செவ்வாய், 21 ஜூலை, 2015

மூர்க்க நாயனார்


நாயன்மார் வரலாறு மூர்க்க நாயனார் சோழ நாடு சோறுடைத்து, ( கோவில்கள் - பக்திநெறி ) பாண்டியநாடு முத்துயுடைத்து,(முத்திபெற்ற சித்தர்கள்) தொன்டை நாடு சான்றோருடைத்து, ( சான்றோர்கள் - சித்தர்கள்) இப்படி சான்றோர்கள் பலர் வாழும் தொண்டை நன்னாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊர் திருவேற்காடு. இவ்வூர் பூவிலிருந்தவல்லியிலிருந்து மூன்று கி,மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் மூர்க்க நாயனார். திருவெண்ணீற்றையும் மெய் பொருளாகக் கருதி தினமும் திருவெண்ணீர் அணிந்து சிவனடியார்கட்கு மிகச் சிறந்த உணவளித்து பின் தான் உண்ணும் குணம் கொண்டு சிவநெறி யை அணிதினமும் சிவனடியார்கள் சேவை செய்து வந்தார். சிவனடியார்கள் சிவமாகவே நினைத்து வணங்கி, இன்னுரை கூறி அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் அமுது செய்விப்பார். இப்படி இவரது செல்வம் யாவும்செலவழிந்தன. நிலம், வீடு, முதலிய யாவும் விற்றாயிற்கு. வறுமை வந்த போதும் தமது குறிக்கோளினின்று நாயனார் மாறவில்லை. தாம் முன்பு கற்றிருந்த சூது ஆட்டத்தில் பொருளீட்டி அடியார்கட்கு அமுதூட்டத் திட்டமமிட்டார். பல ஊர்கட்கு சென்று அங்குள்ள சிவலாயங்களை தொழுவார். அங்கு சூதாடி அதனால் வரும் பொருளை கொண்டு அடியார்கட்கு அன்னம் அளித்து மகிழ்ந்தார். சூதாடுவது பெரும்பாவம் என்று தெரிந்தும், அவர் அதனால் தான் கொண்ட குறிக்கோள் நன்மையானது புண்ணியமானது என்று உணர்ந்து இந்த பாவச்செயலில் கிடைத்த பொருளையும் சிவனடியார்கட்கு அன்னம் அளித்து புண்ணியம் செய்து வந்தார். நாம் சொல்லும் பொய்யினால் ஒரு நன்மை நடக்குமானால் அது உண்மையாகும் என்பதையும் செய்யும்தொழில் பாவத்தொழிலானாலும் அதன் விளைவு நன்மை பயக்குமானால் அதுவும்புண்ணிய செயலே என்று உணர்ந்திருந்தார். தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சூதாடினால் அது தவறே, தான் செய்யும் ஒப்பற்ற சிவபுண்ணியச் செயலுக்காக சூதாடியது புண்ணியமே ஆகும். பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் வழிபபறி செய்து திருமாலயடியார்கட்கு உணவளித்தார். என்ற வரலாற்றையும இத்துடன் வைத்து நாம் எண்ணி பார்க்க வேண்டும். நாயனார் திருக்கடந்தை தலத்தை அடைந்து அங்கே எழுந்தருளியுள்ள பிறைசூடிய பெருமானாரை அளவிலா அன்புடன் வணங்கினார். அத்தலத்தில் பல நாட்கள் தங்கினார். ஈட்டிய பொருளை கொண்டு பணியார்கள் மூலம் சிவனடியார்கட்கு அறுசுவை உணவளித்தார். அடியார்கள் யாவரும் உணவருந்திய பிறகு முடிவில் இவர் உணவு உண்பார். சூதாடியதால் இவர் மூர்க்கர் எனப்பெயர் பெற்றார். குணத்தால் மூர்க்கர் இல்லை. தூய உள்ளமும், இனிமையான சொல்லும், உயர்ந்த செயலும், கொண்டவர். மண்ணில் பிறந்தவர்கள் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தலாகும்.. இத்தகைய மேலான தொண்டினை செய்து முடிவில் சிவபதம் எய்தினார். திருச்சிற்றம்பலம் நன்றி :தமிழ் வேதம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக