சனி, 20 ஆகஸ்ட், 2016

திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்

மாணி்க்க வாசகரின் 


திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்
திருச்சாழல்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை  திருவெம்பாவை  திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக திருச்சாழல் என சொற்போர் விளயாட்டாக  பாடிய பாடல்கள் பற்றி நாம்  காண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் திருச்சாழல்

திருச்சாழல் ;
சிவபிரானுடைய செயல்களை வினா விடைகளால் விளக்குவது திருச்சாழல். இதுவும் ஒரு மகளிர் விளையாடும் சொ்ற்போர் விளையாட்டாகக் கொண்டது. ஒரு பெண் பாட்டுடைய தலைவனான சிவபிரானின  பெருமைகளையும், வீர தீரச் செயல்களையும் அவர் ஏன் செய்தார்,அதன் பயன் என்ன? என்பது போன்று கேள்வி கனைகளை பாடல்களால் தொடுப்பாா், இதற்கு எதிரில் வாதாடும் மற்றொரு பெண் அதற்கு பதில்களை பாடல்களால் பதிலளிப்பாா், இதுவே திருச்சாழல் 
   ஈழநாட்டு புத்தர்கள் தில்லையம்பதியின் அளவற்ற பெருைமகளையும், சிறப்புகளையும் அறிந்து பொறாமை ெகாண்டு, அரசனையும், அவரது ஊமைப் பொண்ணையும் கூட்டுக் கொண்டு தி்ல்லையம்பலம் சிதம்பரம் வந்தனா். அங்கு வந்த அவர்கள் அந்தணர்களிடம் எங்களிடம் சொற்போர் புரிந்திட வம்புக்கு வந்தனா். அவர்கள் இவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்விகளுக்கு தங்களால் சரியான பதில் அளிக்க முடியாது என கொண்டு மாணிக்க வாசகரிடம் அறிமுகம் செய்து அவர்களின் சொற்போருக்கு மணிவாசகரை பதிலளிக்க வேண்டினர். அப்போது அவர்களால் குதர்க்கமாக  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தும், அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர் இதற்கு உடனே மணிவாசகர் ஈசனிடம் வேண்டி குதர்க்கம் செய்யும் புத்தர்களையும் அவனை சேர்ந்தவர்களையும், ஊமையாக்க வேண்டினார், அதன்படி அவர்கள் குதர்க்கம் செய்த புத்தர் பிச்சுக்கள் ஊமையாகினா். இதனால் அவர்கள் மனம் நொந்து மணிவாசகரிடம் பணிந்து வேண்ட, அதன் பொருட்டு மனம் இறங்கிய மணிவாசகர் அரசனின் மகள் ஊமைப் ெபாண்ணை திருச்சாழல் பாட்டுக்களுக்கு விடையளிக்கும் விதமாக அக் கேள்விகளுக்கு அப்பெண்ணே பதில் அளித்தார். இதனால் பிறவி ஊமையான அரசனின் புதல்வியும் பேச வைத்தும், குதர்க்கம் செய்த புத்த பிச்சுக்ளும் பேசும்படி செய்தார். 
இதனால் புத்த பிச்சுக்களும் மதம் மாறி மகிழந்தனா். 
  அவ்வினாவையும், விடையையும் அமைத்து திருச்சாழல் என்னும் விளையாட்டு பதிகம் பாடினார். அந்த பாடல்களில் உள்ள சராம்சங்கள் 
1, சிவபிரான் நஞ்சுண்டமையால் ேதவர்கள் எல்லாம் பிழைத்தனா்
2. பெருமான் மலைமகளை திருமணம் செய்யாவிட்டால்  யாவரும் யோகநிலை அடைந்திருப்பர்
4. தில்லையில்  பெருமான் நடம் புரியாவிடில் உலகமெல்லாம் காளிக்கு ஊனாகி அழிந்திருக்கும்.
5.பெருமான் எலும்பு மாலையை ஏன் அணிந்துள்ளாா். 
  மாலும் பிரமனும் தம் காலம் முடிந்து இறந்து பட்டனா் என்பதை குறிப்பதற்கு
6. பிரான் அறம் உரைத்ததும், புரம் எறித்ததும் அவருடைய  அறக் கருணையையும், மறக்கருணையையும் காட்டும்.

திருச்சாழல் பாடல்களில் சில
பூசுவதும் வெண்ணீறு
    பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
    மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
    பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
    இயல்பானான் சாழலோ  

பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

.பாடல் எண் : 5
தக்கனையும் எச்சனையுந்
    தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
    தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
    தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
    றருளினன்காண் சாழலோ 

தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

பாடல் எண் : 10
தானந்தம் இல்லான்
    தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
    தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
    தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
    வான்பொருள்காண் சாழலோ  

தான் முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ, ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

புதன், 17 ஆகஸ்ட், 2016

இருந்தாலும் இறந்தாலும் புண்ணிய பலன்

இருந்தாலும் இறந்தாலும் புண்ணிய பலன்

இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் நற்செயல்கள் செய்து பு்ண்ணியம் பெறுவது எல்லாம்அந்த மனிதரின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது, இது இயற்கை வகுத்த விதி. இந்த இயற்கை விதியை மீறியும் ஒருவர் இறந்த பிறகும் நற்செயல்கள் செய்ய இயலும். அதனால் புண்ணியமும் தேடிக் கொள்ள முடியும், ஒருவர் வாழ்கின்ற காலத்தில் அவர் செய்த சில நல்ல செயல்கள் அவர் இறந்த பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் புண்ணியத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். வாழும் போது எந்த நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டதோ அந்த நோக்கங்கள் கால காலமாக நிலைத்து அவருக்கு நன்மைகள் செய்த கொண்டே இருக்கும். 



உதாரணமாக பசி்த்தவர்களுக்கு புசி என்று உணவிடும் தர்ம சாலைகள்,தாகம் தீர்க்கும் குடிநீர் வசதிகள், அப்பாடா என்று ஓய்வெடுக்க நிழல் தரும் மரங்கள் நடுவது. கோயில்கள் கட்டுவது, அல்லது புணரமைப்பது, அதுவும் இயலாவிடில் காலம் காலமாக கோயில் விள்கு எரய உதவுவது,ஏழைகள் இலவசமாக கல்வி பெற கல்விக் கூடங்கள் அமைப்பது, இலவசமாக மருத்துவ உதவிகள் தருவது,ஆதரவற்றவர்களுக்கு இல்லங்கள் அமைப்பது, தர்ம ஸ்தாபனங்கள் அமைப்பது, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலம் நற்செயல்கள் செய்வது, போன்ற செயல்கள் யாதேனும் செய்து புண்ணியத்தை பெற்று அது இறந்தபின்னரும் தமக்கும் தன் சன்னதினருக்கும் கிடைக்கும், தான் அன்புடன் பண்புடன் ஒழுக்கத்துடன்இறை நன்பிக்கையுடன் இருந்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தன்னைப்போல் மாற்றி வழி நடத்தி செல்பவர்களுக்கு தன் கொள்கைகளை பின் பற்றுவார்களால் கிடைக்கும் புண்ணியம் இறந்த பிறகும் கிடைத்தபடியே இரு்ககும், சாஸ்திர சம்பிரதாயப்படி மதம்வலியுறுத்தும் நெறிகளை தானும் கடைபிடித்து,தன் குடும்பத்தாரையும்பின் பற்ற ைவத்து, அதன்படி தம்மால் வளர்க்கப்பட்ட வாரிசுகள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும்அவர்களுக்கும் அதை பின்பற்ற வைத்த ஊக்கியாக இருந்த மரணமடைந்த பெற்றோரகளுக்கு  புண்ணியம் சேர்த்து வை்ப்பதாகும், நாம் பெற்ற பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் சிராத்த பித்ரு காரியங்ள் , அவரகள் நாளும் செய்யும் இறைவணக்கம் இறைஉண்ர்வோடு அவர்கள் செய்யும் எந்த ஒரு நற்செயலும் அந்த செயல்களால் கிடைக்கும் புண்ணியம் பெற்றோருக்கு  மரணத்திற்கு பிறகும்நன்மை கொடுப்பவனவாகும்.
  மேலே கூறிய நற்செயல்கள் செய்தால் ஒருவர் தமது வாழ் நாளிலும், அவர் இறந்த பின்பும் புண்ணியத்தை பெற்றுக் கொண்டேஇருக்கலாம், 
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

நமது பாரம்பரியத்தில் சாஸ்திரங்களுக்கு தவிர்க்க இயலாத உன்னதமான இடம் உள்ளது.
இந்த சாஸ்திரங்களைப் படைத்தவர்கள் முனிவர்கள் ஆவர். அவர்கள்கூட தாமே இதனை இயற்றியதாகவோ, எழுதியதாகவோ சொல்லவில்லை. மாறாக, அவர்கள் தம் தவத்தினால் கண்டறிந்ததை, உணர்ந்த சத்தியத்தையே சாஸ்திரங்களாகபடைத்தளித்தனர்.
இதனால் தான் அவர்களை ‘மந்த்ரத்ரஷ்டா’ என்று முன்னோர்கள் அழைத்தனர்.  உருவற்ற  அருவமாக இறைவனை உணர்வதற்கு ஞானிகளால் மட்டுமே இயலும்.  ஆனால், எளியவர்களான நமக்கு உருவவழிபாடே தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
 இந்த உருவவழிபாட்டைச் செய்வதற்குக்கூட, ஒரு விதிமுறை உள்ளது.  அவரவர் தத்தமது விருப்பிற்கேற்ப முறையற்ற வழிபாட்டைச் செய்வது இயலாது.
உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு அல்லது விக்கிரஹ ஆராதனை என்பது  தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவவழிபாடுசெய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளும் சமயிகள்கூட, புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,
ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டுசெல்லும் அம்சமாகவே இருக்கின்றது.  இதனை ஸ்ரீவைணவர்கள் ‘அர்ச்சாவதாரம்’ என்று  கொண்டாடுவர். இந்தஅர்ச்சாவதாரத்திற்காகவே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.      அவை பண்பாடு,கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம்வளர்க்கும் உன்னத நிலையங்களாகவும் விளங்கி வருகின்றன.
வெறும் கல்லுக்கு ஏன் இவ்வளவு உபசாரம் என்று பலரும் விதண்டாவாதம் பேசக் கேட்டிருக்கலாம். அறுபது இலட்சம் மூபாய் காசோலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு துண்டுக்காகிதம். அதில் என்ன பெறுமதிஇருக்கிறது? ஒரு சிறு காகிதம்தானே என்று கசக்கி எறியலாமா?  அந்த காகிதம்எப்படி பலலட்சங்களை வெளிப்படுத்துகின்றதோ, அதுபோலவே, கல்லில்சமைக்கப்பட்ட அந்தத் திருவுருவம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகக் காட்சிதருகின்றது.
ஆகமச்சிறப்பு:
 எப்படி, கட்டடக்கலைக்கு பொறியியற்துறை (B.E), மருத்துவத்திற்கு (M.B.B.S),கலைகளுக்கு(B.A,finearts) என்று ஒவ்வொரு சாஸ்திரம் இருக்கின்றதோ அதுபோலவே,
திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு சாஸ்திரம் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.
ஆகமம் என்பது ஒரு பெரிய பாதை என்றால், அதில் பல கிளைப்பாதைகள் உள்ளன.சைவாகமங்கள், பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற இரு வைணவ ஆகமபிரிவுகள், சாக்ததந்திரங்கள் என்று இக்கிளைகள் பல. பௌத்தர்களுக்கும், ஜைனர்கள் என்ற சமணர்களுக்கும் தனித்தனி ஆகம நூல்கள் உள.
 ஆயினும், ஆகமங்களால் வழிபடப்பெறும் இறைவனே ஆகமம்கூறும் மூலதத்துவம் ஆகும். இந்த ஆகமங்களுக்குள் ஒன்றோடொன்று குழம்பிக்கொள்ளாமல், ஒன்றில் சொல்லப்பட்டது மற்றொன்றிலும் சொல்லப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி, அவரவர் அவ்வவற்றை ஏற்றலே முறையாகும்.
 துவாபரயுக நிறைவில் தோன்றிய வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மக்கள் அறநெறி நின்று விலகாது வாழ்வதற்காக ஆகமங்களை இயற்றுமாறுமுனிவர்களுக்குக் கட்டளையிட்டார். சிவ, விஷ்ணு, தேவி வழிபாட்டுக்குரியதானஆகமங்கள் யாவும் உருவாக்கப்பட்டன. யாவற்றையும் ஸ்ரீ கிருஷ்ணனானகண்ணன் பார்வையிட்டு, பரிசீலித்து ஒப்புதல் அளித்த பிறகே அவை பிரச்சாரம்செய்யப்பட்டன என்று ஒரு கதை இருக்கின்றது.
இந்த கதையுடன் ஒட்டியதாக, ஆகமங்கள் குறித்து அனேகமாக, யாவரும்ஏற்றுக்கொள்ளும் ஒரு சுலோகம் உள்ளது. அது,
“ஆகதம் சிவவக்த்ரேப்யோ 
கதம்ச கிரிஜானனே
மதம்ச வாசுதேவஸ்ய
தஸ்மாதாகம முச்சயதே”
இந்த சம்ஸ்கிருதக் கவிதையின் நான்கு வரிகளில் முன்னெழுத்துக்கள் ஆகம என்ற சொல்லைக் காட்டுவதைக் காணலாம்.
இதன் பொருளாவது,
“பரமசிவனுடைய திருமுகத்திலிருந்து வந்தது. மலைமகளான பார்வதியின்காதுகளில் சென்றது. வாசுதேவனான திருமாலால் ஒப்புக்கொள்ளப்பட்டது”என்பதாகும்.
ஆகம பேதங்கள்:
சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை.
உக்ரஜோதி, சத்யோஜாத, ஸ்ரீராமகண்ட, வித்யாகண்ட, நாராயணகண்ட,வீபூதிகண்ட, ஸ்ரீகண்ட, நீலகண்ட, ஸோமசம்பு, ஈசானசம்பு, ஹ்ருதயசிவ,ப்ரம்மசம்பு, வைராக்ய சிவ, ஞானசம்பு, த்ரிலோசனசிவ, வருண, ஈஸ்வரசிவ,அகோரசிவ என்பதே அப்பதிணெண் சிவாச்சார்யர்களின் திருநாமங்களாகும்.
இதில், அகோர சிவாச்சார்யரின் பத்ததியே ஆகமமரபில் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.
இப்பதிணெண் சிவாச்சார்யர்கள் தவிர, சர்வாத்மசிவ, சர்வேசபண்டித சிவ,வியாபகசிவ, வ்யோமசிவ, உத்துங்க சிவ, பரமானந்த யோகீஸ்வர சிவ, அப்பையதீட்சிதர் என்கிறவர்களும் சிவாகம விளக்க நூல்களைப் படைத்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந்த விளக்க நூல்களில் பலவும் இன்று காணக்கிடைக்காது அழிந்து விட்டன. ஆகமங்களிலும் அதிகளவானவை முழுமையாகவோ, பாகமாகவோ அழிந்து விட்டன.
சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.  
திருமூலர் பெருமான் ஆகமங்கள்பற்றி திருமந்திரத்தில் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
 அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.

இசையில் இறைவன்!

இசையில் இறைவன்!

இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மானிடர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் கூட இசைக்கு பணிவதை காண்கிறோம். வேய்ங்குழல் இசைக்கு பசுக்கூட்டமும், மகுடியின் இசைக்கு நாகமும் மயங்குவதை பார்க்கிறோம். சர்க்கஸ் கூடாரங்களில் தாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை, குதிரை, குரங்கு போன்ற விலங்குகளும் ஆடுவதை பார்க்கிறோம். எனவே இசை என்பது அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியாக திகழ்கிறது.

பாரம்பரிய இசை : நமது நாட்டில் மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரங்களுக்கு ஏற்றவாறு இசைக் கருவிகளை இசைத்துப்பாடுகிறார்கள். ஆனால் இந்த இசைகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பது நமது நாட்டின் பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதம். எந்த பாடலைப் பாடினாலும் அதற்கு மூல காரணமாக விளங்குகிறது. ராகம், தாளம், சுருதி, குரல்வளம், இவை நான்கும் சரிவர அமையாமல் இசைக்கப்படும் பாடலை எவருமே ரசிக்க முடியாது. இசையை ரசிப்பதற்கு இசை ஞானம் தேவையில்லை. நல்ல பாடலைக் கேட்கும் போது இசை ஞானமே இல்லாத பாமர மனிதன் கூடத் தலையை ஆட்டித் தாளம் போட்டு ரசிப்பதை காண்கிறோம். ஆனால் இவருடைய ரசிப்பு ஆழமற்ற, தற்காலிக ரசிப்பாகும். ஒருவர் ஒரு பாடலை ஆழ்ந்து ஞானத்துடன் ரசிப்பதற்கும் பயணம் செய்கின்ற போது, பேருந்தில் ஒலிக்கின்ற பாடலை கேட்டு விட்டும் படியிறங்கிச் செல்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா.

இசையில் தகவல்கள் : இப்படிப்பட்ட இசையானது மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பங்கு பெறுகிறது. அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட இசையை ரசிக்கிறது. குழந்தையை தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் போது தாய் தாலாட்டுப் பாடல் பாடுகிறார். அந்தப் பாடலைக் கேட்டு குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு அயர்ந்து உறங்குகிறது. அந்த தாய் கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்தா பாடுகிறாள்? அவள் பாடிய அந்த தாலாட்டுப்பாடல் என்ன ராகத்தில் அமைந்துள்ளது என்பது கூடத் தெரியாது. இந்த இடத்திலிருந்து தான் மானிடப் பிறவிக்கும் இசைக்கும் தொடர்பு ஏற்படுகிறது. தொட்டில் குழந்தையை தாலாட்டும் போது பாடுவது நீலாம்பரி என்னும் ராகத்திலிருந்து தொடங்குகிறது. ஒருவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்து, திருமணநாளில் மங்கல வாழ்த்து என்பது ஆனந்த பைரவி என்னும் ராகத்தில் பாடப்படுகிறது. முந்தைய அரசர்கள், போர்க்காலங்களில் போர்க்களத்திற்கு செல்லும் போது, கம்பீர நாட்டை என்னும் ராகம் இசைக்கப்படுகிறது. மனித வாழ்வின் இறுதிநாளில் அவலச்சுவையாக முகாரி என்னும் ராகத்தில் ஒப்பாரிப்பாடல் இடம்பெறுகிறது. இவ்வாறு பாடப்பெறும் பாடல்களுக்கான அடிப்படை கர்நாடக இசைதான். இந்த இசை அனைத்து உயிரினங்களையும் கவர்ந்து மயங்கச் செய்வதால் தான், நமது பாரம்பரியமான இசை வெளிநாடுகளிலும் பெயர் பெறுகிறது. அதனால் தான் இசையால் மயங்காத இதயம் எது? என்றும் கல்லும் இசையால் கனியாகும், முள்ளும் இசையால் மலராகும் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.

இசை ஞானிகள் : கர்நாடக இசைக்கு உயிரூட்டி வளர்த்த சங்கீத மும்மூர்த்திகள், தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள். இந்த இசை ஞானிகள், மூன்று மேதைகளும் தோன்றியிராவிட்டால் நமது பாரம்பரிய இசையான கர்நாடக இசையும் இராது.


எந்தெந்த கடவுள்களை என்னென்ன ராகங்களில் பாடித்துதிக்க வேண்டும் என்பது சங்கீத மும்மூர்த்திகளால் வகுக்கப்பட்ட முறை. முதற்பொருள் என்றும் மூலப்பொருள் என்றும் நாம் அனைவரும் போற்றி வணங்குகின்ற விநாயகரை, நாட்டைக்குறிஞ்சி என்னும் ராகத்தில் பாடித் துதிக்க வேண்டும். கர்நாடக சங்கீத மேடைகளில் சங்கீத வித்வான்கள் முதலில் இந்த நாட்டை என்னும் ராகத்தைபாடிய பின் தான், இசைக் கச்சேரியை தொடங்குவார்கள்.
அடுத்தாக தமிழ்கடவுள் முருகபெருமானுக்கு உகந்த ஷண்முகப்பிரியா ராகம். முருகனாகிய சண்முகனுக்கு பிரியமான ராகம் என்பதால் சண்முக பிரியா என்ற பெயரானது. முத்தொழில்களுக்கும் முதல்வனான சிவபெருமானை துதித்து வணங்க ஏற்ற ராகம் காம்போதி என்னும் ராகம். இலங்கை வேந்தன் ராவணேஸ்வரன் சிறந்த சிவபக்தன். அது மட்டுமல்லாது வீணை மீட்டுவதில் அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. வீணை இசையின் வல்லமையை எடுத்துக்காட்டும் விதமாக, தனது நாட்டுக் கொடியில் வீணையின் சின்னத்தை பொறித்தான். இவன் தனது வீணையின் இசையில் காம்போதி ராகத்தை இசைத்ததால், சிவபெருமான் இவனுடைய இசையின் லயிப்பில் இவனுக்கு காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இசையும் பக்தியும் : ஒரு முறை ராவணன் சிவபெருமானை நேரில் வரவழைக்க, தனது வீணையில் காம்போதி ராகத்தை இசைக்கத் துவங்கினான். இவனது இசையை கேட்டு ஈஸ்வரனும் உமையவளும் மெய்மறந்து அமர்ந்து விட்டார்கள். வெகுநேரமாகியும் இறைவன் காட்சி கொடுக்காதததால் இலங்கேஸ்வரனும் வீணை இசைப்பதை நிறுத்தவில்லை. காலையில் வீணை இசைக்கத் தொடங்கியது மாலை வரையிலும் தொடர்கிறது.
ராவணனுடைய விழிகளிலும், விரல்களிலும் குருதி கொப்பளிக்கிறது. எனினும் இசையை நிறுத்தவில்லை. வீணையில் உள்ள கம்பிகள் அறுந்து ஒவ்வொன்றாக சுருள்கின்றன. கடைசிக் கம்பியும் அறுந்துவிட்டது. அனைத்து கம்பிகளும் அறுந்து சுருண்ட போதிலும், ஆன்மிக உள்ளம் கொண்ட வேந்தன், சிவனை கண்ணால் கண்டு தரிசிக்காமல் விடமாட்டேன் என்ற வைராக்கியத்தினால், தனது வயிற்றை கிழித்து குடலை வெளியே இழுத்து, தனது இடதுகை விரல்களால் வரிசையாக கோர்த்து இழுத்துப்பிடித்து அதில் தொடர்ந்து காம்போதி ராகத்தை இசைத்தான். அவனுடைய தீவிரமான பக்தியை கண்டு சிவபெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

பாட்டும் ராகமும் : ஈஸ்வரனைப்பாடித் துதிக்க காம்போதி ராகம் மட்டுமல்லாது, கரகரப்பிரியா, சங்கராபரணம், சகானா ஆகிய ராகங்களில் பாடலாம். உமா மகேஸ்வரியாக பார்வதி தேவிக்கு உகந்த ராகம், பைரவி, ஆனந்த பைரவி, சிந்துபைரவி, அடானா, கல்யாணி ஆகிய ராகங்களில் பாடலாம். ஸ்ரீமந்நாரணனை பூபாள ராகத்தில் பாடித் துதி செய்து மத்தியமாவதி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை தோடி, தன்யாசி, ரஞ்சனி ஆகிய ராகங்களில் பாடி துதி செய்ய வேண்டும்.

தெய்வீக இசை : தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விழாக்களில் கிராமியக் கலையாகிய இசை நாடகங்கள் நடத்தப்படுகின்றன. வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் முக்கியமானவை. இந்த இசை நாடகங்களில் எந்தெந்த காட்சிகளில் என்னென்ன ராகங்களில் பாட வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன.
வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன் தோன்றுகின்ற கழுகாசலக் காட்சியில் ஆரபி அல்லது தேவகாந்தாரி ராகத்தில் பாடலைப் பாட வேண்டும். நாடகத்தின் இறுதிக் காட்சியில் வள்ளி நாயகியிடம் மானின் அடையாளம் கூறுகின்ற போது பைரவி ராகத்தில் பாடலை தொடங்கி காப்பி ராகத்தில் நிறைவு செய்ய வேண்டும். இதே போன்று அரிச்சந்திரா நாடகத்தில் மயான காண்டம் மட்டுமே நடத்தப்படுமானால் அரிச்சந்திரன் முகாரி ராகத்தில் பாடி வரவேண்டும்.
இசைக்கும் இறைவனுக்குமான தொடர்பை தெய்வங்களின் கைகளில் உள்ள இசைக்கருவிகளை கொண்டு அறியலாம். சிவபெருமான் கையில் உடுக்கையும், கண்ணனின் கையில் புல்லாங்குழலும், சரஸ்வதியின் கையில் வீணையும், நாரதரின் கையில் தம்புராவும், சிவகணங்களின் கைகளில் சங்கும் இருப்பதை காண்கிறோம். இப்படிப்பட்ட இசை கருவிகளை கொண்டே இறைவனும் இசையும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை அறியலாம்.
- தி.அனந்தராமன்
இசைநாடக ஆசிரியர்

திருச்சற்றம்பலம்
நன்றி; தினமலர்

பட்டினத்தார் என்ற திருவெண்காடர்

பட்டினத்தார் என்ற திருவெண்காடர்
குருபூசை நாள்  16/08/16 செவ்வாய் கிழமை


இளமை  முதலே  இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் 
சொல்லப்படுகின்றது.  வானுலக  தேவர்களில்  ஒருவரான  குபேரன் தான் இப்பூவுலகில்  பட்டினத்தாராக   அவதரித்தார்  என்று  திருவெண்காட்டுப் புராணம்  கூறும்.  இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர்.

     கப்பல் வணிகம் மூலம்  பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக 
உரிய  வயதில்  ஞானகலாம்பை  சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

     இல்லற  வாழ்க்கை   இனிதே   நடந்தாலும்  குழந்தையில்லா  ஏக்கம் 
திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை  வடிவாய்  சிவசருமர்  என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

     குழந்தை    பெரியவனானதும்   வியாபாரம்   செய்ய   அனுப்பினார். 
திரைகடலோடித்  திரவியம்  தேடிச்  சென்ற  மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.

மருதவாணனுக்குப்   பித்துப்   பிடித்து   விட்டதோ   என்றஞ்சிய  அவர் 
வீட்டினுள்ளே  சிறை  வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள்  சிதறின.  தவிடெல்லாம்  தங்கமாக  மின்ன திகைத்துப்போன திருவெண்காடர்  தம்  மகனைப்  பாராட்டத்  தேடுகையில்  அவரோ  தம் அன்னையாரிடம்  சிறு  பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார்.

     மைந்தன்  கொடுத்துவிட்டுச்  சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர்  ஓலைச்சீட்டும்  இருந்தது.  அதில்  ‘காதற்ற  ஊசியும்  வாராது  காண் கடைவழிக்கே’*  என்று  எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து  கொண்ட  திருவெண்காடர்  தமது  மைந்தனாக  இதுநாள் வரை இருந்தது  திருவிடைமருதூர்  பெருமான்தான்  என்பதை  உணர்ந்து  மனம் வருந்தித் துறவறம் பூண்டார்.

     *“காதற்ற  ஊசியும்  வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த  வாசகமும்  பாடலும்  புதுச்சேரி  கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

     இந்தத்  துறவு  நிலை  வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை பொருளாசை,   பெண்ணாசை,   வித்தையாசை  என்று  மனம்   ஆசையின் வாய்க்கப்பட்டு   அலைக்கழிப்புற்ற   நிலையை   அழகிய   கண்ணிகளாகப் பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா 
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா” 

இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு 
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; 
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே” 

காமக் குரோதம் கடக்கேனே என்குதே 
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே 
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே 

என்று அழுகிறார்.

     நேற்றிருந்தோர்   இன்று   இல்லை.   கண்ணுக்குக்   கண்ணெதிரே 
உடல்களெல்லாம்  கட்டையில்  வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான தென்று  எண்ணி  நிரந்தரமாக   இருப்போமென்று   எண்ணி  ஆங்காரம் கொள்ளுகிறதே,  நீர்க்குமிழி  போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே. அரும்பு  விழியழகும்,  குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும், 
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.
அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி [5] ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.


இந்தத் துறவியை இனி நாம்  பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.
துறவுக்கோலத்தில்  வீடு  வீடாய்ப்  பிச்சையெடுத்து  உண்டு திரிவது 
பட்டினத்தாரின்  சகோதரிக்கு  வருத்தத்தை  ஏற்படுத்தியது.  இப்படிப்பட்ட அவமானத்தைத்  தேடித்  தரும் தம்பி  தனக்கு  இருந்தென்ன செத்தென்ன என்ற எண்ணத்துடன்  பட்டினத்தாரை  விஷம்  கலந்த ஆப்பம் கொடுத்துக் கொல்லப் பார்த்தாள்.

     தமக்கையின்  கருத்தை  அறிந்த பட்டினத்தார், ‘தன்னப்பம் தன்னைச் 
சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  என்று  கூறி  வீட்டின்  கூரை  மீது 
அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது.

     இப்படித்  துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி திருப்பதிகம்  பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை  செய்து  முடித்தார்.  இவ்வளவு  நாட்கள்  அவ்வூரில்  சுற்றித் திரிந்தது இதற்காகத்தானே.

     இவர் பாடிய இந்த தகனப்பாடல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  இறுதி  ஊர்வலப்  பாடலாய்த்  திருவாசகத்துடன்  சேர்த்துப்பாடப்படுகிறது.  இது  வேறு எந்தச் சித்தர் பாடலுக்கும் இல்லாத சிறப்பாய்க் கருதப்படுகிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பே னினி”

என்று  ஓதுவார் பட்டினத்தாரின்  இந்தப் பாடலைப்  பாடும்போது உயிரற்ற அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது.

     பிணம்  சுடுவதற்கு  முன்போ   அல்லது   புதைப்பதற்கு   முன்போ 
வாய்க்கரிசி  இடுதல்  என்ற  சடங்கு  உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு 
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள 
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ 
மானே யென வழைத்த வாய்க்கு”

என்று  வாய்க்கரிசி   இடுபவர்   மனம்   அழும்  ஆசையை  இப்பாடல் 
எதிரொலிக்கிறது.

     வெட்டியான்  மண்ணால்   உடலை   மூடுகிறான்.  அல்லது  உடலை 
வறட்டியால்  (எரு மூட்டையால்)  மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு 
தடவை பார்க்கத் துடிக்கிறது.
 உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது. எத்தனை  அருமையாய்  எம்மைப்  பாதுகாத்த  ‘தாய்’  அவளுக்கா இந்தக் கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது.

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும் 
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 
வெரியத் தழல்மூட்டு வேன்”

     தம்  குழந்தைப்  பருவத்தில்  சோறூட்டிய  தாயாரின் கருணை முகம் 
மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார்.
இப்பொழுது அவர் மனம்  ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது. 
உடற்  சாம்பல்   சேகரிக்கப்படுகிறது.   இனி   என்ன?  நேற்று  உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை என்று சமாதானமடைகிறார்.


இப்படி பல தலங்கள் சென்று தத்துவப்பாடல்கள் பாடிய பட்டிணத்து அடிகள் திருவெற்றியூரில் தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப் படுகிறது.இவ்வாறு பட்டிணத்தடிகள் சித்தி பெற்று முக்தி அடைந்தார்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு  
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆடி மாதம் பக்தி மாதம்

ஆடி மாதம் பக்தி மாதம்

ஒவ்வொரு மாதப்பிறப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இரு்க்கிறது. அந்த வகையில் தமிழ் மாதப்பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடபபடுகிறது. சோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம்  என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிறப்பாகும்.


  ஆடி மாதம்நம் எண்ணங்கள் எல்லாம் இறைவனோடு வைத்துக் கொள்ள உதவும் ஒரு கருவியாக இருக்கிறது. கண்ணனு்க்கு மார்கழி மாதம் போல் ஆடி மாதம் பெண்களுக்கு உகந்தமாகும். ஆடி மாதத்தில் வீடுகளிலும் கோவில்களிலும், விழாக்களும், விரதங்களும் களைகட்டும் மாதமாகும். அம்மன், அம்பாள், ஆண்டாள்,சக்தி ஸ்தலங்கள் என எல்லாக் கோவி்ல்களிலும்  சிறப்பு பூசைகள் கோமங்கள், என்று எங்கும் பக்திதான் , ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகள் விசேசமானவையாகும். ஆடி வெள்ளி யன்று. அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் எங்கும் கொடிகட்டி பறக்கும். இது போல ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்கள், பிராத்தனைகளை ெசலுத்தும் நாளாகும். இந்நாட்களில் அலகு குத்துதல், மொட்டை எடுத்தல்,காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதல், கூழ் ஊற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் நடைபெறும். இந்த மாதம் முழுவதும் பக்தியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி தருவது இந்த ஆடி மாதம் என்றால் மிகையில்லை.
   இந்த மாதத்தில் வரும்ஆடி அமாவாசை ஆடி பெருக்கு ஆடிக் கிருத்திகை,ஆடித்தபசு, ஆடிப்பூரம் வரலட்சுமி விரதம் என விசேச வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கு்ம். இந்த ஆடி அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நம் முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம் வஸ்திர தானம் செய்வதும், இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் புண்ணிய நாளாகும்.

   ஆடி 18 மிக சிறப்ான நாள், இது இயற்கையை வழிபடும்நன்னாள். ஆற்றிலும் நதியிலும் புரண்டு வரும் நீரை வணங்குதல் மரபு. தற்காலத்தல் ஆறு நதியில் நீர் வறண்டு போனதால் கடல் சார்ந்த இடங்களுக்கு சென்று கடற்கரையில் இந்நிகழ்வுகள் கொண்டாடுகின்றனர். இந்நாளில் கன்னிப் பெண்கள் திருமணம் வேண்டி மஞ்சள் சரடு கட்டுவதும், திருமணமான பெண்கள் கணவன் ஆயுள் திடப்பட புதிய தாலி மஞ்சள் கயறு கட்டும் நிகழ்வும் இன்றும் நடைபெறுகிறது. 

 இத்தனை சிறப்பு பெற்ற இந்த ஆடிமாதத்தில் அம்மனை வழிபட்டு அருள் பெற்று சிறப்புடன் வாழ்வோம். 
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சு்நதரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு 
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

கலிய நாயனார் & கோட்புலி நாயனார்

கலிய நாயனார்


குருபூசை நாள் 13/08/2016 சனிக்கிழமை

தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார்.

பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார். அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு நகரெங்குங்கூறி, வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார். அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.

திருச்சிற்றம்பலம்.
**********************************************************
கோட்புலி நாயனார் புராணம்

 குருபூசை நாள் 13/08/2016 சனிக்கிழமை

சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார்.

இப்படியொழுகுநாளிலே, அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தாந்திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார். சிலநாளிலே பஞ்சம் வந்தமையால் அந்தச்சுற்றத்தார்கள் "நாங்கள் உணவின்றி இறப்பதினுஞ் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட இந்நெல்லைக் கொண்டாயினும் பிழைத்து, பின் கொடுத்துவிடுவோம்" என்று நெல்லைக் கூடுகுலைத்து எடுத்துச் செலவழித்தார்கள், கோட்புலிநாயனார் அரசனுடைய பகைஞரைப் போர்முனையிலே வென்று அவனிடத்திலே நிதிக்குவை பெற்றுக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, தம்முடைய சுற்றத்தார்கள் அதிபாதகஞ்செய்தமையை உணர்ந்து, ஒன்று செய்யத் துணிந்து, தம்முடைய வீட்டிலே பகுந்து, அவர்களெல்லாரையும் அழைப்பித்து, தமது கோட்புலியென்னும் பெயரையுடைய காவலாளன் கடை காக்க, சிவதிரவியத்தை எடுத்துச் செலவழித்த அதிபாதகர்களாகிய தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி முதலிய சுற்றத்தா ரெல்லாரையும் பணிவிடைக்காரரையும் வாளினாலே துணிந்தார். அப்பொழுது காவலாளன் அங்கே பிழைத்த ஒரு ஆண்பிள்ளையைப் பார்த்து, "இக்குழந்தை அவ்வன்னத்தை உண்டதன்று. இது இக்குடிக்கு ஒரு பிள்ளை; இதனைக் கொல்லா தருள் செய்யும்" என்று வேண்ட; கோட்புலிநாயனார் "இது இந்நெல் உண்டவளுடைய முலைப் பாலை உண்டது" என்று அதை எடுத்து எறிந்து, வாளினாலே துணிந்தார். உடனே சிவபெருமான் கோட்புலிநாயனாருக்குத் தோன்றி, " அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று கருணை செய்து எழுந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்.

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்