செவ்வாய், 28 ஜூலை, 2015

ரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே !


பரவுவார் (வணங்குபவர்) உலகில் அரசராவாரே ! மூன்று வயதில் ஞானப்பாலூட்டப்பெற்ற திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுதுகுன்றத்து இறைவரை வணங்கி பாடியருளிய ஒரு பதிகத்தின் பொருளை இக்கட்டுரையில் காணலாம். 1, சிவபரம்பொருளைப் போற்றி வணங்குபவரகள் உலகினில் அரசர் ஆவர்,( எல்லோரும் நாட்டிற்கு அரசர் ஆக முடியுமா? என நினைக்காலாம், அவரரவர் சிவனை வணங்கினால் அரசர் போன்ற அதிகாரத்தினையும், நல்ல செல்வத்தினையும் தமது வீட்டிலேயே அடையாலம் என்பது தான் இதன் உட்கருத்து. அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப அரசபோகத்துடன், வாழலாம், பெரிய அழகான வீடு, தேவையான வேலையாட்கள், பொன் விளையும் பூமி, வாகனங்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து, இராசபோக வாழ்க்கை என்பன பெறுவர் என்பது தான் இதன் உட்பொருள்) "பரசுஅமர் படையுடையீர் உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே." தமிழ் திருமுறை 3,பதிகம் 99 பரசு என்னும் ஆயுதத்தை உடைய சிவபெருமானாரே! உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர் ஆவர். 2, நாள்தோறும் நன்மைகளையே பெறுவர் " பையரவம் அசைத்தீர் உமைப் பாடுவார் நைவிலர் நாள்தொறும் நலமே " திருமுறை 3 -பதி 99 பாம்பைக் கச்சாசையாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானாரே! தங்களைத் தீந்தமிழ் பாடல்களால் பாடி வணங்குபவர் எவ்வித குறையும் இலாதவர் (நைவிலர்) நாள்தொறும் நன்மைகளையே பெறுவர். 3. பழியும், பாவமும், இல்லாதவர் ஆவர் "மழவிடை யதுவுடையீர் உமை வாழ்த்துவார் பழியொடு பகையிலர் தாமே". இளமை வாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட தங்களை வாயார வாழ்த்துபவர்கள், பழியும், பாவமும் இல்லாதவர் ஆவர். 4. செல்வமும், புகழும் உடையவர் ஆவர் "உருவமர் சடைமுடியீர் உமை ஓதுவார் திருவொடு தேசினர் தாமே" அழகு பொருந்திய சடைமுடியினை உடையவரே தங்களைப் போற்றி செய்து வணங்குபவர்கள் செல்வமும், புகழும் பெறுவர். 5. உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெறுவர் " பத்து முடியடர்த்தீர் உமைப்பாடுவார் சித்த நல்லவ் அடியாரே" இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெறித்த தங்களைப்பாடி வணங்குவோர் உயர்ந்த உள்ளம் படைத்த அடியார் ஆவார்கள். 6. முத்தியும், பெறுவர் "கட்டமண் தேரைக் காய்ந்தீர் உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே" சமணர்களையும், புத்தர்களையும் அடக்கியருளிய தங்களை உள்ளத்தில் வைத்து தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுவதற்குரிய முத்திப் பேற்றினையும் பெறுவார்கள். சிவபெருமானாரை வாயினால் பாடி, மனத்தினால் தியானித்தால் இம்மையில் எல்லா நலன்களையும் பெற்று, இறுதியில் முத்தியும் அடையலாம் என்பது திண்ணம் இது சிவனருள் பெற்று ஞானப்பால் உண்ட சம்பந்தர் திருவாக்கு. நாமும் வாயாரப் பாடி, மனதார நினைந்து சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம் நன்றி தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக