புதன், 22 ஜூன், 2016

சிவ ஞானியார் - அரதத்தர்

இன்றைக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் , காவிரியின் வடகரையில் அமைந்துள்ள கஞ்சனூர் என்னும் பாடல் பெற்ற இத்தலத்தில் வைணவர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் தலைவராக ( ஆசாரியாராக) திகழ்ந்தவர் வாசுதேவர் எனும் அந்தணர். இவருக்கு மகனாக அவதரித்தவர் அரதத்தர்.
வைணவர்களின் விருப்படியே கஞ்சனூரில் உள்ள வரதராசப்பெருமாள் சன்னதியில் தீக்குழி உண்டாக்கி , அதில் இரும்பு முக்காலியை இட்டு பழுக்க காய்ச்சினார்கள். இந்த முக்காலியின் மீது அமர்ந்து " சிவமே முழுமுதற் தெய்வம் " ( சிவமே பரம் பொருள்) என்ற அரதத்தர் மூன்று முறை கூறினார். தீக்குழியும் இரும்பு முக்காலியும்தாமரை மலர்போல குளிர்ச்சியாயிருந்தன. அரத்தருக்கு வைணவர்கள் அனைவரும் சைவரானார்கள். இத்தகைய சிவனருட் செல்வரின் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை தொடர்ந்து காண்போம்.

1. சிவபூசைக்குரிய தண்ணீரை நாய்க்கு அளித்தது.
அன்றாடம் அரதத்தர் வீட்டில் சிவலிங்கம் வைத்து அபிசேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதனைக் கண்டு வணங்குவதற்கு பலர் வருவார்கள். ஒரு நாள் அரதத்தர் சிவபூசை செய்து கொண்டிருந்தார் அச்சமயம் ஒரு நாய்க்குட்டி அவ்விடத்தில் வந்து தண்ணீர் தாகத்திற்கு நாக்கை நீட்டியது. அரதத்தர் அபிசேக நீரை நாக்கில் விட்டார். நாய்க்குட்டியும் சென்று விட்டது. மீதமிருந்த நீரைத் சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். பூசை முடிந்த பிறகு அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் " ஐயா நாய் அருந்திய மிகுதி நீரை அபிசேகம் செய்யலாமா? " எனக்கேட்டார். 
" இங்பே நாய் வடிவில் வந்தது சிவபெருமானார். நான் சிவபெருமானாரைக் கண்டேன், தாங்கள் நாயைக் கண்டீர் " என்றார் அரதத்தர். அந்த அன்பருக்கு சந்தேகம் தீரவில்லை.
அரதத்தர் " சிவா வருக " என அழைத்தார், முன்பு வந் நாய்க்குட்டி வந்தது. அதன் மீது அரதத்தர் சிவாயநம என்று சொல்லியவாறு தண்ணீரைத் தெளித்தார். அது சிறிய சிவலிங்கமாக மாறியது. அந்தசிவலிங்கத்தைச் சந்தேகப்பட்ட அன்பரிடம் கொடுத்து " நாள்தோறும் பூசை செய்து வருக " எனக் கூறினார்.

2. ஒரு ஏழை அந்தணரின் வறுமை நீக்கியது

கஞ்சனூரில் சதாவிவம் என்ற புரோகிதர் மிகவும் வறுமையில் வாழந்து வந்தார். ஒரு சிறந்த சிவனடியாருக்கு ஒருவேளை உணவு அளித்தால் அவருடைய வறுமை தீரும் என்று சான்றோர்கள் சொன்னது அவர் மனதில் பதிந்து ஒன்று.
அரதத்தரே சிறந்த சிவபக்தர் என்று முடிவு செய்தார். சதாசிவம் அவர்கள் ஒரு நாள் அரதத்தரைத் தம் வீட்டிற்கு அழைத்து உணவு அளித்து மகிழ்ந்தார். அரதத்தரும் நெஞ்சார அவரை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
அன்று இரவு சோழ மன்னன் கனவில் சிவபெருமானார் தோன்றி " அன்பனே கஞ்சனூரில் உள்ள புரோகிதர் சதாசிவத்திற்கு அரிசி, ஆடை, பணம் ஆகியவற்றை வேண்டி அளவு அனுப்பி வை " என்று அருளி மறைந்தார்.
மறுநாள் சோழ மன்னன் கஞ்சனூர் புரோகிதர் சதாசிவத்திற்கு நிறைப் பொருள் உணவுப் பொருட்களையும் புத்தாடைகளுடன் அனுப்பி வைத்தார். ( அடியாருக்கு அளித்து ஆண்டவன் அருள் கிடைத்தது)
" நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் பகவதற்கு அது ஆமே " திருமந்திரம்

திருச்சிற்றம்பல்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக