சனி, 4 ஜூலை, 2015

மனித்தப் பிறவி வேண்டுவதே .............


மனித்தப் பிறவி வேண்டுவதே ............ மனித்தப் பிறவி வேண்டுவதே ............. "குனித்த புருவமும் கொவ்வாய் செவ்வாய் ............. " என்ற அப்பர் தேவாரப்படாலில் நான்காவது அடியில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே " என்கிறார், இறைவன் படைப்பில் எண்ணற்ற உயிரனங்கள் உள்ளன. மற்றும் தேவர், அசுரர், கந்தர்வர், பித்தியாதரர் போன்ற தேவலோக வாசிகளும் மற்றும் ஈரேழு புவனங்களைச் சார்ந்த பலரும் உள்ளனர், இருப்பினும் எல்லாவற்றிலும் தலைசிறந்தது மானிடப்பிறவியே என்பது பெரியோர் அறிந்த முடிவு. ஒவ்வொர் உயிரும் பிறப்பு, இறப்பு, என்ற சுழலில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு பிறவியிலும், ஆத்மா அந்த உடலின் செயல்களுக்கு ஏற்ப சுவர்க்கம் அல்லது நரகத்தை அடைகின்றது, எனினும் எல்லா உயிர்களுக்கும் உண்ணல், உறங்கல், சுகபோகம், இனப்பெருக்கம் என்ற ஆசைகள் உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும் இவற்றுடன் பகுத்தறிதல் என்ற ஒப்பற்ற சிறப்பு ஆற்றலை இறைவன் அளித்துள்ளான். எனவே மனிதப் பிறவியில் மட்டுமே ஞானத்தின் துணைகொண்டு நன்மை, தீமை, புண்ணியம் பாவம் என்பவற்றை உயர்த்துணர்ந்து இறைவனை அடையும் முயற்சி செய்ய இயலும். வெற்றி காணவும் முடியும். இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்பது மனிதனால் மட்டுமே முடியும். என்பதாலேயே மனிதப் பிறவியில் அவசியத்தை அப்பர் பெருமான் வலியுறுத்தியிருக்கிறார் இந்த பாடல் மூலம். உடலைப் பேணுதல்: இப்படி பெற்றெடுத்த உடலையும், உயிரையும் நன்கு பாதுகாக்க வேண்டும், இந்த உடல் எலும்பும், தோலும் ரத்தமும், சீழும் சளியும், கலந்த ஒரு கலப்படமான கூட்டமைப்பு. முன்னது மூன்றும் உயிர் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதவை. பின்னது இரண்டும் தவிர்க்க முடியாதவை. அத்துடன் நேர் மாறான பலனைத் தருபவை. இடுக்கண்களிலிருந்து விடுபட வேண்டுமெனில் உள்ளக்கோவிலில் இறைவனை இருத்தி,, அவனை உயிருக்கு உயிராக உணர்ந்து வீடுபேற்றினை அடைய முடியும். எனவே தான் " உடம்பார் அழிமின், உயிரார் அழிவார்" என்றும் உடம்மை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே " என்றும் திருமூலர் கூறினார், எனவே உடலையும் உயிரையும் பேணிக் காக்காவிட்டால் இறைவன் தரிசனம் கிடைக்காது போய்விடும். உடலின் மீது அக்கறை இல்லாதிருத்தல் மற்றும் எதிலும் பற்றுக் கொண்டு அவதியுறுவது போன்ற போக்கினைக் கைவிடுத்து சரியான முறையில் உடலைப் பேணி வளர்க்க வேண்டும். சுவரை வைத்து கொண்டு தானே சித்திரம் எழுத முடியும்? நாம் பெற்ற பேறு இந்த மனிதப் பிறவி , எல்லோரும் பிறந்தனர், இறந்தனர் என்று இல்லாமல் இறைவனை தரிசித்து அவனிடம் சரண்புகுதல் என்பது ஒரு சிலரே பெறும் பெரிய பாக்கியமாகும், நாம் பிறவி எடுத்த நோக்கமே முன் பிறவியில் செய்த பாவச் செயல்களை இப்பிறவில் செய்யும் புண்ணிய செயல்களால் களைவதன் பொருட்டே. எனவே எடுத்த பிறவியினை புண்ணிய காரியங்கள் செய்ய பயன்படுத்தல் வேண்டும். இதனையே அவ்வை " அரிது அரிது மானிடராய் பிறத்தல், அவ்வாறு பிறந்தாக்கால், கூன் செவிடு, குருடு அற்று பிறத்தல் அரிது என்றார், மேற்படி பேறு பெற எல்லாருமு சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனே நல் காரியங்களில் இறங்க வேண்டும். இதற்கு எளிய வழி என்னவென்றால் தக்கதோர் குருவைத் தேடிப்பிடித்தல் வேண்டும். குருவில்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். நம்மை வழிநடத்திச் செல்வ நல்ல குருவால்தான் முடியும் எனவே நல்ல குருவை தேடி சரணடைய வேண்டும். துறவற வாழ்க்கை நடத்தத் தகுதி உள்ளோர் யார்? அவர்கள் அன்றாட வாழ்க்கை எத்தன்மையது போன்ற பலவற்றிக்கு காரணம் காட்டுகிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். "துறவறம் என்ற பகுதியில் பத்து குறள்களில் இரத்தல் இழிவு ஈதல் நன்று, எனினும் இரந்து வாழக்கூடியவர் யார்? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறவே நீக்கியவர், மற்றும் பெண், புகழ், பணம் வெறுத்தவர்களே பிச்சை எடுத்து வாழலாம் , இதனை உஞ்சவிருத்தி என்பர். அடுத்து ஐம்பெரும் பாவம் அகற்றினோர், அதாவது பொடிசெய்தல், அரைத்தல், பாத்திரங்கள் கழுவுதல், பெருக்கி தூய்மை செய்தல் அடுப்பு எரித்தல, என்ற ஐந்தும் செய்யாதவர்களும் இரந்து உண்ணலாம், இச்செயல்களால் சிறு புழு பூச்சிகள் அழிவது நடப்பதால் இவை பாவச்செயல்களாக கருதப்படுகிறது. இத்தகைய பாவங்களுக்கு பிராயச் சித்தமாக ஐந்து வகையான தியாகங்களை சாத்திரங்கள் காட்டுகின்றன. அவை 1) பிரம்மயஜ்ஞம், அல்லது வேத அத்யயனம், 2. பித்ரு யஜ்ஞம், 3. தேவ யஜ்ஞம், 4. பூதயஜ்ஞம், 5. மனுஸ்ய அதிதியஜ்ஞம், அதாவது வேதம் ஓதுதல், பெற்றோருக்கு திதி செய்தல், தேவர்களுக்கான வேள்வி , பூதங்களை திருப்திபடுத்துதல் (பலி) விருந்தினரை உபசரித்தல் என்பன. மேற்கண்ட நெறிகளை இல்லறம் நடத்துவோர்க்கு எடுத்துக் காட்டி அவர்கள் செவ்வனே செய்ய வழிகாட்டி உதவுவர் நம் குருமார்கள். எனவே நாம் எடுத்த மானிடப் பிறப்பை நல் குருநாதர் வழிகாட்டுதல மூலம் முற்பிறப்பில் செய்த பாவங்களை அகற்ற இப்பிறவியினை பயன் கொளல் வேண்டும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக