சனி, 25 ஜூன், 2016

மூன்று வகை பக்தி

மூன்று வகை பக்தி



நீரளவே நீராம்பல் என்பது பழமொழி , இது பக்திக்கும் பொருந்தும். எல்லோரும் தான் இறைவனை வழிபடுகிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியகவா அருள்கிடைக்கிறது? ஒரே மாதிரியாகவா ஞானம் கிடைக்கிறது? இல்லை. ஏன்? அவரவர் வழிபாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தே இறைவனுக்கும் பக்தனுக்கும் ஏற்ப பிராத்தனையின் வீரியமும் நோக்கமும் வித்தியாசப்படுகிறது.

இறைவனை மனிதன் வழிபடும் வகை மூன்று நிலையில் இருக்கிறது, அவை உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்த பக்தி.

மந்த பக்தி என்பது இறைவனிடம் பூரண நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அல்லது சந்தேகத்திற்கு உரிய நிலை, அதாவது ஏனோ தான என்ற நிலை என்பர், அதாவது ஏதோ கும்பிட்டு வைப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று ஒருவர் வழிபடும் வகைதான், அவர் இறைவன் மீது வைத்திருக்கும் மந்த பக்தி. அவர் இறைவர் மீது வைத்திருக்கும் பத்தி நம்பிக்கை அற்றது. இது இப்படியும் இருக்கலாம். தனக்கு எப்போது இறைவன் துணை தேவைப்படுகிறதோ, அப்போது வழிபாடு செய்தல், பிடித்த தோசங்கள், சங்கடங்கள் நீங்கவேண்டும் என்பதற்காகவோ ஏதாவது ஆசைப்பட்ட பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, உடல் ஆரோக்கியம் பெற, செல்லம் பெற, கடன் பிரச்சனைகள் தீர, என்பதற்காக வழிபாடு செய்வது "மந்த பக்தி " இது பக்தி யே இல்லை என்பர் இது சுயநலம் கொண்டது என்பர்.

" மத்யம பக்தி " என்பது மந்த பக்திக்கு சற்று முன்னேறிய நிலை, இந்நிலையில் பக்தன் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ பொருட்கள் வேண்டுமென்றோ வழிபடுவதில்லை, தான் முக்தி அடைய வேண்டும். ஞானம் பெற வேண்டும் பிறவி பயன் அடைய வேண்டும் தன்னுடைய பிராத்தனை எல்லாம் இறைவனை அடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கும். இந்த வகை பக்தியில் இவ்வுலக வாழ்க்கை பற்றி ஆசைகள் பிராத்தனையாக இருக்காது. எனவே இந்த நிலைக்கு "மத்யம பக்தி" என்று பெயர்,
மூன்றாவதாக உத்தம பக்தி என்பது உயர்ந்த பக்தி, எல்லோருக்கும் கிடைத்துவிடாத பக்தி, பெருமை பெற்றது. இந்த உத்தம பக்தி செய்பவர்கள் இறைநிலையை ஒத்த ஞானிகள், சித்தர்கள், ஆவர். இவர்கள் தான் வேறு, இறைவன் வேறு என்று இருப்பதில்லை , இறைவனும் பக்தனும் ஒன்றிவிட்ட பேரானந்த நிலை , உத்தம பக்தியின் நிலையில் இருக்கும் ஞானி வழிபாடு செய்கிறார் , ஆனால் எதையும் வேண்டுவது இல்லை. எனவே அவர் செய்கின்ற வழிபாடு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இந்த வகை உத்தம பக்தி செலுத்தும் பக்தன் தானும் ஒருநிலையில் இறைவனாகி விடுகிறான். நாம் மந்தபக்தியில் இருந்து கொண்டே மத்யம பக்திக்கு முன்னேறுவோம், "அவன் அருளாளே அவன் தாள் வணங்கி" என்ற மாணிக்க வாசகர் கூற்றை ஏற்று உயர்வான உத்தம பக்தி க்கு நம்மை யும் இறைவன் அவன் அடிசேர அழைத்துக்கொள்வான்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி: பிரட்டிலிப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக