சனி, 18 அக்டோபர், 2014

அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை


அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை இந்துமத்தில் சில கலாச்சாரங்கள் ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கப் படுகின்றன, இவைகள் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மனித வாழ்க்கையில் எவ்வாறு இன்றைய சூழலில் எப்படி பயன்படுகிறது என்பதை ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சில; இந்து பண்டிகை காலங்களில் அர்த்தமுள்ள இந்து கலாச்சார நம்பிக்கை இந்துமத்தில் சில கலாச்சாரங்கள் ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கப் படுகின்றன, இவைகள் ஆன்மீக ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மனித வாழ்க்கையில் எவ்வாறு இன்றைய சூழலில் எப்படி பயன்படுகிறது என்பதை ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சில; இந்து பண்டிகை காலங்களில் 1) விரதம் ( உண்ணா நோன்பு ) இருத்தல் ஆன்மீக ரீதியாக; இறைவனை நினைந்து விரதம் இருப்பதால் அன்று விரதம் முடிக்கும் வரை இறைவனையே அல்லது இறைவிையையே நினக்க வழிபட வழிசெய்கிறது, இதனால் பக்தி நெறி கூடுகிறது, நாம் செய்த பாவ கர்ம வினைகளுக்கு ஒருநாள் உண்ணா விரதம் இருந்து எனது பாவச் ெசயலைக் கழிக்கிறேன் என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம், அறிவு ரீதியாக; இன்றைய சூழலில் உண்ணா விரதம் உடலுக்கு மிக ஊக்கமளிக்கும் ெசயலாக உள்ளது, மனித உடல் என்ற இயந்திரத்திற்கு ஓய்வு என அளித்து உடல் உறுப்புகள் தேய்மானம் மற்றும் ஜீரண அஜீரண செயலுக்கு மிக உகந்ததாக அமைகிறது, 2) கோவில்களில் பிரதாட்சனம் செய்தல் இது மூன்று வகைப் படும் அவை . அங்க பிரதட்சனம், அடி பிரதட்சனம் , வலம் வரும் பிரதட்சனம், (கோவிலை பல முறை சுற்றுதல் 9 முறை, 108 முறை, கிரிவலம் என பல முறை ) ஆன்மீ ரீதியாக; கோவிலை வலம் வரும் போது நம் எ்ண்ண அலைகள் இறைவனைப் பற்றி சிந்தனைகள் பிரதட்சனம் செய்யும் ேபாது இருந்து கொண்ட இருப்பதால் கருவறையை சுற்றும் ேபாது நமது எண்ணங்கள் மற்றும் இறைவனைப்பற்றி பாடும் பசனைப் பாடல்கள் மற்றும் இறைவனைப்பற்றி சுலோகங்களால் இறையருள் நமக்கு கிட்டும் நிலை ஏற்படுகிறது, மேலும் ந்ம் உடலை நாமே வருத்தும் நிலை யினால் ந்ம் கர்மா பாவத்திற்கு பாவ மன்னிப்பு ேகாறும் விதமாகவும் அமைகிறது, அறிவு ரீதியாக; நம் உடலால் நடக்கும் போதும் வலம் வருவதால் இன்றைய சக்கரை நோயலிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியான நடைப்பயிற்சி, மற்றும் அங்கப்பிரதட்சனம் செய்வதால் உடல் பூமியில் உருளப்படுவதால் இன்றைய நவீன சிகிச்சையான அக்குப்ஞ்சர் சிகிச்சைக்கும் பிசியேதரபி என்ற உடல் பயிற்சி சிகிச்சைக்கும் இதுவே காரணமாகிறது, தொடர்ச்சி; பிரதட்சனம் முறைகளை பார்த்தோம் , அடுத்ததாக கோவில் தெய்வங்களு்க்கு தெய்வங்களுக்கு தகுந்தாற் போல் நேர்த்திக்கடன் என்று சொல்லப்படுகின்ற சில சம்பிரதாயங்கள் முடிகாணிக்கை ; இந்த முடிகாணிக்கை சிறு குழந்தைகள் பிறந்த ஒரு வயது க்குள் தனது குலதெய்வக் ேகாவில்களில் முதலில் வளர்ந்த முடியை அத்தெய்வத்திற்கு காணிக்கையாக்கி காதுகுத்து என்ற சடங்குகள் இந்து மதத்திலுள்ள எல்லா சமுத்தார்களிடமு்ம் செய்யும் சடங்காகும், இதனை ஆன்மீக ரீதியாக கவனித்தால் நம் குலதெய்வத்திற்கு அக்குழந்தையினை அறிமுகப்படுத்தி இறைவா இக்குழந்தை இந்த பிரபஞ்சத்தில் உதித்த உயிர் இதனை தீய குணங்களிலிருந்து காப்பாற்றவும், நல்ல பண்புக்ள வளர இறைவனிடம் வேண்டும் நோக்கத்தில் செய்யும் சடங்காகும், இதனை பெரியவர்கள் செய்யும் போது எனக்கு இந்த முடியினால் உண்டான அழகை இழக்கிறேன், என்னுடைய தவறை மன்னித்து எனக்கு நல்ல அருள் வேண்டுகின்றனா், தற்காலத்தில் இளம் வயது பெண்கள் கூட இந்த காணிக்கையை ெசய்து தனது நேர்த்திக் கடன் என்ற தனக்குரிய தண்டனையாக செய்து பாவம் விமோசனம் பெறுகிறார்கள், அறிவார்ந்த ரீதியாக பார்த்தால் சில தாவரங்களில் பயிரின் வளர்ச்சிையைக் துரிதப்படுத்த அல்லது மிகைப்படுத்த பாதிக்கப் பட்ட தொந்தரவுகளிலிருந்து விடுபட முடிகாணிக்கை என்ற சம்பிரதாயத்தால் அறிவார்ந்த நன்ைமயாகவும் ஆகிறது, இதனால் முடி வளரவும், தானே உதிரும் முடி நிற்கவும் இது ஆக்க பூர்வமான ந்ன்மையாகிறது, பூக்குழி இறங்குதல் ( தீ மிதித்தல், அக்கினிதட்டு எடுத்தல்), காவடி எடுத்தல் இது ஆன்மீக ரீதியாக; அம்மன் தெய்வத்தை வேண்டி தான் செய்த பாவச் செயல்களை மன்னித்து பட்ட துயரங்கள் இந்த அனல் போன்று சாம்பலாகி எனது இன்னல்கள் யாவும் இந்த தீயினால் வெந்திட வேண்டுதல், இதற்காக சிலர் சில தினங்கள் அம்மனை ேவண்டி விரதங்கள் இருப்பதும், ஒவ்வொரு பொழுதிலும் அந்த இறை நாமத்தை நினைத்துக் ெகாண்டே இருக்க செய்கிறது, இந்த விரத நாட்களில் குடும்பத்தில் கூடா நோன்பும் உணவு கட்டுப்பாடும், அசைவ உணவுகள் தவிர்ப்பதும் கையாளப்பட்டு இறை அன்பு பெருக வாய்ப்பு தருகிறது, அறிவார்ந்த ரீதியாக இந்நாளில் விரதம் இருப்பதால் சில நல்ல ஒழுக்க நெறிகள் கடைபிடிக்க வாய்ப்பளிக்கிறது, ஆன்களாயின் மது அருந்துவது புகைபிடிப்பது போன்ற தீய பழக்கங்கள் இந் நாளில் நிறுத்தப்படுவதால் உடல் நலம் காக்கப்படுகிறது, அன்னதானம் அளித்தல், அம்மனுக்கு கூழ்வார்த்தல் இதனால் ஆன்மீக ரீதியாக கண்டால் இதன் மூலம் எளிய ஏழைகளுக்கு உணவளித்து இறை ஆத்மா புண்ணியம் ெபறுகிறது, அறிவார்த்த ரீதியாக கண்டால் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மூலம் பசிபிணி நீக்கப்பட்டும், எல்லோருக்கும் ஒரே உணவு, எல்லோரும் சமம் என்ற கொள்கை வலுப்படுகிறது, இதுவே சமபந்தி போசனமும் அடங்கும், இதுபோல இன்னும் பல சம்பிரதாயங்கள் ஆத்ம, ஆன்மீக ரீதியாக , அறிவார்ந்த ரீதியாகவும் நவநாகரீக இவ்வாழ்க்கையில் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது இன்னும் தொடரும் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக