அண்ணாமலையார் முன் நின்று ஓதி நலம் பெற
உதவும் பாடல்
திருநாவுக்கரசர் சுவாமிகள் பாடியது தி,மு. 4
" பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால் வெண்ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலை யுளானே
எம்பொனே உன்னை அல்லால்
ஏதும் நான் நினைவி லேனே. "
பொருள் ; பசும் பொன்னே! பவளமலையே ! முழு முதற் பொருளே ! பால் போன்ற வெண்ணீற்றை அணிந்தவரே ! செம்பொன்னே ! மலர் போன்ற திருவடிகளை உடையவரே ! சிறந்த மாணிக்கமும் அழகிய பொன்னும் அருவிகளால் ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் எழுந்தருளியுள்ள பொன்போன்றவரே ! தங்களைத் தவிர வேறு ஒன்றையும் நினையாதவனாக உள்ளேன்.
குறிப்பு ;முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபுரம் பொருளையன்றி வேறு ஒரு தெய்வத்தை மனதால் நினையாத நிலையை அளிக்கும் பாடல் இப்பாடல். அன்றாடம் ஓதி நலம் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம்
" அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி !!
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக