வெள்ளி, 4 ஜூலை, 2014

சிவபெருமானாரின் இறக்கத்தன்மை


சிவபெருமானாரின் இறக்கத்தன்மை சிவபெருமானார் காலத்தைக் கடந்தவர், காலனை (எமனை ) உதைத்தவர், காமனை எரித்தவர், அப்பெருமானார் தேவரும் மூவரும் மற்றும் யாவரும் வணங்குகின்ற தன்மையனர், அயன், மால் ( பிரம்மா,திருமால்) தேவியர் எல்லாராலும் வணங்கப்பெற்றவர், ஆனால் அவர் யாரையும் வணங்காத உயர்வுடையவர், அடியார்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், " தன்னால் தொழப்படுவார் யாரும் இல்லாதான் " ........... திருமூலர் இவ்வளவு அருமைப்பாடுடைய சிவபெருமானார் தம்மை அன்புடன் வழிபடும் அடியவர்கட்கு மிக எளியவராகக் காட்சி அளிப்பவர், அடியார் பொருட்டு அவர் புரியும் செயல்பாடுகள் யாவும் மிக அருமைப்பாடுடையனவாக இருக்கும், அததைத்தான் மாணிக்கவாசகர் " அருமையில் எளிய அழகே போற்றி " ..... போற்றி திருஅகலில் கூறுகின்றார், அப்பெருமானாரின் எளிவந்த செயல்பாடுகளில் சிலவற்றைக் கண்டு மகிழ்வோம் 1, காஞ்சீபுரத்தில் சாக்கிய நாயனார் அன்றாடம் கல்லால் அடித்தார், அதனை மலராக ஏற்று அவருக்கு முத்தி கொடுத்தருளினார், 2, கண்ணப்பரிடம் காலால் உதைபட்டார் 3, விசயனிடம் வில்லால் அடிபட்டார் 4, பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடிபட்டார், 5,வந்திக் கிழவிக்கு கூலியாளாக வந்து மண் சுமந்தார் 6,மாணிக்கவாசகர் பொருட்டு குதிரை சேவகனாக வந்தார் 7,சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருஒற்றியூரிலும், திருவாரூரிலும் காதலுக்காக தூதுபோனார் 8, இடைக்காட்டூர் புலவன் என்பவனுக்காக வேண்டி மதுரையை விட்டு ஒரு நாள் இடம் பெயர்ந்து சென்றார், 9,மதுரை மன்னன் இராசசேகர பாண்டியன் பொருட்டு கால்மாறி ஆடினார், 10, பாணபத்திரன் பொருட்டு விறகு விற்கும் ஆளானார் 11, மதுரையில் பாணபத்திரனுக்கு மாணிக்க பலகை அருளினார் 12, மதுரையில் குட்டிகளை ஈன்றுவிட்டு இறந்த தாய் பன்றியின் உருவெடுத்து குட்டிகளுக்கு பாலூட்டினார் " ஏனக் குருளைக்கு அருளினை போற்றி " திருவாசகம் 13, திருநாவுக்கரசருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் பசித்திருந்த பொழுது அவர்கட்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார் 14, ஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல், பல்லக்கு, தாளம் போட பொற்தாளம் கருவி வழங்கினார் 15 தருமிக்கு பொற்கிளி கிடைக்கச் செய்தார் 16, திருமறைக்காட்டில் கருவறையில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரயை அணையாமல் தூண்டிய எலிக்கு மறுபிறவியாக மாவலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார், 17, மகாசிவராத்திரி தினத்தன்று வில்வ இலையை பறித்து போட்ட குரங்கிற்கு முசுகுந்த சக்கரவர்த்தியாக மறுபிறவி அளித்தார் 18, ஆனைக்கால் எச்சிலால் நூல்கட்டிய சிலந்திக்கு செங்கட்சோதுனாக பிறக்கச் செய்தார், இவ்வாறு " கற்பனை கடந்த கருணையே உருவமாகி " சிவனடியார்கள் மனத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கருணைக்கடலை சிவபொருமானாரை போற்றி வணங்கி நலம் வளம் பெறுவோம் திருச் சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம மேலும் ஆன்மீகதேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக