வெள்ளி, 14 நவம்பர், 2014

காலபைரவாஷ்ட்டாமி


பைரவ அஷ்டமி: பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி, சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். பைரவரை வழிபடவும் இந்த தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள். பைரவர் பூஜைக்கு கைமேல் பலன் உண்டு எனச் சொல்வதுண்டு. பைரவரை, அஷ்டமி திதியில் தீபமேற்றி வழிபட்டால் இழந்த செல்வத்தை பெறலாம். சொர்ண பைரவருக்கு 108 காசுகளால் அர்ச்சனை செய்து அக்காசுகளை வீட்டில் வைத்துக்கொள்ள செல்வம் நிலையாகத் தங்கும். தீராத நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து வரவேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு அஷ்டமி திதியில் விபூதி அபிஷேகம் செய்து, மிளகு வடை சாற்றி வழிபட திருமணம் கூடி வரும். இழந்த செல்வத்தைப் பெற 11 அஷ்டமி திதிகளில் பைரவ தீபம் ஏற்றி வர வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகை சிறுமூட்டையாகக் கட்டி எள் எண்ணெயில் ஊறவைத்து ஏற்றுவதாகும். சனிதோஷம் நீங்க பைரவருக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து பைரவ தீபம் ஏற்றலாம். ஒன்பது சனிக்கிழமை இவ்வாறு செய்ய வேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பைரவரை பைரவ அஷ்டோத்திரம் சொல்லி சிவப்பு நிறப் பூக்கள் கொண்டு ஆறு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை செய்து வர வேண்டும். நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செவ்வரளிப் பூக்களால் பைரவ அஷ்டோத்ர சதநாமாவளி பூஜை செய்ய வேண்டும். வறுமையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வளர் அஷ்டமி திதிகளில் ஸ்ரீபைரவ அஷடோத்ர சத நாமாவளி சொல்லி வில்வம் மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்றி வரவேண்டும். 16 அஷ்டமி திதிகளில் இவ்வாறு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக