வியாழன், 26 பிப்ரவரி, 2015
பாவங்கள் தீர்தர நல்வினை நல்குவார் எம்பெருமானார்
புதன், 25 பிப்ரவரி, 2015
என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!
என்.கணேசன்: ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!: அறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...
என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!
என்.கணேசன்: வாரணாசியில் நடமாடும் சிவன்!: 12 மகாசக்தி மனிதர்கள் த ன்னிடம் அளவற்ற சக்திகள் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக த்ரைலங்க சுவாமி நினைத்தவரல்ல. பொருளாசை, புகழாசை, மற்...
புண்ணாக்குச் சித்தர் பாடல்
பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழி
வெள்ளி, 20 பிப்ரவரி, 2015
மனோபாவங்களில் மகேசனைக் காண்போம்
புதன், 18 பிப்ரவரி, 2015
மஹா சிவராத்திரி!!!
செவ்வாய், 17 பிப்ரவரி, 2015
ஐந்துக்கு இரண்டு பழுதில்லை
சைவப் பெருங்கடியினருக்கு மகா மந்திரமாக விளங்குவதும் சைவ மதத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிவ பஞ்சாட்சரம் எனப்படும் " நமசிவாய" எனும் திருவைந்தெழுத்தாகும், " நமசிவாய" என்பதைத் தூல பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம எனபதை சூக்கும பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம என்பதை காரண பஞ்சாட்சரம் எனவும் " ஓம் சிவாய நம " என்பதை மகா காரண பஞ்சாட்சரமாகிய முக்தி பஞ்சாட்சரம் ஆகவும் கூறுவர்,
சிவ ஓம் சிவ என்பதை மகா பஞ்சாட்சரம் எனவும் இந்த பஞ்சாட்சரம் மந்திரமாக விளங்குவதை இறைவனது திருநாமமாகவும் விளங்குவதை:
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே" ---- ஞான சம்பந்தர்
" நமசிவாயவே ஞானமும் கல்வியும் " என்பார் அப்பர் சுவாமிகள்
" உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே - என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ்செழுத்துளே ஆயான மூவரும் ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் என்பார் சித்தர் சிவவாக்கியர்
" நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க"
என்று மாணிக்க வாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் கூறியுள்ளார்,
அப்பர் பெருமானை கொதிக்கும் எண்ணெய்யில் அழுத்திய பொழுதும், யானையினை ஏவியபொழுதும், ஒரு பெரும் கல்லோடு சேர்த்து கட்டி கடலில் அழுத்திய பொழுதும் அவரை காப்பாற்றியது ஐந்து எழுத்து மந்திரமாகிய " நமச்சிவாயவே ஆகும். இதைப் போல பல்வேறு மகான்களின் வாழ்க்கையிலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
"ஐந்துக்கு இரண்டு பழுதில்லை " என்பார்கள். அதாவது ஐந்து என்பது மெய் , வாய் , கண், மூக்கு செவி என்னும் ஐம்புலங்களாம், இவற்றிலல் கண் வாய் என்னும் புலன்கள் இரண்டாகும். இந்த இரண்டையும் பழுதில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் நாம் பார்க்கும் பொழுதும் பேசும் பொழுதும், பழுது ஏற்படும் போல் அறிந்தால் மூடிக்கொள்ள வேண்டும். அதற்காகவே கண்ணுக்கு இமைையும், வாய்க்கு உதடுகளையும் இறைவன் வழங்கியிருக்கிறார், இதற்கு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்பார்கள்.
நமசிவாய என்ற இம்மந்திரத்தின் உயர்வை யசூர் வேதமும், திராவிட வேதமாகிய (சைவ) திருமுறைகளும் போற்றி புகழ்கின்றன, சைவ சித்தாந்த சாஸ்திரங்களான சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலிய நூல்களும் பஞ்சாட்சரத்தின் பொருளை விளக்கி கூறுகின்றன. நடராஜ பெருமானின் திரு உருவமே பஞ்சாட்சரத்தை விளக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் எழுத்து வடிவினன் எப்படி என்றால்?
திரு வடியில் --- " ந"
உதிரத்தில் ---- " ம"
தோளில் ----- "சி"
முகத்தில் ------ " வா"
முடியில் ----- " ய"
தூல பஞ்சாட்சரமாகிய " நமசிவாய " என்பதை உலகியல் வாழ்வில் பட்டுள்ள நம் போன்றவர்கள் உபதேச முறையில் தக்க குருவிடம் கேட்டு ஓத வேண்டும், தக்க குருவைத் தேடலும் குருமுகமாக உபதேசம் பெறுதலும் கடினம் என்று நினைத்து நம்மில் பலர் பஞ்சாட்சரத்தை தினமும் ஓதுவதில்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம், முறையாக தொடங்கினால் சற்குருவும் தானாகவே வருவார், திருமூலர் பெருமானும் தாயுமான சுவாமிகளும் கூறுவர்,
இது வரையில் பஞ்சாட்சரத்திலும் உயிரான இரண்டு எழுத்தான "சிவ" என்ற மந்திரச் சொல்லை நாம் அடிக்கடி சொல்லலாம், சிவ என்பது மகாகாரண பஞ்சாட்சரம் " சி" என்பது மகாமறு.
இது பெருவெழுத்து என்றும் பேசா எழுத்து என்றும் வழங்கும், வா என்றால் அருள் என்றும், பொருள். அதாவது "சி" சிவம் " வ" அருள். " ய" உயிர் " ந" மறைப்பாற்றல் , "ம" மலங்கள் என்றும் கூறுவார்கள், இதில் சிவபெமானின் அருள் என்பதே சிவா என்பது ஆகும்.
இதைப் போலவே ஸ்ரீராமனும் அவர்நாமமும் ஒன்றே தான், ஓம் நமோ நாராயணா என்பதில் உள்ள " ரா" என்ற அட்சரத்தையும் , பஞ்சாட்சரமான " நமசிவாய" என்பதில் உள்ள "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது என்பர்,
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்றிரண்டெழுத்தினால்! ---- என்பார் கம்ப இராமயணத்தில் கம்பர்
பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து மோர், மோரிலிருந்து வெண்ணெய் வெண்ணெய்யிலிருந்து நெய் ஆகிறது, அதில் பால், தயிர், வெண்ணெய் மூன்றும் மறைந்து மோர், நெய் இரண்டும் தான் மிஞ்சுகின்றன.
அதுபோலவே பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தைக் கூற முடியாவிட்டால் சிவா என்ற இரண்டு எழுத்தையாவது கூறி அ(சி)வன் அருளை பெற முயற்சிக்கலாம் அல்லவா?, ஸ்ரீ சிவபெருமானும் அவரின் திருநாமமும் ஒன்றே ஆகும்,, ஆகவேதான் சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " சிவ சிவ' என்றிட தீவினை மாளும், " சிவசிவ என்றிடத்தே வருமாவர் - சிவசிவ என்ன சிவ கதி தானே என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.
ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்ற பழமொழி உருவானது.
நன்றி: அமைதி தரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
திங்கள், 16 பிப்ரவரி, 2015
ஆத்ம தண்டனை
அவனவன் தலையெழுத்து ........... பிரம்மனின் விளக்கம்
சனி, 14 பிப்ரவரி, 2015
மகா சிவராத்திரி வேடனின் மனதை மாற்றிய சிவன்
சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிறப்புப் பெற்றதாக சிவராத்திரி விரதம் போற்றப்படுகிறது. சிவராத்திரி புராணமானது பட்ச, மாத, வருஷ சிவராத்திரி தினங்கள் என்று பலவிதமான சிவராத்திரி விரதங்கள் விளங்குகின்றது. இவற்றில் தலையாயது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் இரவில் கொண்டப்படும் சிவராத்திரி விரதமேயாகும், இதனை மகா சிவராத்திரி என்பர். சிவராத்திரி என்னும் விரத காலம் உயிரையும், உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி மேன்மை தரும் சாதனமாகும், இதில் உண்பது உறங்குவது, மனதை அலைபாய விடுவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை விலக்கப்பட்டுள்ளன. மனதை ஒருமுகப்படுத்தி உறக்கத்தை விடுத்து சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும். ஆடிப்பாடுதல், தியானம் செய்தல், அபிசேக ஆராதனை அர்ச்சனை செய்தல், வேதம் ஓதுதல், புராணங்களைப் படித்தல், கேட்டல், சிவலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்தல், என்று சமய நூல்கள் கூறும் புண்ணிச் செயல்களைச் செய்தல் வேண்டும், சிவபொருமானின் பெருமைகளை விளக்கும் நாடங்களை பார்ப்பதும், கதைப் பாடல்களை கேட்கும் மரபும் தொன்றுதொட்டு இருக்கிறது.
வேடனுக்கு மோட்சம் தந்த சிவன்
வில்வ வன வேடன் என்பவனுக்கு சிவராத்திரி பலனை அளித்து மோட்சம் தருவதற்காக சிவபெருமான் வேடன் வேடம் பூண்டு பூலோகம் வருகிறார், காட்டில் வேட்டைக்கு மிருகங்கள் ஏதும் கிடைக்க விடாமல் வேடனுக்கும் சோதனையை ஏற்படுத்துகிறார் சிவபெருமான். வில்வ வன வேடனைப் படிப்படியாக மேன்மை படுத்துகிறார், சிவன். புலி வேடம் தாங்கி வேடனை வில்வ மரத்தின் மீது விரட்டுகிறார் சிவன். அந் நாள் இரவு முழுவதும் மரகத்தில் இருக்க புலி மூலம் மிரட்டி மரத்திலேயே இரவை கழிக்கும் சூழலுக்கு ஆளாக்கிறார் சிவனார். ஒரு கட்டத்தில் புலி மறைகிறது, அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றுகிறது, அச்சமயம் இரவு முழுவதும் விழித்திருக்க அம்மரத்திலிருந்த வில்வ இலைகளை பிடிங்கி பிடிங்கி கீழே போட்டுக் கொண்டு தனது தூக்கத்திலிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்து இரவு பொழுதினை கழிக்கிறான் வேடன். இவ்வாறு இரவு நேரம் கழிந்து பகல் உதயமாகும் அதிகாலை வேளையில் வேடனைத்தேடி அவன் மனைவி மக்கள் காட்டுக்கு வருகின்றனர், வேடன் தன் தூக்கம் கலைய இரவில் நடக்கும் அர்த்த சாம பூசைகளை தன்னை அறியாமலேயே வில்வ இலையால் அர்ச்சித்தது கண்டு சிவன் சிவசக்தி ரூபமாய் அவர்களுக்கு காட்சி தந்து தன்னை அறிந்தோ அறியாமலோ இரவு முழுவதும் வில்வ இலையால் அர்ச்சித்து ஆராதனை செய்ததினை பலைனை வேடனுக்கு உணர்த்தி அவனுக்கு மோட்சம் கிடைக்க அருள் செய்தார்,
நன்றி : தி இந்து - ஆனந்த ஜோதி
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015
தீபாராதனை
திங்கள், 9 பிப்ரவரி, 2015
அணிகலன்களின் தத்துவங்கள்
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015
பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய
விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச்
செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று
இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டு
காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான
ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது. அதன்
அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல்
பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார்.
தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல் அசையாமல்
நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக
வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர்.
இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து
மறைந்தார்.
நடந்தது கனவா! நினைவா! என்று திகைத்து நின்ற பாம்பாட்டி
மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு
அரசன் மரணமடைந்து விடவே அனைவரும் பெருந்துக்கத்தில் இருந்தனர்.
அவர்களின் துக்கம் தீர்க்கவும், தாம் பெற்ற தவ சக்தியைப் பரிட்சித்துப் பார்க்கவும்
இறந்த அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி.
பிழைத்து எழுந்த மன்னர் அருகில் இருந்த செத்த பாம்பொன்றைக்
கண்டார். பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார். என்ன
ஆச்சிரியம்; செத்த பாம்பு நெளிந்தது. அனைவரும் வியப்படைந்தனர்.
பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது.
மன்னர் அந்தப் பாம்பைப் பார்த்தார். பாம்பே எங்கே போகிறாய்.
இறந்துபோன நீ இப்பொழுது எழுந்து விட்டாய். இன்னுமா உலக ஆசை
உனக்கு விடவில்லை? உலக வாழ்வில் ஏமாந்து போகாதே என்று
சொன்னவர். ‘ஆடு பாம்பே’ என்று ஆணையிட்டார். மன்னரின்
கட்டளைக்குக் கட்டுப்பட்ட பாம்பு மகுடி வாசிக்காமலேயே ஆடத்
தொடங்கியது. பாம்பை முன்னிலைப்படுத்தி அற்புதமான தத்துவப்
பாடல்களைப் பாடத் தொடங்கினார். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர்
உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப் பாடினார்.
ஆனால் அவர் பாடியதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. பிழைத்து
விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போலும் என்று கூறிக்
கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
மன்னரின் செயல்கள் மகாராணிக்கு ஆச்சரியமாயிருந்தது. முரட்டுப்
பிடிவாதமும், பெண்கள் சுகமும் என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர்
எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள்.
“நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடிவருமோ
கூடுபோனபின் பவற்றாற் கொள்பயனென்னோ
கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே”
ராணிக்கு ஒரே அதிர்ச்சி. தன் மனதில் எழுந்த சந்தேகத்திற்குப்
பதிலளிப்பது போல் இப்படிப் பாடுகின்றாரே, மா, பலா, வாழை, பெண்கள்
என்று கனிரசமும் காமரசமும் பருகி வாழ்ந்தவர் இன்று கூத்தன் பதத்தை
அல்லவா பாடுகின்றார் என்று வியப்படைந்தாள். அவர் வியப்பை
அதிகமாக்குவதைப் போல் மேலும் சில பாடல்களைப் பாடினார்.
“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”
“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”
“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”
“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”
ஆகா எத்தனை தத்துவார்த்தமான பாடல்கள். பெண்ணாசை
விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகின்றார்.
ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது
ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை
அறுங்காத லாகி அரனடியைப் போற்றி
உறங்கி உறங்காது இரு”
“தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள்
விந்துநிலை அறியா வீணரே - விந்து
வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சில
நூல்களும் துவாரகையில் சித்தியடைந்ததாக சில நூல்களும்சங்கரன்
கோ விலில் சித்தி அடைந்ததாகவும் பல குறிப்புகள் கூறுகின்றன.
பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின்
பாடல்களை அடியொற்றியே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப்
பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர்
ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல்
உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே”
போதும் என்று அவரை கையெடுத்துக் கும்பிட்ட ராணி, ஐயா, தாங்கள்
யார்? எங்கள் அரசரா? அல்லது யாராவது மகானின் ஆத்மா இந்த உடலில்
புகுந்துள்ளீரா? என்று கேட்டாள்.
சித்தரும் அவளுக்கு நடந்த உண்மைகளைக் கூறினார். சில காலம்
இவ்வுடலில் வசிக்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி அவளுடன்
இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார்.
இவர் சித்தராய்த் திரிந்த காலத்து இவருடைய சீடர்களாய் இருந்தவர்கள்
தம் குருநாதர் நீண்ட நாட்களாய் வராமை கண்டு பின்னர்த் தம் குருவருளால்
அவரிருக்குமிடமறிந்து, அவர் தம் பழைய உடலுக்குத் திரும்பும்வண்ணம்
பொருளமைந்த சில பாடல்களைப் பாடினார்கள். பின்னர் அன்றிரவு
வெட்டியான் வேடம் பூண்டு நான்கு சாமத்துக்கும் பின்வரும் நான்கு
வெண்பாக்களைப் பாடிப் பறையடித்துக் குருவை மீட்டுச் சென்றதாகக்
கூறப்படுகிறது.
“ஆலஞ்சரீரம் அநித்தியம் என்று எண்ணாக்
காலன் தினம் வருவான் காணுங்கள் - காலன்
கலங்காத கண்டன்நற் கண்மணியைப் போற்றி
உறங்கி யுறங்காது இரு”
“வானமணித் தேவர் வனத்திலுள வைவேடர்
ஞானமணி யைத்திருட நன்னினார் - ஞானம்
நிறுங்காலம் தானறிந்து நல்லுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”
ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது
ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை
அறுங்காத லாகி அரனடியைப் போற்றி
உறங்கி உறங்காது இரு”
“தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள்
விந்துநிலை அறியா வீணரே - விந்து
வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”
பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சில
நூல்களும் துவாரகையில் சித்தியடைந்ததாக சில நூல்களும் கூறுகின்றன.
பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் பெரும்பாலும் தாயுமான சுவாமிகளின்
பாடல்களை அடியொற்றியே இருப்பதால் இவர் அவரின் காலத்திற்குப்
பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
தாயுமானவரின் சித்தர் கனம் பகுதியைப் போலவே இவரும் ‘சித்தர்
வல்லபங்கூறல்’ பகுதியைப் பாடியுள்ளார். இஃதோர் கலம்பக உறுப்பாய்
பிரபந்தம் பாடுதலின் பாற்பட்டதாகும்.
நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம். எங்களுக்கு
அபூர்வ சக்திகள் பல உண்டு. அவைகள் என்ன தெரியுமா?
தூணைச் சிறுதுரும்பாகத் தோன்றிடச் செய்வோம், துரும்பைப்
பெருந்தூணாகத் தோன்றிடச் செய்வோம், ஆணைப் பெண்ணாகவும்
பெண்ணை ஆணாகவும் மாற்றிக் காட்டுவோம். எட்டுமலைகளைப் பந்தாய்
எடுத்தெறிவோம், ஏழுகடல்களையும் குடித்து, ஏப்பம் விட்டுக் காட்டுவோம்,
வானத்தை வில்லாக வளைத்திடுவோம்,
மூண்டெரியும் அக்கினிக்குள்ளே மூழ்கிவருவோம், தண்ணீருக்குள்
மூச்சடக்கியும் இருப்போம், இந்த நிலவுலகை மட்டுமல்லாது இன்னுமுள்ள
உலகமத்தனையும் பொன்மயமாக்கிக் காட்டுவோம், பிரம்மா போல புதுப்புது
உயிர்களைப் படைத்துக் காட்டுவோம், சூரியனின் செங்கதிரையும் நிலவைப்
போல தன்கதிராய் மாற்றிக் காட்டுவோம், கொடிய மிருகங்களான புலி,
யானை, யாளி, சிங்கம் முதலான விலங்குகளை எங்களுக்குக் குற்றேவல்
செய்யச் சொல்லுவோம். சக்தி வாய்ந்த கடவுளுக்குச் சமமாக நாங்கள்
இருப்பதால் அவரை எங்களுடன் விளையாடவும் அழைப்போம், இந்த
உலகத்தை இல்லாமற்கூட செய்து காட்டுவோம், எத்தனை பெரிய வித்தகரும்
அறுபத்து நான்கு கலைகளை மட்டுமே அறிவார். நாங்களோ அதற்கும்
மேலாக ஒரு கலையையும் அறிவோம். இதற்கெல்லாம் காரணம் நாங்கள்
இறைவன் மேல் பற்றும் ஏனைய பொருள்களின் மேல் பற்றும்
இல்லாதவர்களாயிருப்பதே என்று சித்தர்களின் வல்லபத்தைக் கூறி
முடிக்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.
பாம்பாட்டிச்சித்தரின் விடுகதைகள்
பெரும்பாலானப் பாடல்கள் விடுகதை நோக்கிலேயே அமைந்துள்ளன.
உதாரணமாக சருர குணம் சொல்லும் பகுதியில்,
பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்தவீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்ற தென்றாடாய் பாம்பே
என்ற பாடலில் பெண்ணொருத்தி விளையாட்டு போலவே
ஆடவனொருவனைப் புணர அது கர்ப்பமாய் உருக்கொள்ள இதற்குப்
பரிகாரம் என்னவென்று யோசிக்கும் வேளையில்
அது பிரசவமாகி குழந்தை பிறந்து விட்டது என்பதுதான் தெளிபொருள்.
விடுகதையில் வரும்போது பாம்பு ஒன்று விளையாட்டாய் ஒன்றைக்
கடித்துவிட, அதனால் பாம்புக்கு வீக்கமேற்பட்டு விட்டது. இதற்கு என்ன
வைத்தியம் என்று தேடியபோது, கடிபட்ட அந்த விறப்பையிலிருந்த
வீக்கத்திற்குக் காரணமான பொருள் வெளியேறி விட்டது. அது என்ன?
இதற்கு விடையறிய பாடலிலேயே ‘மாது’ என்ற வார்த்தையை யூகத்திற்கொரு
பொருளாகச் சொல்லிப் பார்க்கிறார். மேலே சொன்ன விடுகதையை
பெண்ணுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
பெண்களின் அல்குலை பாம்புக்கு ஒப்பிடுவர். அந்தப் பாம்பானது
விளையாட்டாய் கடித்த பொருள் ‘ஆணின் கற்பு’. பெண்ணானவள் ஆணோடு
புணர்ந்தது. யாருக்கும் தெரியாமல் இரகசியமாய்ச் செய்த இந்தச் செயல்
பலரறியும்படி உடலானது வீங்கிக் காட்டிக் கொடுத்து விட்டது. அதாவது
கர்ப்பமடைந்து வயிறு வீங்கி விட்டது.
இதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்
வேளையில் கர்ப்பத்தில் தங்கியிருக்கும் சிசுவானது கர்ப்பபையை விட்டு
வெளியே பிரசவமாகி வந்துவிட்டது. அவளது பிரச்சனையும் தீர்ந்தது.
எப்படி இருக்கிறது விடுகதை?
‘நாலுத்தெருவிலே நாலுகம்பம்
நடுத்தெருவிலே பொன்னுக்கம்’
என்று விடுகதையொன்று போட்டுவிட்டு நம்மை விடை காணச் சொல்கின்றார்
பாம்பாட்டிச் சித்தர்.
கடுவெளிச் சித்தரைப் போன்று இவரும் குயவனார் மண் தோண்டி
விடுகதையைப் பாடுகின்றார்.
‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’
இதில் மட்பாண்டம் செய்யும் மூலப்பொருள் கூறப்படுகிறது. இப்படி
ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்துக் குருதிப்புனலிலே உண்டையாக்கி
குயவனார் செய்த மட்பாண்டம் இறுதியில் பிச்சையெடுக்கும் திருவோடு
அளவுக்குக்கூடப் பயனாவதில்லை என்று கூறுகின்றார்.
இரண்டு பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே
பத்து மாதம் சூளையில் வைத்துப் பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப்
பானையானது இறுதியில் அரைக்காசுக்குக்கூட உதவாது என்று இந்த உடல்
நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.
‘இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’
மனிதர் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும்
அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று இந்தச் சித்தர் அறுதியிட்டுக்
கூறுகின்றார்.
நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும்
அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான்
பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை
விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை,
“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே”
என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே
என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
பொம்மலாட்டம் தெரியுமா? திரைக்குப் பின்னாலிருந்து சூத்திரதாரி
ஒருவன் இயக்க, பாவைக் கூத்தாடும் நாடகக் காட்சியைப் போன்றது நமது
வாழ்க்கை என்பதைப் பின் வரும் பாடலால் விளக்குகின்றார்.
“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித்
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”
இன்னும் இந்த உடல் நிலையில்லாது என்பதை,
“சீயும் மலமுஞ் செந்நீரும் நிணமும்
சேர்ந்திடுதுர் நாற்றமுடைக் குடமதுஉடைந்தால்
நாயும் நரியும் பேயும் கடுகும்
நமதென்றே தின்னு மென்றடாய் பாம்பே”
எவ்வளவு சீரும் சிறப்புமாய் வளர்த்த இந்த உடலானது உலகில்
பார்க்கின்ற பொருளையெல்லாம் தனதென்றே சொந்தம் கொண்டாடும், சீழும்
குருதியும் மலமும் சேர்ந்த இந்த நாற்றக்குடமான உடல் இறந்து விட்டால்
நாயும், நரியும், பேயும், கழுகும் என்னுடையது இந்த உடல் என்று பங்கு
போட்டுச் சாப்பிட ஆரம்பித்து விடும். இப்பொழுது சொல்லுங்கள், இந்த
உடல் நம்முடையதா? அல்லது நாய் நரிகளுக்குச் சொந்தமானதா? என்று
கேள்வி விடுக்கின்றார் பாம்பாட்டி.
நன்றி;ஞானக்கோவை
வை,பூமாலை சுந்தரபாண்டியம்
மனதை மாற்றிய திருமறை
நினைவாற்றல் சக்தியில் கெட்டிக்காரராக விளங்கியவர் கல்வியில் படுமட்டம் என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதைவிட ஆச்சரியம் படிப்பதில் படுமட்டமாக இருந்த அவர் பிற்காலத்தில் ஒரு ஞானியாக உருவெடுத்தது,
அவரை ஞானியாக்கியது போதி மரம் இல்லை, ஒரு பழைய புத்தகம், பொழுது போக வேண்டும் என்பதற்காக இல்லத்தில் உபயோகப்படாமல் இருந்த பழைய புத்தகத்தை வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் வாசிக்க நேர்ந்தது. ஓவ்வொது பக்த்தில் உள்ள பாடல்கையும் அவற்றின் தெளிவுரைகளையும் படிக்கப் படிக்க ஏதோ ஒரு புதிய உலகத்தில் பயணம் செய்வதைப்போன்ற உணர்வு தோன்றியது, வெங்கட்ராமனுக்கு. அதுதான் அவர்படித்த முதல் ஆன்மீக புத்தகம்.
என்னுடைய ஞானத் தந்தையைத் தேடி புறப்பட்டு விட்டேன். மூல முதல்வனின் ஆசைப்படியே இல்லத்தை விட்டு புறப்பட்டு விட்டேன் என்று துண்டு காகிதத்தில் எழுதி வைத்து விட்டு வீட்டில் கூறிக்கொள்ளாமல் புறப்பட்ட அவரைப் பிற்காலத்தில் நாடே தேடி வந்தது.
அவர் வந்து சேர்ந்த இடம் எது தெரியுமா? சாதாராண வெங்கட்ராமனின் பிற்கால திருநாமம் யாது தெரியுமா? அவரை ஞானியாக மாற்றிய திருமறை எது என்று தெரியுமா? அதன் விடைதான் இது:
அவர் வந்து சேர்ந்த ஞானபூமியே திருவண்ணாமலை, சாதாரண வெங்கட் ராமனை ஸ்ரீரமண மகிரிசியாக மாற்றியது அவர் படித்த திருமூலரின் திருமறையும், சேக்கிழார் அருளிய பெரியபுராணமும் தான், பகவான் ஸ்ரீரமண மகரிசியாக மாறியவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்தில் பிறந்து ஏழை குடும்பத்தில் பிறந்து, திருவண்ணாமலை சென்று பாதாள லிங்கம் இருந்த படுபாதாளத்தில் தவம் புரிந்து ஆன்மீக ரிசியாக வந்தவர் தான் பகவான் ரமண மகாரிசி ஆவார்,
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்
திருசிற்றம்பலம்
ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
திருஐந்தெழுத்தின் பெருமை
ஞானதானம்: தேகமே திருக்கோயில்
ஞானதானம்: தேகமே திருக்கோயில்: தேகமே திருக்கோயில் தன்னைத் தான் அறிவது ஞானம். தன்னை அறிந்தால் தலைவனான கடவுளையும் அறியலாம். அன்றும், இன்றும், என்றும் கடவ...
வியாழன், 5 பிப்ரவரி, 2015
தமிழகத்துச் சிவஞானியார்
திங்கள், 2 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
