திங்கள், 3 ஏப்ரல், 2017

ஆற்றா இன்பம் ... போற்றா ஆக்கை...

ஆற்றா இன்பம் ...
போற்றா ஆக்கை...


மாணிக்கவாசகரின் திருஅண்டப்பகுதி சிந்தனைகள்

பாண்டிய நாட்டில் மந்திரியாக இருந்த மாணிக்கவாசகர் பரி வாங்கச் சென்றவர் திருப்பெருந்துறையில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்த போது ஞானாசிரியரான சிவபெருமானின் திருவளைப் பெற்ற பின்னர் கிடைத்த இன்பத்தை கிட்டா கனியாக எண்ணி ஆற்ற இன்பம் என்கிறார்,
" ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப்
போற்றா ஆக்கையைப் மாமணிப் பிறக்கம்
மின் ஒளி குகாஅல் மாமணிப் பிறக்கம்
திசைமுகன் சென்று தேடினார்க்கு ஒளித்தும் "


அதாவது தாம் ஏற்றக் கொள்கின்ற அளவிற்கு மேற்பட்டுஅலை அலையாய் விரியும் இன்ப வாரிதி என்கிறார்.
போற்றா ஆக்கைையப் பொறுததல் புகலேன் என்பது மிகவும் ஆழந்து சிந்தித்து பொருள் கொள்ள வேண்டுய பகுதியாகும். போற்றா ஆக்கை என்பது அந்த இன்பத்தை தாங்க முடியாத உடம்பு என்பதாகும். யோக நெறியில் செல்பவர்களுக்கு  இததைகய சூழ்நிலை ஏற்படுவதுண்டு, இதனாலேயே குருவாக இருப்பவர் சீடனின் மன உடல் பக்குவம் கண்டு அத்த படியைப் போதிப்பார். பல சமயங்களில் பழைய நல்வினை காரணமாக மனப் பக்குவம் ஏற்பட்டாலும் உடல் பக்குவம் அதற்கு இணையாக அமைவதில்லை. மானிட குருமார்கள் சீடனின் உடற் பக்குவத்திற்கு ஏற்ப அடுத்த படியை காட்டுவர், ஆனால் இங்கு குருவாக வந்தவர் இறைவனே ஆதலின் ஒரே விநாடியில் அமைச்சரை அடியாராக மாற்றியதோடு அல்லாமல், ஆற்றா இன்பத்தை அருளினார். இப்போது அடிகளாரின் மானிட உடல் இதனைத தாங்காமல் ஒடிந்திரு்கக ேவண்டும். அருளியவர் இறைவன்  ஆதலால் உடம்பு ஒடியவில்ைல. ஆனாலும் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவைக் காட்டிலும் பல மடங்கு ேமற்பட்டு அடங்கென்னா ஆனந்தம் பெற்றதால் இவ்வுடம்பு எவ்வாறு அதனை ஏற்றுத் தாங்கி நிற்கிறதென்பதை என்னால் சொல்லமுடியவில்லை, எனகிறார் அடிகளார். உதாரணத்திற்கு பசி வேட்கையோடு இருக்கும் ஒருவனுக்கு திடீரென்று அருசுவை அமிர்த உணவு அளவிட முடியாத அளவு கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும் அதற்கு மேலான ஆனந்தம் கொண்டேன் என்கிறார்.தற்போதைய கால கட்டத்தில் திடீரென்று அதிர்ச்சியான நல்ல தகவல் கிடைத்தால் அதிர்ஷ்ட லக்கி கிடைத்தவுடன் எத்தனை பேர் இன்ப அதிர்ச்சியில் உடல் அதனை தாங்க முடியாமல் இருதம் நின்று மாரைப்பு ஏற்பட்டு உடல் தாங்கென்னா துயரம் அடைவதை கேட்டிருக்கிறோமல்லவா? எனவே தான் அடிகளார் தன் உடம்பு தாங்கென்னா இன்பத்தை  " ஆற்றா இன்பம்.... போற்றா ஆக்கை என்கின்றார்.

திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சிவபுராணம் ஆய்வுக்கட்டுரை


ஆகம வழி  வழிபாடும் .. 
அன்பும் வழி வழிபாடும்.


"மின் ஒளி குகாஅல் மாமணிப் பிறக்கம்
திசைமுகன் சென்று தேடினார்க்கு ஒளித்தும்"

மாணிக்கவாசகரின் திருஅண்டப்பகுதி சிந்தனைகள்


அடியார்கள் இறைவன் பால் கொண்ட அன்பை ஆகம விதிப்படி கொண்ட அன்பையும், இறைவன்பால் தான்தோன்றித்தனமாக இயல்பான அபிரீதமான அன்பையும் கொண்டுள்ள அடியார்கள் பால் இறைவன் எவ்விடத்தில் அருள்மழை பொழிகிறான் என்பதை மாணிக்க வாசகர் காட்டும் நெறி,

மரகத மணியும் மாணிக் மணியும் இரண்டு குவியல்களாக ஒன்றுக்கொன்று அணித்தே இருப்பதுபோல,  பசுமை நிறமுடைய பிராட்டியும், செவ்வொளி திகழும் ( பொன்னார் மேனியன் ) பெருமானரும் உள்ளனர் என்க. இவர்களிடம் தோன்றிய ஒளி மின்னலைப்போன்று பரந்து விரியவும் நான்கு முகங்களுடைய
திசைமுகன் தேடிச் சென்றனன், அவனுக்கு புலப்படாமல் ஒளித்து கொண்டாள் என்க, இவ்வடியில் சிவப்பும் பச்சையும் ஆகிய இரு நிறங்கள் உடைய சிவ சக்தியில் ஒளி எல்லாத் திசைகளிலும் சென்று  பரசும் பிரம்மன் காண முடியவில்லை என்கிறார்.ஆதியும் அந்தமும் இல்லா ஜோதிவடிவான இறைவனை உள்ளே உள்ள படிமங்களாக நிணப்பது வேறு அன்பின் வழியாக நினனப்பது வேறு, அன்பின் தன்னமைக்கேற்ப இறைவன் அன்பும் அருளும் மாறுபடும் காணக்கிடைக்கும் அளவும் மாறுபடும்.



காளத்திநாதரை ஆகமம் படிக்காத திண்ணனார் ( கண்ணப்பப்னார்) இறைவரை கற்கிலையாகவோ சிவலிங்கமாகவே காணவோ கருதவோ இல்லை. தன் அன்பிற்குரிய பாத்திரமான ஒரு பொருளாகவே கருதுகிறார். ஆனால் ஆகம வல்லுனராகிய சிவகோச்சரியார் சிவலிங்க திருமேனியை இறைவனின் அடையாளம்  என்று கருதுகிறாரே தவிர திண்ணனாரைப்போல் கருதவில்லை.  சிவகோச்சரியாருக்கும் அன்பு இருந்தபோதிலும், அது ஆகம வாிச் செல்லும் அன்பாகும். 
   இறைவனே கனவில் கூறியும், ஆகமவழி நிற்கும் சிவகோச்சாரியார் திண்ணனார் செய்தது தவறு என்று கருதினாரே தவிர அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.  
 ஆகம ரீதியில் கோயில்கட்டி குடமுழுக்கு செய்ய நாள் குறித்த பல்லவ மன்னனின் கோயிலில் புகாமல் பூசலார் அன்பால் கட்டிய மனக்கோயிலில் குடிபுக முனந்தார் இறைவர் என்பதும் இதையே காட்டுகிறது.
   வேதவழிபட்ட வழிபாட்டு முறையையும், ஆகம வழிப்பட்ட வழிபாட்டு முறையையும் அடுத்தடுத்து கூறுகிறார் அடிகளார்.
   வேத வழிபாட்டில்  திருக்கோயிலோ கடவுள் படிமங்களோ,, அபிசேக ஆதாரதனைகளோ எதுவும் இல்லை, இதில் கூறும் யாகங்கள் யாவும் அக்கினியில் "ஆகுதி" சொரிதலையே பேசும்,உபநிடதங்களுக்கு வரும்போது அவை அனைத்தும் அறிவுவழி நின்று பிரமத்தை ஆராய்வதையே மேற்கொண்டது. ஆகம வழி வழிபாடு இதற்கு முற்றிலும் மாறுபட்டு, திருக்கோலில் படிமங்கள் ஆகியவற்றை அமைத்து அபிடேகம் முதலிய ஆராதனை செய்வதை விரிவாகப் பேசும். படிமங்கள் ைவத்து வழிபடுவோர் சைவ வைணவ ஆகமங்களை அடிப்படையில் ஆணுருவை வைத்து வழிபடுவர்்
  சாக்த ஆகமங்கள் வழி வழிபடுவோர் பெண்ணுருவை வைத்து வழிபடுவர். இவற்றை நோக்கின் இறைன்ஆகம வழி செல்பவர் அனைவருக்கும் அப்பாற்பட்டு நிற்கின்றான் என்று அடிகளார் கூறுவதாகவே கொள்ளவேண்டும். 
  என்னதான் ஆகம வழி முறைகளை பின்பற்றி சென்றாலும்  அவ்வழிகள் உண்மைப்பொருளை அறிய உதவமாட்டா என்கிறார். இவ்வழிகள் அனைத்திலும் அன்பு எங்கும் இடம்பெற வில்லை. எனவே பின்னொரு பாடலி்ல்

அன்பினால்  அடியேன் ஆவியோடு ஆக்கை
ஆனந்தமாய் கசிந்து உருகி 
என்பரம் அல்லோ  இன்னருள் தந்தாய் "  திருவாசகம்

எனவே மேலே கூறியபாடலில்  கூறப்பட்ட மார்க்கங்களில் அன்புக்கு  முதலிடம் கொண்ட தன்மை அறியப்படும். அதனாலேயே இறைவன் அவர்களிடம் ( ஆகம வழி ) இருந்து ஒளித்து அன்பு வழி கண்டோருக்கே காட்சியருளினார் என்பது புலப்படும்

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; திருவாசகம் ஆராய்ச்சி கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக