வியாழன், 23 ஜூன், 2016

வெளிச்சத்தில் தேடுங்கள் - கடவுளைக் காண ஞானம் வேண்டும் -

வெளிச்சத்தில் தேடுங்கள் 
- கடவுளைக் காண ஞானம் வேண்டும் -

கடவுள் எங்கும் இருக்கிறார், நம் கண்ணுக்கு தெரிவில்லை, அதற்காக கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. நம் கண்ணுக்கு புலப்படவிலலை என்பதால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.
இருட்டில் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரிவதில்லை. வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம். இருட்டு நம் அஞ்ஞானம் பொருள் என்பது கடவுள்.
வெளிச்சம் தான் ஞானம். அஞ்ஞானம் என்ற இருட்டை , ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால் கடவுள் என்ற பொருளைக் காணலாம். கடவுள் எங்கும் இருக்கிறார். எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும். அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும் எதிலும் எங்கும் கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை புரிந்து விட்டால் கடவுளை எந்த ரூபத்திலும் காணலாம். இதனை விளக்குவதே இரணியன் - பிரகலாதன் வரலாறு. பிரகலாதன் உறுதியே கடவுளை வரவழைத்தது இரணியன் சம்காரம் ஆனது.


 
குருகுலத்தில் ஒரு சீடன் தன் குருவிடம் பகவானை தான் காணவேண்டும் அதற்கு ஒரு உபாயம் உண்டா? என்று வினவினான். அதற்கு குருநாதர் அந்த சீடனிடம் ஒரு தாரக மந்திரத்தை உபதேசித்து , நாளும் பொழுதும் இதை ஜெபிக்க கூறினார். இந்த தாரக மந்திரம் நிச்சயம் பகவானை காட்டினால் அதை தியானிக்க இப்போதே இதனை ஜெபிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொன்னான் சீடன். நிச்சியமாக பகவானை பார்க்க முடியுமா? என்று மேலும் கேட்க , அதற்கு குரு நிச்சயம் வருவார் ஆனால் இந்த தாரக மந்திரத்தை ஜெபிப்பவரிடம் பகவானை பகவான் தான் என்று கண்டு கொள்ளும் ஞானம் இருக்க வேண்டும். அதனைப் பொருத்தே கடவுள் உனக்கு புலப்படுவார் என்றார். சீடன் உடனே மந்திரத்தை துதிக்க தொடங்கினான். மாதங்கள் ஓடின, ஒரு தினத்தன்று, பகவான் இன்று வரவேண்டும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டு தியானித்தான். பகவான் வருவார் என்ற பூர்ண நம்பிககையோடு காத்திருந்தான். வீட்டில் ஆச்சாரத்தோடு, தடபுடலாக விருந்து தயார் செய்தான். 
அவ்வேளையில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் குரல் கேட்டது. என்ன என்று முதியவரிடம் கேட்டான். அதற்கு வந்திருந்த முதியவர் " தம்பி பசிக்கிறது " என்றார் . அதற்கு சீடன் கொஞ்சம் பொறு, பகவான் என் வீட்டுக்கு வருகிறார். அவர் சாப்பிட்டதும் உனக்கு விருந்து தருகிறேன். என்றான். நேரம் ஓடியது. முதியவர் பொறுத்து பொறுத்து பார்த்தார் , தம்பி என்னால் பசி தாங்க முடியவில்லை, நான் வேறு வீட்டிற்கு சென்று உணவு வாங்கிக் கொள்கிறேன். என்று கூறி கிளம்பி விட்டார்.
இரவு வந்தது. பகவான் வரவே இல்லை , என்ற ஏக்கத்தில் குருநாதரிடம் சென்று நடந்த நிகழ்வுகளை கூறி புலம்பினான். அதற்கு குருநாதர் சிரித்துக் கொண்டே " பகவான்உன் வீட்டிற்கு வந்தார், சாப்பிட ஆசையாக இருந்தார். நீ தான் அதை புரிந்து கொள்ளாமல் அவரை கண்டு கொள்ளவே இல்லை. கால் கடுக்க நின்று பார்த்து விட்டு என் வீட்டிற்கு வந்தார் இங்கு சாப்பிட்டு விட்டு போய் விட்டார் என்றார். அப்படியா? என்று வியந்த சீடனிடம் பகவான் உன் வீட்டிக்கு ஒரு முதியவாராக வந்தார். நீ அவர்தான்பகவான் என்று நம்ப - உணர முடியவில்லை அதனால் நீ ஏமாந்து விட்டாய் என்றார் குரு.
பகவான் எப்படி வருவார் அதை அறிய ஞானம் வேண்டும் என்பதை அறிந்தான் சீடன்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக