திங்கள், 20 அக்டோபர், 2014

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2


இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:2 இந்து தர்ம சாஸ்திரங்களில் நம் முன்னோர்களால் வகுத்தறியப்பட்டு சில சாஸ்திர சம்பிரதாயங்கள் இன்றளவும் நம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன, இருப்பினும் நம் முன்னோர்களால் சாஸ்திர ரீதியாக கடைப்பிடிக்கப்பட்டவை தற்போது இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சற்று ஏறக்குறையவும் இன்றளவும் நடைபெறுகிறது, சாஸ்திர முறைப்படி கூறப்பட்ட சம்பிரதாயங்களை அன்றாட வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியாக கடைபிடிப்பது அவசியமாகிறது, "அரிது அரிது மானிடாய் பிறப்பது அரிது" என்கிறார் அவ்வைப் பிராட்டியார், ஆறறிவு பெற்ற மனிதனால் மட்டுமே சிந்தித்து செயல்பட்டு ஆன்மீக வழி நடந்து, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும், மறுபிறவியில்லாத நிலையை அடைய உதவுவது இந்த மானிடப்பிறவியின் வாயிலாகத்தான் முடியும், சைவ சித்தாந்த பெரியோர்களும் முற்பிறவியில பெற்ற கர்ம வினைகளை தீர்க்க இந்த மானிடப் பிறவி நமக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த அரிய பிறவியில் ஆன்ம ஞானம்பெற்று வீடு பேறு என்ற பிறவா நிலையை அடையமுடியும், " கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்", என்று அபிராமி பட்டர் பாடினார்,ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைக்க வேண்டுவதெல்லாம் அவர் கேட்ட இத்தனை வரங்களையெல்லாம் தான் இத்தனை இன்பங்களையும் செல்வங்களையும் பெற்று ஒரு மனிதன் ஆன்மீக நிலையை அடையவும் ஒழுக்க நெறி நடந்து, பிறர்க்கு சான்றாக நடந்து பின்வரும் தலைமுறைக்கு வழிகாட்டவும் தனது ஆன்மீக நிலையை மேம்படுத்தவும் வேத காலந் தொட்டு , நமது முன்னோர்களும் ரிசிகளும் சோதிட வல்லுநர்களும் சமயப் பெருந்தகைகளும் நமக்கு எத்தனையோ தத்துவங்களையும் உபதேசங்களையும் சாஸ்திரங்களையும் அருளி யிருக்கிறார்கள். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளிக்கு சென்று வித்தை பயின்று திருமணம் புரிந்து காதல் விளையாடி, குழந்தை பெற்று , செல்வம் தேடி, ஆன்மீக பாதையில் சென்று மறுமையடையும் வரை, அவன் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளையும் பின் பற்ற வேண்டிய நம் இந்து மத சம்பிரதாயங்கள் என்னென்ன வென்றும் எப்படி செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள், இறந்தவுடன் அவனுடைய உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டி செய்ய வேண்டிய சாஸ்திரங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மனித உடல் உயிர் பிரியும தருவாயில் செய்யவேண்டிய சம்பிரதாயங்கள்: இறக்கும் தருணம் வந்துவிட்டால் மரணப்படுக்கையில் இருந்தால் அவனை கட்டிலில் படுக்க விடக் கூடாது, உள் வீட்டிலும் படுக்க வைக்க கூடாது, தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும், கட்டிலில் படுத்து கொண்டே உயிரை விட்டால் நரகதி அடைவர், ஒரு மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும், தற்காலத்தில் வசதிக்காக எளிதாக பிரசவம் பார்க்க பெரும்பாலும் பிரசவ விடுதிகளில் கட்டிலில் தான் பிரசவங்கள் நடக்கின்றன, இறக்கும் போகும் மனிதனுக்கு துளசி, சாளக்கிராமம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்டவும், சிவ நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும், புண்ணிய சாலிகளுக்கு முகத்திலுள்ள துவாரங்கள் மூலமாகவும், சித்தர் ஞானிகளுக்கு சிரசு வழியாகவும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும், உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டி சடங்குகள்: பிராணன் போன பின்பு, தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்க வேண்டும், பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும், ஒருவன் இறந்தவுடன் ஒரு யாமம் (சுமார் 3 மணி நேரம்) கழிந்த பின்பு அப்புறப்படுத்த வேண்டும், இரவு 9 நாழிகைக்கு மேல் தகனம் செய்யக் கூடாது, இறந்த உடலுக்கு கொள்ளி வைப்பது யார்? பிறவியில் மூத்தவனே கொள்ளி வைக்க வேண்டும், அவன் இல்லாவிடில் இருப்பவர்களுள் மூத்தவன் கர்மஞ் செய்ய வேண்டும், எல்லா பிரேத காரியங்களிலும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும், கொள்ளி வைப்பவர் அக்கினியை சட்டியில் எடுத்துக் கொண்டு முதலில் புறப்பட வேண்டும் அக்கினிக்கு பின் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,மற்றவர்கள் பிரேத்ததை தொடர்ந்து வரவேண்டும், பிள்ளைக்கு 2 வயதுக்குள் கர்மஞ் செய்ய நேரிட்டால் பக்கத்திலிருக்கும் வேறொருவர் செய்யலாம், 3 வயது முதல் 7 வயது வரை கொள்ளியை பையனே கொள்ளி வைக்க சொல்லி, பிற காரியங்களை நெருங்கிய உறவினர்கள் செய்யலாம், தகனம் செய்யுமிடத்தில் பிரேதத்தை தெற்குப்புறம் தலையிருக்கும்படி வைக்க வேண்டும், இதற்கான காரியம் செய்பவர்களும் அவருடைய தாயாதி வழியினரும் இறந்தவருக்கு வாய்கரிசி 3 முறை போட வேண்டும், சிதையின் கிழக்குப் புறத்தில் மேற்கு நோக்கி நின்று கொண்டு பிரேதத்தின் மார்பில் அக்கியை இட வேண்டும், பிறகு சிதையின் வடக்கு புறம் தெற்குநோக்கி நின்று கொண்டு அக்கினியை தொழுது மூன்று முறை ஓம் என் உச்சரிக்க வேண்டும், சிதைக்கு தீயிட்ட பின் திரும்பி பார்க்காது சென்று விட வேண்டும், பின் தலைமுழுகி ஸ்தானம் செய்ய வேண்டும், பின் உறவின்களுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும், பின் 10 வது நாள், அல்லது 16 வது நாள் கழித்து உரிய காரியங்களை செய்ய வேண்டும், காரியங்கள் செய்யும் வீட்டில் பசுஞ் சாணத்தால் மெழுகி புன்யாக வசனம் செய்யவும், சித்தி பெற்ற உடல், ஞானிகள் உடலை புதைக்கத்தான்வேண்டும், அதாவது சமாதி செய்தல் வேண்டும், சிறு குழந்தைகள் இறந்தாலும் புதைக்கத்தான் வேண்டும், தகனம் செய்தல் கூடாது, ஒருவனுக்கு பெற்ற தாய் தந்தை இறநதால் ஒரு வருடம் வரை தீட்டு உண்டு. மனைவி இறந்தால் 3 மாதமும் சகோதர்களுக்கு ஒன்றை மாதமும் தாயாதிகள் இறந்தால் ஒரு மாதமும் தீட்டு உண்டு, இந்த தீட்டு நாட்களில் கோவில்களுக்கு செல்லக் கூடாது, சுபகாரியம் செய்யக் கூடாது, நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாது, தீட்டுக்காலம் முடிந்த பின் சிராத்தம் செய்ய வேண்டும், சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும், இறந்த திதியை கணக்கிட்டு சிரார்த்தம் வருடாவருடம் பித்தருக்களுக்கு செய்ய வேண்டும, பிதுர்தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் சிறிது எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும், திருச்சிற்றம்பல் ஒம் நமசிவாயம் பிற ஆன்மீக தகவல்களுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக