இந்து சமய சம்பிராதயங்கள் 3
இந்து சமய சம்பிராதயங்களில் பெண்கள் கவனிக்க வேண்டிய சில சாஸ்திர சம்பிரதாயங்களாக வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்த சம்பிரதாயங்கள் யாவும் இன்றளவும் சில சைவ சமய வகுப்பினர்கள் கட்டாயம் இன்றளவும கையாண்டு கடைபிடித்து வருவதை நாம் காணலாம், இருப்பினும் இன்னும் இலைமறை காய்மறையாக உள்ள சிலவற்றை மங்கையர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியது அவசியப்படுகிறது,
1) பெண்கள் கணவன் தூங்கிய பின்பு தூங்கி கணவன் விழிப்பதற்கு முன்பு எழுந்துவிட வேண்டும்.
2, சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து முற்றத்தில் பெருக்கி பசுஞ் சாணந் தெளித்து கோலமிட வேண்டும்.
3, கோலமிடுவதற்கு மஞ்சள் கலந்த அரிசிமாவு, பச்சிலைப் பொடி, குங்குமம் கலந்த அரிசி மாவு இவற்றால் கோலமிட வேண்டும்,
4, சுபகாரியங்களுக்கு ஒரு கோடும், அசுப காரியங்களுக்கு இரண்டு கோடும் போட்டு கோலம் போடக்கூடாது.
5, பூஜை அறை, சமையறை, சாப்பிடுமிடத்தை நாள்தோறும் கழுவுதல் வேண்டும்
6, அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமை, பிற விசேச தினங்களில் வீடு முழுவதும் கழுவ வேண்டும்,
7. மண் பாண்டங்களை குளிக்கும் முன்பு தொடக்கூடாது.
8. தாமிரப் பாத்திரங்களை புளியினாலும், வெஙகலம் பித்தளை பாத்திரங்களை சாம்பலாலும் ஈயப் பாத்திரங்களை சாணத்தாலும், எவர் சில்வர் பீங்கான் பாத்திரத்தை அரப்பு பொடியினாலும் சுத்தப்படுத்தவேண்டும்,
9. குளித்த பின்பு தான் குடிநீர் எடுக்க வேண்டும்
10. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் தோளிலும், தலையிலும் சுமக்கக் கூடாது.
11. சூரிய அஸ்தமன சமயங்களில் மாலை நேரங்களில் கைகால் கழுவி கட்டாயம் விளக்கேற்றி வைக்க வேண்டும்
12. உரல் ,அம்மி, முறம், வாசற்படி உலக்கை இவற்றின் மீது உட்காரக் கூடாது.
13, வீட்டுவிலக்கான முதல் 3 நாட்கள் வீட்டு வேலை ஒன்றும் செய்யக்கூடாது. 5வது நாளில் கணவனை வணங்கி விட்டு வீட்டுப் பணிகளில் ஈடுபடலாம், அன்று கணவனோடு சேர்வது சிறப்பு.
14. விருந்து மற்றும் விசேச நாட்கிளில் வாழையில் உணவு படைத்து பரிமாருதல் மிக சிறப்பு
15. வாழையிலையில் அடியில் சிறிது அரிந்துரிட்டு ( தடிமனான தண்டு) கழுவி விட்டு இலையை போட வேண்டும், சாப்பிடுவர்களின் வலதுபக்கம் இலையின் அடிப்பாகமும், இடக்பக்கம் இலையின் நுனிப்பாகம் இருக்கும்படி போட வேண்டும்.
16, எதையும் கையால் படைக்கக் கூடாது.
17, சாதம், கறி, முதலியவற்றை மண்பாண்டத்தில்வைத்தோ, அல்லது அடுப்பில் வைத்த பாத்திரத்தை வைத்தோ படைத்தல் கூடாது.
18. வீட்டுக்கு வந்த புது மறுமகளையும், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இவர்களை முதலில் சாப்பிட சொல்ல வேண்டும்
19. சாப்பிடும் போது நீர் குடிக்கக் கூடாது. உண்ட பின் தான் குடிக்க வேண்டும்.
20. உணவு அருந்திய பின் குளிக்க கூடாது, மிகவும் தேவைப்பட்டால் 5 நாழிகை (2மணி) கழித்து குளிக்கலாம்
21,ஒருவர் தலையில் முடிந்த பூவைத் தன்தலையில் வைக்கக் கூடாது.
22. தலையில் சூடிய மலரை தானே எடுத்தெரியக் கூடாது
23. கணவரோடு இருக்கும் பெண்கள் தனியாக தாங்கள் மட்டும்விரதம் இருக்கக் கூடாது, கணவரோடு சேர்ந்தே விரதம் இருக்க வேண்டும்.
24. தர்ம சிந்தனை, ஆன்மீக ஆர்வம், தவம், வாய்மை, மன்னித்தல், கருணை, பிறர் பொருளை விரும்பாமை, இக்குணங்கள் பெண்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய குணங்கள்.
25. தீபம் ஏற்றுதல்:
காலையில் உதய காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனதுக்கு முன்பும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்
விளக்கின் திரி 2 திரியினை இணைத்து ஏற்றுவது உத்தமம், தீபத்தை கிழக்கு முகமாக இருக்கும் படி வைத்து தீபமிடேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றுபவர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.
தீபத்திரிகள் வகைகளும் குணங்களும்
பஞ்சுத்திரி - மங்களம்
வாழைத்தண்டு திரி - புத்திர பாக்கியம்
பட்டு நூல்திரி - எல்லாவித சுபங்களும்
தாமரை நூல் திரி - லட்சுமி கடாட்சம்
எண்ணெய் வகைகள்
நல்லெண்ணை - யமபயம் அகலும்
தேங்காய் , இலுப்பை எண்ணெய் - தேக ஆரோக்கியம்,செல்வம் தரும்
நெய் தீபம் - சகல செளபாக்கியம்
விளக்கு வகை:
வெங்கல விளக்கு - பாவம் தீரும்
அகல் விளக்கு - சக்தி தரும்
குத்து விளக்கு - சகல செளபாக்கியம்
தீபம் ஏற்றிவிட்டு மூன்று சக்திகள் மற்றும் குலதெய்வங்களை மனதில் தியானித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் , ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.
சுப மங்கலம்
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக