புதன், 22 ஜூன், 2016

துயரத்தை துடைத்து போடலாம்

துயரத்தை துடைத்து போடலாம்

   எனக்கு மட்டும் துன்பம் ஏன்? என்று நினைப்பது தவறானது. மனிதர்களில் ஒவ்வொருக்கும் ஏதாவதொரு கவலை, துன்பம், இருக்கிறது. இன்பம் கடவுள் கொடுத்தது என்றால் துன்பமும் கடவுள் கொடுத்தது என்று நினைத்து பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? " நீ சிரிக்கும் போது கடவுளை நினைத்தால் , நீ ஆழும்போது கடவுள் உன்னை நினைப்பார்." என்ற நம்பிக்கையில் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை துரத்துங்கள். நாம் அனுபவிக்கும் துன்பம் நம் ஆத்மாவில் சேர்ந்திருக்கும் பாவ அழுக்கை நீக்கும் சோப்பாகும். நாம் வாழும் காலம் கொஞ்சம், அந்த கொஞ்ச வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். நாம் மறைந்த பின்னர் நம்மோடு வருவது காசு பணம், தங்க நகை அல்ல. உற்றார் உறவினர் அல்லர். கூட வருவது நாம் சம்பாதித்த பாவமும் புண்ணியமும் தான், இதையே பட்டிணத்தார்

ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல,உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல , பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்லஞ் சதமல்ல,தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே

மேலும் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்கிறார்.

இந்த ஞானத்தை மனதில் நிரப்புங்கள். துன்பம் தூரப்போகும். அல்லது அதை தாங்கிக் கொள்ளும் மன உறுதியாவது கிடைக்கும். எதையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதியானது கிடைக்கும் எதையும் அடைந்தே தீர்வது என்று விடாப்பிடியாக இருக்காதீர்கள். சிலர் பணம், பதவி அதிகாரம், சொத்து சுகம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். பணம் பதவி சொத்து புகழ் இப்படி ஒவ்வொன்றும் பெற்றவுடன் ஆனவம் தலைக்கு ஏறுகிறது. ஆனவம் துன்பத்தை கூட்டி வருகிறது. பணமே இல்லை என்றாலும் துன்பம் தான். அளவுக்கு மீறி பணம் இருப்பதும் துன்பம் தான். பட்டினியும் துன்பம் தான், துன்பம் அதிகமானால் உணவு துன்பம், ஆக அளவோடு இருப்பதுதான் ஆனந்தம்.
இந்த உண்மை உணர்ந்த மனது எந்த நிலையிலும் தடுமாறுவதில்லை. சலனம் சபலங்களுக்கு அலை பாயும் மனதை கட்டிப்போடுங்கள். துன்பத்தின் கடிவாளம் உங்கள் கைகளில் வந்து விடும். 
             எல்லாம் எனக்கே என்று ஆசை கொண்ட ஒருவன் இறுதியில் துன்பத்தில் துவண்டு மலை மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள சென்றான். அவன் தலைக்கு மேலே வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டை கவ்வியவாறே வேகமாக பறந்தது. அந்தப் பருந்திடமிருந்து இறைச்சியை கைப்பற்றுவதற்காக பல பறவைகள் அப்பருந்தினை தாக்கியபடி பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் மற்ற பறவைகளின் தாக்குதலின்றி தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறைச்சி துண்டை கீழே நழுவ விட்டது. உடனே இன்னொரு பறவை அதனை கவ்விக் கொண்டது. உடனே எல்லா பறவைகளும் பருந்தைத் தாக்குவதையும் பின் தொடர்வதையும் விட்டுவிட்டு இறைச்சிக் கவ்விக் கொண்ட பறவையை தாக்க முயன்றன. மீண்டும் விண்ணிலே பறவைகளின்  சண்டை இறைச்சியைக் கவ்விய பறவையின் மீது பாய்ந்தன. இறைச்சியை நழுவ விட்ட பருந்தோ நிம்மதியாக பறந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்தவனுக்கு மனதில் ஒரு ஞானம் பிறந்தது. இறைச்சித் துண்டைப் பற்றியிருந்ததால் தாக்கப்பட்ட பறவைகள் போல உலகப் பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம்அதிகமாக தாக்குகிறது. இறைச்சியை விட்டு விடட பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலக சுகங்களை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகிறார்கள். எப்போதும் அவர்களை துன்பம் துரத்துவது இல்லை. 
துன்பம் என்று சொல்பவர்கள் எல்லாம் இறைச்சி துண்டை கவ்வியிருக்கும பருந்து போலத்தான் துன்பம் அடைவர். இறைச்சி துண்டை விடுவதற்று மனசு இருந்தால் போதும் துன்பம் ஒருபோது அணுகா.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக