செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பட்டினத்தார் என்ற திருவெண்காடர்

பட்டினத்தார் என்ற திருவெண்காடர்
குருபூசை நாள்  16/08/16 செவ்வாய் கிழமை


இளமை  முதலே  இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் 
சொல்லப்படுகின்றது.  வானுலக  தேவர்களில்  ஒருவரான  குபேரன் தான் இப்பூவுலகில்  பட்டினத்தாராக   அவதரித்தார்  என்று  திருவெண்காட்டுப் புராணம்  கூறும்.  இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர்.

     கப்பல் வணிகம் மூலம்  பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக 
உரிய  வயதில்  ஞானகலாம்பை  சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

     இல்லற  வாழ்க்கை   இனிதே   நடந்தாலும்  குழந்தையில்லா  ஏக்கம் 
திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை  வடிவாய்  சிவசருமர்  என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார்.

     குழந்தை    பெரியவனானதும்   வியாபாரம்   செய்ய   அனுப்பினார். 
திரைகடலோடித்  திரவியம்  தேடிச்  சென்ற  மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.

மருதவாணனுக்குப்   பித்துப்   பிடித்து   விட்டதோ   என்றஞ்சிய  அவர் 
வீட்டினுள்ளே  சிறை  வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள்  சிதறின.  தவிடெல்லாம்  தங்கமாக  மின்ன திகைத்துப்போன திருவெண்காடர்  தம்  மகனைப்  பாராட்டத்  தேடுகையில்  அவரோ  தம் அன்னையாரிடம்  சிறு  பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார்.

     மைந்தன்  கொடுத்துவிட்டுச்  சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர்  ஓலைச்சீட்டும்  இருந்தது.  அதில்  ‘காதற்ற  ஊசியும்  வாராது  காண் கடைவழிக்கே’*  என்று  எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து  கொண்ட  திருவெண்காடர்  தமது  மைந்தனாக  இதுநாள் வரை இருந்தது  திருவிடைமருதூர்  பெருமான்தான்  என்பதை  உணர்ந்து  மனம் வருந்தித் துறவறம் பூண்டார்.

     *“காதற்ற  ஊசியும்  வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த  வாசகமும்  பாடலும்  புதுச்சேரி  கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

     இந்தத்  துறவு  நிலை  வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை பொருளாசை,   பெண்ணாசை,   வித்தையாசை  என்று  மனம்   ஆசையின் வாய்க்கப்பட்டு   அலைக்கழிப்புற்ற   நிலையை   அழகிய   கண்ணிகளாகப் பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா 
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா” 

இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு 
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; 
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே” 

காமக் குரோதம் கடக்கேனே என்குதே 
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே 
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே 

என்று அழுகிறார்.

     நேற்றிருந்தோர்   இன்று   இல்லை.   கண்ணுக்குக்   கண்ணெதிரே 
உடல்களெல்லாம்  கட்டையில்  வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான தென்று  எண்ணி  நிரந்தரமாக   இருப்போமென்று   எண்ணி  ஆங்காரம் கொள்ளுகிறதே,  நீர்க்குமிழி  போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே. அரும்பு  விழியழகும்,  குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும், 
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.
அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி [5] ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.


இந்தத் துறவியை இனி நாம்  பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.
துறவுக்கோலத்தில்  வீடு  வீடாய்ப்  பிச்சையெடுத்து  உண்டு திரிவது 
பட்டினத்தாரின்  சகோதரிக்கு  வருத்தத்தை  ஏற்படுத்தியது.  இப்படிப்பட்ட அவமானத்தைத்  தேடித்  தரும் தம்பி  தனக்கு  இருந்தென்ன செத்தென்ன என்ற எண்ணத்துடன்  பட்டினத்தாரை  விஷம்  கலந்த ஆப்பம் கொடுத்துக் கொல்லப் பார்த்தாள்.

     தமக்கையின்  கருத்தை  அறிந்த பட்டினத்தார், ‘தன்னப்பம் தன்னைச் 
சுடும்;  வீட்டப்பம்  ஓட்டைச்  சுடும்’  என்று  கூறி  வீட்டின்  கூரை  மீது 
அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது.

     இப்படித்  துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி திருப்பதிகம்  பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை  செய்து  முடித்தார்.  இவ்வளவு  நாட்கள்  அவ்வூரில்  சுற்றித் திரிந்தது இதற்காகத்தானே.

     இவர் பாடிய இந்த தகனப்பாடல் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  இறுதி  ஊர்வலப்  பாடலாய்த்  திருவாசகத்துடன்  சேர்த்துப்பாடப்படுகிறது.  இது  வேறு எந்தச் சித்தர் பாடலுக்கும் இல்லாத சிறப்பாய்க் கருதப்படுகிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் 
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு 
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை 
எப்பிறப்பிற் காண்பே னினி”

என்று  ஓதுவார் பட்டினத்தாரின்  இந்தப் பாடலைப்  பாடும்போது உயிரற்ற அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது.

     பிணம்  சுடுவதற்கு  முன்போ   அல்லது   புதைப்பதற்கு   முன்போ 
வாய்க்கரிசி  இடுதல்  என்ற  சடங்கு  உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு 
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள 
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ 
மானே யென வழைத்த வாய்க்கு”

என்று  வாய்க்கரிசி   இடுபவர்   மனம்   அழும்  ஆசையை  இப்பாடல் 
எதிரொலிக்கிறது.

     வெட்டியான்  மண்ணால்   உடலை   மூடுகிறான்.  அல்லது  உடலை 
வறட்டியால்  (எரு மூட்டையால்)  மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு 
தடவை பார்க்கத் துடிக்கிறது.
 உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது. எத்தனை  அருமையாய்  எம்மைப்  பாதுகாத்த  ‘தாய்’  அவளுக்கா இந்தக் கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது.

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும் 
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 
வெரியத் தழல்மூட்டு வேன்”

     தம்  குழந்தைப்  பருவத்தில்  சோறூட்டிய  தாயாரின் கருணை முகம் 
மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார்.
இப்பொழுது அவர் மனம்  ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது. 
உடற்  சாம்பல்   சேகரிக்கப்படுகிறது.   இனி   என்ன?  நேற்று  உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை என்று சமாதானமடைகிறார்.


இப்படி பல தலங்கள் சென்று தத்துவப்பாடல்கள் பாடிய பட்டிணத்து அடிகள் திருவெற்றியூரில் தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப் படுகிறது.இவ்வாறு பட்டிணத்தடிகள் சித்தி பெற்று முக்தி அடைந்தார்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு  
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக