சனி, 14 பிப்ரவரி, 2015

மகா சிவராத்திரி வேடனின் மனதை மாற்றிய சிவன்


மகா சிவராத்திரி வேடனின் மனதை மாற்றிய சிவன் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிறப்புப் பெற்றதாக சிவராத்திரி விரதம் போற்றப்படுகிறது. சிவராத்திரி புராணமானது பட்ச, மாத, வருஷ சிவராத்திரி தினங்கள் என்று பலவிதமான சிவராத்திரி விரதங்கள் விளங்குகின்றது. இவற்றில் தலையாயது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் இரவில் கொண்டப்படும் சிவராத்திரி விரதமேயாகும், இதனை மகா சிவராத்திரி என்பர். சிவராத்திரி என்னும் விரத காலம் உயிரையும், உடலையும், மனதையும் தூய்மைப்படுத்தி மேன்மை தரும் சாதனமாகும், இதில் உண்பது உறங்குவது, மனதை அலைபாய விடுவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை விலக்கப்பட்டுள்ளன. மனதை ஒருமுகப்படுத்தி உறக்கத்தை விடுத்து சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும். ஆடிப்பாடுதல், தியானம் செய்தல், அபிசேக ஆராதனை அர்ச்சனை செய்தல், வேதம் ஓதுதல், புராணங்களைப் படித்தல், கேட்டல், சிவலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்தல், என்று சமய நூல்கள் கூறும் புண்ணிச் செயல்களைச் செய்தல் வேண்டும், சிவபொருமானின் பெருமைகளை விளக்கும் நாடங்களை பார்ப்பதும், கதைப் பாடல்களை கேட்கும் மரபும் தொன்றுதொட்டு இருக்கிறது. வேடனுக்கு மோட்சம் தந்த சிவன் வில்வ வன வேடன் என்பவனுக்கு சிவராத்திரி பலனை அளித்து மோட்சம் தருவதற்காக சிவபெருமான் வேடன் வேடம் பூண்டு பூலோகம் வருகிறார், காட்டில் வேட்டைக்கு மிருகங்கள் ஏதும் கிடைக்க விடாமல் வேடனுக்கும் சோதனையை ஏற்படுத்துகிறார் சிவபெருமான். வில்வ வன வேடனைப் படிப்படியாக மேன்மை படுத்துகிறார், சிவன். புலி வேடம் தாங்கி வேடனை வில்வ மரத்தின் மீது விரட்டுகிறார் சிவன். அந் நாள் இரவு முழுவதும் மரகத்தில் இருக்க புலி மூலம் மிரட்டி மரத்திலேயே இரவை கழிக்கும் சூழலுக்கு ஆளாக்கிறார் சிவனார். ஒரு கட்டத்தில் புலி மறைகிறது, அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றுகிறது, அச்சமயம் இரவு முழுவதும் விழித்திருக்க அம்மரத்திலிருந்த வில்வ இலைகளை பிடிங்கி பிடிங்கி கீழே போட்டுக் கொண்டு தனது தூக்கத்திலிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்து இரவு பொழுதினை கழிக்கிறான் வேடன். இவ்வாறு இரவு நேரம் கழிந்து பகல் உதயமாகும் அதிகாலை வேளையில் வேடனைத்தேடி அவன் மனைவி மக்கள் காட்டுக்கு வருகின்றனர், வேடன் தன் தூக்கம் கலைய இரவில் நடக்கும் அர்த்த சாம பூசைகளை தன்னை அறியாமலேயே வில்வ இலையால் அர்ச்சித்தது கண்டு சிவன் சிவசக்தி ரூபமாய் அவர்களுக்கு காட்சி தந்து தன்னை அறிந்தோ அறியாமலோ இரவு முழுவதும் வில்வ இலையால் அர்ச்சித்து ஆராதனை செய்ததினை பலைனை வேடனுக்கு உணர்த்தி அவனுக்கு மோட்சம் கிடைக்க அருள் செய்தார், நன்றி : தி இந்து - ஆனந்த ஜோதி மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக