வெள்ளி, 31 ஜூலை, 2015

பட்டினத்து அடிகள்


பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பன்னிருவராவரில் பட்டினத்து அடிகள் ஒருவராவார். இவர் ஒரு சிறந்த சிவனடியார். இவருடைய குருபூஜை நாள் 30.07,2015 இன்றைய நாளில் அன்னாரின் துறவர வாழ்க்கை பற்றி நாம் சற்று நினைவு ெகாள்வோம். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது. திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர். அவருடன் சென்ற நண்பர்கள் தான் கொண்டு சென்ற செல்வத்தை எல்லாம் செலவழித்து விட்டு மருதவாணர் எருமூட்ைடகளை வாங்கிவந்துள்ளார் என கேலி செய்தனா். ஆனால் அவரின் தந்தையார் அதனை நம்பாமல் மூட்டைகளை பிரித்து பார்த்ததில் அதில வைரமும் தங்கத்தூள்களும் இருப்பதை அறிந்தாா். சில நாட்கள் கழித்து அதுவும் மறைந்து மறுபடியும் எரு மூட்டைகளாக மாறியது.இதனால் கோபம் கொண்ட தந்தையார் மகனை திட்ட அதனால் பற்றற்ற நிலை ெபற்று துறவறம் கொண்ட மருதவாணர் என்ற பட்டிணத்து அடிகளார், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என எழுதிய ஓலையினைக் ெகாண்ட பேழையை தன் தாயிடம் கொடுத்து விட்டு துறவறம் பூண்டார். சிவசமாதி திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார். செல்வந்தராக வாழ்ந்த பட்டிணத்து அடிகள் பாடிய எளிய பாடல்கள் அனைவரையும் மனம்உருக வைக்கும் பாடல்கள் பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால் செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே தனக்கென்று எதுவும் வேண்டுமென்று வைத்துக் கொள்வது இல்லை. ஒரு பாடலில் தனக்கு உடுத்த, வெயில் மழை, குளிருக்கு, பழைய வேட்டி ஒன்று உண்டு, பசித்தபோது உணவு கொடுக்க சிவனுண்டு, உறங்க திண்ணை உண்டு என்று பாடியுள்ளார். பட்டிணத்து அடிகளாரின் பற்றற்ற வாழ்வுக்கு அளவே கிடையாது, ஒரு தடவை அடிகளார், அறுவடை செய்த வயலில் வரப்பில் தலை வைத்து படுத்திருந்தார், அவ்வழியே வந்த பெண்கள் இருவர், அடிகளா்ர் படுத்திருப்பதை முற்றும் துறந்த பின்னும் இன்னும் தன் ெசல்வ செழிப்பில் தூங்குவது ேபால், தலையை வரப்பில் வைத்தல்லவா படுத்துள்ளார் என்றனா், உடனே இதனை கேட்ட அடிகளார், தலையை தரையில் வைத்து படுத்திருந்தார், மீண்டும் இப்ெபண்கள் அவ்வழியே திரும்பி வரும் போது இதனைக் கண்டு, மேலும் அடிகளார், நாம் பேசுவதைத்தானே கவனிததுள்ளார், துறவிக்கு ஏன் நாம் பேசுவதை கேட்டார் என்றனா். அவர்களின் கூற்றையும் அடிகளார் எடுத்துக் கொண்டு பிணம் போல் வாழவேண்டிய இந்த ஊன் உடம்பிற்கு வம்பு பேசுவதை ேகட்பது தவறுதானே என உணர்ந்தார். இதன் பொருட்டு அவரின் பாடல் பட்டினத்தார் கூறுகிறார் கேளுங்கள் ... “”பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத் தாய்போல் கருதி தமர்போல் அனைவருக்குந் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே மேலும் தனது உடம்பை நரி, புழு, கழுகு,மண் திண்பதற்கான புழுத்துப்போகும் உடலை வீணே வளர்ப்பது ஏனோ ? என்கிறார். திருச்சிற்றம்பலம் ேமலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக