ஞாயிறு, 6 ஜூலை, 2014

திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21 கூடா ஓழுக்கம்


திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21 கூடா ஓழுக்கம் சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை அறியாமலே சில ஆணும் பெண்ணும் தவறு செய்யத் துணிகிறார்கள், எது பண்பாட்டுக்கு பொருந்தாதோ, எதைச் சமூகம் ஏற்காதோ, அது அறநூல்கள் கூறுவதை மீறுகிதோ, அது கூடாவொழுக்கம், தனக்கு உரிமையில்லாத எதிர்பாலினருடன் ஒருவர் கூடிக் களிப்பது கூடாவொழுக்கம் . (திருமந்திரம் ஏழாம் தந்திரத்தில் சொல்லப்பட்டது) மேற்பார்வை செய்யும் கங்காணியாக இறைவன் இருக்கிறான், அவன் இல்லாத இடமெது? அவனது இருப்பை உணர்ந்த நிலையில் யாருக்கும் வஞ்சகத் தொழிலில் இறங்கத் தோன்றுமோ? மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம். காமத்தை எழுப்பும் கன்னியர் கையில் அகப்பட்டவரும் தேவங்களை ஓதுபவரும் , சுயவதை மேற்கொண்டு தவம்புரிவோரும் வெவ்வேறு வகையில் சிறைப்பட்டவர்கள்தாம்.இறைவனின் இயல்புணராத எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் தளையுண்டு கிடக்கின்றனர். தீவினை காரணமாக ஒருவனுக்கு சிவச்சிந்தை இல்லாமல் போவது . சிற்றின்பத்தில் தனது ஆற்றலை இழந்து கொண்டிருப்பவனால் எப்படி சிவனது ஆற்றலை அறியமுடியும்? என்று கேட்கிறார் திருமூலர், தொட்டு தாலி கட்டிய மனைவி வீட்டில் இருக்க, பிறதது மனையாளை விரும்பும் காளையர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தின் கனியை உண்ணாமல் ஈச்சம் பழத்தினை உண்ண அதனை பெறுவதற்கு துன்பம் அடைவது போன்றதாம், பாடல் : ஆத்த மனையாள் அகத்தில் இருக்க காத்த மனையாளைக் காமுறும் காளையர்.................... இதுபோன்று இன்னொரு பாடலில் " இலைநல ஆயினும் எட்டி பழுத்தால் குலைநல ஆம்கனி கொண்டுணல் ஆகா.......................... எட்டிப்பழத்தின் அழகிய தோற்றம் கண்டு அதன்மீது விருப்பம் கொளல், அப்பழம் உண்ணத்தக்கது அன்று என்று தெரிந்தும், அதன் மீது மையல் கொளல், முலையாகிய அங்கத்தைக்காட்டி புண்ணகை செய்பவர் மீது மக்கள் நாட்டம் கொண்டு மனத்தை கொடுமைக்கு தம்மை ஆளாக்கி கொள்ளாதருப்பாராக என்கிறார். திருக்குறளில் துறவியலில் வருகிறது கூடாவொழுக்கம் பற்றி, வள்ளுவர் இதனை பொருந்தாத தீயவொழுக்கம் என்பார், தவக்கோலத்தில் துறவியாய் இருந்து கொண்டு ஊட்டமிக்க உணவுண்டு மறைவாகப்பெண்ணுடன் உறவாடும் தற்போதைய போலிகளை நம் நினைவுக்கு கொண்டுவரும் பாடல் இது "நெஞ்சின் துறல்வார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்" என்கிறது குறள் ஆசைகள் நெஞ்சுக்குள் அப்படியே இருக்க துறந்தாற்போல் நடித்துப் பிறரை மோசம் செய்யும் துறவிகளைப்போல் கொடியவர் இவ்வுலகில் இல்லை இவர்கள் மனச்சாட்சியை ஒருபக்கமாய் விலக்கிவிட்டோ, அல்லது ஒரேயடியாய் உதறிவிட்டோ குற்றங்கள் செய்வார்கள். கன்னிப் பெண்கயையும், பிறருக்கு உரிமையானவர்களையும் இவர்கள் கற்பழிப்பார்கள், அடுத்தவர் பொருளை அபகரிக்கவும் தேவைப்பட்டால் உயிரையும் எடுக்கவும தயங்கமாட்டார்கள். சிலர் தங்களுடைய சுயமையை வெளிப்படையாய் காட்டிவிடுவார்கள், சிலரோ தங்கள் கொடிய தன்மையை மூடிமறைப்பார்கள், யார் நல்லவர் யார் கெடடடவர் என்பதை அவர்களுடைய கோலத்தால் அறியமுடியாது. அவர்களது செயல்வகையாலேயே அறிந்து கொள்ள முடியும், கூடாவொழுக்கம் உள்ளவர்கள் தங்கள் புறத்கோலத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய கள்ள வேடத்தை ஒழுங்கற்ற செய்கையை உலகம் அடையாளம் காணாதவரை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே வருவார்கள். மனத்துக்கண் மாசுள்ள துறவிக்குத்தான் மழித்தலும், நீட்டலும் தேவைப்படும், மனமாசுக்களை அகற்றியவருக்கு கோலங்கள் எதற்கு? அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடப்பவனால் எப்படி நிலம் நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் சூரியன், சந்திரன் இவற்றுடன் சிவபெருமான் இணைந்திருப்பதை உணரமுடியும்? ஆசையை தூண்டுகிற சிற்றின்பம், பின் ஆற்றலை குன்றச் செய்துவிடும், சிற்றின்பம் அற்பகாலமே நீடிப்பது இந்த உண்மையை உணர்ந்து அதை விடடொழித்தவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை இறைவன் வழங்குகிறான். திருசிற்றம்பலம் --- ஓம் நமசிவாயம் ஒம் மேலும் சில ஆன்மீக தகவல் காண http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக