வெள்ளி, 31 அக்டோபர், 2014

கீதை காட்டும் "யோகியின் அடையாளங்கள்"


கீதை காட்டும் "யோகியின் அடையாளங்கள்" எவன் எவ்வுயிரிடத்தும் பகைமை இல்லாதவனாய், நட்பு பூண்டவனாய், கருணை உடையவனாய், எல்லாம் என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய் கருதுபவனாய், பொறுமை உடையவனாய், எப்போதும் மகிழ்ச்சி பெற்றிருப்பவனாய், யோகத்தில் விருப்பமுடையவனாய், அடங்கிய மனத்தினனாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்தவனாய் உள்ளவனாய், இருப்பவன் இறை பக்தி உள்ளவன், எவனிடமிருந்தும் உலகம் துன்பம் பெறுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி , சினம், அச்சம், மனக்கிளர்ச்சி, இவற்றினின்று விடுபட்டு விட்டவனோ, அவனே இறைவனுக்கு பிரியமானவன், எவன் எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், சுறுசுறுப்பு உடையவனாய், துன்பம் வரினும், இன்பம்வரினும் ஒரு போதும் துயரப்படாதவனாய், தனது நலனைப் பெருக்குவதற்கு முயற்சி விட்டவினாய், இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும், சமமாக கொள்பவனாய், மெளனியாகவும், ஆழ்ந்த சிந்தனை உடையவனாய், இருப்பவனாய், கிடைத்ததைக் கொண்டு திருப்தி பெற்று களிப்புடன் இருப்பவனாய், வீடுவாசல் இல்லாதவனாய், யாதும் தன் ஊரே, உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய், தன் கொள்கையில் திட சித்தம் உள்ளவனாய், இருக்கிறானோ அவனே எனக்கு (இறைவனுக்கு) பிரியமான பக்தன். இவ்வாறு கீதையில் கூறியபடி இவ்வகை மனிதனே யோகி ஆக தகுதியுள்ளவன் திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக