குறைவிலா நிறைவே கோதிலா அமுதே!
"இறைவன் இன்பவடிவானவன் அவனுடைய உண்மையான சத்து சித்து நிலைகளை அறிந்து இறைவனுடைன் பொருந்தியவர்கள் இன்பமயமாகவே மனம் பொருந்தி விடுவதால் துன்பமான உலகின் ஆசாபாசங்களை நீங்கிவர்களாகி விடுகிறார்கள் - மாணிக்க வாசகர்
மனித பிறவி என்பது மிக முக்கியமானது பிறவி எடுத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். மனிதன் வாழ காற்று, அவசியம் அதுமட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் தாவர ஜங்கங்களுக்கும் காற்று அவசியம். இந்த பிரபஞ்சமே பஞ்ச பூத சக்தியால் இயங்குகிறது, நீர், நெருப்பு, காற்று ஆகாயம், மண் என்ற விகிதப்படி ஒன்றை ஒன்று சார்ந்து தன்னைத்தானே இயக்கி கொண்டுள்ளது. நம் திரேகம் பஞ்ச பூத தத்துவ்ப்படி இயங்குகிறது. மனிதன் வாழ காற்று எனும் பிராணன் உயிர் மூச்சாக இயங்குகிறது. இது நம் திரேகத்தில் ஒரு விகிதச்சாரப்படி உள்ளேயும் வெளியேயும், ஒரே சீராக இயங்குகிறது. இந்த பிராணான காற்று இயங்காவிட்டால்உடல் எந்த இயக்கமும் செயல்படாது. அதே போல் நீர், காற்று அக்கினி ஆகாயம் மண் போன்ற பஞ்ச பூதங்களால் நம் இயக்கி கொண்டுள்ளது, இவை சரியான விகிதாச்சாரப்படி இயங்கி,இந்த உடலை முறையாக இயக்கி கொண்டுள்ளது, நாம் பிராண வாயுவை வெளியிடுகிறோம், தாவரங்கள் பிராணவாயுவை வெளயிட்டு கரிமல வாயுவை உள்வாங்குகிறது, இது போன்றே உலகில் பஞ்சபூத சக்திகள் சமநிலை பெறுகிறது, இதில் ஒன்று குறைபட்டாலும் உடலுக்கும் உலகுக்கும் ஊறுவிளைவிக்கும் , வியாதி பற்றி பாதிப்பு உண்டாகும், இந்த தத்துவத்தை அறிந்த முனிவர்களும் ரிசிகளும் நீண்ட காலம் ஆரோக்கியமும், உடல் பாதிப்பின்றி உடல் வளமுடன் வாழுந்து வந்துள்ளார்கள், அதற்கான நெறிகளையும் நமக்கு போதித்து வந்துள்ளார்கள், அவற்றினை நம் அறிந்து அந்நெறிகளை பின்பற்றி வாழவேண்டும்,
மனித பிறவி மிகவும் அரியது, அறிவின தாயகிய ஒளவை பிராட்டியார்
" அரிது, அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடு நீக்கி பிறத்தல் அரிது
பேடு நிக்கி பிறந்தகாலையும்
ஞானமும் கல்வியும நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வார்ஆயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே, என்கிறார்
மேற்கண்ட வாறு மானிடராய் பிறப்பதன்றி எவ்வித குறைவின்றி பிறப்பது அரிது, அது மட்டுமல்லாது பிறந்த மானிட பிறவிக்கு ஞானமும் கல்வியும் சிறப்புறறிக்க வேண்டும், அப்போததான் மனிதப் பிறவிக்கு சிறப்பு அதிலும் பிறவி எடுத்ததன் சிறப்பு தானமும் தவமுடையோனாய் பிறத்தல் மிகச் சிறப்பாகும், இதனையே வள்ளுவரும்
தானம் தவமும் தக்கார்க்கு
ஏம முடைத்து என்கிறார்
தானம் செய்யும் மனமுடையோனாயும் இறையருள் பெறவும் தன்னையறிய தவத்தினை உடையவனாய் இருப்பின் அவனுக்கு தேவர் உலகம் அதாவது வீடுபேறு வரவேற்க காத்திருக்கிறது, எனவே இந்த பிரபஞ்சத்தில் பிராணனாகிய உயிர் மூச்சை தன் சாதனையால் வசப்படுத்தி தன்னை அறியும் முயற்சியில் நாம் முயல வேண்டும், யோக சாஸ்திரத்தில் தெய்வீக குருவாகிய பதஞ்சலி முனிவர் திருமூலர் அகத்தியர் போகர் போன்ற சித்தர்கள் நமக்கு அறிய பொக்கிசங்களை வாரி வழங்கி சென்றுள்ளார்கள் இப்படி யோக தத்துவங்களையும், தெய்வீக சாதங்களையும் அறிய வேறு எந்த மதத்தினரும் இவ்வளவு விளக்கமாக போதித்ததில்லை. தற்காலத்திலும், யோக சாஸ்திரங்களை பற்றி எழுதியுள்ள ஆசிரிய பெருமக்களும் ஆங்காங்கே மேலெழுந்தவாறியாக எழுதியுள்ளார்கள். சரியை, கிரயை, யோகம், ஞானம் என்ற தத்துவப்படி அனுபவித்து எழுதியுள்ளார்கள், பிறவி எடுத்ததன் பயனை அறிய வேண்டும். இதற்கு வலுவான குரு அருளையும் தத்துவங்களையும் அவர்களிடம் பழகும் முறைகளையும் அவர்களிடம் இருந்து கற்று தேறவேண்டும், அஸ்டாங்க யோகத்தின் தத்துவஙகளையுமம்அவற்றின் வழி சாதனைகையுயம் அபூர்வ சக்திகளையும் பயன் பெற வேண்டும், இறையருள் பெற்ற சித்தர்கள் அவர்கள் பெற்ற அபூர்வ சித்திகளும் அவர்களுடைய உபதேசங்களையும் தங்கள் தத்துவங்களாக கூறியுள்ளார்கள், இந்த பிறப்பெடுத்த மனிதன் தன்னை அறிதலும் தன்னுள் தெய்வீக சகத்தியை உணர்ந்து ஒரு மாபெரும் சாதனை படைத்திட விளங்குவதே பிறப்பின் சாதனையாகும்,
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீக தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://tamilnanbargal.com/node/58972
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக