சோமசிமாறர் - Soamasi Maarar
(குரு பூசை வைகாசி - ஆயிலியம் (10/06/2016) வெள்ளிக்கிழமை)
சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
சோழமண்டலத்திலே, திருவம்பரிலே, பிராமணகுலத்திலே சோமாசிமாறநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபித்தலை நித்திய நியமமெனக் கொண்டவர் எந்தக் குலத்தினராயினும், எந்தக் குணத்தினராயினும், பரமசிவன் மேல் அன்புடையவர்களாயின், அவர்களே நம்மை ஆள்பவர் என்னும் மெய்யறிவினையுடையவர் அவ்வன்பர்கள் தம்முடைய வீட்டுக்கு எழுந்தருளிவந்தால், அவர்களை எதிர் கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். பரமசிவனுக்குப்பிரீதியாகிய யாகங்களை, புகழ் பயன் முதலியன கருதாது நிஷ்காமியாக வேதவிதிப்படி செய்பவர், அவர் திருவாரூரிற் சென்று, சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து, அவருடைய திருவடிகளிலே பக்தி பண்ணி, அதனாலே சிவபதத்தைப் பெற்றார்.
திருச்சிற்றம்பலம்.
நன்றி ; சைவம் ,காம்
தொகுப்பு வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக