புதன், 22 ஜூன், 2016

கடும் முழங்கால் வலியினை முறியடித்த முறை


கடும் முழங்கால் வலியினை முறியடித்த முறை


..............................................................................................கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு எனது இரு முழங்கால்களிலும் சிறு வலி ஆரம்பித்தவுடன் சரி இது இறகு பந்து விளையாடும் போது தவறாக கால்களை பயன்படுத்தியபோது ஏற்பட்டதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.
............................................நாட்கள் கடந்தன.
...........................................வலியும் அதிகமானது. 
..........................................சரி. இருபத்துஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக புல்லட் இருசக்கர வாகனத்தினை இயக்கியதன் பின் விளைவுதான் என்று தினசரி செல்லும் இறகு பந்து விளையாட்டிற்கு ஒருமாதம் விடுமுறை விட்டு காலையில் நடைப்பயிற்சி மேற் கொண்டேன். ........................................
.வலி இன்னும் அதிகமானது.
தினசரி நடைப்பயிற்சியையும் நிறுத்தி விட்டேன். 
..........................................வலி இன்னும் கூடுதலானது. சரி மீண்டும்இறகு பந்து விளையாடும்போது சரியாகிவிடும் என்று மீண்டும் களம் இறங்கி ஒரு மாதம் ஆகியும் விளைவு மோசமானதுதான் மிச்சம். மேலும் கடும்வலியுடன் இரு மாதங்கள் கடந்தன. சாதாரணமாக நடந்து செல்லும்போதே நடை ஒரு மாதிரி இருக்கிறதே என்று அனைவரும் கேட்குமளவிற்கு நிலைமை மோசமானது. கோவை கங்கா ஆஸ்பத்திரி செல்லலாம் என்று மனதில் ஒரு எண்ணம். ஆனால் என்னஆனாலும் அலோபதி மருத்துவம் நோக்கி செல்லக்கூடாது என்று ஒரு வைராக்கியம். சிறு நீரக பிரச்சனையை விலைக்கு வாங்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.
........................................................................................................................................................அதற்கு முன்னரே எனது தோட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு வளர்ந்து முதிர்ந்திருந்த சில அமுக்கிரா செடிகளை (Withania somnifera ) வேருடன் பிடுங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் வேர்களை மட்டும் பிரித்தெடுத்து தொடர்ந்து பல நாட்கள் காயவைத்திருந்தேன். 
ஒரு கட்டத்தில் மிகுந்த மதிப்புள்ள அவ்வேர்கள் வீணடிக்கப்பட்டுவிடுமே என்ற நிலையில் தேவையறியாமல் அவற்றினை பொடியாக்கி பவுடாக்கி ஒரு பாட்டிலில் சேமித்திருந்தேன். 
........................................ஒருநாள் தன்னிச்சையாக இணையத்தில் அமுக்கிரா வேர்களுக்கு முழங்கால் வலியை போக்கும் தன்மையுள்ளது என்று அறிந்து அன்றிலிருந்து என்னிடம் இருப்பிலிருந்த அமுக்கிரா வேர் பவுடரை தினசரி அரை ஸ்பூன் மட்டும் வாயில் போட்டு தண்ணீர் குடித்து கொப்பளித்து விழுங்கி விடுவேன். 
இதனை ஆரம்பித்து நான்கு தினங்கள் கழித்து ஒரு நல்ல நிவாரணம் இருப்பதுபோல தெளிவு தென்பட்டது. 
அதன் பின்னர் மற்றும் ஒரு நிகழ்வு. மீண்டும் தற்செயலாக ஒரு நாள் டெக்கான் குரோனிக்கல் தினசரியில்அமுக்கிரா வேர் பவுடரினால் முழங்கால் வலி நிவாரணம் அடைந்த ஆராய்ச்சி விபரம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. 
உற்சாகம் அடைந்து அமுக்கிரா வேர் பவுடரின் தினசரி அளவு ஒரு ஸ்பூனாக அதிகரிக்கப்பட்டது. 
ஒரளவிற்கு வலி கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. 
..............................அலுவலக பணியாக கொல்லிமலை அடர்காட்டின் வழியாக சென்றபோது பாறையில் படர்ந்திருந்த முடவாட்டுக்கால் கிழங்கினை(Drynaria
quercifolia)( முடவாட்டுக்கால் கிழங்கு நடமாட முடியாத முடவனையும் நடக்கவைக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு) எடுத்து வந்து சுத்தம் செய்து பவுடராக்கி கூடுதலாக இதனையும் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினேன். 
...................................................................ஒரே மாதத்தில் முழங்கால் வலி இருந்த இடம் காணாமல் போய் விட்டது. அதன் பின் மேற்கண்ட இரு பவுடர்களும் தேவையான அளவு இருப்பில் இருந்தாலும் அதனை தற்சமயம் எடுத்துக் கொள்வதில்லை. 
.........................................என்னதான் தினசரி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும் வயது 54 ஆகி விட்டபடியால் அது தன் வேலையைக் எனது உடலில் காட்டஆரம்பித்திருந்தது. 
அதாவது உடலில் பிடிப்புகள்/ மூட்டுகளில் லேசான இனம் காணாத வலிகள் என்ற வகையில். 
................................................................................ஆனால் மேற்கண்ட இரு இயற்கை மூலிகைகளும் இலவச இணைப்பாக அந்தப் பிரச்சனைகளையும் சேர்த்தே தீர்த்து விட்டன. அதன் பின்பு அதிக முழங்கால் வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு எனது அனுபவத்தை தெரிவித்தேன். சித்த மருத்துவ கடையில் அமுக்கிரா வேர் கிடைத்தாலும் விலை மற்றும் தரம் பிரச்சனையாக இருப்பதாக தகவல் கிடைத்தது. 
மழைக்காலம் முடிந்தவுடன் என்னிடம் இருப்பில் இருந்த விதைகளை நாற்று விட்டுள்ளேன். கொல்லிமலையில் காலம் காலமாக கடும் உழைப்பினைத் தந்து தனதுவாழ்வின் இறுதி காலத்தில் கடும் முழங்கால் வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு அதன் செடிகளைத் தருவதாக உத்தேசம். 
.........................................................................................................................கொல்லிமலையில் அமுக்கிரா செடியே இல்லாததால் அதனை சில கிராமங்களில் பரப்பிவிட்டால் அது எதிர்காலத்தில் அந்த அப்பாவிகளுக்கு உறுதுணையாக இருக்குமே என்ற ஒரு எண்ணம்தான் .

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக