வியாழன், 6 ஏப்ரல், 2017

சுதர்சன சக்கரம்

சக்கராயுதம்.jpg


சுதர்சன சக்கரம் 
தந்தது - ஈசன் - ஹரன் 
கொண்டது - மால் - ஹரி

ஹரியும் - சிவனும் ஒன்றுதான் என்பர் ஆன்மீக பெரியோர். வேத வியாசர் எழுதிய பதிணெண் புராணங்களும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஹரி வேறு சிவன் - ஹரன் - வேறு.
விஷ்ணுவின் சக்தி சிவனிடமும் சிவனின் சக்தி விஷ்ணுவிடமும் இருப்பதை விளக்கும் மகா சுதர்சன சக்கரம் பற்றிய ஒரு புராணக்கதை உண்டு,

சுதர்சன சக்கரம் என்றதும் நம் நினைவில் வருவது ஸ்ரீமத் நாராயணன்தான் தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை தாங்கியிருப்பவனும் ஆவார் திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அதர்மத்தை அழத்து தர்மத்தை நிலை நிறுத்துவதுதான் அவர் திருக்கரத்திலுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்களை தீமையிலிருந்து காக்க வல்லது. 

சுதர்சனம் தோன்றி விதம்
சிவனாரைத் தரிசிக்க இந்திரன் ஒருமுறை திருக்கையலாத்திற்கு சென்று கொண்டிருந்தான், பார்க்கிற பொருள் எல்லாம் பரம்பொருள் என்பதை இந்திரன் என்பதை இந்திரன் உணர்ந்திருக்கின்றானா? என்பதை இறைவர் சோதிக்க திருவுளம் கொண்டார். ஈஸ்வரன் மகா ருத்ர கொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன் தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்று எண்ணி ரூத்திரன் மீது தன் கையிலிருந்த வஜ்ராயுத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ரூத்திரன் மீது பட்டதும் அவர் உடல் சிலிர்த்தது.கோபாக்கினி உண்டாகி, வியர்வைத்துளிகளாக மாறி கடலில் சிதறி விழுந்தது. 
பிறகு தன் முன் வந்திருந்ததுசிவன் தான் என்பதை உணர்ந்த இந்திரன் மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான், கடலில் விழுந்த ருத்திரனின் வியர்வைத்துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடி வெடுத்தது. இந்த அரக்கன் பிரம்ம தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு சமுத்திர ராஜனால் வளர்க்கப்பட்டது. அந்த அசுரன் ஜலந்திரன் என அழைக்கப்பட்டான். ஆக இந்திரனின் அறியாமையால் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்திரன் என்ற அரக்கன்.
ரூத்திரனின் வியர்வை துளியில் இருந்து தோன்றியவன் பிரம்மாவிடம் வரம் பெற்றவன் என்பதால் தன்னை எவராலும் அழிக்க முடியாது என இறுமாப்புக் கொண்டான். மூவுலகமும் வென்று தேவர்களை அடிமைப்படுத்தினான், நாளாக ஆக அவனது ஆணவமும் அதிகரித்தது.
பிரம்மாவையும் திருமாலையும் வெற்றி கொண்டான், கொடுமைகள் பல செய்தான். முடிவில்தன்னை படைத்த ஈஸ்வரனைவிட தான்தான் உயர்ந்தவன் எனக் கர்வம் கொண்டான். சிவனாரையும்அடிபணியச் செய்யும் முயற்சியாக திருக்கைலாயம் வந்தான், வழியில் வேதியர்வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார் இறைவர். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன் என ஆணவத்தால் கர்ஜித்தான். என்னை வெல்ல வேண்டுமென்றால் என்னால் நிர்மானிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா? என்று பார்ப்போம் என்றார் சிவனார். அதனை அவனும் ஏற்றுக் கொண்டான்.
வேதியராக வந்த சிவனார் தன் பாத விரல்களால் பூமியை கிளறி மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவாக உருவாக்கினார். இந்த மகா சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக் கொள் பார்ப்போம் என்றார்.
உடனே ஜலந்திரன் அந்த சுதர்சன சக்கரத்தை அப்படியே பெயர்தது எடுத்தான் அதனை தன் சிரசின்மீது வைத்துக் கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல் அழிந்தது. ஆனாலும் அழியா வரம் பெற்ற அவனது ருத்திர சக்தி, சுதர்சன் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு மகா சுதர்சனம் மகேஸ்வரின் திருக்கரத்தில் அமர்ந்தது. இதுவே சுதர்சன சக்கரம் பிறந்த கததை.

கோலோகத்தில் திருமாலின் சேவையே பெரிதென கருதி வாழ்ந்துவந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபாத்தர் பூவலகில் பிருந்ததை என்பவளாக மிக்க அழகுடன் காலநேமி என்ற அரக்கனுக்கு மகளாகப் பிறந்து அவளே ஜலந்திரனுக்கு மனைவி ஆனாள். அவளது பதிவிராத சக்தியால்தான் அழியா வரம்பெற்றிருந்தான் ஜலந்திரன் , முடிவில் சிவபெருமானால் அவன் அழிந்ததும் பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும்திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று மீண்டும்துளசியாக சேவையாற்றி வந்தாள். 
ஜலந்திரனுடன் வாழந்தவள் துளசி, எனவே அவன் உறைந்திருக்கும் சுதர்சன சக்கரத்தில் பிருந்ததையும் சங்கமிக்க வைத்து பிருந்தா - ஜலந்திரன் சுதர்சன சக்கரத்தை தன் திருக்கரத்தில் திகழ விரும்பினார் திருமால், இதற்காக சிவனாரிடமிருந்து இதனை பெற ஈஸ்வரனை பூஜிக்க துவங்கினார் ஸ்ரீமத் நாராயணன். அதற்காக ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டுஅதி சிவனாரை அர்ச்சித்து வழிபடலானார் அப்போது சிவனாரின் சங்கல்பத்தால் ஒரேயொரு மலர் மறைந்திட மந்திரம் ஒன்று க்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் வலக் கண்ணையே பெயர்த்து மலராக சமர்ப்பித்தார். இதனாலேயே இவருக்கு கண்ணன் என்ற நாமம் வந்தது. அந்த பூஜையில் மகிழ்ந்த சிவனார் மகாசுதர்சன சக்கரத்தை திருமாலுக்கு தந்து துஸ்டர்களை சம்கரித்து பக்தர்களை ரட்சிக்கும் பணியை அவரிடம் தந்தார், ஆக சங்கரநாராயணன் என்ற உக்கரதாரி ஆனார் திருமால்,

உலகில் உள்ள எந்த தீய சக்தியையும் எதிர்த்து அழிக்க வல்லது மகா சுதர்சனம் மந்திர தந்திர யந்திர அஸ்திர சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரில் இருந்து காக்க வல்லது இந்த மகா சுதர்சன சக்கரம். பெரியோர்களை இழிவாக பேசிய சிசுபாலனை அழித்தது இதுவே.
விஷ்ணு பத்தரான அம்பரீஷனை துர்வாசகரின் கோபாஸ்திரத்திலிருந்து காத்து ரட்சித்தது இதுவே.
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு துணை புரிந்ததும் இதுவே.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது மகா சுதர்சன சக்கரம், இதனை வழிபடுவர்கள் சிவனையும் ஸ்ரீமத் நாராயணனையும் வழிபட்ட பலனைப் பெறுகின்றனர். 
ஹரியும் ஹரனும் உறையும் அற்புத சக்திதான் அந்த சுதர்சன சக்கரம்.

திருச்சிற்றம்பலம்



தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக