திங்கள், 20 அக்டோபர், 2014

இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்:


இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் பயனுள்ள சம்பிரதாயங்கள்: 1), கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. 2, தனது இடது கையால் எண்ணெய் தேய்த்தல், இடது கையால் அன்னம் இடுதல், இடது கையால் படுக்கை விரித்தல் கூடாத பழக்கவழக்கம், 3, குரு, நோயாளி, கர்ப்பிணி,மருத்துவர் சந்நியாசி முதலியோர்களுக்கு ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவி செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும். 4,சகோதர, சகோதரிகள் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். 5,பசு, தேர், நெய்குடம், அரசு, வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் குறுக்கிட்டால் அதனை வலது புறம் சுற்றி செல்ல வேண்டும், 6, குடும்பஸ்தன் ஒரு கையை தரையில் ஊன்றியக் கொண்டு உணவு உண்ணக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது, 7, கன்ளுக்குட்டியின் கயிறை தாண்டக்கூடாது,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்க கூடாது. 8, நெருப்பை வாயால் ஊதக்கூடாது, 9, குழந்தை யில்லாதவன், திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழுபவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுப காரிய நிகழ்வுகளில் முன்னிறுத்தக் கூடாது, 10, சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு , புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர்அருந்த வேண்டும், 11, கணவன் சாப்பிட்ட பின்பே மனைவி சாப்பிட வேண்டும், திருமணத்திலும் பந்தியிலும், பிரயாணத்திலும் சேர்ந்து சாப்பிடலாம், 12, உள்ளாடை யின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது, ஆன்மீக சடங்குகளில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்கு செல்லவோ கூடாது. 13, சாப்பிட்ட பின் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும், வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்பு கிள்ளி எறிந்து விட வேண்டும், 14, சுண்ணாம்பு இல்லாத வேற்றிலையோ, வெறும் பாக்கோ போடக்கூடாது, சுண்ணம்பு வெற்றிலையின் பின் பக்கம்தான் தடவ வேண்டும். 15, குரு,சோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இவற்றிக்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது, 16, தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும், இரண்டு கையாலும் சொரிதல் கட்டாயம் கூடாது, 17, இருகையாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது, 18, வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். 19, பேசும் போது துரும்பைக் கிள்ளக் கூடாது, பேசுவர் துண்டிப்பாதாக தோன்றும், 20, ஈரக்காலுடன் படுக்கக் கூடாது. 21, வடக்கிலும், கோணத்திசையிலும், தலைவைத்து படுக்கக் கூடாது, நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது, 22, குடும்பப் பெண்கள் தலைமுடியை விரித்து போட்டுக் கொண்டு வெளியில் செல்லவோ சுபகாரியங்களிலுக்கு செல்லவோ கூடாது, 23, ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது, 24, சிகரெட், பீடி தீ துண்டுகளை அணைக்காமல் தரையில் போட்டு காலால் தேய்க்கக் கூடாது, 25, பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது, இவை அனைத்தும் கூடா நட்பு 26, பெற்றதாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறர்மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயசித்தமற்ற பாவங்கள் 27,அங்ககீனம் உள்ளவர்வரகள், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்ட கூடாது, 28, பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை ஆசனம் இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது. 29, பிணப்புகை, இளவெயில் தீப நிழல் இவை நம்மீது படக்கூடாது. 30, பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது கூடாது, 31, பசு மாட்டிற்கு ( கோமாதா) பசும்புல் ஒரு கைப்படியாவது கொடுப்பது சிறந்தது, " யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை " திருமூலர் மந்திரம் 32, உண்ணும் போது பிறர் பார்த்திருக்க உண்ணக் கூடாது, " யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி" பிறருக்கு ஈந்து உண்ணல் வேண்டும், 33, பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது கூடாது, 34, தூங்குபவரை தீடீரென்ற எழுப்பக் கூடாது, தூங்கும் குழந்தையை பார்த்து ரசிக்கக் கூடாது. 35,தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக் கூடாது. 36, வீட்டிற்குள் நுழையும் போது வாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும் 37, கையால் மோரை குழப்பக் கூடாது. 38, தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனைவியுடைய மர்ம, உறுப்புக்களையும், பிற பெண்களுடையதையும்பார்க்க கூடாது. 39, நம்மை ஒருவர் கேட்காத வரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது, தொகுத்தவர் வை, பூமாலை, சுந்தரபாண்டியம் மேலும் ஆன்மீகச் செய்திகளுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.weebly.com/weebly/main.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக