செவ்வாய், 11 ஏப்ரல், 2017

முத்தாலம்மன்

சுந்தரபாண்டியம் கிராமத்து அருள்மிகு முத்தாலம்மன் பொங்க்ல் திருவிழா



முகநூல் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சுந்தரபாணடியத்தில் அருள்பாலித்து நம்எல்லாம் காக்கும் கிராம தெய்வமாகக் கொண்டப்படும் கிராம தெய்வம் அருள்மிகு முத்தாலாம்மன்

நம் முத்தாலம்மன் வரலாறு இளைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பிருந்திருக்காது எனக் கருதி அம்மன் வரலாற்றினை எனக்கு தெரிந்த வரையில் இவ்வாண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தாலம்மன் வரலாறு விஷ்ணுவின் தசாவாதாரத்தில் பரசுராம அவதார நிகழ்வின் ஒரு அங்கமாகும்.அதன்படி திருமால் பரசுராம அவதாரமாக இவ்பூவுலகில் தீயவைகளை அழிக்க தோன்றினார் என்பது யாவரும் அறிந்ததே

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.

ஜமதக்கினி (Jamadagni) சமக்கிருதம்: , இந்து தொன்மவியலின் படி சப்த ரிசிகளில் ஒருவரும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் தந்தையும், ரேணுகாவின் கணவரும் ஆவார். [1] ஜமதக்கினி முனிவரின் ஐந்து மகன்கள் வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் இராமபத்திரன் எனும் பரசுராமர் ஆவர்.

   பிருகுவின் வழித்தோன்றலான ஜமதக்கினி முனிவர், ரிசிக முனிவருக்கும், மன்னர் காதியின் மகள் சத்தியவதிக்கும் பிறந்தவர். [2] ஜமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற ஜமதக்கினி, பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளின் தந்தையானார்.

ரேணுகாவை கொல்லுதல்
ரேணுகா தன் பதிபக்தியின் மேன்மையால், நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள்.
ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண் பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு சில நொடிப் பொழுது வரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக் களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் உடைந்தது. எனவே வீட்டிற்கு திரும்பாமல் ஆற்றங்கரையிலே ஜமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்தார். தன் கடைசி மகன் பரசுராமர் முன்வந்து, தந்தையின் ஆணைக் கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்.


பின்னர் அமைதியடைந்த ஜமதக்கினி, பரசுராமருக்கு வழங்கிய வரங்களின் படி ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடலுடன் இணைந்து உயிர்  பெறச் செய்ய அவரிடம் சில மந்திரங்களைக் கூறி இறந்த உடல்மற்றும் தலையை  இணத்து தான் கூறிய மந்திரங்களைக் கூறினால் உனது தாய் உயிர் பெறுவாள்  என்று கூறி அனுப்பினார், அதன் படி பரசுராமரும் தன் தாய் தலை வெட்டப்பட்ட இடத்திற்கு சென்று இறந்த தாயின் தலையையும் அதன்  உடலையும் தேடி ஒட்ட வைக்கும் போது அவசரத்தில் தாயின் தலையையும் இதேபோன்று தலைவெட்டப்பட்ட பரரையர் குலப் பெண்ணின் உடலுடன் ஒட்ட ைவத்துவிட்டார்,. வேறொரு உடலுடன் கொண்ட தனது தாய் உயிர் பெற்றாள். கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். அவ்வாறு உயிர் பெற்ற தாய் தன் இருப்பிடம் வந்தவுடன் தான் தெரிந்தது், அந்த அம்மையே முத்தாலம்மனாக கிராமத்தில் அன்றே தோன்றி கிராம மக்களுக்கு அருள் தந்து மீண்டும் மறைந்திட தோன்றும் அருள்பெற்று கிராம மக்களைக் காக்கும் அம்மனாக உருவெடுத்து நம் ஊரிலும் தோன்று நமக்காக அருள் பாலிக்க வந்தவளே அம்மன் முத்தாலம்மன் 

 இந்த வரலாற்றுப்படி தான் அம்மன் செவ்வாய் இரவு தோன்றி மறுநாள் இந்நேரம் வருவதற்குள் மீண்டும் சென்றுவிடுவதாக வரலாறு, இதன்படி தான்  புதன் கிழமை அன்று இரவு 9,00 மணிக்குள் அம்மனை வழியனு்ப்பி  அம்மனை கரைத்து விடுவார்கள், அதன்படிதான் அம்மன் கரைக்கும்போதும், அம்மனின் உடலை பரரையர் குலத்தாருக்கு கொடுத்துவிடுவார்கள் அ்வ்வுடலை அவர்கள் தான் கரைக்க வேண்டும், முகத்தை வேதர் ( ஆரியர்) வம்சவழியினருக்காக அவர்கள் சார்பாக பூசாரிகளே அம்மன் முகத்தை கரைத்து விடுவர், இதுதான் முத்தாலம்மன் பொங்கலின் ஐதிக வரலாறு.

சுந்தரபாண்யம் பொங்கலும் கிராம எல்லா சமுதாயத்தாரின் பங்கு கொண்டு கொண்டாடி அம்மனின் அருள் பெற்று வரப்படுகின்றோம்,

நன்றி; செவிவழிக் கதையாக கேட்டறிந்தது.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக