ஆத்ம தண்டனை
அயோத்தியில் ஸ்ரீராமபிரான் தன் நாட்டு மக்களின் மனநிலை அறிய விரும்பினார், ஆகவே ஒரு நாள் அவர் அரசகோலகளின்றி சாதாரண மனிதனைப் போல தம்பி லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு ஊரை வலம் வந்து கொண்டிருந்தார், அவரின் மனம் தொட்ட காட்சியினை கண்டார்.
பசுமை நிறைந்த வனத்தின் ஒரத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அங்கே பல நாடுகள் கடந்து வந்த வெளியூரைச் சேர்ந்த துறவி ஒருவர் புதிதாக வந்திருந்தார், துறவி ஆற்றில் நன்றாக அமிழ்ந்து ஸ்நானம் செய்தார், ஆசார - அனுஷ்டானங்களை முடித்து பிறகு பையில் இருந்து சமித்துக்களை எடுத்து தீ வளர்த்தார். இவர் ஹோமம் செய்யப் போகிறார் என்று நினைத்த ராமபிரானுக்கு மறுபட்ட செயல் நடந்தது. அந்த துறவி இரண்டு பாத்திரங்களை எடுத்து அவற்றில் நீரை நிறைத்து மற்றொன்றில் மாவைப் போட்டு நீரைத் தெளித்து பிசைந்து அந்த மாவினால் ஆறு ரொட்டிகளைச் செய்தார்.
முதல் இரண்டு ரொட்டியில் நெய்யைத்தடவியும், இரண்டில் தேனையும் தடவியும், மீதி இரண்டில் ஊறுகாையைத் தடவியும் தீயில் வாட்டினார், பிறகு கரையில் அமர்ந்து ஜபம் செய்தார், சிறிது நேரம் கழித்து கண்விழித்தார், துறவி ரொட்டி தட்டை எடுத்தார், அந்த நேரத்தில் அவ்வழியாக ஓர் ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார், துறவி அவரை அழைத்து ஊறுகாய் தடவிய இரண்டு ரொட்டிகளைக் கொடுத்தார், அடுத்த நான்கு ரொட்டிகளில் தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்தார், அப்போது அவ்வழியாக வந்த சிறுமிக்கு கொடுத்தார், அடுத்து நெய் தடவியதை எடுத்தார், ஆற்றில் மீன்களுக்கு இரண்டு ரொட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டுவிட்டு மூட்டையை பழையபடியே கட்டி வைத்துவிட்டு அடுப்பில் இருந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து மடமடவென்று அருந்திவிட்டு அந்த கிண்ணத்தை பையில் வைத்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட்டார் துறவி. இந்த காட்சியை கண்ட ஸ்ரீராமபிரான் ஆச்சரியப்பட்டு, விபரம் புரியாமல் அவரை நெருங்கி " சுவாமி நீங்கள் செய்த மூன்று வகையான ஆறு ரொட்டிகளையும் மூன்று விதமானத் தானம் செய்து விட்டீர்கள், பிறகு அடுப்பு சாம்பலை நீரில் கரைத்து அருந்திவிட்டு பயணம் செய்யப் புறப்பட்டுவிட்டீர்கள், நீங்கள் ஏன்இவ்வாறு செய்தீர்கள் என்று புரியவில்லை? விளக்கம் தருக என வேண்டினார்,
" ஆமாம் அப்பா, நான் ஸ்நானம் செய்த பின் ஜபம் செய்யும் போது இப்படி ஓடியது இரண்டு ரொட்டியைத் தேன் தடவியும், இரண்டை நெய்த் தடவியும், சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பியது, அதை திருப்திபடுத்தவே அந்த ரொட்டிகளை செய்தேன்,என்றார், துறவி, பிறகு ஏன் சுவாமி நீங்கள் அவற்றை உட்கொள்ளவில்லை? என்று ராமர் கேட்டார்,
துறவியாகிய நான் எல்லா புலன்களையும் அடக்கிவிட்டேன் ஆனால் மனதை மட்டும் வெல்ல சிறிது சிரமப்பட்டேன், அதன் விளைவாகவே ரொட்டி செய்தேன் மனதை சமாதனப்படுத்திவிட்டேன் உடனே .............. " சாம்பலாகப் (மண்ணாக) போகும் இந்த சரீரத்திற்குள் இருந்து கொண்டு உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல நான் கூறுவதை கேட்காமல் என் பாழ் மனமே, இன்று உனக்கு இந்தச சாம்பல்தான் ஆகாரம் என்று மனத்திற்கு தண்டனை அளித்தேன், என்று விளக்கம் கூறினார், சலனப்படும் மனதை அடக்கினால் ஆசை நீங்கப் பெறும், என்பதை உணராலாம். பற்று நீக்கின் தானம் வளரும், ஆத்மா சுகப்படும்.நன்றி: படித்தததில் பிடித்தது அமைதி தரும் ஆன்மீகம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
Result 2015 | Board Result 2015
பதிலளிநீக்கு| Result 2015 | SSC Result | UPTU Sem Result| UPTU Results |UPTU | Admit Card 2015 | Board Results 2015 name
wise | Board Result Nic
2015