ஞாயிறு, 6 ஜூலை, 2014

திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21 கூடா ஓழுக்கம்


திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21 கூடா ஓழுக்கம் சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை அறியாமலே சில ஆணும் பெண்ணும் தவறு செய்யத் துணிகிறார்கள், எது பண்பாட்டுக்கு பொருந்தாதோ, எதைச் சமூகம் ஏற்காதோ, அது அறநூல்கள் கூறுவதை மீறுகிதோ, அது கூடாவொழுக்கம், தனக்கு உரிமையில்லாத எதிர்பாலினருடன் ஒருவர் கூடிக் களிப்பது கூடாவொழுக்கம் . (திருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் சொல்லப்பட்டது) மேற்பார்வை செய்யும் கங்காணியாக இறைவன் இருக்கிறான், அவன் இல்லாத இடமெது? அவனது இருப்பை உணர்ந்த நிலையில் யாருக்கும் வஞ்சகத் தொழிலில் இறங்கத் தோன்றுமோ? மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம். காமத்தை எழுப்பும் கன்னியர் கையில் அகப்பட்டவரும் தேவங்களை ஓதுபவரும் , சுயவதை மேற்கொண்டு தவம்புரிவோரும் வெவ்வேறு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம்.இறைவனின் இயல்புணராத எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் தளையுண்டு கிடக்கின்றனர். தீவினை காரணமாக ஒருவனுக்கு சிவச்சிந்தை இல்லாமல் போவது . சிற்றின்பத்தில் தனது ஆற்றலை இழந்து கொண்டிருப்பவனால் எப்படி சிவனது ஆற்றலை அறியமுடியும்? என்று கேட்கிறார் திருமூலர், தொட்டு தாலி கட்டிய மனைவி வீட்டில் இருக்க, பிறதது மனையாளை விரும்பும் காளையர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தின் கனியை உண்ணாமல் ஈச்சம் பழத்தினை உண்ண அதனை பெறுவதற்கு துன்பம் அடைவது போன்றதாம், பாடல் : ஆத்த மனையாள் அகத்தில் இருக்க காத்த மனையாளைக் காமுறும் காளையர்.................... இதுபோன்று இன்னொரு பாடலில் " இலைநல ஆயினும் எட்டி பழுத்தால் குலைநல ஆம்கனி கொண்டுணல் ஆகா.......................... எட்டிப்பழத்தின் அழகிய தோற்றம் கண்டு அதன்மீது விருப்பம் கொளல், அப்பழம் உண்ணத்தக்கது அன்று என்று தெரிந்தும், அதன் மீது மையல் கொளல், முலையாகிய அங்கத்தைக்காட்டி புண்ணகை செய்பவர் மீது மக்கள் நாட்டம் கொண்டு மனத்தை கொடுமைக்கு தம்மை ஆளாக்கி கொள்ளாதருப்பாராக என்கிறார். திருக்குறளில் துறவியலில் வருகிறது கூடாவொழுக்கம் பற்றி, வள்ளுவர் இதனை பொருந்தாத தீயவொழுக்கம் என்பார், தவக்கோலத்தில் துறவியாய் இருந்து கொண்டு ஊட்டமிக்க உணவுண்டு மறைவாகப்பெண்ணுடன் உறவாடும் தற்போதைய போலிகளை நம் நினைவுக்கு கொண்டுவரும் பாடல் இது "நெஞ்சின் துறல்வார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்" என்கிறது குறள் ஆசைகள் நெஞ்சுக்குள் அப்படியே இருக்க துறந்தாற்போல் நடித்துப் பிறரை மோசம் செய்யும் துறவிகளைப்போல் கொடியவர் இவ்வுலகில் இல்லை இவர்கள் மனச்சாட்சியை ஒருபக்கமாய் விலக்கிவிட்டோ, அல்லது ஒரேயடியாய் உதறிவிட்டோ குற்றங்கள் செய்வார்கள். கன்னிப் பெண்கயையும், பிறருக்கு உரிமையானவர்களையும் இவர்கள் கற்பழிப்பார்கள், அடுத்தவர் பொருளை அபகரிக்கவும் தேவைப்பட்டால் உயிரையும் எடுக்கவும தயங்கமாட்டார்கள். சிலர் தங்களுடைய சுயமையை வெளிப்படையாய் காட்டிவிடுவார்கள், சிலரோ தங்கள் கொடிய தன்மையை மூடிமறைப்பார்கள், யார் நல்லவர் யார் கெடடடவர் என்பதை அவர்களுடைய கோலத்தால் அறியமுடியாது. அவர்களது செயல்வகையாலேயே அறிந்து கொள்ள முடியும், கூடாவொழுக்கம் உள்ளவர்கள் தங்கள் புறத்கோலத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய கள்ள வேடத்தை ஒழுங்கற்ற செய்கையை உலகம் அடையாளம் காணாதவரை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருவார்கள். மனத்துக்கண் மாசுள்ள துறவிக்குத்தான் மழித்தலும், நீட்டலும் தேவைப்படும், மனமாசுக்களை அகற்றியவருக்கு கோலங்கள் எதற்கு? அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடப்பவனால் எப்படி நிலம் நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் சூரியன், சந்திரன் இவற்றுடன் சிவபெருமான் இணைந்திருப்பதை உணரமுடியும்? ஆசையை தூண்டுகிற சிற்றின்பம், பின் ஆற்றலை குன்றச் செய்துவிடும், சிற்றின்பம் அற்பகாலமே நீடிப்பது இந்த உண்மையை உணர்ந்து அதை விடடொழித்தவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை இறைவன் வழங்குகிறான். திருசிற்றம்பலம் --- ஓம் நமசிவாயம் ஒம் மேலும் சில ஆன்மீக தகவல் காண http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

சனி, 5 ஜூலை, 2014


சிதம்பர ரகசியம் என்பதற்கு பலரும் பற்பல கதைகள் கூறிவரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன. அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது. இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. மேலும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது. இவைபோன்று இன்னும் எக்கச்சக்கமான சிதம்பர ரகசியங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை. அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும். இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும். அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம். இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும். இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் ஸ்தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் அறியப்படுகிறது. பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில், சரியாக 79 டிகிரி, 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இன்று கூகுள் மேப் உதவியுடன் வானத்தின் மேலிருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே இந்த துல்லியம் விளங்கும். அனால் இது அன்றைக்கே கணிக்கப்பட்டது பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். மூலவர் ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இவ்வாலயத்தில் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார். இதன் காரணமாகவே பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராஜரை வணங்குகின்றனர். பாதாளத்தில் கருவறை??!! நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோயிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. அதாவது கோயிலின் கருவறை அமைப்பு தரைமட்டத்திற்கு கீழே பாதாளவெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. பொன் கூரை நடராஜர் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது. ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. பொன்னம்பலம் பொற்கூரை வேயப்பட்ட கனகசபை, பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளதுடன், இது 64 கலைகளை குறிக்கின்றது. பிரகாரங்கள் மனிதரின் உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதன் இதயமும், கோயில் மூலவரும்! மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாமல் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. சுவாசமும், ஓடுகளும்! ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். எனவே கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. நரம்புகளும், ஆணிகளும்! மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல கருவறைக்கூரையில் 72,000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. சாஸ்திரங்களும், புராணங்களும்! அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது நடராஜன் ஆன நடனராஜன்!!! நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜன் என ஆனதாக சொல்லப்படுகிறது. நாட்டியாஞ்சலி சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. அப்போது உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நடனக்கலைஞர்களும், நாட்டியம் பயிலும் மாணவர்களும் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணமாக செலுத்துகின்றனர். இவ்வாறு நாட்டியார்ப்பணம் செய்வதை பெருமையாகவும், பேராகாவும் கருதுகின்றனர். நந்தவனம் வெளிவாசலை கடந்தவுடன் முதல் பிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி கோட்டைசுவர் அமைப்பினால் நாற்புறமும் சூழப்பட்டு இடம்பெற்றுள்ளது. கோயில் வளாகத்தின் முதல் அங்கமான இந்த நந்தவனப்பகுதி ஒரு வனம் போன்று அமைந்துள்ளது. கருங்கற்கள் பதிக்கப்பட்ட பிரகாரம் நந்தவனப்பகுதியை அடுத்து ராஜகோபுர வாசல் வழியாக உள் நுழைந்தபின் கருங்கற்கள் பதிக்கப்பட்ட அடுத்த பிரகார வளாகப்பகுதி காணப்படுகிறது. இந்தப் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோயில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் போன்றவை அமைந்துள்ளன நடைக்கூடம் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதிற்சுவரையொட்டியே காணப்படுகிறது. கலைநயம் மிளிரும் இந்த நடைக்கூடம் அவ்வளவாக கவனிக்கப்படாது இருந்தாலும் இது கோயிலின் நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்புக்கான சான்றாய் தோற்றமளிக்கின்றது. தீர்த்தங்கள் சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோயிலில் அமைந்துள்ளன. சிவகங்கை தீர்த்தம் கோயிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது. மேலிருந்து ஒரே சீராக படிகள் குளத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்குவதைக்காணலாம். குளத்தின் அடிப்பகுதி ஒன்பது கிணறுகளுடன் முடிவடைதாக சொல்லப்படுகிறது. கல்வெட்டுகள் பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர் என்பதை இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. சிவகாம சுந்தரி அம்மன் கோயில் கோயிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகேயுள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோயில் ஒரு தனியான கோயில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது. சபைகள் பேரம்பலம், சிற்றம்பலம், கனகசபை, நிருத்தசபை, இராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன. இவற்றில் பேரம்பலம் என்பது தேவசபை என்ற பெயரில் அறியப்படுகிறது. உற்சவ மூர்த்தியின் வாயில் கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பு உள்ளது. இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது. பெயர்கள் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில், சிதம்பரம் கோயில் என்று நடராஜர் கோயில் அழைக்கப்படுகிறது. இது சைவ இலக்கியங்களில் 'கோயில்' என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பூலோக கைலாயம் என்றும் கைலாயம் என்றும் நடராஜர் கோயில் அறியப்படுகிறது. கோயில் வீதி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு முன்னாலுள்ள வீதியில் பஜனை கோஷ்டி சிதம்பரம் கோயில் வீதிகளில் செல்லும் பஜனை பாடிச் செல்பவர்கள் அனுதினமும் காணலாம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வெள்ளி, 4 ஜூலை, 2014

அழுகணிச் சித்தர் பாடல்


அழுகணிச் சித்தர் பாடல் அழுத கண்ணீருடன் காணப்பட்ட சித்தர் அல்லது இவரது பாடல்களைப் படிக்கும்தோறும் அழுகை உணர்ச்சி உண்டாவதால் ‘அழுகண்’ சித்தர் எனப்பட்டார் போலும். இவர் பாடும்பொழுது எப்பொழுதும் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். இவர் நாகப்பட்டினத்தில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. இவரது பாடல்கள் ஏறத்தாழ ஒப்பாரிப் பாடல்கள் போலத் தோன்றினாலும் அப்பாடலின் கருத்துக்களை அனுபவ ஞானிகளால்தான் விளக்கிங்கொள்ள முடியும். இவரது பாடல்களனைத்தும் கண்ணம்மா என்ற பெண்ணை சக்தியின் வடிவமான மனோன்மணி அம்மையை கண்ணம்மா என்று முன்னிலைப் படுத்துவனவாகவே உள்ளன. பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றே இவரும் தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களை முன்னிருத்தியே பாடியுள்ளார, “ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா உன் பாதம் சேரேனே? இந்த உடம்பு நாற்றம் பிடித்த அழுக்கு உடம்பு. உப்பிருந்த மட்பாண்டம் போல அளறு பிடித்துக் கரைந்து அழிந்து போகும் உடம்பு. இந்த உடம்பின் இயல்பை மாற்றி அழியாத உடம்புடன் பிறப்பதற்கான மருந்து எனக்குக் கிடைக்கவில்லை. அப்படி அழியா உடம்புடன் பிறப்பதற்கு எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று யோகத்தின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்ட யோகத்தை பழக முயற்சிக்கின்றார் அழுகண்ணர். யோகம் பழகப் பழக உடல் கொதிக்கிறது. மூலச்சூடு ஏற்படுகின்றது. அடி வயிறு வலிக்கிறது. தம்அனுபவத்தைப் பாடல்களில் கொட்டிக் கவிழ்க்கின்றார். கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை; நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா குடியோடிப் போகாணோ! யோகம் பயில்வாருக்கு அடிவயிறு சுடும் என்பது புரிகிறது. அது மூலச்சூடு என்பார்கள். இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலிப் பாம்பை எழுப்புவதற்கான அனல் என்பது புரியும். எந்தச் செயலையும் ஆரம்பிப்பதுதான் கடினம். பிறகு அது சுலபமாகி விடும். யோகத்தைப் பயில ஆரம்பித்த நிலையில்தான் அழுகண்ணருக்கு உடலைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததே ஒழிய யோகம் பயின்றபின் அது இவர் கட்டுப்பாட்டை விட்டு விலகியே இருந்தது. உடற்சூட்டின் மூலம் குண்டலினியைக் கிளப்பிய இவர் அதனை இடையில் நிறுத்தும் வித்தையையும் அறிய விரும்புகின்றார். ஆனால் முடியவில்லை. அடியில் தோன்றிய அனல் உச்சியில்தான், அதாவது சகரஸ்தளத்தில்தான் போய் நின்றது. இடையில் ஒவ்வொரு உடற் சக்கரத்தையும் கடக்கும்போது இன்பமயமான ‘சிறுவலி’ அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க அல்லது அதே இடத்தில் குண்டலினியை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை. இங்கு இந்த ஆறாதார குண்டலினி யோகத்தில் கவனிக்கப்படுகின்ற விஷயமும் ஒன்றிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து கிளம்பும் குண்டலினி அக்கினியை இடையில் தடங்கல் செய்தோமானால் யோகம் பயில்கின்றவர் பித்தாகி உயிர் துறப்பர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்தைத்தான், ‘நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல் என்று வந்த நமன்” என்ற வரிகளில் தெரிவிக்கின்றார். இது இப்படியிருக்க இந்த யோக முயற்சிக்கு முன் இளமை மயக்கத்தால் மனதைக் கட்டுப்படுத்தப், படாத பாடுபட்ட நிலையை “மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா! கண்விழிக்க வேகாவோ” முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான் இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம் பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான் கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து சாம்பராகி விடாதா? என்று கண்ணம்மாளைக் கேட்கின்றார். குண்டலினி யோகத்தைப் பற்றி மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார். “உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சிக்கு மேலேறி வானுதிரந்தானெடுத்துக் கச்சை வடம் புரியக் காயலூர்ப் பாதையிலே வச்சு மறந்தல்லோ - என் கண்ணம்மா வகை மோசமானேண்டி” எவ்வளவு அருமையான விளக்கம். உச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல் என்று குறிப்பிட்டது சுழுமுனையை உச்சியான மச்சிக்கு மேலே ஏறிய குண்டலினி அமுத தாரண செய்யும் நிலையை இப்பாடலில் விளக்கம் செய்கின்றார். இவ்வளவு யோக விளக்கம் கூறுமிவர் உஞ்ச விருத்தி செய்தே காலத்தைக் கழித்தாரென்று கூறப்படுகிறது. “புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா! பொருளெனக்குத் தாராயோ” பிச்சையெடுப்பது கேவலமானதுதான். ஆனால் அதைவிடக் கேவலம் அப்படிப் பிச்சை எடுப்பவனிடம் பிச்சை போட மாட்டேன் என்று துரத்துவது என்ற ஒளவையாரின் கருத்தை இவ்வரிகளில் காட்டித் தன்னைப் பொருள் தரா புல்லர்களிடம் போய் கையேந்திப் பல்லை மிகக்காட்டிப் பிச்சையெடுக்காமல் உயிர் வாடுவதற்கு எனக்குப் பொருள் கொடு அம்மா என்று மனோன்மணித் தாயிடம் (கண்ணம்மாவிடம்) வேண்டுகின்றார். படிக்கப் படிக்கப் பரிதாபத்தைத் தூண்டும் இவர் பாடல்கள் சித்தர் இலக்கியத்தில் மிகப் பிரபலம். “பையூரிலேயிருந்து பாழூரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன் மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா! பாழாய் முடியாவோ” இங்கு இவர் ஜனன முறைமை உணர்த்துகின்றார். பையூர் என்பது கருவறை (கருப்பை) பாழூர் என்பது யோனி; மெய்யூர் என்பது உடல் என்றும், உண்மை ஞானம் என்றும் இரு பொருள்படும். பாழ் என்பது மோட்சம், வீடு பேறு; உடலையே இறைவன் வாழும் ஆலயமாகக் கருதி யோக நியமங்கள் செய்தீர்களானால் அதுவே கோயிலாகி இறை தரிசனத்தைக் காட்டும். அந்த நிலையில் யோக நெறியாளர் வெறுத் தொதுக்கும் பெண்களின் கருப்பையும் உடம்பும் புனிதம் அடைந்து பாழூராக அதாவது ஆகாய வெளியாக இறைவன் வாழும் கோயிலாக மாறாதா? என்று நம்மைக் கேள்வி கேட்கின்றார். ஆராய்ச்சி உரையைப் படித்த நெஞ்சங்களுக்கு அழுகண்ணார் பாடலையும் படிக்க ஆவல் வருகின்ற தல்லவா! பாடலைத் தொடருங்கள். மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலாப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் மேலப் பதிதனிலே என் கண்ணம்மா விளையாட்டைப் பாரேனோ. 1 எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா நிலைகடந்து வாடுறண்டி. முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா கோலமிட்டுப் பாரேனோ. 3 சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க உண்பாய்நீ என்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து முத்துபோ லன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந் தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா தின்றுகளைப் பாறேனோ. 4 பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா கண்குளிரப் பாரேனோ. 5 எட்டாப் புரவியடி யீராறு காலடியோ விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக் கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ. 6 கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுவதில்லை நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா குடியோடிப் போகானோ. 7 ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ. 8 வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித் தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா வாழ்வெனக்கு வாராதோ 9 பையூரி லேயிருந்து பாழூரி லேபிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன் மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால் பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா பாழாய் முடியாவோ. 10 மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா கண்விழிக்க வேகாவோ. 11 அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்சந்திரருஞ் சூரியருந் தான்போந்த காவனத்தே வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ. 12 காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலுங் காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண்குளிரக் காண்பேனோ. 13 உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்து கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா வகைமோச மானேண்டி. 14 என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் தன்னந் தனியனுமாய்த் தனித்திருக்கல் ஆச்சுதடி முன்னம் இதுதெரிந்தால் முழுமோசம் போகேனே இன்னவிதம் என்று என் கண்ணம்மா எடுத்து உரைக்க லாகாதோ? 33 எல்லாரும் பட்டார்கள் இன்னவிடம் என்றறியேன் பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்துதடி கல்லான என்மனது கரைந்திருக்கு மேயாகில் எல்லாரும் வந்து என் கண்ணம்மா எனக்குஏவல் செய்யாரோ. 34 என்னை எனக்கறிய இருவினையும் ஈடழித்துத் தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டேண்டி தன்னை அறியுமிடம் தானறிந்து கொண்டபின்பு என்னை அறியாமல் என் கண்ணம்மா இருந்தேன் ஒருவழியாய். 35 ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோர் அட்சரமும் சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுத் தொலைத்தார்கள் சூதானக் கோட்டைஎல்லாம் சுட்டுவிட நாளானால் பாதாள வத்துவெல்லாம் என் கண்ணம்மா பக்கத்து இருக்காதோ. 36 கடல்நீரின் ஆழமதைக் கண்டுகரை யேறிவந்து உடலும்உயி ரும்போல ஒத்தே இருந்தோமடி உடலும்உயி ரும்போல ஒத்தே இருக்கையிலே திடமா மயக்கம்வந்து என் கண்ணம்மா சேர்ந்தது என் சொல்லாயோ? 37 கல்லுள் இருந்த கனல்ஒளியைக் காரணமாய்ப் புல்லுள் இருந்துவந்த பொருளறியக் காணேன்டி புல்லுள் இருந்த பொருளறியக் காணாட்டால் வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா மயங்கித் தவிக்குறண்டி. 38 பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்குக் கற்பூவும் வாசனையும் காணும் கயவருக்கும் கற்பூவும் வாசனையும் கண்டது உண்டே யாமானால் பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா புலன்கள் தெரியவேண்டி. 39 ஆதிமதி என்னும் அதின் விடாய் தான்அடங்கிச் சோதிவிந்து நாதமெனச் சுக்கிலமாய் நின்றதடி சோதிவிந்து நாமெனச் சுக்கிலமாய் நின்றாக்கால் நீதியுடன் பூர்வபட்சம் என் கண்ணம்மா நிலைதெரிய மாட்டேனோ. 40 ஞானமிது நாற்பதையும் நலமாக வேதெரிய மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன்; மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் ஞானம் அடைவார்கள் என் கண்ணம்மா நன்மைபெற்று வாழ்வார்கள். 41 இன்னும் பல பாடல்களாக சித்தமருத்துவமாக , வாத கற்பம் கண்ணிகள் , ஆறாதாரம் மெய்ஞ்ஞானம் ஆகியவை பற்றியும் பாடியுள்ளார் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வேற்று மதத்தாருக்கும் பரவோகாரி காஞ்சி பரமாச்சாரியார் ஒருதடவை அயல்நாட்டு வேற்று மத பால்பிரண்டன் என்பவர் இந்து சமயத்தில் மிக ஈடுபாடு கொண்டும் இந்து மத துறவியரின் ஆன்மீக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார், அவர் உயர்ந்த இந்து மத ஆன்மீக நாட்டம் உடையவர், அவரது ஆன்மீக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற்றுவது மற்றும் இந்துமத துறவிகளின் சனாதன தர்மம் எத்தைதய ஆபூர்வ ஆன்மீக நெறி என்பதை அறியவும், நம் மதத்தின்பால் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார், காஞ்சி பரமாச்சாரியாைரப் பற்றி அவர் கேள்விப்பட்ட விசங்கள் அவரை எவ்வித்திலும் சந்திக்க ேவண்டும் என்ற எண்ணம் தோன்றியது, பதவியையோ, புகழையோ பரமாச்சாரரியார் மதிப்பதில்லை, பணத்தின் மேல் அவருக்கு ஒரு சிறிதும் நாட்டம் இல்லாதவர்,அவரைப்பற்றி அறிய, அறிய பிரண்டனுக்கு அளவரியாய அவா அவரை சந்திக்க தோன்றயது, எப்படியும் சந்தித்தாக வேண்டும் என்ற போது தனக்கு அறிமுகமான எழுத்தாளர் திரு வெங்கடரமணி என்பவர் மூலம் பராமாச்சாரியாைர சந்திக்க சென்றார், திரு வெங்கடரமணியும் சத்குருவிடம் பால் பிரண்டனது ஆன்மிக வேட்கைைய சொல்லி அறிமுகம் செய்து வைத்தார், பரமாச்சாரியார் அந்த வெளிதேச மனிதரை கனிவோடு பார்த்தார், மத வேறுபாட்ைடக் கூட பொருட்படுத்தாமல் அந்த வேற்று மதத்தினருக்கு அவரின் அருள் பார்வையால் அப்படியே பிரண்டனின் உள்ளத்தை கவர்ந்தார், அந்த தெய்வீக மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தார், இவரையே தம் குருவாக பெற்று அவரிடம் உபதேசம் பெற எண்ணினார்.இவர் நினைத்ததை சத்குரு உணர்ந்து, பால் பிரண்டனை அன்போடு பார்த்த பரமாச்சாரியார் அருள்மொழியாக " அன்பனே உனக்கு ஒரு குரு வேணடும் அவ்வளவுதானே, நீ உபதேசம் பெற விரும்புகிறாய், நான் இங்கே ஒரு மடத்தின் மடாதிபதியாக இருக்கிறேன், இந்த மடத்திற்கு சிலகட்டுப்பாடுகள் உள்ளன, அைத நான் மீற முடியாது உனக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் ரமண மகரிசி இருக்கிறார், நீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்தித்பாயாக உன் வாழ்க்கை சிறப்படையும் " என அருள் வாக்கு தந்து ஆசிரவதித்தார். பிரண்டன் மறுநாள் அவசர வேலையாக கட்டாயம் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருந்தார், தனக்கு ஏற்பட்ட ரமணரின் ஆசி கிைடக்காமல் போய்விடுேமா என்ற தாபத்தில் மன்குறைவுடன் சஞ்சலத்தில் தூக்கம் வராமல் அரைகுறை தூக்கத்தில் இருந்தபோது அவர் சற்றும் எதிர்பாராத சூழலில் பராமாச்சரியார் தீடீெரன அவர்முன் தோன்றி " அன்பனே ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம் அந்த சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும் " என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்,பிரண்டனோ இது கனவோ அல்லது நிசமோ என்ற நினைவில் உலன்று கொண்டிருந்தார்,அவர் விழிகளில் கண்ணீர் வழிந்தது,பிறகு அவ் வாக்குப்படியே ரமணரைச் சந்தித்து அவரின் ஆசியையும் அருள் வாக்கையும் பெற்றுச் சென்றார், இந்நிகழ்வை ஒரு அன்பர் அறிந்து பராமாச்சாரியாரிடம் எவ்வாறு இங்கேயே இருந்து கொண்டு அன்னாருக்கு உபதேசம் செய்தீர்கள் என்று வினவ அதற்கு பராமாச்சாரியார் " எந்த எண்ணத்திலேயே தாங்கள் தூங்குவதற்கு முன் இருக்கிறதோ அதுவே உங்கள் கனவாக அமையும் நல்ல எண்ணங்கள் உங்களுக்கே உபதேசமாக அமையும் என்று புன்னகையுடன் கூறி சென்றார், எனவே நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உங்களுக்கு தக்க சமயத்தில் உபதேசமாகவே அமையும், இதுவே பெரியோர்களின் அருள்வாக்கு நன்றி ஆன்மீகமலர் திருசிற்றம்பலம் ,,, ஓம் நமசிவாய ஓம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

சிவபெருமானாரின் இறக்கத்தன்மை


சிவபெருமானாரின் இறக்கத்தன்மை சிவபெருமானார் காலத்தைக் கடந்தவர், காலனை (எமனை ) உதைத்தவர், காமனை எரித்தவர், அப்பெருமானார் தேவரும் மூவரும் மற்றும் யாவரும் வணங்குகின்ற தன்மையனர், அயன், மால் ( பிரம்மா,திருமால்) தேவியர் எல்லாராலும் வணங்கப்பெற்றவர், ஆனால் அவர் யாரையும் வணங்காத உயர்வுடையவர், அடியார்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், " தன்னால் தொழப்படுவார் யாரும் இல்லாதான் " ........... திருமூலர் இவ்வளவு அருமைப்பாடுடைய சிவபெருமானார் தம்மை அன்புடன் வழிபடும் அடியவர்கட்கு மிக எளியவராகக் காட்சி அளிப்பவர், அடியார் பொருட்டு அவர் புரியும் செயல்பாடுகள் யாவும் மிக அருமைப்பாடுடையனவாக இருக்கும், அததைத்தான் மாணிக்கவாசகர் " அருமையில் எளிய அழகே போற்றி " ..... போற்றி திருஅகலில் கூறுகின்றார், அப்பெருமானாரின் எளிவந்த செயல்பாடுகளில் சிலவற்றைக் கண்டு மகிழ்வோம் 1, காஞ்சீபுரத்தில் சாக்கிய நாயனார் அன்றாடம் கல்லால் அடித்தார், அதனை மலராக ஏற்று அவருக்கு முத்தி கொடுத்தருளினார், 2, கண்ணப்பரிடம் காலால் உதைபட்டார் 3, விசயனிடம் வில்லால் அடிபட்டார் 4, பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடிபட்டார், 5,வந்திக் கிழவிக்கு கூலியாளாக வந்து மண் சுமந்தார் 6,மாணிக்கவாசகர் பொருட்டு குதிரை சேவகனாக வந்தார் 7,சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருஒற்றியூரிலும், திருவாரூரிலும் காதலுக்காக தூதுபோனார் 8, இடைக்காட்டூர் புலவன் என்பவனுக்காக வேண்டி மதுரையை விட்டு ஒரு நாள் இடம் பெயர்ந்து சென்றார், 9,மதுரை மன்னன் இராசசேகர பாண்டியன் பொருட்டு கால்மாறி ஆடினார், 10, பாணபத்திரன் பொருட்டு விறகு விற்கும் ஆளானார் 11, மதுரையில் பாணபத்திரனுக்கு மாணிக்க பலகை அருளினார் 12, மதுரையில் குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்த தாய் பன்றியின் உருவெடுத்து குட்டிகளுக்கு பாலூட்டினார் " ஏனக் குருளைக்கு அருளினை போற்றி " திருவாசகம் 13, திருநாவுக்கரசருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் பசித்திருந்த பொழுது அவர்கட்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார் 14, ஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல், பல்லக்கு, தாளம் போட பொற்தாளம் கருவி வழங்கினார் 15 தருமிக்கு பொற்கிளி கிடைக்கச் செய்தார் 16, திருமறைக்காட்டில் கருவறையில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரயை அணையாமல் தூண்டிய எலிக்கு மறுபிறவியாக மாவலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார், 17, மகாசிவராத்திரி தினத்தன்று வில்வ இலையை பறித்து போட்ட குரங்கிற்கு முசுகுந்த சக்கரவர்த்தியாக மறுபிறவி அளித்தார் 18, ஆனைக்கால் எச்சிலால் நூல்கட்டிய சிலந்திக்கு செங்கட்சோதுனாக பிறக்கச் செய்தார், இவ்வாறு " கற்பனை கடந்த கருணையே உருவமாகி " சிவனடியார்கள் மனத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கருணைக்கடலை சிவபொருமானாரை போற்றி வணங்கி நலம் வளம் பெறுவோம் திருச் சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம மேலும் ஆன்மீகதேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

வியாழன், 3 ஜூலை, 2014

திருமூலர் கூறும் அறநெறி


திருமூலர் கூறும் அறநெறி அறிது அறிது மானிடராய் பிறப்பது அரிது அவ்வாறு பிறந்த காலை கூன், குருடு செவிடு, ஊனம் மற்று பிறப்பது அதனினும் அரிது என்கிறார் அவ்வையார், அவ்வாறு கிடத்தற்கரிய மானிட பிறவி எண்ணிய சில நாட்களிலேயே மூப்பு என்பதை அடைகிறது, அக் குறுகிய காலத்தில் பயனுள்ள செயல்களை நாம் செய்யமால் பொருள் சேர்த்தல், பிள்ளை பேறு அைடதல் போன்ற சிற்றின்பங்களிலேயே காலத்ைத வீணாக்குகிறோம், காலையில் உதிக்கிற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், புழு பூச்சிகளாக மாறி மடிவதும் நிகழ்கின்றன,நாம் கொண்ட இளமையும் அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை, இதனை திருமூலர் " கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தேரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியர்உலகோரே. சூரியன் தோன்றுகிறான், மறைகிறான், இது எதைக்காட்டுகிறது தோன்றிய ஒன்று அழிவுறுகிறது என்பதைக்காட்டுகின்றது. இதனை நேரில் கண்டும் அறியாமல் இருக்கின்றனரே, மற்றும் இளைய கன்றானது இளைமயாகவே இருப்பதில்லையே, அது மூப்பு அடைகிறது, கன்று என்னும் பெயர் மாறி எருது என்னும் பெயைரப் ெபறுகிறது. பிறகு சில நாட்களில் இறந்தும் விடுகிறது. இதனையும் உணர்ந்திலரே, எனவே தோன்றி பொருளுக்கு அழிவு உண்டு என்பதைஅறியாது அரிதற்கரிய மானிடப் பிறவியை வீணே காலம் கழிக்கும் மானிடேரே இருக்கும் காலத்தில் நல்லறம் செய்து பிறவி பிணி நீக்கி பிறவாமை என்னும் பேறு அடைய முயல்வீரே, இதனை அறநெறிச்சாரம் பாடல் ஒன்றின் மூலம் விளக்குவதை இங்கு காணலாம், " சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம் நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது / என்று ஒருவன் நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும் புன்ைம பெரிது புறம்." நம்முடைய வாழ்ககையில் கழிந்துபோன நாட்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்,ஆனால் நாம் வாழப் போகும் நாட்கள் எவ்வளவு என்று அளவிட யாராலும் முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு , ஒருவர் தான தருமங்களையும் , நற்செயல்களையும் விரைந்து செய்யாமல் வாழ்நாள் முழுவதும் வீணே கழியுமாறு விட்டிருப்பதால் வருகின்ற துன்பம் பின்னர் அதிகமாகிவிடும். எத்தனைநாள் வாழப் போகின்றோம் என்பது நமக்கு தெரியாது, இதனை இறைவரே அறிவார், எனவே அறச் செயல்களை விரைந்து ெசய்துவிடவேண்டும், நற்செயல்களை நாளை செய்வோம் என்று தள்ளிப்போடக் கூடாது. அறம்தான் நமக்கு சிறந்த பாதுகாப்பு அரன் ஆகும், முதுமையையும் கொடிய நோயையும் கூற்றுவன் முன்னதாகவே அனுப்பிவிடுவான். பின்னர் வந்து அழித்து விடுவான், அறமே உயிரகளுக்கு சிறந்த பாதுகாப்பு , என்பதை சான்றோர்கள் தங்களின் அனுபவத்தால் கூறியுள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும் நாம். திருச்சிற்றம்பலம் ..... ஓம் நமசிவாய ஓம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு; http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ) எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ) எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன் எந்தையாகிய சிவனிடமிருந்தே தோன்றின சைவமார்க்கங்கள், இந்த மண்ணுலகம் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பேரறிவாளன் அவனுடைய பெருமைகளை யாரும் அளவிட்டு உரைக்க முடியாது. அவன் ஆதிபரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயப்பட வேண்டாம், ஆராய்ச்சி வேண்டாம், அவன் தனது அடியார்களின் அன்புக்கு ஆட்பட்டு வெளிப்படுகிறவன். எங்கும் நறைந்த இறைவன,ஒவ்வொர் உயிரின் உள்ளத்திலும் தங்கியிருப்பவன், ஆனாலும் தன் இருப்பை அவன் மறைவாகவே வைக்கிறான், அதனால் உலகோர் அவன் செயல்படும் வகையை அறிந்திருக்கவில்லை. சிவத்தை காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை. ஆன்மாவில் உறையும் சிவத்தை அறிந்து சிவானுபவம் பெறுவதே தவம். இவவுண்மை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறக்க முயல்வது வீண்முயற்சி என்கிறது திருமந்திரம், பாடல்: சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்............... உலகின் கீழான நெறி சென்று துன்புற்று ஒழுகுவாரும் நல்ல நிலையில் இருந்து அதனை இழந்து வருந்துவோரும் சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் இன்னல்கள் நீங்கும், சிவன் அவர்களுக்கு பெரியதகுதியைத் தந்தருள்வான். பாடல்: இருந்தழுவாரும், இயல்பு கெட்டாரும்................. ஈடேறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால் ஒப்பில்லா தலைவனை உண்மை நெறியில் ஒழுகும் அடியார்கள் அன்பனை இன்பம் தருகின்ற முதல்வனை வந்தடைவீராக என்கிறார் திருமூலர், ஒளிவிடும் மின்னல்போல, சிவபொருமான் யோகக் காட்சியினருக்கு ஒளிவடிவில் வெளிப்படுவான், அந்தணர் இயற்றும் வேள்வித் தீயில் முகங்காட்டுவான், அவன் முழுமுதற் கடவுள், நீங்கள் எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வண்ணமே காட்சியளிப்பான், பாடல் : மினற்குறிாளனை வேதியர்................... உடலெருத்த பயன் சிவனை அறிவாதாகும், ஆனால் மக்கள் இதனை உணர்ந்தாரில்லை,ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்க வைத்தான் இறைவன், அவன் தன்னோடு பொருந்திருப்பதை சீவனறியவதே மேலான சமயம். பாடல் : அறியவொண்ணாதவ்வுடம்பின் பயனை............... இந்த உலகில் நான் வீடுபேற்றை அடைவதற்கு சாதனமாய் அமைந்தது இப்பிறவி. எனக்கு பிறவியளித்து இறைவன் என்னுள் இருந்து வெளிப்பட்டான், அவனைக்கண்டு கொள்வதற்கான ஞானத்தையும் அவன் தந்தான், அடையும் முயற்சியில் என் உள்ளம் என்க்கு துணை நின்றது என்கிறார் சித்தர். பாடல்: பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை................ சீவனுடன் சிவன் பொருந்திருப்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. உயிர்கள் அறியாத வகையில் அனைத்துயிர்களையும் தன் கருவில் கொண்டவன் சிவன் நான் அதனை அறிந்து கொண்டேன், பாடல்: தரிக்கின்ற பல்லுயிர்க்கெல்லாம் தலைவன்............... இறைவன் அருளால் என்னுள் அன்பு ஓங்கியது, அந்த அன்பின் வழியே அவன் அன்புருவாய் எழுந்தான், அப்போதே மேல்நோக்கி ஏறிய செவ்வொளி சிரசில் படர்ந்தது. நான் விரும்பிய திருவடி என்உள்ளத்தே நிறைந்தது என்கிறார் திருமூலர், அன்பின் திறம் அத்தகையது பேரறிவு பொருளான அவன் என்கிற சிவம் , சிற்றறிவு பொருளாகிய தான் என்கிற ஆன்மா என இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்னொளியில் கண்டு, தான் என்கிற உணர்வை அவன் விளங்கும் சகஷ்கரதளத்துக்கு மாற்றினால் வேறுபாடின்றி நானே அவன் என்கிற நிலை வரும், பாடல் : தான் என்று அவன் என்று இரண்டாகும் தத்துவம்........................ பாதையில் முள் இல்லை, பக்கத்தில் உண்டு, பாதைவிட்டு விலகினால் முள் குத்தும், இறைவன் நல்ல பாதையையும் நெருஞ்சயில் முள்ளையும் பக்கம் பக்கமாய் வைத்தான் நாம்தான் பார்த்து நடக்க வேண்டும், அறவழி தவறினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும். பாடல்: நெறியைப் படைத்தான் நெஞ்சில் படைத்தான்.......... சிவத்திடம் மனது வைத்த பண்பாளர்கள் துன்பங்களில் அஞ்சுவதில்லை. அவர்கள் வேறுபடுத்தி அறியமாட்டார்கள் பாடல்: ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்.......... சிவனது அருள்பெற்றவர் அறிவார், இவ்வுலகம் ஏன் படைக்கப்ட்டது , உடலோடு உயர் எதற்காக இணைக்கப்பட்டது தவத்தின் மேன்மை எத்தகையது என்பதெல்லாம், அவரவர் தவத்தை பொறுத்தே அவன் தெரிவதும், மறைவதும் புறக்கண்ணால் காணமுடியாது போகலாம், அகக்கண்ணால் காண்பது ஆகுந்தானே! உலகமே சிவனது அடையாளம் உலகனைத்தும் சிவனிடம் உள்ளமையால் உலகமே சிவலிங்கமாயிற்று. சிவன் - உருவம், அருவம், அருவுருவம் என்று மூவகை திருமேனியைக் கொண்டவன், உயிர்களுக்கு குருவாய் தோன்றி அருள்பவன், அவனே சதாசிவமாய் கற்பக்தருவாய் வேண்டுவோருக்கு வேண்டுவன அருள்பவன், சோதிவடிவான இறைவனின் ஒருபாதியில் பராசக்தி விளங்குகிறாள், சிவசக்தி விளையாட்டே இவ்வுலகம் வடிவான சக்தி அறிவான சிவன், இரண்டும் இல்லாமல் உடலுக்குள் உயிர் பொருந்தி நிற்பதில்லை, இந்த மேலோனின் திருவுருவத்தை தெரிந்து அறியாமையால் இதுவரை காலங்கள் வீணில் கழிந்தன. அந்நிலையில் சிவனாகிய தலைவன் குருவாக வந்து காட்டுவித்தனன், ெம்ய்யறிவு துணையாய் கொண்டவரை மேவியிருப்பான் சிவன். பாடல் : தேர்ந்த அறியாமையின் சென்றன காலங்கள்........... தவத்தின் பயனாய் இருப்பவனை, தவம்செய்வார்க்கு நலம் செய்பவனை கடந்து விளங்கும் தூயவனை நாடுங்கள், அவ்விதம் நாடினால் எண்ணற்ற ஆன்மாக்களில் உங்களை மேம்பட்டவராக்குவான், சிவனது திருவடியை உணர்ந்தவர், உணர வேண்டியது வேறு ஏதுவும்இல்லை. சிவத்தின் விருப்பதிற்கு இணங்க சக்தி செயல்படும், சிவன் முச்சுடர்களையும் ஒரு சுடராக்கி ஒளிரச் செய்கிறான், உடலுறவால் வந்த தாயும், தந்தையும் உற்பத்திக்கு காரணம் என்கிற மயக்கத்தை விட வேண்டும், உண்மையான தாயும் தந்தையும் அந்த சிவசக்தியே ஆகும், திருமூலர் மேலும் கூறுகிறார், " பெற்ற தாயும் தளந்தையும் தங்கள் காதலுறவில் விளைந்த இவ்வுடல் மீது அன்பு வைத்தனர், உயிரைக் கண்டன்று, ஆனால், சிவனும் சத்தியும், உயிருக்குயிராயினர், நாங்கள் ஒன்றுபட இருந்ததில் அவர்களை நான் உணரமுடிந்தது, என்னை ஒருபோதும் பிரியாத அம்மையையும் அத்தனையும் வணங்கி அவர்களது அருளை பெற்றேன் " என்கிறார்,. திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு ..... http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com