ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பசுபதாஸ்திரம்

  பசுபதாஸ்திரம்


மகாபாரதக் காலம்;
துரியோதனன் பாண்டவர்களை
கானகத்திற்குத் துரத்தியக் காலம்;
பாண்டவர்கள் காட்டில்
வாழ்ந்து வந்தக் காலம்;

அப்பொழுது ஒருநாள்,
வியாசமுனி வந்தார்;
பாண்டவர்களைச் சந்தித்தார்;
சிவனைச் சிந்தனையில் வைத்துத்
தவம் செய்ய அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார்;
அதற்கென ஒரு அரிய மந்திரத்தை அவனுக்கு ஓதினார்;
பாகிரதி நதி கரையிலுள்ள இந்திரகிலா மலைக்குச் சென்று
இத்தவம் இயற்ற இயம்பினார்;

அர்ச்சுனனும் தவம் செய்யச்அம்மலை அடைந்தான்;
களிமண்ணால் சிவலிங்கம் செய்தான்;
சிவனை எண்ணித் தவம் செய்தான்;
வியாசர் விவரித்த மந்திரத்தை
இடைவிடாது சொல்லி வந்தான்;
அர்ச்சுனன் தவம் செய்த இடத்திற்கு பன்றி ஒன்று வந்தது;
தன் தவத்தை கலைக்க வந்த பன்றியோ ?
தன் எதிரியால் ஏவப்பட்ட பன்றியோ ?
ஏதாவது அசுரன் பன்றி வடிவில் வந்திருக்கிறானோ ?
என்று பலவாறு எண்ணினான்;
பன்றியை தன்னிடம் விட்டுத் துரத்த முயற்சித்தான்;
முடியாது போகவே,
ஒரு அம்பு எடுத்து விடுத்தான்;
பன்றியை ஒரே அடியில் கொன்றுவிடத் துடித்தான்;


தன்னை எண்ணித் தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான் சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

தன்னை எண்ணித்
தவமியற்றும் அர்ச்சுனனை
சோதிக்க எண்ணினான்
சிவன்;
ஒரு வேடன் வடிவம் எடுத்தான்
அவன்;
அவன் வைக்கும் சோதனையிலிருந்து
தப்பிக்க முடிந்தவன் எவன்;

வேடனாய் உருவெடுத்து
வேகமாய் வந்தான்,
பார்த்திபன் கொல்ல எண்ணிய
பன்றியின் மேல் பானம் விடுத்தான்;
இருவரின் கணையும் இரையைத் தாக்க
அக்கணமே அப்பன்றி அசைய முடியாது உயிர் விட்டது;

பன்றி இறந்த இடத்திற்கு
பரமேஸ்வரனும் வந்தான்,
பார்த்திபனும் வந்தான்;
இறந்தது எனக்கே சொந்தமென்று
இருவரும் வாதிட்டனர்;
இதனைத் தொடர்ந்து
இருவரும் அம்பெடுத்துச் சண்டையிட்டனர்;
இரு தரப்பிலும் அம்பு
இல்லாது போகவே,
மல்யுத்தச் சண்டை இட்டு ஒருவர்
மற்றவரைச் சாய்த்து விட எண்ணினர்;

மலைக்காது போரிட்டான் குந்தி மைந்தன்;
சளைக்காது அவனை எதிர் கொண்டான்
சர்வேஸ்வரன்;

சிறிது நேரம் கழித்து தன் வேடம் மறைத்து
சுய உருவம் எடுத்தான்;

ஆரண்யத்தில் எவனை எண்ணி தவம் செய்தென
அவனிடமே சண்டை இட்டதை அறிந்து
அர்ச்சுனன் வருந்தினான்,
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்;

'கவலை எதற்கு அர்ச்சுனா, உன் பானங்கள் எல்லாம்
என்மேல் மாலைகளாகவே விழுந்தன;
 எனவே வருத்தம் விடு, பசுபதாஸ்திரம் பிடி,
எல்லாப் புகழும் பெறு;'
வாழ்த்தி மறைந்தான் விஷ்வேஷ்வரன்.
வணங்கி நின்றான் விஜயன்



திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக