வெள்ளி, 31 ஜூலை, 2015


நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு நாளும் கோளும் நளிந்தோருக்கு இல்லை என்பது நாட்டு வழக்கு. இதனையே ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரும் உறுதிபடுத்துகிறார். ஒரு சமயம் தென்பாண்டிநாட்டில் சமண மதம் தலைவிரித்தாடிய ேபாது, சைவ மதத்தினரை ஓர் இழிந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் போலவும் அவர்களை கண்டுமுட்டி என்று அழைத்தும் சைவ மதத்தினரை கேவலமாக நடத்தி ஆட்டிபடைக்கும் சமண மத்தினரை பழி தீர்ககவும் எண்ணிய , பாண்டிய மன்னனின் இளவரசி இதனை பொருக்காமல் இதன் ஆதிக்கத்தை தடுக்க ஞான சம்பந்தரின் பெருமையினை அறிந்து, அன்னார்தான் நம் நாட்டில் சைவ மதத்தை மீட்ெடடுக்க முடியும் என உணர்ந்து அந்த இளம் சைவ மத ஞானியை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது திருவாதவூரில் திருநாவுக்கரச சுவாமிகளுடன் இருந்த சம்பந்தர் பாண்டிய மன்னனின் அரசியார் மங்கையர்கரசியின் வேண்டு ேகாளினை ஏற்று அங்கு செல்ல அப்பர் பெருமானிடம் கூறினார், அப்போது சமணர்களால் துயர் பல பெற்ற அப்பர் பெருமானார், தான் பட்ட துன்பங்களை மனதில் எண்ணி , தாங்கள் மதுரை செல்லவதானால் நல்ல நேரம் கண்டு / நாளும் கோளும் கண்டு செல்க என வேண்டினார் , அப்போது, சிவனேயே சிந்தைதனில் கொண்டு நாளெல்லாம் சிந்தித்திருப்போருக்கு நாளும் கோளும் நல்வினையே செய்யும் என்று கூறு கோளாறு பதிகம் பாடினார் அப்பர் சுவாமிகளிடமிருந்து விடை பெற்றார், அப்பதிக பாடல்களை பாடினால் நவக்கோள்களும் நம்மை அணுகா என்றும் அவைகள் எல்லாம் நல்லனவற்றையே செய்யும் , மேலும் இப்பதிக பாடல்களை பாடும் அடியார்கள் அரசனைப்போன்று உயர்வார்கள் என்பது இது திருஞான சம்பந்தனின் ஆனண என்கிறார். கோளாறு பதிகம் ""வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவவாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே ". இப்பாடலில் ஒன்பது கிரகங்களையும் நல்லவனவே செய்யும் என்கிறார் என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 02 *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத 12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவைகளாகும். மேலேகண்ட நட்சத்திரங்கள் எல்லாமே நல்ல நாட்களாகும் உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பொழிப்புரை : அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் . பாடல் எண் : 4 மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் . பாடல் எண் : 5 நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் . திருச்சிற்றம்பலம்.

பட்டினத்து அடிகள்


பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பன்னிருவராவரில் பட்டினத்து அடிகள் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த சிவனடியார். இவருடைய குருபூஜை நாள் 30.07,2015 இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது. திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர். அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார். சிவசமாதி திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார். செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள் பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால் செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார். பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல் பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ... “”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத் தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார். திருச்சிற்றம்பலம் ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு


நாள் என்செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நினைப்பவருக்கு நாளும் கோளும் நளிந்தோருக்கு இல்லை என்பது நாட்டு வழக்கு. இதனையே ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரும் உறுதிபடுத்துகிறார். ஒரு சமயம் தென்பாண்டிநாட்டில் சமண மதம் தலைவிரித்தாடிய ேபாது, சைவ மதத்தினரை ஓர் இழிந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் போலவும் அவர்களை கண்டுமுட்டி என்று அழைத்தும் சைவ மதத்தினரை கேவலமாக நடத்தி ஆட்டிபடைக்கும் சமண மத்தினரை பழி தீர்ககவும் எண்ணிய , பாண்டிய மன்னனின் இளவரசி இதனை பொருக்காமல் இதன் ஆதிக்கத்தை தடுக்க ஞான சம்பந்தரின் பெருமையினை அறிந்து, அன்னார்தான் நம் நாட்டில் சைவ மதத்தை மீட்ெடடுக்க முடியும் என உணர்ந்து அந்த இளம் சைவ மத ஞானியை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்தார்கள். அப்போது திருவாதவூரில் திருநாவுக்கரச சுவாமிகளுடன் இருந்த சம்பந்தர் பாண்டிய மன்னனின் அரசியார் மங்கையர்கரசியின் வேண்டு ேகாளினை ஏற்று அங்கு செல்ல அப்பர் பெருமானிடம் கூறினார், அப்போது சமணர்களால் துயர் பல பெற்ற அப்பர் பெருமானார், தான் பட்ட துன்பங்களை மனதில் எண்ணி , தாங்கள் மதுரை செல்லவதானால் நல்ல நேரம் கண்டு / நாளும் கோளும் கண்டு செல்க என வேண்டினார் , அப்போது, சிவனேயே சிந்தைதனில் கொண்டு நாளெல்லாம் சிந்தித்திருப்போருக்கு நாளும் கோளும் நல்வினையே செய்யும் என்று கூறு கோளாறு பதிகம் பாடினார் அப்பர் சுவாமிகளிடமிருந்து விடை பெற்றார், அப்பதிக பாடல்களை பாடினால் நவக்கோள்களும் நம்மை அணுகா என்றும் அவைகள் எல்லாம் நல்லனவற்றையே செய்யும் , மேலும் இப்பதிக பாடல்களை பாடும் அடியார்கள் அரசனைப்போன்று உயர்வார்கள் என்பது இது திருஞான சம்பந்தனின் ஆனண என்கிறார். கோளாறு பதிகம் ""வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவவாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே ". இப்பாடலில் ஒன்பது கிரகங்களையும் நல்லவனவே செய்யும் என்கிறார் என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 02 *இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாணத் துக்காகாத 12-நட்சத்திரங்களைக் குறித்திருக்கின்றது. விவரம்: நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம். ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை, 7- ஆயிலிய நட்சத்திரம், 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம். 12 நட்சத்திரங்களாவன: பூரம், பூராடம், பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவைகளாகும். மேலேகண்ட நட்சத்திரங்கள் எல்லாமே நல்ல நாட்களாகும் உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பொழிப்புரை : அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் . பாடல் எண் : 4 மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் . பாடல் எண் : 5 நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே பொழிப்புரை : நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் . திருச்சிற்றம்பலம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

ரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே !


பரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே ! மூன்று வயதில் ஞானப்பாலூட்டப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுதுகுன்றத்து இறைவரை வணங்கி பாடியருளிய ஒரு பதிகத்தின் பொருளை இக்கட்டுரையில் காணலாம். 1, சிவபரம்பொருளைப் போற்றி வணங்குபவரகள் உலகினில் அரசர் ஆவர்,( எல்லோரும் நாட்டிற்கு அரசர் ஆக முடியுமா? என நினைக்காலாம், அவரரவர் சிவனை வணங்கினால் அரசர் போன்ற அதிகாரத்தினையும், நல்ல செல்வத்தினையும் தமது வீட்டிலேயே அடையாலம் என்பது தான் இதன் உட்கருத்து. அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப அரசபோகத்துடன், வாழலாம், பெரிய அழகான வீடு, தேவையான வேலையாட்கள், பொன் விளையும் பூமி, வாகனங்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து, இராசபோக வாழ்க்கை என்பன பெறுவர் என்பது தான் இதன் உட்பொருள்) "பரசுஅமர் படையுடையீர் உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே." தமிழ் திருமுறை 3,பதிகம் 99 பரசு என்னும் ஆயுதத்தை உடைய சிவபெருமானாரே! உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர் ஆவர். 2, நாள்தோறும் நன்மைகளையே பெறுவர் " பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார் நைவிலர் நாள்தொறும் நலமே " திருமுறை 3 -பதி 99 பாம்பைக் கச்சாசையாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானாரே! தங்களைத் தீந்தமிழ் பாடல்களால் பாடி வணங்குபவர் எவ்வித குறையும் இலாதவர் (நைவிலர்) நாள்தொறும் நன்மைகளையே பெறுவர். 3. பழியும், பாவமும், இல்லாதவர் ஆவர் "மழவிடை யதுவுடையீர் உமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே". இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட தங்களை வாயார வாழ்த்துபவர்கள், பழியும், பாவமும் இல்லாதவர் ஆவர். 4. செல்வமும், புகழும் உடையவர் ஆவர் "உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார் திருவொடு தேசினர் தாமே" அழகு பொருந்திய சடைமுடியினை உடையவரே தங்களைப் போற்றி செய்து வணங்குபவர்கள் செல்வமும், புகழும் பெறுவர். 5. உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெறுவர் " பத்து முடியடர்த்தீர் உமைப்பாடுவார் சித்த நல்லவ் அடியாரே" இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெறித்த தங்களைப்பாடி வணங்குவோர் உயர்ந்த உள்ளம் படைத்த அடியார் ஆவார்கள். 6. முத்தியும், பெறுவர் "கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே" சமணர்களையும், புத்தர்களையும் அடக்கியருளிய தங்களை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுவதற்குரிய முத்திப் பேற்றினையும் பெறுவார்கள். சிவபெருமானாரை வாயினால் பாடி, மனத்தினால் தியானித்தால் இம்மையில் எல்லா நலன்களையும் பெற்று, இறுதியில் முத்தியும் அடையலாம் என்பது திண்ணம் இது சிவனருள் பெற்று ஞானப்பால் உண்ட சம்பந்தர் திருவாக்கு. நாமும் வாயாரப் பாடி, மனதார நினைந்து சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம் நன்றி தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

புதன், 22 ஜூலை, 2015

ஞானம்


ஞானம் பலவற்றை அறிந்து கொள்வது அறிவு. அறிந்து கொண்டதை நடைமுறையில் பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அறிவும், புத்திசாலித்தனமும் எங்கு தோன்றுகிறதோ, அங்கு ஞானம் பிறக்கிறது. மனிதப் புலன்களுக்கு உட்படாத, மனிதனால் உணரமுடியாத, கேட்டு உணரமுடியாத, நுகர்ந்து உணர முடியாத, தொட்டு உணர முடியாத, விசயங்களை புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு, அதனை நோக்கி செல்லுதலே ஞானம், அதுவே தெய்வீக ஞானம். அடுத்து மனித உடலோடு, இருந்தாலும் உடல் சார்ந்த இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், உள்ளத்தை இறையை நோக்கி வைத்துக் கொண்டு பற்றற்று, தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்ந்து இந்த உடல் கூட ஒரு பாரம் போல் எண்ணி, தன்னையே மூன்றாம் மனிதனைப்போல் பார்த்து , நல்லதை மட்டும் எண்ணி, நல்லதையே செய்து, நல்லதையே உரைத்து வாழ்வதே உண்மையான தெய்வீக ஞானம். இதை நோக்கி செல்வதே சித்த மார்க்கம் ஆனால் இதனை உங்கள் வேகத்தை தடுப்பதே உங்கள் கர்ம வினையின் பயன். இதனை மீறி செல்வதற்குத்தான் யோக நிலை . இதற்கும் பற்றா பற்றி வாழ முனைதல் இறை அருளும், ஞானசக்தியும் கிடைக்கும். கடமை ஆற்றுவது என்பது வேறு, கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்கும், ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றியே ஆக வேண்டும். கடமையை தட்டிக் கழிக்க கூடாது. கடமையை சுமையாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. வாழ்வை எளிமையாக மாற்றிக் கொளல் வேண்டும். இன்பம், துன்பம் என்ற நிலை தாண்டி வாழ முயல்வதே மெய்ஞானமாகும். ஞானத்தைப்பற்றி திருமந்திரத்தில் உள்ள கருத்து "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்ததின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நல்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரிமிக் காரே." பொருள்: உண்மை ஞானத்தை விட, அதாவது இறைஞானத்தை விட மிக்க தர்ம நெறி உலகில் வேறு எதுவும் இல்லை. அதைவிட சிறந்த சமயமும் இல்லை. இந்த பரஞானத்தை விட மிக்கவை என்று சொல்லப்படுபவை , எவையாயினும் நல்ல மோட்ச இன்பத்தை தரமாட்டா. ஆகவே மெய் ஞானத்தில் மிக்கவர் மண்ணுலக மக்களே ஆயினும் உயர்ந்தவரகளே ஆவர். என்கிறது திருமந்திரம் ஞானம்அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே தாய், தந்தை உற்றார் , உறவினர், சூழல் எதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய்,தந்தை சிரமப்படுகிறார்கள் என்று எண்ணும் பொழுதே மீண்டும் மனிதன் மாயை வலைக்குள் சிக்கி விடுகிறான். எனவே எல்லாம் அவரரவர் கர்ம வினைகளின் படி வாழ்வின் போக்கும் சிந்தனைகளும் , இன்ப, துன்பங்களும் அமைகின்றன. எனவே துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும. இவற்றுக்கெல்லாம் ஒரே வழி பிராத்தனை, மனிதனின் துன்பத்திற்கு காரணம் முன்வினை - முன்வினை குறைய குறைய துன்பம் குறையும். வினைப்பயனை அனுபவித்து தீர்ப்பது என்பது ஒருவகை. வினைப்பயனை தர்மத்தால் தீர்ப்பது என்பது மற்றொரு வகை வினைப்பயனை இறைவழிபாட்டால் தீர்ப்பது என்பது இன்னொரு வகை, எனவே தத்தம் வினைப்பயனை நீக்க இப்பிறவியிலே இவற்றில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து முன் வினைப்பயன் நீக்கி ஞான ஒளி பெற வேண்டும். திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்

செவ்வாய், 21 ஜூலை, 2015

சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் / சைவத்தின் தத்துவார்த்தம்


சைவராகப் பிறந்தது மேலான புண்ணியம் 


      சைவத்தின் தத்துவார்த்தம் எல்லாப் பிறப்புகளையும் தப்பி மானிடராய் பிறப்பது பெரும் புண்ணியம்,அதிலும் சைவராகப் பிறப்பது பலகோடி புண்ணியம். இதனை தமிழ்முறை வேதங்களிலும் ஆங்காங்கே காணலாம். பிறவி ஞானி , ஞானப்பால உண்டு அரும் பெரும் தெய்வீக ஞானி, திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய மூன்றாம் திருமுறை திருக்குடி பதிகத்தின் பத்தாவது பாடலில்ஓர் அரிய ெசய்தியை கூறியுள்ளதை அறிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ள ேவண்டும். சிவ பெருமானாருக்கு தலையால் வணங்கி நன்றி கூறவேண்டும். "அருந்திரு நமக்கு ஆக்கியஅரன் " சம்பந்தர் நம்மைச் சைவ சமயத்தில் பிறக்கச் ெசய்தது மிகப் பெரிய செல்வம் நமக்கு அளித்ததாகும் என்பதை நாம் உணர ேவண்டும். உலகில் உள்ள அனைத்திலும் ( உயிர உள்ளவை, உயிர் அற்றவை) இறைமை கலந்துள்ளது என்றும், பிற உயிர்கட்கு எந்த வகையிலும் துன்பம் செய்யக்கூடாது என்று முதலில் கூறுயது, தற்போதும் கூறிவருவது, சைவ சமயமே ஆகும், எல்லா மதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது சைவ சமயம், சைவ மதமே ஒரு இந்து மகாசமுத்திரம், இவற்றிலிருந்து இதன் கொள்கை கோட்பாடுகளை அடிப்படையாகக் ெகாண்டு தோன்றியதே ஏனைய மதங்கள் அத்தனையும், உதாராணமாக எடுத்துக் கொண்டால், கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த, சமண மதங்களும் இந்து மத கொள்கை த்த்துவத்தை கொண்டே வேறுண்ணின. அன்பை அடிப்படையாகக் ெகாண்ட கிருஸ்துவ மதமும், இந்து மதத்தின் அன்பே சிவம், என்ற அடிப்படைத் தத்துவ்த்தை ெகாண்ட தோன்றியது. நம்இந்து மதம் பிரதான நதி, மற்றவையெல்லாம் இத்ன் கிளை, நதிகள், மற்றும் வாய்க்கால்கள் தான். போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது. இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி. வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது. கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின. மனிதன் எப்போது சிந்திக்க தோன்றினானே அன்றே தோன்றியது இந்து மதம், இந்து மதத்தை தோற்றுவித்தவர் யாரென்று யாருக்கும் ெதரியாது, ஆனால் மற்ற மதங்களை தோற்றுவித்தவர்களின் பெயர்களைக் ெகாண்ட மற்ற மதங்கள் விளங்குகின்றன, எனவே இந்து சைவ இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, ஒரு மதம் வளர, அதனை சார்ந்தவர்கள் நமக்கு தந்த வேதங்களும், அவர்களின் அறிவுரைகளும் தான், இவற்றில் தான் நம் சைவம் தலைதூக்கி நிறகிறது, தமிழ் முறை தந்த சிவ சைய சமயக்குறவர்களும், பன்னிரு திருமுறைகள் தந்த அடியார்களின் தோத்திரப்பாடல்கள் தான் சைவத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன என்றால் மிகையாகாது. சைவ சமயத்தின் உயிர் நாடியாக உள்ள பன்னிரு தமிழ் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்துக்கருத்துக்களும் எல்லா மத்தவர்கட்கும் எல்லா இனத் தவர்களுக்கும் பொருந்துனவே ஆகும், தான் பெற்ற இன்பத்தை வளர்ச்சியை தானும் வளர்ந்து, பிற இனத்தவரையும் சிறக்க செய்வதே நம் சைவ மதத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம், " நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம். " இதுதானே தமிழ் வேதத்தின் உட்கரு, இதைத்தானே தந்துள்ளது. நம் தமிழ் வேதங்கள், இத்தகைய சமயத்தில் நம்மைப் பிறக்க செய்ததை மதித்து போற்ற வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசர் , " வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்." த,வே, 4 முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வணங்கி, இனிப் பிறவாமையைப் பெறுவதற்கு வழி வகுப்பது சைவ சமயமே ஆகும், ஆதலால் தான் சைவ சமயத்தில் பிறக்கச் செய்ததைப் " அருந்திரு " (மிகப் பெரிய செல்வம்) என்கிறார் சம்பந்தர், இதனை உணர்ந்து இச் சைவ மதத்தில் பிறந்ததின் பயனை பெற்று உய்தி, இன்னும் பிறவாமை பிறக்கவும், அப்படி இன்னும் ஒரு பிறவி பிறக்க நேர்ந்தால் , இந்த சைவ சமயத்திலேயே பிறந்து, என் ஈசனை மறவா நிலையை அடைந்திட அருள் வேண்டுவோம், திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் ேமலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

மூர்க்க நாயனார்


நாயன்மார் வரலாறு மூர்க்க நாயனார் சோழ நாடு சோறுடைத்து, ( கோவில்கள் - பக்திநெறி ) பாண்டியநாடு முத்துயுடைத்து,(முத்திபெற்ற சித்தர்கள்) தொன்டை நாடு சான்றோருடைத்து, ( சான்றோர்கள் - சித்தர்கள்) இப்படி சான்றோர்கள் பலர் வாழும் தொண்டை நன்னாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊர் திருவேற்காடு. இவ்வூர் பூவிலிருந்தவல்லியிலிருந்து மூன்று கி,மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் மூர்க்க நாயனார். திருவெண்ணீற்றையும் மெய் பொருளாகக் கருதி தினமும் திருவெண்ணீர் அணிந்து சிவனடியார்கட்கு மிகச் சிறந்த உணவளித்து பின் தான் உண்ணும் குணம் கொண்டு சிவநெறி யை அணிதினமும் சிவனடியார்கள் சேவை செய்து வந்தார். சிவனடியார்கள் சிவமாகவே நினைத்து வணங்கி, இன்னுரை கூறி அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் அமுது செய்விப்பார். இப்படி இவரது செல்வம் யாவும்செலவழிந்தன. நிலம், வீடு, முதலிய யாவும் விற்றாயிற்கு. வறுமை வந்த போதும் தமது குறிக்கோளினின்று நாயனார் மாறவில்லை. தாம் முன்பு கற்றிருந்த சூது ஆட்டத்தில் பொருளீட்டி அடியார்கட்கு அமுதூட்டத் திட்டமமிட்டார். பல ஊர்கட்கு சென்று அங்குள்ள சிவலாயங்களை தொழுவார். அங்கு சூதாடி அதனால் வரும் பொருளை கொண்டு அடியார்கட்கு அன்னம் அளித்து மகிழ்ந்தார். சூதாடுவது பெரும்பாவம் என்று தெரிந்தும், அவர் அதனால் தான் கொண்ட குறிக்கோள் நன்மையானது புண்ணியமானது என்று உணர்ந்து இந்த பாவச்செயலில் கிடைத்த பொருளையும் சிவனடியார்கட்கு அன்னம் அளித்து புண்ணியம் செய்து வந்தார். நாம் சொல்லும் பொய்யினால் ஒரு நன்மை நடக்குமானால் அது உண்மையாகும் என்பதையும் செய்யும்தொழில் பாவத்தொழிலானாலும் அதன் விளைவு நன்மை பயக்குமானால் அதுவும்புண்ணிய செயலே என்று உணர்ந்திருந்தார். தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சூதாடினால் அது தவறே, தான் செய்யும் ஒப்பற்ற சிவபுண்ணியச் செயலுக்காக சூதாடியது புண்ணியமே ஆகும். பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் வழிபபறி செய்து திருமாலயடியார்கட்கு உணவளித்தார். என்ற வரலாற்றையும இத்துடன் வைத்து நாம் எண்ணி பார்க்க வேண்டும். நாயனார் திருக்கடந்தை தலத்தை அடைந்து அங்கே எழுந்தருளியுள்ள பிறைசூடிய பெருமானாரை அளவிலா அன்புடன் வணங்கினார். அத்தலத்தில் பல நாட்கள் தங்கினார். ஈட்டிய பொருளை கொண்டு பணியார்கள் மூலம் சிவனடியார்கட்கு அறுசுவை உணவளித்தார். அடியார்கள் யாவரும் உணவருந்திய பிறகு முடிவில் இவர் உணவு உண்பார். சூதாடியதால் இவர் மூர்க்கர் எனப்பெயர் பெற்றார். குணத்தால் மூர்க்கர் இல்லை. தூய உள்ளமும், இனிமையான சொல்லும், உயர்ந்த செயலும், கொண்டவர். மண்ணில் பிறந்தவர்கள் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாகும்.. இத்தகைய மேலான தொண்டினை செய்து முடிவில் சிவபதம் எய்தினார். திருச்சிற்றம்பலம் நன்றி :தமிழ் வேதம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

ஞாயிறு, 19 ஜூலை, 2015

திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்


திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள் 1. பிறரைப்பற்றி புறங்கூறும் கொடுஞ் செயலை விட வேண்டும் "பேச்சொடு பேச்சு கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன் நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் தோன்றி னேனே. " - அப்பர் பிரான் திருமுறை 4 பதி.78 பேசும் பொழுதெல்லாம் பிறரைப் பற்றி அவதூறு பேசும் கொடுஞ் செயலை விடுமாறு அறியேன். நாவினால் இறைவருடைய பெருமைகளை பேசி நன்மைகள் அடைவதையும உணரவில்லை. இகழ்ச்சிக்கு இடமான இந்த உடம்பினுள் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்? மாணவர்கள்பொருட்டு ஆசிரியர் விரல் விட்டு எண்ணுவது (கூட்டுவது) போல், நம் பொருட்டு நம்முடைய செயல்களைத் தம் செயல்களாகவே பாடியுள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி புறங்கூறுவது மிகக் கொடிய பாவச் செயல் என்பதை நான்காவது தமிழ் திருமுறை கூறுகின்றது என்பதை உணர வேண்டும். பிறரைப பற்றி புறங்கூறுவதால், நம்முடைய புண்ணியங்கள் குறையும். யாரையும்புறங்கூறிப் பேசினோமோ அவர் செய்த பாவங்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும். இது ஒன்றே நம் வாழ்க்கையை அழிப்பதற்குப் போதும். அதனால் தான் இதனைக் " கொடுஞ்செயல்" என்கிறார் சுவாமிகள். இதற்கு மாறாக இறைவருடைய பெருமைகளை பேசினால் பல நன்மைகள் நம்மை வந்தடையும். என்பதை இப்பாடல் கூறியுள்ளதைக் கண்டு மகிழலாம். வேண்டியவர்களை பற்றி நல்லது மட்டுமே பேசுங்கள் வேண்டாதவர்களைப் பற்றி எதையுமே பேசக்கூடாது. " அவ்வியம் பேசி அறங்கெட நிலலன்மின்" தமிழ் வேதம் 10 திருமந்திரம் புறங்கூறி நம் பெற்ற புண்ணியத்தை இழக்காதீர் 2, நாம் வாழும் உலகிற்கு அன்றாடம் ஏதாவது கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்வு என்பது இருவழிப்பாதை ஆகும். ஒரு வழி இல்லவே இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பிறமனிதர்கட்கோ, பிராணிகளுக்கோ, கொடுத்தே ஆக வேண்டும். ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள புண்ணியங்களால் நாம் தற்போது சுகத்தை அனுபவித்து வருகின்றோம். அந்த புண்ணியங்கள் காலியாகிவிட்டால் நம்முடைய இன்பங்கள் தொலைந்து துன்பங்கள் சூழ்ந்துவிடும். இது எப்படி எனில் வங்கியில் நாம் சேர்த்து வைத்துள்ளவற்றை எடுத்து ச் செலவு செய்து வருகிறோம். சேமிப்பு காலியாகி விட்டால் துன்பம்தான். இதற்கு என்ன செய்கிறோம். அவ்வப்போது சேமிப்பில் பணம் போட்டு வருகிறோம். சேமிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறறோம். இதைப்போலத்தான் புண்ணியமும்.ஏற்கனவே நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் குறையாம் அன்றாடம் புண்ணியங்களைச் செய்து கொண்டே வர வேண்டும். அன்றாடம் உலகத்திலிருந்து காற்றை, சூரியஒளி, தண்ணீர் ஆகியவற்றை பெறுகிறோம். இதன் பொருட்டு உலகிற்கு அன்றாடம் ஏதாவது நாம் கொடுத்தே ஆக வேண்டும். வாங்கினால் கொடுக்கத்தானே வேண்டும். பிறந்தால் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி அல்லது கடவுளின் கட்டளை. இதை மீறக்கூடாது. அப்படி இயற்கைக்கு மாறாக பெற்றுக் கொண்டே இருந்து, கொடுக்காமல் வாழ்ந்தால் துன்பமே சூழும். இதனை திருநாவுக்கரசர் நான்காவது தமிழ் திருமுறையில் கூறியதைக் காண்போம். " படைகள்போல் வினைகள் வந்து பற்றியென்பக்கல் நின்றும் விடகிலா ஆதலாலே விகர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன் என்செயகேன் நான் இரப்பர் தங்கட்கு என்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே." தி, மு. 4. பதி 69 3, மன இறுக்கம் (டென்சன்) இல்லாமல் வாழும்வழி மனஇறுக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என்று தற்கால அறிவியலார் கூறுகின்றனர். மன இறுக்கம் இல்லாது போனால் நோய்கள் வரா. இதற்கு வழியை திருஞானசம்பந்தர் கூறுவது, " உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே" மன இறுக்கம் நோயைத்தரும். மன உருக்கம் நோய் வாராமல் தடுக்கும். "உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே" சம்பந்தர். திருவலஞ்சுழி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளல் சிவபெருமானாரை உடலால் வணங்கியும், உள்ளத்தால் நினைத்தும், உள்ளம் உருக வேண்டும். அத்தகைய உருகும் உள்ளம் உடையவருக்கு நோய்கள் வாரா. இறைவழிபாட்டில் நம்முடைய உள்ளம் உருகுவதில்லை. காரணம் பொருள் வேண்டி, இம்மை போகம் வேண்டி, வழிபாடு செய்கிறோம். மனத்தில் பேராசை நிறைந்துள்ளதால் உள்ளம் உருகுவதில்லை. " ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் " திருமுறை 10 4, சிவாய வழிபாடு அவசியம் தேவை "பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்கத்திற் பொலிய வேந்திக் கூந்தற் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே." சம்பந்தர் தி,மு 2 பதி 71 குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குறும்பலா ஈசரை வணங்கும் குறிக்கோளுடன் ஆண்யானையும்பெணயானையும் வருகின்றன. இறைவருக்கு சாத்துவதற்கு என்று வருகின்ற வழியில் உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தில் வைத்துக் கொண்டு வருகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து களிறும் பிடியும் குறும்பலா ஈசரை வணங்குகின்றன. இதில் நாம் உணறும்கருத்து. 1,சிவ வழிபாடு தேவை. விலங்குகளே சிவவழிபாடு செய்கின்றன.மனிதர்களாக பிறந்த நாம் இவ்வழிபாட்டை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். 2, குடும்பமே சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இப்பாடலில கணலாம். அப்போதுதான் குடும்ப நலமாகவும் வளமாகவும் திகழும், சந்ததிகளும் செம்மையாக திகழ்வார்கள். 3. சிவாலயம் செல்லும் பொழுது இறைவழிபாட்டிற்குரிய பொருட்கள்மலர் நல்லெண்ணெய் , நெய், பால், இளநீர், இப்படி இறைவருக்கு வேண்டிய பொருட்களை கொண்டு செல்லவேண்டும். இதனால்தான் அன்றே நமது பெரியோர்கள் இறைவர், பெரியோர் நோய் வாய்ப்பட்டவர், கருவுற்றதாய், வயது முதிர்ந்தோர், குரு முதலியவர்களிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். திருஞான சம்பந்த சுவாமிகள் திருவலஞ்சுழி பதியத்தின் முதல் பாடலில் " வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழி" என்கிறார் , வண்டுகளே பாடும்போது நாமும் பாடி வணங்க வேண்டாமா? திருமுறைகள் மனித குலத்திற்கு தேவையான வாழ்வியல் கருத்துக்கள் அரிய வரலாறுகள், அறிவியல் உண்மைகள் இயற்கை எழில் நலம், முத்தி பேற்றுக்குரிய எளிய வழிகள் ஆகியவற்றைக் கூறுவனவாகும். திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 18 ஜூலை, 2015

ஆக்கையால் பயன்


திருமுறைகள் கூறும் வினை நீக்கம்.

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை ெசய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், ெமழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று நாம் நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட ெசய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப்பார்ப்போம். தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர் " சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... சிவபுராணம் கண்கள் ; கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................ அப்பர் அடிகள் செவி ; செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல் கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல் அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர் ெபருமான் திருமுறை பாடல் 4 இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் ெபற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெறுவோம். திருச்சிற்றம்பலம் வை.பூமாலை http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 13 ஜூலை, 2015

என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!

என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!: கீதை காட்டும் பாதை 36 "பொ றாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிரு...

வியாழன், 9 ஜூலை, 2015


தண்டியடிகள் நாயன்மார் வரலாறு சோழநாட்டில் தலைசிறந்த நகரம் திருவாரூர், ஆரூரில் பிறந்தவர்கள் யாவருமு சிவகணங்களாகவர். திருவாரூரில் பிறந்தால் முத்தி காசியில் இறந்தால் முத்தி என்பவர். திருவிடங்கத் தலங்கள் ஏழினுள் முதன்மையாக தலம், திருமகள் பூசித்து பேறு பெற்றதலம் திருவாரூர். பல்பிறவிப் புண்ணியத்தால் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் அவதரித்தார். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர். ஆரூர் இறவைரை அக் கண்ணால் வழிபடும் அன்புடையவர் இவர். திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட புண்ணயரைப் பலகாலும் வலம் வருவார். திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருப்பணிகள் பல செய்யவார். திருக்கோயிலின் மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தை சுற்றிச் சமணர்களுடைய ஆதிக்கம் நிறைந்திருந்தன. இதனால் திருக்குளம் பழுதுபட்டது. கண்ணில்லாத தண்டிணடிகள் குளத்தினை தூர்வாரி சுத்தம்செய்ய முயன்றார், ஆனால் அவரோ கண் பார்வையற்ற நிலையில் குளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற எண்ணத்தில தன் உத்தியை கையாண்டு குளத்தின் நடுவே தறியை ( கொம்பினையும் ) நட்டார். குளக்கரையில் மேட்டுப்பகுதியில் ஒரு தறியையும் நட்டார். இரு கொம்புகளக்கும் இடையே கயிறு கட்டினார். அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தில் உள்ள மண்ணைக் கூடையில் சுமந்து கரைமேல் கொட்டினார். இதனைக் கண்ட சமணர்கள் " மண்ணை வெட்டும்பொழுது சிற்றுயிர்கள் மாண்டுவிடும் ஆதலால் குளத்தில மண் வெட்ட வேண்டாம் " என்று தடுத்தனர், தண்டியடிகள் இதனைப் பொருட்படுத்தாமல் திருப்பணியை செய்தார்." கண்ணில்லா உமக்கு காதும் இல்லையா? " என்று எல்லி நகையாடினர் சமணர்கள், " சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? " என்று தண்டியடிகள் கேட்டார். சமணர்கள் " நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்," என்றனர். அத்துடன் நில்லாது, தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள் நாயனார் மனம் வெதும்பினார். ஆரூர் பெருமானின் முன்னின்று, " அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்." என்று கண்ணீர் சொரிந்து தொழுதார். ஆழமான வழிபாடு ஆண்டவரை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்ணுதற் கடவுள் அன்றிரவு தண்டியடிகள் கனவிலே தோன்றி, " அன்பனே கவலை விடுக ! நாளை உமது கண்கள் ஒளிபெறும் உமது திருப்பணியைத் தடுத்தவர்கள் கண்களை இழப்பர்," என்றுஅருளிச் செய்தார். அன்றிரவே சோழ மன்னன் கனவிலும் தோன்றி " தண்டியடிகள் நானாரின் குறையை தீர்ப்பாயக " என்று பணித்து மறைந்தருளினார். பொழுது விடிந்த உடன் அரசன் தண்டியடிகளிடம் வந்து தான் கண்ட கனவு நிலையைக் கூறி வணங்கினார், தண்டியடிகள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினார், மறுநாள் தண்டியடிகளும் மன்னனும் குளக்கைரையை அடந்தார்கள், " சிவபெருமானே பரம்பொருள் அவரது அடிமையாக இருப்பது உண்மையானால் உலகர் முன் என் கண்கள் ஒளிபெறட்டும் " என்று கூறி திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருக்குளத்தில மூழ்கினார் தண்டியடிகள். கண் பெற்று எழுந்தார், தேவர்கள் பூமழை பொழிந்தனர். சமணர்கள் கண்களை இழந்தனார். முன்பு ஒப்புக்கொண்டவாறு சமணர்கள் திருவாரூரை விட்டு நீங்கினார்கள். தண்டியடிகள் வழக்கம் போல முக்கட் பெருமானுக்குத் தொண்டுகள் செய்து சிவபதம் நண்ணினார். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

புதன், 8 ஜூலை, 2015

திங்கள், 6 ஜூலை, 2015

திருமுறைகள் வெளி வர வித்திட்டவர்கள்


சைவத்தின் ஆனிவேராகக் கருதப்படும் பன்னிரு திருமுறைகள் இன்று எல்லாராலும் பாடப்படும் தேவாரப் பதிகங்கள் இன்று நம்மால் ஓதி ஆராதிக்க வித்திட்டவர்கள் சங்க கால சோழ மன்னர்கள் வம்சாவழியினருக்கே சாரும்.தென் தமிழ்நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோலாட்சி வந்த இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியார் தான் முதன் முதலில் இந்த தேவாரப்பதிகங்கள் இருப்பதை கண்டறிந்து அதனை நமக்கெல்லாம் கிடைக்கச் செய்து, இறைவனின் திருவருளை பெற தேவாரப்பதிகங்கள் புத்துயிர் பெற செய்தவர்கள். இந்த குந்தவை பிராட்டியார் ஒருநாள் தன் நகரிலுள்ள சிவலாயத்தில் சிவதரிசனம்செய்ய சென்றபோது, கோவிலில் பூ தொடுக்கும் ஒரு சிறுவன் பூவை தொடுத்தவாறு அப்பரின் தேவாரப்பாடலான " குனிந்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குவின் சிறிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்மாநிலத்தே " என்ற பதியத்தை இராகத்தோடு பாடுவதை கேட்ட இளவரசி, அவனை அருகில் அழைத்து இந்த பாடல்கள் எங்கு கற்றாய் இது யாருடைய பாடல்கள் என வினவினார், அதற்கு அச்சிறுவன் இது திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரப்பதிகப் பாடல் இதனை எனது தந்தையார் எனக்கு பயின்று கொடுத்ததை சிவனார் சந்நதியில் அனுதினமும் பாடி மகிழ்வேன் என்றான். இந்த பாடல்கள் மட்டும்தான் தெரியுமா ? இன்னும் பாடல்கள் உள்ளனவா என்றதற்கு சிறுவன் எனது தந்தையாரிடம் வினவினீர்களானால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரியும் என்றான். உடனே அவனின் தந்தையை அனுகி இதன் விபரங்களை சேகரித்தார். இது சைவ சமய சிவனடியார்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு இது தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பதிகப்பாடல்கள் ஒன்றிரண்டுதான் எனக்கு தெரியும் மீதமுள்ள பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்னும் சிவனடியார் ஒருவர் உள்ளார் அவரிடம் கண்டு தெளிவு பெறலாம் என்று விபரங்கள் கூறியனுப்பினார் குந்தவை பிராட்டியாரை. உடனே குந்தவை பிராட்டியார் தன் சகோதரன் இராஜராஜசோழனிடம் இது பற்றி கூறி தேவாரப்பதிகங்கள் எங்கிருந்தாலும் அதன் பிரதிகளை கண்டுபிடித்தருளிட உத்தரவு இட்டார், மன்னரின் சேனைகளும் இதனை தேடும் பணியில் ஈடுபட்டதுடன் நம்பியாண்டார் நம்பிகளையும் காண மன்னனே நேரில் சென்றார், மேலும் இந்த தேவாரப்பதிகப்பாடல்கள் கொண்ட ஏடுகள் எங்கும் கிடைக்கிறதா என்பதையும் அறிய பல திக்குகளுக்கு தன் பணியாளர்களை நியமித்தான். மன்னன் தேடிச்செல்லும் நம்பியடிகள் ஒருநாள் தான் முறையாக வழிபடும் பொல்லாப் பிள்ளையார் என்ற திருக்கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் நம்பியடிகளின் பாலகன் நம்பி என்ற பள்ளி செல்லும் சிறுவனை தன் பொருட்டு பொல்லாப் பிள்ளையாருக்கு அபிசேக ஆராதனை செய்யும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய தாயார். அவனும் பிள்ளையாருக்கு அபிசேகம்செய்ய வேண்டிய பொருட்களையும், அவருக்கு படையல் பொருளான கொழுக்கட்டையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சிறுவன் நம்பி பொல்லா பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்து, நீரால் அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த வஸ்திரங்களால் அலங்காரம் செய்து தான் கொண்டுவந்த படையல் நெய்வேத்திய பொருட்களான கொழுக்கட்டையை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். பிள்ளையார் உண்ண மாட்டார் என்பது அவனுக்கு தெரியத தால் அவன் மேலும் மேலும் அரைகூவி பிள்ளையாரை சாப்பிட வேண்டினான். பாலகன் பலமுறை கெஞ்சியும் தரிசனம் அளிக்காத பிள்ளையாரை தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணா விடில் தான் இங்கே மாண்டு விடுவதாகவும் பிள்ளையாரின் காலில் முட்டி மோதினான், உடனே பிள்ளையார் அவனுக்கு தரிசனம் கொடுத்து படைத்த கொழுக்கட்டை வேத்தியங்களை உண்டு மகிழ்ந்தார். பிள்ளையார் தான் படைத்த கொழுக்கட்டைகளை உண்ட சந்தோசத்தில் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தாயார் விநாயகருக்கு படைத்த கொழுக்கட்டைகளை எங்கே என்று அன்னை கேட்க அவனே விநாயகர் உண்ட செய்தியை கூறினான் ஆனால் அன்னை அதனை நம்ப வில்லை. பாலகன் பொய் சொல்கிறான் என்றே நம்பினார்கள். இது பற்றி ஆராவாரம் ஏற்பட்டது. உடனே எல்லோரும் பிள்ளையார் உண்டதை உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று வினவ , அவனே தான் இன்னும் ஒரு முறை பிள்ளையாருக்கு படைத்து அவர்தான் உண்டார் என்பதை நிருக்கிறேன் என்று கூறி மறுபடியும் பொல்லா பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். இதன்படி பலமுறை வேண்டி பிள்ளையார் வராத நிலையில் மறுபடியும் சிறுவன் பிள்ளையாரை உருக்கத்துடன் வேண்டி தான் வரவில்லை எனில் தான் இங்கே இறந்து விடுவேன் என்று வேண்ட உடனே பிள்ளையார் தரிசனம்எல்லாருக்கு கிடைத்து கொழுக்கட்டையையும் உண்டு சென்றார், இச்செய்தி சோழ மன்னன் வரை பரவியது , எனவே மன்னனும் நம்பியாண்டரின் பாலகனை சந்தித்து தேவாரப்பதிகங்கள் எங்கு உள்ளன. என்று விநாயகரிடமே கேட்டு சொல்ல கூறினார், அதன்படி பிள்ளையார் தரிசனம் கொடுத்து தேவாரப்பதிகங்கள் யாவும் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஓதுவாரகளின் பொறுப்பில் உள்ளது. என செய்தி கிடைத்தவுடன் மன்னன் அங்கு சென்று, சிதம்பரம் ஓதுவார்களிடம் வினவினார், அவர்கள் மூவரின் தேவாரப்பதிகங்கள் நடராஜபெருமானின் சன்னதியில் உள்ள அறையில் உள்ளது, என்றும், அது அந்த மூவர்கள் வந்தால்தான் தங்களால் எடுத்துக் கொடுக்க முடியுமென கூறினார்கள். மன்னன் யோசனை செய்தான் சித்தி முத்தியடைந்த மூவரை எப்படி அழைத்து வருவது எப்படி தேவாரப்பதியங்களை பெறுவது என்று மனம்வருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு சித்தர், மறைந்த மூவரின் விக்ரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வாருங்கள் உங்களுக்கு தேவாரப்பதியங்கள் கிடைக்கும் என அருள் வாக்கு கிடைத்தது. மன்னரும் அதன்படி மூவரின் விக்கரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார், ஓதுவார்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை, ஏனனெனில் இது வெறும் விக்கிரங்கள் என்றால் கோவிலில் குடிகொண்டிருக்கும் நடராஜபெருமானும் விக்கிரமாகத்தானே தெரியும், உடனே மூவர் பெருமக்களும் நடராஜர் சன்னதி வந்தவுடன், அறையில் தேவாரப்பதியங்கள் கொண்ட நூல் ஆடைகளால் மூடப்பட்டிருந்த மூட்டையை எடுத்து கொடுத்தனர் , அதில் சுமார் 10 ஆயிரம் கொண்ட ஏடுகள் காரையானால் அரிக்கப்பட்டு மீதம் இருந்த சுமார் 6000 ஒலைச்சுவடுகள் தான் எஞ்சியிருந்தன, அதனை கொண்டு வந்து அதற்கு பூஜைகள் செய்து தேவாரப்பதிகங்களை முறைப்படுத்தி உலகிற்கு வெளியிட்ட பெருமை சோழ மன்னர்களுக்கே சார்ந்தது. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 4 ஜூலை, 2015

பிரம்ம ஞானம் பெறுதல்


பிரம்ம ஞானம் பெறுதல் பிரம்ம ஞானம் பெற ஒருவர் ஐந்து பொருள்களை சரண் செய்தல் வேண்டும்.அவையாவன: 1. ஐந்து பிராணன்கள் ( ஐம்புலன்களின் சக்திகள்) 2. ஐந்து புலன் அறிவு 3. மனம் 4.அறிவு 5. தான் என்ற அகந்தை பிரம்ம ஞானம்பெறுவது என்பது தன்னைத்தான் அறிதல் என்ற அடிப்படை தத்துவம் கொண்டதாகும். இது ஒரு கத்தி முனையில நடப்பது போன்றது. எல்லோராலும் அவரவர் வாழ்நாளில் பிரம்ம ஞானத்தை பெறுதல் என்பது அரிது. அதற்காக சில முக்கிய குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் மிகமிக அவசியம் பிரம்ம ஞானம் பெறும் முறை: 1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் : " தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர் 2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி : பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது 3, உள்நோக்கு சிந்தனை : ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும். 4, பாவங்களிலிருந்து வெளிப்படல்: ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம் 5. நற்குண நற்செயல்கள்: உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது 6, நல்லவை, இனியவை: நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடையவன் நல்லவற்றையே நாடிட அறிவுபெற முயலாதவன் தன் பேராசை, அதீத பற்று இவை காரணமாக இனியவற்றையே நாடுகிறான். 7. மனம் புலன் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்: உடல் ஒரு தேர், அறிவு ஒரு தேரோட்டி தான் என்பது தேரினுள் அமர்ந்திருக்கும் எஜமான் மனம் என்பது கடிவாளம் ஆகும். புலன்கள் குதிரைகள், புலன்றி பொருள்கள் என்பவை தேரோடும் பாதை, மனிதன் தன்னைத்தான் அறிந்து, அறிவு எனும் தேரோட்டியின் துணை கொண்டு மனமாகிய கடிவாளத்தை கட்டுப்படுத்தி புலன் அடக்கத்தோடு நல்வழியைப் பின்பற்றினால் அவனது பயணம் நன்கு முடிவ பெற்று, அவன் சேர வேண்டிய இடம் ( அதாவது எங்கும் நிறைந்த பரம்பொருளின் இருப்பிடமாகிய கைலாசம் ) அடைய முடியும். 8, அகத்தூய்மை,: உள்ளத்தூய்மை பெற்றவரே விவேகமும், வைராக்கியமும் பெற்று தன்னைத் தான் உணர முடியும். தான் என்பது போய் ஆசை அறவே நீங்கி, உள்ளத் தூய்மை ஏற்பட்டால் அன்றி தன்னைத்தானறிதல் என்பது இயலாத ஒன்று. 9. குருவின் முக்கியத்துவம்: தன்னைத் தானுணர்ந்த ஒரு சற்குருவால் மட்டுமே உதாரண புருசனாக விளங்கித் தன் சீடனையும் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் 10. இறையருள் : யாரொருவனை இறைவன் தன் பக்தனாக , அடியாராக ஏற்றுக் கொள்கிறாரோ அந்த அதிர்ஸ்டசாலி மட்டும்தான் விவேகமும், வைராக்கியமும் பெற்று சம்சார சாகரத்தை பாதுகாப்பாக கடந்து இறைவனின் திருவடிகளை அடைய முடியும். எனவே இறைவனருள் பெறுவது எல்லவற்றைக் காட்டிலும் முக்கியம். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

மனித்தப் பிறவி வேண்டுவதே .............


மனித்தப் பிறவி வேண்டுவதே ............ மனித்தப் பிறவி வேண்டுவதே ............. "குனித்த புருவமும் கொவ்வாய் செவ்வாய் ............. " என்ற அப்பர் தேவாரப்படாலில் நான்காவது அடியில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே " என்கிறார், இறைவன் படைப்பில் எண்ணற்ற உயிரனங்கள் உள்ளன. மற்றும் தேவர், அசுரர், கந்தர்வர், பித்தியாதரர் போன்ற தேவலோக வாசிகளும் மற்றும் ஈரேழு புவனங்களைச் சார்ந்த பலரும் உள்ளனர், இருப்பினும் எல்லாவற்றிலும் தலைசிறந்தது மானிடப்பிறவியே என்பது பெரியோர் அறிந்த முடிவு. ஒவ்வொர் உயிரும் பிறப்பு, இறப்பு, என்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும், ஆத்மா அந்த உடலின் செயல்களுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றது, எனினும் எல்லா உயிர்களுக்கும் உண்ணல், உறங்கல், சுகபோகம், இனப்பெருக்கம் என்ற ஆசைகள் உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும் இவற்றுடன் பகுத்தறிதல் என்ற ஒப்பற்ற சிறப்பு ஆற்றலை இறைவன் அளித்துள்ளான். எனவே மனிதப் பிறவியில் மட்டுமே ஞானத்தின் துணைகொண்டு நன்மை, தீமை, புண்ணியம் பாவம் என்பவற்றை உயர்த்துணர்ந்து இறைவனை அடையும் முயற்சி செய்ய இயலும். வெற்றி காணவும் முடியும். இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனிதனால் மட்டுமே முடியும். என்பதாலேயே மனிதப் பிறவியில் அவசியத்தை அப்பர் பெருமான் வலியுறுத்தியிருக்கிறார் இந்த பாடல் மூலம். உடலைப் பேணுதல்: இப்படி பெற்றெடுத்த உடலையும், உயிரையும் நன்கு பாதுகாக்க வேண்டும், இந்த உடல் எலும்பும், தோலும் ரத்தமும், சீழும் சளியும், கலந்த ஒரு கலப்படமான கூட்டமைப்பு. முன்னது மூன்றும் உயிர் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதவை. பின்னது இரண்டும் தவிர்க்க முடியாதவை. அத்துடன் நேர் மாறான பலனைத் தருபவை. இடுக்கண்களிலிருந்து விடுபட வேண்டுமெனில் உள்ளக்கோவிலில் இறைவனை இருத்தி,, அவனை உயிருக்கு உயிராக உணர்ந்து வீடுபேற்றினை அடைய முடியும். எனவே தான் " உடம்பார் அழிமின், உயிரார் அழிவார்" என்றும் உடம்மை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே " என்றும் திருமூலர் கூறினார், எனவே உடலையும் உயிரையும் பேணிக் காக்காவிட்டால் இறைவன் தரிசனம் கிடைக்காது போய்விடும். உடலின் மீது அக்கறை இல்லாதிருத்தல் மற்றும் எதிலும் பற்றுக் கொண்டு அவதியுறுவது போன்ற போக்கினைக் கைவிடுத்து சரியான முறையில் உடலைப் பேணி வளர்க்க வேண்டும். சுவரை வைத்து கொண்டு தானே சித்திரம் எழுத முடியும்? நாம் பெற்ற பேறு இந்த மனிதப் பிறவி , எல்லோரும் பிறந்தனர், இறந்தனர் என்று இல்லாமல் இறைவனை தரிசித்து அவனிடம் சரண்புகுதல் என்பது ஒரு சிலரே பெறும் பெரிய பாக்கியமாகும், நாம் பிறவி எடுத்த நோக்கமே முன் பிறவியில் செய்த பாவச் செயல்களை இப்பிறவில் செய்யும் புண்ணிய செயல்களால் களைவதன் பொருட்டே. எனவே எடுத்த பிறவியினை புண்ணிய காரியங்கள் செய்ய பயன்படுத்தல் வேண்டும். இதனையே அவ்வை " அரிது அரிது மானிடராய் பிறத்தல், அவ்வாறு பிறந்தாக்கால், கூன் செவிடு, குருடு அற்று பிறத்தல் அரிது என்றார், மேற்படி பேறு பெற எல்லாருமு சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனே நல் காரியங்களில் இறங்க வேண்டும். இதற்கு எளிய வழி என்னவென்றால் தக்கதோர் குருவைத் தேடிப்பிடித்தல் வேண்டும். குருவில்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். நம்மை வழிநடத்திச் செல்வ நல்ல குருவால்தான் முடியும் எனவே நல்ல குருவை தேடி சரணடைய வேண்டும். துறவற வாழ்க்கை நடத்தத் தகுதி உள்ளோர் யார்? அவர்கள் அன்றாட வாழ்க்கை எத்தன்மையது போன்ற பலவற்றிக்கு காரணம் காட்டுகிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். "துறவறம் என்ற பகுதியில் பத்து குறள்களில் இரத்தல் இழிவு ஈதல் நன்று, எனினும் இரந்து வாழக்கூடியவர் யார்? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறவே நீக்கியவர், மற்றும் பெண், புகழ், பணம் வெறுத்தவர்களே பிச்சை எடுத்து வாழலாம் , இதனை உஞ்சவிருத்தி என்பர். அடுத்து ஐம்பெரும் பாவம் அகற்றினோர், அதாவது பொடிசெய்தல், அரைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், பெருக்கி தூய்மை செய்தல் அடுப்பு எரித்தல, என்ற ஐந்தும் செய்யாதவர்களும் இரந்து உண்ணலாம், இச்செயல்களால் சிறு புழு பூச்சிகள் அழிவது நடப்பதால் இவை பாவச்செயல்களாக கருதப்படுகிறது. இத்தகைய பாவங்களுக்கு பிராயச் சித்தமாக ஐந்து வகையான தியாகங்களை சாத்திரங்கள் காட்டுகின்றன. அவை 1) பிரம்மயஜ்ஞம், அல்லது வேத அத்யயனம், 2. பித்ரு யஜ்ஞம், 3. தேவ யஜ்ஞம், 4. பூதயஜ்ஞம், 5. மனுஸ்ய அதிதியஜ்ஞம், அதாவது வேதம் ஓதுதல், பெற்றோருக்கு திதி செய்தல், தேவர்களுக்கான வேள்வி , பூதங்களை திருப்திபடுத்துதல் (பலி) விருந்தினரை உபசரித்தல் என்பன. மேற்கண்ட நெறிகளை இல்லறம் நடத்துவோர்க்கு எடுத்துக் காட்டி அவர்கள் செவ்வனே செய்ய வழிகாட்டி உதவுவர் நம் குருமார்கள். எனவே நாம் எடுத்த மானிடப் பிறப்பை நல் குருநாதர் வழிகாட்டுதல மூலம் முற்பிறப்பில் செய்த பாவங்களை அகற்ற இப்பிறவியினை பயன் கொளல் வேண்டும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வெள்ளி, 3 ஜூலை, 2015

பிச்சைக்காரனும் அறிவாளியே


பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில் வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர் என்ன அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து மந்திரியிடம் வேண்டினான். அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான். உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய் வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான், உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன் " ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும் இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன், இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன் என்றான், உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும் ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின் அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம் இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில் இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம் மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே ஒப்படைக்கிறேன் என்றால், அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும் அடையாளம் காண இயலவில்ைல உடனே தன் பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில் எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர், உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று ேநரம் வெயில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும் சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டடினான் இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் . இதனை எவ்வாறு அறிந்தாய் என்று மன்னன் கேட்க அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலுன் உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன் உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக் கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார் சாதமும் வழங்க உத்தரவு இட்டார். சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக் ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே சொந்தம் என்றான். உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம் இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று கூறிவிட்டனா், உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா், உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால் தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான், அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில் நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது. பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான் அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான் சிறந்தது என்றான். எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர், அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள் எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது, மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன் அற்றவர்கள், மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள் தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது என்றான், எனவே பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப் பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும் உணவு கொடுங்கள் என்று பணித்தார், இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான், தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம், மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த கருத்தும்வேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய் என்றான்,. அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க " மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும் உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும் பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு ஆனையிட்டீர்கள்? ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள் ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென அறிந்து கொண்டேன், என்றான், எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான், அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின் அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும். தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும் சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார் அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள் புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத் தேடுகின்றனர். திருசிற்றம்பலம். ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

விஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம்


விஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம் விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும். இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது. வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது. விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம் . இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும் . தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் சிறப்புகள்: இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம். 2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள். 3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள். 4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன் இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் .. விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் ) ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!! அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு நாளை 28.06.2015 திட்கட் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் சிறப்புடன் நடைபெற்றது விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்! ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!! http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com