தில் தலையே நீ வணங்காய், கண்களே இறைவனை காண்க என்றெல்லாம் பாடியிருப்பதும் உடல் உறுப்புகளை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தும் பிரத்தியாகாரமே, இதனால் விஷப்பற்று அறவே நீங்கும், சிவஞான சித்தர் இலக்கண விளக்க பரம்பரை ஸ்ரீ சிதம்பரநாத தேசிகர் உரையில் பின்கண்ட பாடல் அதை விளக்கிறது. 1, சகமார்ககம் புலனொடுங்கி 2,தத்துவ வொளி இரண்டு சலப்பற்று 3,முச்சதுர மூலாதாரங்கள் அகமார்க்க மறிந்து 4,அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்து அனைந்து போய் மேலேற 5,அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுதுண்டு 6, அலமுட்டத் தேக்கி 7, முழுச் சோதி நினைத்திருந்து 8,தன்முதலாக வினைகளுக்கு 9, மார்க்க அஷ்டாங்கயோக முற்றும் 10, உழத்தலுந்தவர் சிவன் தன் உருவத்தை பெறுவர், என்றபடி சகமார்க்கம் புலனொடுக்கம் சாதனையால் நாம் செய்யமுடியாதது எதுவுமில்லை, சகமார்க்கம் என்பது பக்தி மார்க்கத்தினைவிட கஷ்டமானது ஏனெனில் அந்நிலை உலகத்தோடு ஒட்டியும், ஒட்டாமலும் கத்திமேல் உட்கார்ந்து சாதனை புரிவது போல், ஏனனெனின் ஆமை எப்படி புலன்களை நினைத்த மாத்திரத்தில் தன் அவயங்களை உள்ளடக்கி கொள்கிறதோ அதுபோல் புலன்களின் ஆசைகள் நிஷ்காமியம் செய்யக் கூடிய நிலைதான் ப்ரத்தியாகாரம், சைவ சமய குருமார்களில் சுந்தரரர் இரு மனைவியர்கள் இருந்தும் இந்த மார்க்கத்தை அனுஷ்டிக்கிறார் என்றால் அவரின் திண்மை என்னவென்பது? தன்னிலைக்கு கட்டுபட்டு கொண்டுவருபவனுக்கு கைவல்யம் ஆகாதது எதுவுமில்லை, எனவே ஐம்பொறிகளின் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம், என்ற ஐந்தினைதத்துவங்களால் ஒடுக்க வேண்டும், என்று ஒளவை பராட்டியாரும் கூறுகிறார், நினைப்பு மறுப்பு நெடும் பசியும் மற்றால் அனைத்துலகும் வீடாமது - ஒளவை குறள் தேகத்ததின் கண்ணுண்டாகும் சங்கல்பமும் யாவற்றையும் அறிய வொட்டாது மறைத்திருக்க கூடியது, பசியும் ஒழித்த விடத்த எல்லா உலகுக்கும் தேகமானது உறைவிடமாகும், நினைப்பு: சங்கற்ப பலத்ததினால் எண்ணிய கருமத்தை முடிக்கலாம் ஞானத்தினால் : சங்கற்ப நாசத்தால் மனம் வலவையடையும் பிந்து பலம்படும் ஞான கர்மத்துக்கு உதவி செய்யும் மறப்பு: மனம் வாக்கு காயங்களாலுண்டாகும், உழைப்புக்கு ஆறுதல் செய்வதில் பேர்பெற்றது. ஞானத்தினால் மறப்பாற்றால்தான் 14 உலகங்களையும் தன்னையுமறியலாம், பசி : பசியானது உணவு சுவை உட்கொள்ளுவதற்கு சமிக்ஞையாக விருப்பத்தோடு உண்ட உணவை ஜீரணித்து அதை பக்குவம் செய்து சுக்கிலம், நாதம், மலமாக பிரிக்கும் பசியின்மை நேரிட்டால் மேற்சொன்னவைகளுக்கு எதிரிடையை உண்டாக்கும், ஞானத்தினால் பசி யொழிந்தால் அமுத தன்மை உண்டாகிறது, பலம் தேகபலம் உண்டாகிறது, பஞ்சேந்திரயங்களை அகமுக விவகாரத்தில் செலுத்தும் சூட்சும தத்துவங்களுக்கும் ஸ்தூல தத்துவங்களக்கும் பலத்தை கொடுக்கும் அமிர்த ஊற்று சுரக்கும் எனவே இறவாமல் வாழும் வழி ஜீவ அமிர்தத்தை பருகுவதே, அந்த அமிர்தம் நம் உடலில் பெருக்கி பசிதாகம் கால ம்ருத்யு ( பற்றாததும் ) என்றும் சிரஞ்சீவியாக வாழும் வழியினை நம் சங்கற்ப பலத்தால் பெற வேண்டும் நாம் இச்சிக்கப்படும் பொருளுடையது ஆனது காமியதவம் அப்படி இச்சிக்கப்படாத விரும்பும் தவம் நிஷ்காமமிய தவம் எனப்படும், காமிய தவம், சித்தியும், நிஷ்காமிய தவம் முத்தியும் கொடுக்கும், வைராக்கியம் என்ற மனேசக்தி பெருகினால் ஆத்ம சாதனையால் வெற்றியடைய முடியும், ஆசை அடக்கி ஐம்புலங்களை இழுத்து பிடித்தால் அடங்காத குதிரைகளான புலன்களை கடிவாளம் போட்டு இழுத்து பிடித்து சாதனை புரியலாம், வெளி விவகாரத்தில் இந்திரியங்களை பலத்காரமாக உள்முகப்டுத்துதல் ப்ரத்தியாகாரம், எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கரும பலனை அனுஷ்சித்து ப்ரத்தியாகாரம், எதை பார்த்தாலுமு அதையெல்லாம் ஆத்மா என பாவிப்பது ப்ரத்தியாகாரம், எனவே ஆசைஅடக்கி ஐம்புலங்களையும் வென்று, மனத்தினை கட்டுப்டுத்தி சும்மா இருந்து சுகம் பெறுவதே தூங்காமல் தூங்கும் நிலை, திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக