திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆடி மாதம் பக்தி மாதம்

ஆடி மாதம் பக்தி மாதம்

ஒவ்வொரு மாதப்பிறப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இரு்க்கிறது. அந்த வகையில் தமிழ் மாதப்பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடபபடுகிறது. சோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம்  என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிறப்பாகும்.


  ஆடி மாதம்நம் எண்ணங்கள் எல்லாம் இறைவனோடு வைத்துக் கொள்ள உதவும் ஒரு கருவியாக இருக்கிறது. கண்ணனு்க்கு மார்கழி மாதம் போல் ஆடி மாதம் பெண்களுக்கு உகந்தமாகும். ஆடி மாதத்தில் வீடுகளிலும் கோவில்களிலும், விழாக்களும், விரதங்களும் களைகட்டும் மாதமாகும். அம்மன், அம்பாள், ஆண்டாள்,சக்தி ஸ்தலங்கள் என எல்லாக் கோவி்ல்களிலும்  சிறப்பு பூசைகள் கோமங்கள், என்று எங்கும் பக்திதான் , ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகள் விசேசமானவையாகும். ஆடி வெள்ளி யன்று. அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் எங்கும் கொடிகட்டி பறக்கும். இது போல ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்கள், பிராத்தனைகளை ெசலுத்தும் நாளாகும். இந்நாட்களில் அலகு குத்துதல், மொட்டை எடுத்தல்,காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டுதல், கூழ் ஊற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் நடைபெறும். இந்த மாதம் முழுவதும் பக்தியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி தருவது இந்த ஆடி மாதம் என்றால் மிகையில்லை.
   இந்த மாதத்தில் வரும்ஆடி அமாவாசை ஆடி பெருக்கு ஆடிக் கிருத்திகை,ஆடித்தபசு, ஆடிப்பூரம் வரலட்சுமி விரதம் என விசேச வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கு்ம். இந்த ஆடி அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நம் முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம் வஸ்திர தானம் செய்வதும், இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் புண்ணிய நாளாகும்.

   ஆடி 18 மிக சிறப்ான நாள், இது இயற்கையை வழிபடும்நன்னாள். ஆற்றிலும் நதியிலும் புரண்டு வரும் நீரை வணங்குதல் மரபு. தற்காலத்தல் ஆறு நதியில் நீர் வறண்டு போனதால் கடல் சார்ந்த இடங்களுக்கு சென்று கடற்கரையில் இந்நிகழ்வுகள் கொண்டாடுகின்றனர். இந்நாளில் கன்னிப் பெண்கள் திருமணம் வேண்டி மஞ்சள் சரடு கட்டுவதும், திருமணமான பெண்கள் கணவன் ஆயுள் திடப்பட புதிய தாலி மஞ்சள் கயறு கட்டும் நிகழ்வும் இன்றும் நடைபெறுகிறது. 

 இத்தனை சிறப்பு பெற்ற இந்த ஆடிமாதத்தில் அம்மனை வழிபட்டு அருள் பெற்று சிறப்புடன் வாழ்வோம். 
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சு்நதரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு 
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக