புதன், 1 மே, 2019

ஊடல் திருவிழா

ஊடல் திருவிழா












ஆடலில் மகிழும் மழலைப் பருவம்
ஓடலில் மகிழும் பிள்ளைப் பருவம்
தேடலில் மகிழும் குமரப் பருவம்
(ஊடலுக்கு பின்)
கூடலில்  மகிழும் வாலிப்பருவம்
ஆட்டத்தில்முடியும்முதுமைப் பருவம்

  கூடி மகிழும் இல்வாழ்வில் ஊடிப் பிணக்கு கொள்கிறாள் மனைவி. இந்த ஊடல் பற்றிய செய்ததிகள் சங்க இலக்கியங்கள் முதல், தெய்வீக இலக்கியம் வரை எல்லாதமிழ் ஆவணங்களிலும் சுவை பெற பதிவாகி யுள்ளது.

 ஊடல் என்றால் என்ன?
தமிழர் வாழ்வை இரண்டாக பகுத்தனர். காதல் வாழ்வை,அகம் என்ற அகப்பொருள், என்றும், மோதல் வீரத்தை புறம் என்று புறப்பொருள் என்றும் இலக்கணம் வகுத்தனர். வீரத்தின் விளை நிலமாக தமிழன் எதிரியை இமயம் வரை சென்றும், கடல் கடந்து சென்றும் அழித்தான் என்ற வரலாறுகள் இலக்கியங்கள் வாயிலாக நாம் கண்டோம்.
  ஆனால் வீட்டுக்குள் இருக்கும் மனைவியின் எதிர்ப்பை கண்டு அஞ்சி அவளை எதிர்த்து வீழ்த்த எண்ணாது பணிந்து துதித்தான். எதிரியை வீழ்த்தியவன் எதிரில் நிற்கும் மனைவியின் ஊடல் எதிர்ப்பில் விழுந்தான்.
  மனைவியின் சிறு மனக்குறைவே ஊடல், பொய் கோபம் கொண்டு பேசாது போவாள். அவள் ஊடல் போக்க மன்றாடி தாள் பணிவான் தலைவன். கெஞ்சியும் கொஞ்சியும் அஞ்சியும் பேசி மன்னிப்பு கேட்பான் , தூதும் அனுப்புவான்.
 கணவனே தெய்வம் என்றும், வேறு தெய்வம் எனக்கு தேவை யில்லை என்றும் தினமும் தொழுது எழுபவள் மனைவி, இத்தகு மனைவியை ஊடலில் கணவன் தொழுது எழுவான் கணவன் என்று தொல்காப்பியம் காட்டுகிறது.
  ஆற்று நீரை அப்படியே விட்டால் கடலில் கலந்து வீணாகும். அணையிட்டு தடுத்தால் மின்சாரம்உருவாகும். ஆசை வெள்ளம் கூடி மகிழவே ஓடும் அதை ஊடலால் தடுக்கும் போது உறவும், அன்பும் வலிமை பெறும்.
  தெய்வங்களின் ஊடல்
சிவபெருமான் மீது உமாதேவி கொண்ட ஊடல் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன. வரலாறுகளில் இன்னும் திருவிழாக்களாக இன்றும் சிவலாயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடராஜர் மீது சிவகாமி அம்மாள் காட்டும் ஊடல்  எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
 நடராஜர் சிவகாமி இருவருமாகஆலயத்தில் இருந்து புறப்படுவர். நான்கு மாட வீதியில் வலம் வருவர் கோயில் புகுமுன் சிவகாமி முந்திக் கொண்டு ஆலயத்துள் சென்று பெருங்கதவை மூடிக் கொள்வார். நடராஜர் வீதியில் தனியே நிற்பார்.உடனே சுந்தரமூர்த்தி சிவகாமிஅம்மையாளிடம் சென்று ஊடல் தீருமாறு வேண்டி திருமுறை பாடி, பின் ஊடல் தீர்ந்து நடராசருடன் சிவகாமி சேர்ந்த காட்சி தருவது ஊடல் திருவிழா ஆகும்.இதே திருவிழா திருவண்ணாமலையிலும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.
 ஊடல் காரணம் 
அம்பிகை சிவன் மேல் கொண்டதற்கான காரணங்கள் சுவாரஸ்யம் மிக்கதாகும். மகளிர்களின் ஊடல் காரணம் பெரும்பாலும் மற்றொரு பெண் தன் வாழ்வின் குறுக்கே வருவதுதான்.
  சிவபெருமான் சடையில் கங்கையை மறைத்து வைத்திருந்தார். இதனை அறிந்த உமாதேவி ஊடல் கொண்டார்.  
 பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவனை மட்டுமே வழிபட்டார் இதனால் உமாதேவி ஊடல் கொண்டாள் என்னை வணங்காத முனிவருக்கு ஏன் காட்சி தந்தீர் என்று ஊடினாள்.
 ஊடல் தீர்த்த சிவன்
தன் மனைவி ஊடல் தீர்க்க சிவன் அலைந்தார், அந்த நன்றிக் கடனாக சுந்தரர் சிவனுக்கும் உமாதேவிக்கும் ஊடல் தூதுவராய் சென்றார்.
 திருவாரூரில் பரவையார் கொண்ட ஊடலைத்தீர்தது வைக்குமாறு சிவனை வேண்டினார் சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்ததால் பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு கதவை சாத்த அவரை வெளியே நிறுத்தினார். பரவையார் வீடுதேடி சிவனார் ஊடல் தீர்க்க இரண்டு முறை நடந்து சென்று ஊடல் தீர்க்க அலைந்தார் என்பதை திருமுறை வாயிலாக அறியலாம்
 இது பாேன்று சங்க இலக்கியங்களில் தசரதன்  கையேகி ஊடலாக இராமாயணத்ததிலும், சிலப்பதிகாரத்திலும் பாண்டியமன்னன் தன் மனைவியின் கால் சிலம்பிற்காக ஊடல் கொண்டதன் காரணத்தால் கண்ணகியின் கால் சிலம்பை தனதென்று தவறாக புரிந்து நடந்த வரலாறு ஊடல் காரணத்தால் என்பது தெளிவாகும்.
 உப்பின் அளவு மீறல் விருந்தை கெடுக்கும், ஊடலின் அளவு மீறல் வாழ்வைட கெடுத்து விடும். இதை உணர்த்தவே தெய்வங்கள் ஊடல் கொண்டும், பிறகு அதில் வெற்றி கண்டும் நமக்கு வழிகாட்டின.
 ஊடலின்உவகை மகிழ்வு உள்ளது. என்பதை கூறிதிருக்குறளின் இறுதியில் ஊடல் உவகை அதிகாரத்தை முடிக்கிறார் வள்ளுவர்
  " ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
     கூடி முயங்கப் பெறின் "
 தெய்வங்கள் காட்டிய வழியில்எல்லைக்குள் நின்று ஊடல் கொண்டு மீண்டு வர வேண்டும். ஏனெனில் ஊடல் உட்பகை ஆகியே விரிந்து விவாகரத்து செய்துவிடல் தமிழர் பண்பாடு அல்ல. ஊடலில் தோற்றவர் கூடலில் வெல்வர் என்கிறார் வள்ளுவர்
திருச்சிற்றம்பலம்
நன்றி திருக்கோயில் கட்டுரை

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

யார் பெரியவர்? யார் சிறியவர்?

யார் பெரியவர்? 
யார் சிறியவர்?

Image result for பெரியோர் எல்லாம் பெரியவர் அல்ல!

மன்னரை மதிக்காதவர்கள், உண்மையை மதிப்பவர்கள் நாட்டில் இருக்கக் கூடுமோ?
இவ்வாறு அரசர் ஒருவருக்கு ஐயப்பாடு உண்டாயிற்று
தமது சேவகனையை கூப்பிட்டார். 
நாளை காலை உன் கண்ணில் முதன் முதலாக தென்படும் மூவரை நீ அழைத்து வா என்றார் அரசர்
சேவகனை அரசரின் உத்தரவுப்படி ராஜவீதியில் வந்த மூன்று நபர்களை ராஜாவின் பிடித்துக் கொண்டு வந்தான்
அவர்களில் ஒருவர் பாண்டியத்துவம் நிறைந்த புலவர் ஒருவர், கோவில் பூசை செய்யும் பரமவைதீக சிகாமணி ஒருவர், தன்னை விற்கும் விலைமகள் ஒருத்தி, மூவரையும் அரசர் முன் கூட்டிவந்து நிறுத்தினார். அவர்களை தனித்தனியாக சந்தித்தார் அரசர்
 பாண்டியத்துவம் பெற்ற புலவரிடம் புலவரே " சகலசாஸ்திரம் படித்த பண்டிதரே கோயில் பூசை தேர் திருவிழா முதலானவை நடப்பதைறீவீர் இதனால் மக்களுக்கு பயனில்லை என்று யாம் நினைக்கிறேன். தங்கள் கருத்து என்ன? என்று கேட்டார் அரசர்
  படித்த மேதாவி சில விநாடிகள் யோசித்து விட்டு முடிவைக் இவ்வாறு கூறினார்.
 அரசர் பெருமானே ஆலயத்தால் யாருக்கு என்ன பயன்? ஆலய வழிபாடு பயனற்றது என்பதற்கு என்னால் மேற்கோள் சொல்ல முடியும் என்றார்,
 ஆலய வழீபாட்டால் பயன் உண்டா இல்லையா? என்றதற்கு இல்ைல என தீர்மானமாக கூறிவிட்டார் பண்டிதர் எனவே அவரை ஆசனத்தில் உட்கார வைத்துவிட்டனர்
 அடுத்து கோயில் குருக்கள் வந்தார். அவரது திருமேனியில் வழிபாட்டு சின்னங்கள் முத்திரைகள் யாவும் விளங்கின, அவரிடமும் இக்கேள்வி கேட்கப்பட்டது
 ஆலய வழிபாட்டால் நன்மை உண்டா? என்றார் மன்னர்
அரசர் பெருமானே என் போன்று ஆலயத்தில் சேவஞ் செய்பவர்களுக்கு ஆலயத்தின் மூலம் வயிறு நிறைகிறது. ஆலயம்  இல்லாது போனாலும் என் போன்றவர்கள் உண்ண முடியும் ஆலய வழிபாடு தேவை இல்லை என்பது என் கருத்து சொல்லி விட்டு அவரும் ஆசனத்தில் அமர்ந்தார்
  அடுத்து விலைமகள் வந்தாள். பழைய கேள்வியே அவளிடமும் கேட்கப்பட்டது
 அரசர் பெருமானே நான் படித்த பண்டிதர் அல்ல. பூசை செய்யும் குருக்களும் அல்ல, அறிவும், அனுபவமும் இல்லாதவள். ஆண்டவன் இல்லையென்று முடிவு செய்வதும் ஆலயத்தை வழிபாடு செய்யாமலும் என்னால் இருக்க முடியாது. அரசர் சொன்னார் என்பதற்காக தலையாட்டும் துணிச்சல் இல்லாத பேதை. ஆண்டவன் என்ற தத்துவத்தால் மனதில் நிம்மதி, பிறருக்கு இரக்கப்படும் சமுதாயப் பண்பாடு, பணப்பங்கீடு யாவும் நடக்கின்றன. ஆண்டவனை சுற்றி ஊர், அமைகிற மாதிரி உள்ளங்களும் அமைதல்வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிரான கருத்தை கூறியதால் எனக்கு என்ன தண்டனை தந்தாலும், அது ஆண்டவன் கருணை என்று ஏற்றுக் கொள்கிறேன்.
 பண்டிதரும், கோயில் குருவும் சிரித்தனர்.
அரசர் பெருமான் எழுந்து " தாயே ஆண்டவனின் தன்மையை அரச பதவியுற்றவன் சாெல்லுக்காக ஏற்காது மறுக்கும் அளவு நெஞ்சத் துணிவுடன் கூறும் தன்மை உங்களுக்கு இருக்கிறது. பக்தர்கள்  எவருக்கும் பயப்பட மாட்டார்கள், பக்தியை பற்றி படிப்பவர்கள், பகவானின் அருகில் நின்று பயன் அடைவார்கள் சந்தர்ப்ப வாதிகள்! தாங்களோ உண்மையின் வாரிசு கடவுளுக்கு அஞ்சுபவர் என் வணக்கததிற்கு உரியவர் தாங்களே என்று விழுந்து வணங்கினான்.
 படித்த மேதாவிகள், பக்தி மார்க்கம் கைங்கரியம் செய்கிறவர்களும் எப்படி சாய்வார்கள் பாமர்கள் உறுதிப்பாட்டுடன் இருப்பாா்கள்.
 பெருயோர் எல்லாம் பெரியவர் அல்ல!
 சிறியோர் எல்லாம் சிறியவர் அல்ல!!
திருச்சிற்றம்பலம்
நன்றி ; திருக்கோயில் இதழ்

புதன், 3 ஏப்ரல், 2019

சிவ பூஜனம்

சிவ பூஜனம்

சிவ பூஜனத்திற்கு சிரத்தையும் பக்தியும் மிக மிக அவசியமாகும். அக்னிஹோத்ராதி கர்மாக்களை செய்வது சிரம சாத்தியம். அர்ச்சனை என்பது மிகச்சுலபம். அந்த அர்ச்சனம் சிவனுக்கே செய்ய வேண்டும். வேதங்களும், ஸ்ம்ருதிகளும் சிவனே உயர்ந்தவர் என்று பாராட்டுகின்றன. இதனுடைய விரிவை “சிவதத்துவ விவேகம்” என்னும் ஶ்ரீமத் அப்பைய்ய தீக்ஷிதரின் நூலிலும் “சிவோத்கர்ஷமஞ்சரி” என்னும் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதரின் நூலிலும் காணலாம்
வைஷ்ணவ மரபிலேயே தோன்றி, சிவனையே வழிபடு தெய்வமாகக் கொண்டு வைஷ்ணவர்களோடு போராரி நெருப்புப் பாய்ச்சிய முக்காலியில் வைஷ்ணவர்கள் கோரியபடி பெருமாள் சந்நிதியிலேயே அமர்ந்து ஹரதத்தாசாரியார் அவர்கள், சிவனுடைய உயர்வைக்கொண்ட “ச்ருதி ஸூக்தி மாலா” என்னும் நூலைப் பிரகாசப்படுத்தினார்கள். சிவனருளால் தீயும் மலராக ஆகிவிட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நூலிலும் தெள்ளெனக் காணலாம். சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்யம் செய்து இருந்தால்தான் கிடைக்கும். சிவன் ஒருவரைப் பூஜை செய்துவிட்டால் மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜை செய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர். எவ்வாறு மரத்தின் அடியில் நீர் விடுவதால் மரங்கள் திருப்தி அடைந்து மலர்களையும் பழங்களையும் தருகின்றனவோ, அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றது
ஆதிசங்கராச்சாரியார் அவர்களும் சிவனுக்கே பூஜை செய்யுங்கள், மீண்டும் உங்களுக்கு பிறவி கிடையாது என்று கூறியுள்ளார். சிவனுடைய அடிமுடி காணாது தவித்த பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் கர்வத்தை அடக்கி பெண்ணாயிருக்கும் தன்மையைக் கொடுத்து லிங்கோத்பவராகக் காட்சி அளித்ததை இன்றும் எல்லா சிவாலயங்களிலும் காணலாம். அத்தகைய சிவார்ச்சனத்தை விபூதியையும், ருத்திராட்சங்களையும் அணிந்து கொண்டு செய்ய வேண்டும். தனக்குச் செய்யக் கூடிய உடல் வலிமையோ அறிவு வலிமையோ இல்லாவிடில் மற்றவரைக் கொண்டு செய்வதும் தவறல்ல
பூஜை செய்யுங்கால் இதர எண்ணங்களைவிட்டு சிவனிடத்திலேயே மனதைச் செலுத்தி இருப்பது தான் முக்கியம். சிந்தை வேறிடத்தில் வைத்து பூஜை செய்வது பயனற்றது.

இத்தகைய சிவபூஜையிலும் ஶ்ரீ நடராஜர் வழிபாடே மிகச்சிறந்தது. அதை இங்கு சிறிது காண்போம். இவ்வுலகையே தெய்வ புருஷனாக உள்ளத்தில் எண்ணி அப்புருஷனுடைய தலையாக ஶ்ரீபர்வதத்தையும், நெற்றியாக கேதாரத்தையும், இரு புருவங்களின் நடுபாகமாக வாராணசி (காசி)யையும், குருக்ஷேத்திரத்தை குசஸ்தானமாகவும் [ஸ்தன ப்ரதேசம்], பிரயாகையை இருதயமாகவும், சிதம்பரத்தை உயிர் ஸ்தானமான ஹிருதய மத்யமாகவும் கருதி வழிபட வேண்டும்
மனிதன் கை, கால், கண், மூக்கு, செவி இல்லாமல் வாழ முடியும். ஆனால் உயிர் பிரிந்து விட்டால் சடலமாகி விடுகிறது. செயலற்று விடுகிறது என்பது உலகப் பிரசித்தம். தூங்குங்கால் மனிதனுடைய உள்ளத்தில் எல்லா புலன்களும் ஒடுங்குகின்றன. அதுபோல் ஶ்ரீ நடராஜருடைய அர்த்தஜாம காலத்தில் எல்லா க்ஷேத்ரங்களிலுமுள்ள தேவதைகளும் ஒடுங்குகின்றன. விழிக்குங்கால் எவ்வாறு அந்தப் புலன்களும் ஆங்காங்கு சென்று செயல்படுகின்றனவோ அவ்வாறே காலை விச்வரூப தரிசன பூஜையில் அந்தந்த தேவதைகள் தத்தமது இருப்பிடம் சென்று செயல்படுகின்றன. எனவே, சிதம்பரம் ஶ்ரீ நடராஜராஜ தரிசனம் ஒன்றே எல்லா ஸ்தலங்களில் உள்ள தேவதைகளின் தரிசனத்தால் ஏற்படும் பயன்கள் யாவற்றையும் அளிக்கவல்லது
லக்ஷ்மீபதியான மஹாவிஷ்ணுவினால் பூஜிக்கப்பட்டவர் நடராஜமூர்த்தி. வேதம் இதன் விளக்கத்தைத் தருகிறது. “அக்ஞானத்தைப் போக்கி, ஞானத்தை அளிக்கும் சிவனே! பிரம்மனுக்கு வேதத்தை உபதேசித்த சிவனே! அழகிய ரத்தினங்களாலும் கற்களாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பவழத்தினாலும் ஆகிய உனது லிங்கத்தை தேவர்கள் சிறந்த சம்பத்திற்காக அபிஷேகம் செய்து, ஆராதனம் செய்தனர். இச்சிவலிங்கத்தை பூஜை செய்ததின் பயனாகத்தான் விஷ்ணுவிற்கு வைகுண்டலோக நாயகராகும் தன்மை கிடைத்தது. [திருவீழிமிழலை] மாகாத்மியத்தில் விஷ்ணு ஐம்புலன்களையும் அடக்கி, ஆகாரமின்றி லக்ஷ்மியுடன் கூட இருந்து கொண்டு ஆயிரம் தாமரை மலர்களால் ஒவ்வொரு நாளும் பூஜை செய்தார். அப்பொழுது ஒரு நாள் சிவன் விஷ்ணுவை சோதனை செய்ய ஒரு தாமரை மலர் குறையும்படிச் செய்துவிட்டார். எந்த ஓடைகளிலும் ஒரு மலர் கிடைக்காததால் இன்று 999 மலர்கள் தான் கிடைத்துள்ளன, ஒன்று கிடைக்கவில்லையே என்று மிக வருந்தி வைராக்கியத்துடன் எப்படியாவது ஆயிரம் தாமரை மலர்களால் பூஜையை செய்துவிட வேண்டியதுதான் என்று பூஜையைத் துவக்கினார். 999 மலர்கள் பூஜித்தபின் தனது வலது கண்ணைப் பிடுங்கி தாமரை ஸ்தானத்தில் அர்ச்சனை செய்தார். இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், முன் கண்ணைக் காட்டிலும் மிக அழகான, பிரகாசமான கண்ணை அளித்துப் புண்டரீகாஷர் என்னும் பெயரையும் சூட்டினார். “உனது பூஜையினாலும், துணிவினாலும் மகிழ்ச்சியுற்றேன். எனவே தேவை யானதைக்கேள்” என்று வேண்ட சிவனும் அவ்வாறே பார்ப்பதற்கு அழகான “சுதர்சனம்” என்னும் சக்கரத்தை அளித்து உலகைக் காத்து அருள் ஆணையிட்டார். தேவீ பாகவதத்திலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது.

சிவலிங்கம் அமைந்திருக்கும் ஸ்தானம் விஷ்ணுபீடம் என்று கூறப்படுகிறது. இதைத்தான் சக்தி உபாசகர்கள் ஶ்ரீ சக்கர உபாசனத்தில் நடுவில் விந்து ஸ்தானத்தில் சிவனைச் சேர்த்து ஒன்று படுத்தி வழிபடுகின்றனர்.

சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு " இவ்வூரை விட்டு போகேன் " என செய்த சத்தியம் மீரப்பட்டதால் , இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் ெசன்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே " ஆலந்தான் உகந்து அமுது செய்தானை " என்ற பதிகம் திரு கச்சி ஏகம்பரஈஸ்வர் முன் நின்று பாடிய பதிகம் இறைவரும் சுந்தரரின் அன்பிற்கு பணிந்து அவருக்கு கண் பார்வை அளித்த வரலாறு . எனவே நாம் இப்பதிக பாடல்களை மனம் உருக வேண்டி பாடினால் கண் சம்பந்தப்பட்ட கண்நோய் உள்ளவர்களுக்கு அந்நோய் நீங்கப்பட்டு பூரண குணமைடவர் என்பது உறுதி. சுந்தரரரின் திருவாக்குப்படி இப்பதிகப் பாடல்கள் பத்தும் பாடுவோர் "நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே " திருக்கச்சி ஏகம்பம் பாடல் எண் : 1 ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 2 உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள் உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய் கின்ற பெருமானும் , ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும் , தேவர் கட்குத் தலைவனும் , தன்னை விடாது பற்றினவர்க்கு , பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று , அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய , அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 3 திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு . பாடல் எண் : 4 குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 5 வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும் , அரிய வேதங்களையும் , அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய , அளவற்ற புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் , துதித்து வழி படப்பெற்ற , நன்மையையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 6 திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற , ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும் , சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 7 விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாமுகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 8 சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , பாடல் எண் : 9 வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுர மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய , பரவிய , பழைய புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற , எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு ! பாடல் எண் : 10 எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே பொழிப்புரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே , தான் வழிபடவேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி , ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து , பின்பு , புறத்தே வழிபடச் சென்று , அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு , தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட , வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள , அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய , திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு பாடல் எண் : 11 பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன் , ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும் , மெய்ந் நூல்களைக் கற்றவர்கள் , ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும் , யாவர்க்கும் தலைவனும் , கூத்தாடுதலை உடையவனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன் , கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர் . நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர் . திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் .......... தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

 http://vpoompalani05.blogspot.in/ http://
vpoompalani05.wordpress.com http:/

/www.vpoompalani05.weebly.com

நரசிம்மரின் ஆக்ரோஷம் தணிய சிவாபெருமான் எடுத்த அவதாரம்!!

Image result for சரபேஸ்வரர்


சரபேஸ்வரர்– சந்தோஷம் நிலைத்திருக்க வரம் அருளும், தெய்வ மூர்த்தம். தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் பேராபத்துகளும் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டங்கள், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத பிணிகள் ஆகியன அகலவும், தீவினைகள், விஷ பயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் சரபரை வழிபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வியாசர். பக்த பிரகலாதனைக் காக்க ஸ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்தருளிய திருக்கதை நாமறிந்ததே. அவ்வாறு அசுரனை அழித்தும் நரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லை. இதனால் அஞ்சி நடுங்கிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே சரபேஸ்வர மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.

சரபரின் திருவடிவம் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். பறவை போன்று பொன்னிறம், இரண்டு இறக்கைகள், செந்நிற கண்கள், கூரிய நகங்களுடன் கூடிய- சிங்கத்துக்கு இருப்பது போன்ற நான்கு கால்கள், மனித உடல், கிரீடம் தரித்த சிங்க முகம் மற்றும் தந்தங்களுடன் பயங்கரமாகக் காட்சி தருவார் சரபர் என்று விளக்குகிறது காமிக ஆகமம். எட்டு கால்கள் கொண்டவர் என்று வேறு சில நூல்கள் விவரிக்கின்றன. ஸ்ரீதத்வ நிதி எனும் நூல் 32 திருக்கரங்களுடன் திகழும் சரபத்தின் ஒரு திருக்கரம் துர்கையை அணைத்தவாறு இருக்கும் என்று விளக்குகிறது. பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ தொடையில் நரசிம்மரைக் கிடத்தியபடி காட்சியளிப்பதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. சரப மூர்த்தியின் சக்தி- அரிப்ரணாசினி.
தமிழகத்தில் கும்பகோணம் அருகிலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்திருக்கும் விக்ரமசோழீச்வரம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில்தான் சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர சரப சிற்பம் முதன்முதலாக அமைக்கப்பட்டது என்பர். இந்தத் தலம் தவிர தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, மதுரை கோயில்கள், சென்னையில் குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோயில், திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோயம்பேடு- குசலவபுரீஸ்வரர் கோயில், திரிசூலம் ஆகிய தலங்களில் சரபேஸ்வரரைத் தரிசிக்கலாம்.
சரபேஸ்வரரை வழிபடுவதால் பகை அழியும், போர்களில் வெற்றி கிடைக்கும் நோய் நீங்கும் என்கிறது உத்தரகாரணாகமம் கூறுகிறது. நாமும் சரபேஸ்வரர் அருள் வழங்கும் கோயில்களுக்குச் சென்று அவரை வழிபடுவோம். இயலாதவர்கள் அனுதினமும் அவரின் திருவடியை மனதில் தியானித்து சரபர் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வணங்கி, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சிறக்கலாம்.
ஸாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்

உலகின் உயரமான சிவலிங்கம்:





உலகின் உயரமான சிவலிங்கம்: குமரியில் சாதனை

தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது என்பாது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. 111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது.
கணபதி உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலையுடன் கட்டப்பட்டு உள்ளது.

சிவன்தான் சிறந்தவர்

சிவன்தான் சிறந்தவர்

என்பதற்கு மற்றும் சில காரணங்கள்

1. மந்திரங்களுள் சிறந்த காயத்திரி தேவிக்குக் கணவர்.

2. இராமரால் இராவணனை அழிக்க வேண்டி தனுஷ்கோடியில் சிவலிங்கத்தை நிறுவி “ராமேச்வரம்” என்னும் தன் பெயரையே சூட்டி வழிபட்டு இராவணனைவென்று வெற்றி பெறச் செய்தவர்.

3. கண்ணன் கைலாச யாத்திரை சென்று சிவனை வழிபட்டமையால் உலகிலேயே சிறந்த அழகான மன்மதனைப் போன்ற மகனைப் பெறும் பாக்கியத்தை அவனுக்கு அளித்தவர்.

4. அதே மன்மதனை தன் பார்வையாலேயே அழித்தவர்.

5. உலகை அழிக்கத் தோன்றிய காலகூட விஷத்தை விழுங்கியவர்.

6. தனது பக்தன் மார்க்கண்டேயனைக் காக்க யமனின் திமிரை அடக்கியவர்.

7. திரிபுர அசுரர்களை அழித்தவர்.

8. தட்ச யாகத்தை நாசம் செய்தவர்.

9. அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கியவர்.

10. நரஸிம்மருடைய கர்வத்தை அடக்க சரப அவதாரம் எடுத்தவர்.

11. காசியில் வேத வியாசர் விஷ்ணு தான் சிறந்தவர் என்று கையை மேலே தூக்கியதை மடங்காமலே ஆக்கச் செய்தவர்.

12. பிரம்மாவினுடைய சிறு அபராதத்தால் தலையைக் கொய்து மாலையாக அணிந்தவர்.

13. வாமனாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அடக்க வாமனரின் தோலை உரித்து சட்டையாக அணிந்து கொண்டவர். சீகாழியில் இன்றும் சட்டைநாதரைக் காணலாம். இன்னும் பல உயர்வுகள் உள்ளன
திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட்காம் சிவபூசனம்

சிவனே உயர்வு (உயர்ந்தவர்)

சிவனே உயர்வு (உயர்ந்தவர்)


என்பதற்கு பிருங்கிரிஷி ஸம்ஹிதை, சிவோத்கர்ஷப் பிரகரணத்தில் உள்ள ஒரு கதை
மாளவ தேசத்தில் மகேந்திரவர்மன் என்னும் அரசனின் அவைக்கு வந்த ஒரு அதிசய வழக்கில் வைஷ்ணவர்களாலும் சைவர்களாலும் தன் தன் தெய்வமே உயர்ந்தது என்று வாதாடப்பட்டது. அதற்கு தீர்ப்பு வழங்க வேண்டி வந்து. அதற்கு மந்திரிகளின் அவையைக் கூட்டி அரசன் ஒரு யுக்தியைக் கையாண்டான். நீங்கள் இரு தரப்பினரும் ஒரு மாத காலத்திற்குப் பின் உங்களது தெய்வத்தை எமது முன் கொண்டு வாருங்கள் அதைக் கண்டு தீர்ப்பு வழங்குகின்றேன் என்று கூறி அனுப்பிவைத்தான். இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் சென்றனர். வைணவர்கள் அவ்வொரு மாத காலத்திற்குள் சேஷசாயியாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக, விஷ்ணு, உருவை அரண்மனைக்குள் புக முடியாத அளவிற்கு நீளமாகவும் அகலமாகவும், பெருத்ததாகவும் தயார் செய்து அவ்வுருவிற்கு மிகச்சிறந்த முறையில் அணிகளாலும் ஆடைகளாலும் மலர்களாலும் மிக அழகாக அலங்காரம் செய்து முடித்தனர். சைவர்களோ எனில் என்ன செய்வது என அறியாமல் கஷ்டத்துடன் இருக்குங்களால் ஒரு பெரியார் அவர்கள் முன் தோன்றி ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து இதைத் திறவாமல் அன்று அரசவைக்குச் சென்று அரசன் கையில் கொடுங்கள், பயமுற்று இருங்கள். உங்களுக்கே வெற்றி கிட்டும் என்று கூறிச் சென்று விட்டார். அப்பெரியாரின் வாக்கில் நம்பிக்கை இருந்தும், மனத்தில் கலக்கத்துடனேயே முப்பது நாட்களையும் கழித்தனர். வைணவர்களோ எனில் சந்தோஷத்துடன் நமது தெய்வம் தான் பெரிது என்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இராது என்று வாளாவிருந்தனர். 31-வது நாள் பலசக்கரங்கள் பூட்டிய வண்டியில் பெட்டியில் வைத்து மூடிய திருமாலை வைத்து அரசவைக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினர். சைவர்களோ எனில் கையில் பெரியார் கொடுத்த பெட்டியை சிரமமின்றி எடுத்துக் கொண்டு அரசவைக்கு உள்ளேயே சென்று விட்டனர். வைணவர்கள் வாயிலில் பாதுகாப்பாக நின்று ஒருவரை மட்டும் உள்ளே அனுப்பி, தங்களது தெய்வத்தைக் காண அரசனை அழைத்து வர அனுப்பினர். அரசனும் அவர்கள் அழைப்பை ஏற்று வாசலில் வர வைணவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அப்பெட்டியடித் திறந்து, உலகையே மயக்கும் அழகு வாய்ந்த விஷ்ணுவை அரசனுக்குக் காண்பித்தனர். அரசனும் அவ்வழக்கைக் கண்டு மயங்கிவிட்டான். உடனே அருகில் உள்ள மந்திரியை அழைத்து விஷ்ணுவே பெரியவர் என்று எழுத ஆணையிட்டான். ஆனால் மந்திரிகள் ஒரு தரப்பு தீர்ப்பு நியாய விரோதம். மறுதரப்பாரையும் விசாரித்து அறிந்த பின் எழுதலாம் எனக் கூறிய பின் வேண்டா வெறுப்பாக அரசவை ஏகினான். சைவர்களைப் பார்த்து உங்கள் தெய்வம் எங்கே என்று கேட்க அப்பெரியவர் அளித்தா பெட்டியை அரசன் கையில் கொடுத்தனர். அரசனும் அப்பெட்டியை ஒன்றன் பின் ஒன்றாக 15 பெட்டிகள் திறந்த பின் 16-வது பெட்டி தங்கத்தால் ஆனதாயும் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டதாயும் மிகச்சிறிதாயும் அழகு வாய்ந்து ஒளி வீசுகின்றதாயுமிருந்தது. அதைத் திறந்தான். அதனுள் ஒரு தங்கச் சுருள் இருந்தது. அதைப் பிரித்தான். அதில் “சர்வம் சிவமயம் ஜகத்” (உலகம் யாவும் சிவன் உருக் கொண்டது) என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட உடனேயே அரசனுக்கு எங்கும் சிவன் உரு தோற்றமளித்தது. வெளியேயுள்ள விஷ்ணு வடிவத்திலும் சிவனுடைய உருவமே தோற்றமளித்தது. இதைக் கண்டு பயந்த அரசன் மந்திரிகளை அழைத்து நான் முதலில் கூறியது மிக மிகத் தவறு. உங்களுடைய அறிவுரையை கேளாதிருப்பின் நான் மகா பாவியாவேன். என்னைக் காப்பாற்றினீர்கள். சிவனைக் காட்டிலும் உயரிய தெய்வம் வேறு எதுவும் இல்லை. “எல்லாம் சிவமயம்” என்று தீர்ப்பளித்து சைவர்களை விசேஷ மரியாதைகளுடன் அனுப்பி வைத்து தன் அபராதம் நீங்க அன்று சிவனுக்கு விசேஷ பூஜைகள் செய்து கெளரவித்தான். இதன் கருத்தையே தான் ஶ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர், சிவோத்கர்ஷ மஞ்சரியில் சிவன்தான் உலகத்தலைவன், அவரே தான் எனது வழிபாட்டு தெய்வம். அவரையன்றி வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் நான் கூற மாட்டேன் என்று 51 ச்லோகங்களால் மிக அழகாகப் போற்றியிருக்கிறார். இதையே தான் “சிவபத மணிமாலா” என்னும் நூலிலும் ஆதிசங்கரர் சிவபதத்தைக் காட்டிலும் வேறு உயர்ந்தது யாதும் இல்லை. உலகம் சிவமயம், அவ்வாறு நினைப்பவர்களுக்கு மங்களமே ஏற்படும் என்று உறுதியாக கூறுகிறார்

திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட்காம் சிவபூசனம்

புதன், 27 மார்ச், 2019

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு

பன்னிரு தமிழ் வேத மாநாட்டு அழைப்பு
30 ஆம் ஆண்டு ( 100 தமிழ் வேத மாநாட்டின் நிறைவு விழா)
திருமுறைகளின் சதாபிசேக விழா
நாள் 30.03.2019 31.03.2019, மற்றும்1.04.2019 ( சனி,ஞாயிறு,திங்கள்)
இடம் ; காஞ்சீபுரம் /கே.பி.கே. திருமண மண்டபம், காமராஜர் சாலை
01.04.2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி அளவில்
திருமுறை நாதருக்கு கோடி அருச்சனை
மற்றும் அனுதினமும் தமிழ் வேத இசை முழக்கமும். ஆன்மீக செம்மல்களின், ஆன்மீக கருத்துரையும், சிவனடியார்களின் தமிழ் வேத இசை முழக்கங்களும் நடைபெறும்
மேலும் தெளிவான விபரங்கள் அறிய
தமிழ் வேதம் மார்ச் 2019 இதழ் வாசிக்கவும்
சிவநேயச் செல்வர்களை அன்புடன் சிவ அருள் பெற அழைக்கும்;
விழா அமைப்பாளர், சிவத்தொண்டு சிவ.ஆ.பக்தவச்சலம் அய்யா அவர்கள் குடியாத்தம், ஆசிரியர் தமிழ் வேதம் மாத இதழ்
நற்றுணையாவது நமச்சிவாயவே
திருச்சிற்றம்பலம்

ஞானதீபம் ஏற்றுங்கள்

சிவபெருமானாருடைய திரு கழலடி அடைய ஞானதீபம் ஏற்றுங்கள்
என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறும் வழியை காண்போம்  உடம்பென்னும் வீட்டினுள் மனம்என்கிற அகல் விளக்கு வைத்து சிவ உணர்வை நெய்யாக ஊற்றி உயிர் என்னும்திரியை இட்டு, சிவஞானம் என்கிற ஒளியை ஏற்றி அசைவற்ற தியானத்திலிருந்தால் சிவபெருமானாருடைய கழலடி காணலாம்
பாடல் திருமுறை 4.75.4

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
 

உடம்பே வீடு. உள்ளமே தகளி ( அகல் ), உணர்வே நெய். உயிரே திரி. ஞானமே தீ. உடலான வீட்டில், சிவமானபொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது. விளக்கேற்றிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக் கொள்ள, அச் சிவஞானப்பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான பொருளைக்காணலாம்.

திருநாவுக்கரசர் அருளியுள்ள மெய்யே விளக்கு என்பது கருணை அல்லது அருள் என்பதாகும். மனித மனங்களில் அருள் கருணை குடிகொள்ள வேண்டும்


பாடல் எண் : 9
மெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே  4.54,9 திருமு.

 இந்த கருணை உள்ளத்ததில் வளர்ந்து கொண்டே வரவேண்டும். மனம் என்கிற அறைக்கு ஐம்பொறிகள் / மெய்,வாய்,கண்,மூக்கு, காது என்ற ஐந்து சன்னல்கள் உண்டு. இந்த பண்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வர வேண்டும். இதனைத்தான் வேண்டளவு உயரத்துண்டுதல் என்கிறார்
 ஆசை அல்லது சுயநலம் என்கிற காற்ற (உணர்வு) ஐந்து சன்னல்களின் வழியாக (ஐம்பொறிகளின் வாயிலாக) மனத்தினுள் நுழைந்து விடுமானால் கருணை என்கிற தீபம் நிலைத்து நிற்காது. ஆதலால் ஐந்து பொறிப் புலன்களையும் மடைமாற்றம் செய்து விட்டால் அவற்றின் சேட்டைகள் நம்மிடம் செல்லாமல் போய்விடும்.
  உலக சுகபோகங்களில் நம் மனததை இழுத்துச் செல்லும்ஐந்து பொறி புலன்கட்கும் மாற்று வேலையை கொடுத்து பழக வேண்டும்.
இப்படி செய்தால் அவை நம்மனத்தில் ஏற்றி வைத்துள்ள கருணை என்கிற தீபத்தை (கருணை உணர்வை) மேன்மேலும் பிரகாசிக்க செய்யும், மனத்தில் கருணை என்கிற உணர்வு நிலைத்து நிற்குமானால் கருணையே வடிவமான சிவபெருமான் திருவடியை காணலாம் / அடையலாம்
மனம் மடைமாற்றத்திற்கு சேரமான் பெருமான் நாயானார் கூறும் பாடல்
சிந்தனை செய்ய மனமமைத்
    தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
    தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
    தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
    கிவையான் விதித்தனவே

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.
  நம்முடைய மனம் எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை எப்பொழுதும் சிவபெருமானாரை நினைக்கும்படி செய்ய வேண்டும்.  வாயால் வேண்டாதவற்றை தீயனவற்றை பேசுகிறோம். அந்த வாய் இறைவனின் புகழை பேசவேண்டும்.
யார் யாரையோ தலையும் கையும் வணங்கி வந்தன. இனி அவை எம்பெருமான் சிவனையே வணங்கும் படி செய்ய வேண்டும்
நிலையில்லா பொருள்களின் மேல் செலுத்தும் அன்பை இறைவன் பால் செலுத்த செய்ய வேண்டும்
 இப்படி செய்து உடலுடன் கயிலாயம் சென்றவர் சேரமான் பெருமான் நாயனார் இவர் கூறுவதை நாம் காெள்ள வேண்டும் கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் கடவுள் வியாபாரிகளின் சொற்களை தள்ள வேண்டும்
 அழகிய செந்தமிழ் பாடல்களால் இறைவழிபாடு செய்ய வேண்டும்
 தாய்மொழியில் இறைவழிபாடு செய்வது தாய்பால் போலவாகும்
தீந்தமிழ் பாடல்கள் பாடும் போது மனம் இறைமையில் ஒன்றும். நம்மை இறைமையுடன் இணைக்கும் பாலம் செந்தமிழ் பாடல்கள் என்பதை மறக்கக் கூடாது. ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்
 கடவுளைக் கண்டுணர்ந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ள உரிய வழிகளை விட்டுவிடுகிறோம். பரிகாரம் என்ற பெயரில் எள்ளுப் பொட்டலம் போடுவது,சனிக்கிரக வழிபாடு,ராகு கேது கிரக வழிபாடு, இரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து படைப்பது போன்ற வேண்டாததும், பயனற்றதுமான சடங்குகளையே நம்பி அப்பாவி மக்கள்  மோசம் போகிறார்கள்.
 வாழ்க்கையில் பிற்பகுதி முதுமை பருவத்தில் கழிந்து விடுகின்றது. (இயலாமையால் கழிந்து விடுகின்றது) இடையில் எஞ்சும் சில ஆண்டுகளில் அச்சம், ஆசை, வெகுளி அழுக்காறு என கழிந்து விடுகிறது.
 எனவே புல்லிய சடையையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமான் மேல் இனியும் தாமதம் செய்யாமல் விரைந்து சரண்  அடைய வேண்டும். இனியும் இறை வழிபாட்டிற்கு காலம் இருக்கின்றது பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது பாெருளை நாடி பொருளை ஈட்டுவதிலேயும் மரணம் நெருங்கி வந்து விடும் காலம் வந்து நம்மால் எதுவும் செய்ய முடியாத காலம் உதயம் ஆகும் முன் இனியும் காலம்தாழ்த்தாது  இறைவன் பான் நேரத்தை செலுத்தி அவன் அன்பு கருணை பெற மெய் தீபம் ஏற்றி அவன் கருணை பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்

வெள்ளி, 22 மார்ச், 2019

29வது உழவாரப்பணி

இராஜபாளையம் / இராமலிங்காபுரம் திருநாவுக்கரசர் குருகுலத்தின் மூலம் நடைபெறும் 29வது உழவாரப்பணிபடம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி மற்றும் உரை
நாள் 31.03.2019 ஞாயிறு
இடம் ஆள்வார்குறிச்சி / நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ஆள்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஆவுடையம்பாள் உடனுறை நரசிங்கநாதர்
ஆலயத்தில் உழவாரப்பணியுடன் ஆன்மீக கலந்தாய்வு பயிற்சி வகுப்பும், தேவார, திருவாசக திருமுறை பராயண வகுப்பும் சிறப்புடன் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிவனடியார்கள் யாவரும் கலந்து பயன் அடைய அன்புடன் அழைக்கப்படுகிறது
இவ் உழவாரப்பணிக்கு வருகைதரும் சிவனடியார்களுக்காக முதல்நாள் (30,03,2019 சனிக்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் திருநாவுக்கரசர் குருகுலத்திலிருந்து வாகனம் (வேன்) செல்ல உள்ளது எனவே சிவனடியார்கள் அனைவரும் முதல்நாள் இரவு வந்து உழவாரப்பணியில் கலந்து சிவன் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகொள்கிறோம்.
இக்கோயிலின் சிறப்பு ; இது முற்காலத்தில் பிரசித்தி பெற்ற சிவ மிக பழைமையான சிவ ஆலயத்துடன் தற்போது
சக்தி வழிபாட்டிற்கான சிறந்த தலமாக விளங்குகிறது.
திருமண தடைகள் நீங்க பரிகாரத்தலம்
கணவர் நீண்ட ஆயுள் பெறவும் நோய் இன்றி இனிது வாழ வேண்டும் தலம்
சிவனருள் பெற அன்புடன் அழைக்கும் நம் குருநாதர் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலத்தின் குருநாதர்
சிவச்சாரியார் சிவத்திரு. க.கணேசன் அய்யா
திருநாவுக்கரசர் குருகுலம்,இராமலிங்காபுரம்
தொடர்புக்கு ; 99521 95895. 8637601171
இராஜபாளையம்
உழவாரம் அதுவே தேவராம் இறைப்பணியுடன் இணைந்த ஆன்மீகப்பணி
திருச்சிற்றம்பலம்

வியாழன், 21 மார்ச், 2019

மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் 1

மச்ச முனிவரின் சித்த ஞான சபை: ஒரு பழம் பெரும் புத்தகம் 1: கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய  'ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூலில் எழுதியுள்ள பல விடய...

சனி, 9 மார்ச், 2019

திரி குண ரகசியம்



Image result for திரிகுண ரஹஸ்யம்
திரி குண ரகசியம்

வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு.
 இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.
மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.


இறைவன் பிரபஞ்சத்தில் முழுமையான நிர்குணமாகவும், அதே சமயம் குணமாக மாற்றமடைந்து வடிவமான திரிகுணத்தில் அமர்ந்ததை திருமூலர் தன் மந்திரத்தில் விளக்குகிறார்.

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகில் எடுத்த சதாசிவன் தானே
                                                      - 1713

திருச்சிற்றம்பலம்

பக்தி யோகம்











பக்தி யோகம்


யோக மார்க்கத்தில் ஐந்து முக்கிய யோக முறைகளில் பக்தி யோகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் உணர்வு மிகுந்த ஆளாக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய யோக மார்க்கம் பக்தி என்பதே ஆகும். பக்தி என்பது நம் உணர்ச்சிகளால் உருவாகக்கூடியது. பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பக்தி காற்றின் வடிவம் கொண்டது.  நம் உணர்வுகளும் காற்றை போல நிலையற்றது அதே சமயம் இவ்வுலகில் காற்று இல்லாமல் வாழவும் இயலாது. 
 நம் கலாச்சாரத்தில் பக்தியோகம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தென்னகம் பக்தியில் மிக சிறப்பு வாய்ந்தது என பாகவதமும் , நாரத பக்தி சூத்திரமும் சொல்லுகின்றது. சிவ பக்தியில் மிகுந்த நாயன்மார்களும், வைணவ பக்தியில் மிகுந்த ஆழ்வார்கள் என பக்தியில் அதிக எண்ணிக்கையாளர்களை கொண்டது தமிழ் தேசம்.

உலக உயிர்களின் மேல் வைக்கும் உணர்வுகளை நாம் இறைவனிடத்தில் செலுத்தி அதனால் இறைவனுடன் கலப்பதே பக்தி யோகம்.
 இறைவனை நீங்கள் தாயாக, தந்தையாக கொண்டு பக்தி செய்யலாம். பெரும்பாலும் இப்படித்தான் பக்தி செய்கிறார்கள். காதலனாக காதலியாக கண்டு பக்தி செய்யலாம்.  ஐய்யயோ இது தவறாயிற்றே என பாவச்செயலை போல சிந்திக்க வேண்டாம். இதுவும் பக்தியே. ஆண்டாளும், மீராவும் இதைத்தானே பக்தியாக செய்தார்கள்? மேலும் குழந்தையாக, நண்பனாக, முதலாளியாக இப்படி ஐந்துவகையாக உணர்வை கொட்டி பக்தி செய்யலாம்.

 தற்காலத்தில் பக்தியை உங்களுக்குள் நிலை நிறுத்தவும் பக்தி மாசடையாமல் இருக்கவும் பாதுகாப்பது அவசியமாகிறது. 

உதாரணமாக தண்ணீரை தேக்கி வைக்கிறீர்கள் என்றால் அடிக்கடி அதை சுத்திகரித்து பராமரிக்க வேண்டும் அப்பொழுது தான் அதன் தன்மை குறையாமல் நாம் பயன்படுத்த முடியும். அது போலவே பக்தியை நாம் பாதுகாக்க ஒன்பது வழிகள் உண்டு.  ஐவகை பக்தியில் நீங்கள் எதை தேர்ந்து எடுத்தாலும் இந்த ஒன்பது வழிகள் பக்தியை மேம்படுத்த உதவும். நீங்கள் எப்படிப்பட்ட பக்தி செய்தாலும் இந்த ஒன்பது வழிகளின் அனைத்து வழிகளையோ அல்லது ஒன்பதில் அதிக பட்ச வழிகளையோ பின்பற்றினால் தான் அது பரிசுத்த பக்தி என்ற நிலைக்கு உயர்வடையும்
1) ஷ்ரவணம் - காதுகளால் இறைவனை பற்றி கேட்டல் சத்சங்கம் முதலியவை
2)கிர்த்தனம் - இறை நாமத்தை பாடுதல்
3)ஸ்மரணம் - இறை உணர்வுடன் இறைவனை பற்றி சிந்தித்தல், இறை விஷயங்களை படித்தல்
4) பாதசேவனம் - இறைவனின் அடியார்களுக்கு சேவை செய்தல்
5)அர்ச்சனம் - இறைவனை மலர்களாலும் நம் கலாச்சார அடிப்படையிலும் பூஜை செய்தல்
6) வந்தனம் - இறைவனை வணங்குதல்
7) தாஸ்னம் - இறைவனுக்கு அடிமையாக இருக்கும் விழிப்புணர்வுடனே இருத்தல்
8) சகியம் - இறைவனை தோழமையுடன் உணர்வது
9) ஆத்ம நிவேதனம் - தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடுதல். இறை செய்தி உணர்ந்தே செயல்படுதல்.

பக்தி யோகத்தை பற்றி விவரிக்கும் பொழுது பக்தியில் சிறந்தவர்களை பற்றிய கதைகள் மற்றும் இதிகாசங்களை தொடர்புபடுத்தி விளக்கி பெரிய வடிவத்தில் சொல்லலாம்.
நீங்கள் பக்தி மார்க்கத்தில் பயணித்து பக்தியில் உள்ளார்து இறைவனுடன் இரண்டற கலக்க என் ப்ரார்த்தனைகள். 

திருச்சிற்றம்பலம்

புதன், 6 மார்ச், 2019

மயானக் கொள்ளை

இன்று...
மயானக் கொள்ளை..!சிறப்பு பதிவு..!!
மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்..!
இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்..!
அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா..!
அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான்..!
அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன்..
கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது...!
இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள்..!
அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது..!
அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது..!
போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை..
இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி..
அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு..
"கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக!' என சாபமிட்டாள்..!
அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள்..!
அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்..!
அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள்..!
எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள்..!
அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது.!
மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள்..!
உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது..!
அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள்.!
ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது...!
இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை எனும் விழா கொண்டா டப்படுகிறது...!
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இவ்விழா விமரிசையாக நடக்கும். அங்கு மட்டுமல்ல..
எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ..
அங்கெல்லாம் இம்மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பா நடைபெறும்...!!
அன்னை பரமேஸ்வரின் நினைவு இனிய நாளாகட்டும் !!



சனி, 2 மார்ச், 2019

நித்திய வழிபாட்டு முறை

நித்திய வழிபாட்டு முறை

ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

1. நீராடுதல்

நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

திருச்சிற்றம்பலம்

களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

2. பிள்ளையார் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

-திருமூலர்
ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

[இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
திருச்சிற்றம்பலம்
3. சற்குரு வணக்கம்

சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
5. நீரைச்சுத்தி செய்தல்

தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே
-திருமூலர்

திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
7. [ஆ] திருநீறு அணிதல்

திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

அவை வருமாறு

1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
திருச்சிற்றம்பலம்.

8. உறுப்புகளைத் தொடுதல்

“வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

உறுப்புகளைத் தொடும் முறை

வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
கண்களால் காண்மின் களோ.

3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்.

7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.

8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
ஆக்கையாற் பயன் என்.

9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

10. இறை : உற்றார் யார் உளரோ!
உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
நமக்கு உற்றார் யாருளரோ?

11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
கொண்டேன் -[4. அப்பர்]

திருச்சிற்றம்பலம்



9. மந்திரசுத்தி
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
– [5.அப்பர்]
10. பிராணாயாமம்

வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

11. பஞ்ச புராணம் துதித்தல்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

தேவாரம்

அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

திருவாசகம்

ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

திருவிசைப்பா

இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
[9. கருவூர்த்தேவர்]

திருப்பல்லாண்டு

ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
[9. சேந்தனார்]
பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
“உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
[10. சேக்கிழார்]

வாழ்த்துப்பா

ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
[3. சம்பந்தர்]
12. ஜபம்

மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

13. தியானம்

இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

திருச்சிற்றம்பலம்