தமிழ் திருமறைகள் கூறும் வைத்தியம்
தமிழ் திருமறைகள் மற்றும் தமிழ் பாசுரங்களையும், மந்திரங்களையும் அனுதினமும் ஜெபித்தும், மானிடர் படும் நோய் நொடி துன்பங்களிலிருந்து தங்களை விடுவித்து அதற்குரிய பலாபலன்கள் அடைந்துள்ளனர் நம்முன்னோர்கள், அவைகள் அக்காலத்திற்கு பொருந்துமா? என்பதை நினைப்பதை விட நடந்து அனுபவித்து கூறிய செய்திகள் உண்மையானவைகளாகவே நமக்கு தோன்றுகின்றன. அது மட்டுமன்றி தமிழ் மறைகள் மூலம் சித்தர் பெருமக்கள் அததற்கென மூலிகைகள் மூலம் சித்த வைத்திய முறைகளையும் கையாண்டது அகத்தியர் தொகுத்த சித்த வைத்திய முறைகளைக் கொண்டு அறியலாம். தமிழ் மறை நூல் ஆசிரியர் கள் தொகுத்துப் பாடி அடைந்த பலாபலன்கள் அவர்கள் கூற்றின் வாய்லாக நாம் அறியலாம்,
அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியை அனுதினமும் பாராயணம் செய்தால் சகல தோசங்களும் நீங்கி, சந்தோசமும் செல்வமும் மோட்சமும் சித்திக்கும், தீராத நோய்களும் தீர திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப்பதிகப் பாடல்களை பாடி இந்து சமயத்தின் அடையாளமான திருநீற்றை நெற்றி யில் அணிந்து சகல நோய்களையும் தீர்ககலாம் என்கிறார் சம்பந்தர், பாண்டிய மன்னனுக்கு சூட்டுநோய் நீக்க திருநீற்றை பூசி அவரைக் குணப்படுத்தி " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " எனறு ஆரம்பித்து
" ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயன் திருநீற்றைப்
போற்றி பகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றி த் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும வல்லவர் நல்லவர் தாமே, என்று எல்லா நோய்கள் தீரவும் இதனைப் பாடி இத்திருநீற்றை அணிந்தால் எல்லாப்பிணிகளும் தீரும் என்கிறார், முயலக நோய் என்னும் முடக்குவாத நோய் நீங்க ' துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர் சடை சுற்றி " என்ற பாடலைப் பாடினால் அவர் கூற்றுப்படி " நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலி தண்டமிழ் கொண்டவை ஏத்தச சாரகிலா வினைதானே", என்கிறார், அதுபோல் முன்வினைகள் நீங்கவும் எலும்பு முறிவு முதலியன குணமடையவும் ஒதவேண்டிய பதிகம் " விங்கவிளை கழனிமிகு கடைசியர்கள் ,,,,,,,,,,,, எனத் தொடங்கி " மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே" என்கிறார், அத்துடன் சொரி, படை, மேகம், அம்மை போன்ற பலவகை உடற்பிணிகள் அகல ஓதவேண்டிய பதிகம் " மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி .............. என்று தொடங்கி " தங்கையால் தொழுது தம் நாவின் மேற்கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே. " என்று அருளியுள்ளார், அதுபோலவே
திருநாவுக்கரசர் சுவாமிகள் பாம்பு கடியால் இறந்த குழந்தையை உயிர்பிக்க பாடிய பாடல் கொண்ட விடந்தீர்த்த திருப்பதிகம் " ஒன்றுகொலாம் என்ற பாடல் பாடி பாம்பு ( நஞ்சு) தீர்க்க பயன் பெறலாம், கண்பார்வை இழந்தபோது வன்தொண்டர் என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்ற பாடல் பதிகங்களைக் கொண்டு கண்சம்பந்தான நோய்களை குணமடைய செய்யலாம், ஊமை திக்குவாய் முதலியன நீங்கவும் நன்றாக பேசவும் உதவும் பதிகப் பாடல் திரு மாணிக்கவாசகர்அருளிய " பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் " என்ற பாடல் கொண்டு நல்ல பேச்சிதிறன் கொண்ட குழந்தைகள் அமையவும், ஊமை குழந்தைகள் பேச செய்யவும் இப்பாடல்ளை பாராணம் செய்தால் விரைவில் குணம் பெறலாம், நவக்கிரகங்களால் ஏற்படும் தோசம் நீங்க " மாசறு திங்கள் " என்ற கோளறு பதிகம் தினசரி பாடி பாராயணம் செய்யலாம்,
அருணகிரிநாதர் அருளிய
" நாளென் செயும் வினைதான் என்செயுமென நாடிவந்த
கோள் என்செயும் கொடுங் கூற்றென் செயும் குமரரே சரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்புமெனக்கு முன்னே வந்து தோன்றிடினே, " என்ற கந்தர் அலங்காரப் பாடலைதினமும் பாடினால் துன்பங்கள் தவிர்க்கலாம்
பூர்வ ஜென்ம பாவத்தால் வாழ்க்கையில் எப்போதும் கஸ்டத்தையே அனுபவிப்பவர்கள் " சேல்பட்டழிந்து செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் " என்ற கந்தர்அலங்கார பாடலை பாராயணம் செய்யலாம், வாழ்க்கையில் வழிதெரியாமல் தவிக்கும் போதும் பிரயாணம் செல்லும் போதும் வழித் துணைக்காக பயம் நீங்க பாடும் பாடல் " விழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,, வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே." என்ற பாடலை பாராயணம் செய்யலாம்,
இவ்வாறு ஏகப்பட்ட பாசுரங்களும் பாடல்களும், சுலோகங்களும் உள்ளன, இவற்றை பாராயணம் செய்வதால் சகலவித அனுகூலமும் கிட்டும், சிவகவசம், சக்தி கவசம், நமக்கு வாழ்வின் சிறந்த கவசமாக பாதுகாக்கும், சகலா வல்லி கல்வி மாலை பாடினால் சகல கலைகளும் தேர்ச்சி உண்டாகும், நவரத்தின மாலாவை பாடினால் செலவம் சேரும், கனகதாரா தோத்திரம் பாடினால் மகாலட்சுமி அருள் கிட்டும், செளந்தர்ய லகரி பாடினால் அற்புதமான சக்திகளும் அநேக நன்மைகளும் கிடைக்கும், எனவே அனுதினமும் ஏதேனும் ஒரு தோத்திரப் பாாடல் அல்லது சுலோகங்களை கூறி பாடி எல்லா வல்ல இறையருள் உய்து நலமுடன் வாழ்வோம்,
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக