ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மனதை மாற்றிய திருமறை


மனதை மாற்றிய திருமறை நினைவாற்றல் சக்தியில் கெட்டிக்காரராக விளங்கியவர் கல்வியில் படுமட்டம் என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அதைவிட ஆச்சரியம் படிப்பதில் படுமட்டமாக இருந்த அவர் பிற்காலத்தில் ஒரு ஞானியாக உருவெடுத்தது, அவரை ஞானியாக்கியது போதி மரம் இல்லை, ஒரு பழைய புத்தகம், பொழுது போக வேண்டும் என்பதற்காக இல்லத்தில் உபயோகப்படாமல் இருந்த பழைய புத்தகத்தை வெங்கட்ராமன் என்ற அந்தச் சிறுவன் வாசிக்க நேர்ந்தது. ஓவ்வொது பக்த்தில் உள்ள பாடல்கையும் அவற்றின் தெளிவுரைகளையும் படிக்கப் படிக்க ஏதோ ஒரு புதிய உலகத்தில் பயணம் செய்வதைப்போன்ற உணர்வு தோன்றியது, வெங்கட்ராமனுக்கு. அதுதான் அவர்படித்த முதல் ஆன்மீக புத்தகம். என்னுடைய ஞானத் தந்தையைத் தேடி புறப்பட்டு விட்டேன். மூல முதல்வனின் ஆசைப்படியே இல்லத்தை விட்டு புறப்பட்டு விட்டேன் என்று துண்டு காகிதத்தில் எழுதி வைத்து விட்டு வீட்டில் கூறிக்கொள்ளாமல் புறப்பட்ட அவரைப் பிற்காலத்தில் நாடே தேடி வந்தது. அவர் வந்து சேர்ந்த இடம் எது தெரியுமா? சாதாராண வெங்கட்ராமனின் பிற்கால திருநாமம் யாது தெரியுமா? அவரை ஞானியாக மாற்றிய திருமறை எது என்று தெரியுமா? அதன் விடைதான் இது: அவர் வந்து சேர்ந்த ஞானபூமியே திருவண்ணாமலை, சாதாரண வெங்கட் ராமனை ஸ்ரீரமண மகிரிசியாக மாற்றியது அவர் படித்த திருமூலரின் திருமறையும், சேக்கிழார் அருளிய பெரியபுராணமும் தான், பகவான் ஸ்ரீரமண மகரிசியாக மாறியவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்தில் பிறந்து ஏழை குடும்பத்தில் பிறந்து, திருவண்ணாமலை சென்று பாதாள லிங்கம் இருந்த படுபாதாளத்தில் தவம் புரிந்து ஆன்மீக ரிசியாக வந்தவர் தான் பகவான் ரமண மகாரிசி ஆவார், ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார். இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர். ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார். ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம் திருசிற்றம்பலம் ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக