உன் உள் இருக்கும் மாபெரும் சக்தி
"ஓம்" " அ " காரா " உ" காரா " ம" காரம் அடங்கியதே ஓம் என்ற ஓங்கார மந்திரம், மூன்று மூலமந்திர சக்திகள் உண்டாகி இந்த பிரவணத்திலிருந்து ஐம் பூதங்கள் தோன்றின. இந்த பஞ்ச பூத கூட்டுறவிலிருந்தே அண்ட பகிரண்ட சராசங்களும், நவகிரங்களும், கோடான கோடி நட்சத்திரங்களும் மற்ற சகலும் உண்டாகின.இந்த பிரபஞ்சத்தின் உட்பொருளே நம்முள் உறைகின்றது, நம்மை நாம் அறிந்து கொள்வதாகும், ஆன்மீக ஒளி தெளிவாகப்புலப்பட ஐம்புலங்களையும் அடக்கி மனதில் நிலவி அறிவு ஒருமுனைப்பட்டு இருக்கும் போதுதான் இறைவன் கிருபை கிடைக்கிறது.
முகத்தில் கண் கொண்டு பார்க்கும் மூடர்காள்
அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
மகளுக்கு தாய் தன்மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே? ---- திருமூலர்
எனவே தன்னுள் உறையும் இறைவனை தன் சாதனையால் கண்டு அந்த பேரின்பத்தை அனுபவித்தால் சிற்றின்பம், மற்றும் புறஇன்பங்களை எல்லாம் துச்சமாக மதிக்க தோன்றும். கண் காது முதலியன மூலம் இன்பம் அனுபவிக்க ஆதாரமாக உள்ளது ஆன்மா, இந்த ஆன்மா இன்ப வடிவமானது, இறைவனைத்தியானிக்கும் போது ஏற்படும் இன்பம் ஆன்மாவினால் தான் உணரமுடியும்.
கணமேனு நின் காரணந்தன்மையே கருத்தில்
உண்டும் மாதவர்க்கு ஆனந்தம் உதவினை --- தாயுமானவர்
இறைவனை மனமுருகி பிராத்தனை செய்வதும், அவனின் நாமங்களை எப்போதும் தியானம் செய்தும் மனத்திற்கு சாந்தமும் அருளும் கிட்டும், ஒருவன் எவ்வளவுதான் மனத்தாலும், உடலாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆனந்தம் அடைகின்றான், பக்தியின் பேரின்ப நிலையே அஞுபூதி நிலை பக்தி என்ற சொல்லுக்கு சேவை என்று பெயர், அதுவே அமிர்த சொரூபமாகும், பக்தி மனத்தால் செலுத்தலாம், வாயினால் பாடலாம், செயலால் காண்பிக்கலாம். தெய்வீக நிலை பெற்ற மகான்கள் நமக்கு இறைவழிபாட்டை முறையாக வழிபாடு செய்ய வழிவகுத்துள்ளார்கள். அபூர் தெய்வ சுலோகங்களையும் பீஜ அட்சரங்களையும் பூசை செய்யும் நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளார்கள். அவ்வரிய பொக்கிசங்களை நாமும் ஓதி உணர்ந்தும், பரவசப்பட்டும், பக்தியின் பேரின்ப நிலையை அடைய வேண்டும். அப்படி சக்தி வாய்ந்த சுலோகங்களை தெய்வ சந்நதியிலோ, பூசை அறையிலோ மனமுருகி பிராத்தனை செய்தால், இறைவனுடைய அணுக்கிரகம் பெற முடியும் உள்ளத்தையும், உடலையும் பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் நிலை ஏற்படுகின்றது.
என்னில் யாரும் எமக்கு இனியாரில்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்பாய புறம்போந்து புக்கு
என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே. --- திரு நாவுக்கரசர்
ஆத்மா - சரீரம் - மனம் இம்மூன்றும் வாய்க்கும் போதுதான் உண்மையான பக்தி உண்டாகும். பாவம் செய்யாதிருக்கவும், புண்ணியம் செய்யவும், நமக்கு இறைவன் வழிபாட்டை தவிர வேறு ஒன்றும்சாதனம் இல்லை. இக்கலியுகத்தில் மனிதன் இருக்கு உளநிலையில் அவன் எளிதில் கடைபிடிக்கும் மார்க்கம் பக்தி மார்க்கம் , பக்தி என்பது அறிவு அல்ல, அது ஒரு தனி அனுபவம், இறை உணர்ச்சியால் திழைக்கலாமேயொழிய கூற இயலாது, திருமூலர் கூற்றின்படி மனவி தன் கணவனிடம் கண்ட இன்பத்தை தன் மகளிடம் இயலாதுபோல் இந்த இறை உணர்வும் அப்படித்தான் என்கிறார் திருமூலர்.
இறைவனுடைய திருவுருவை கோவிலில் கண்டு தரிசித்து வழிபட்டு இன்புற்றால் மட்டுமே போதாது, அவன் உருவத்தை தரிசித்து, உள்ளத்தே வைத்து வழிபட வேண்டும்.
அவற்றின் வழிமுறைகள் நான்காகும் என்று ஆகம வழிகள் கூறுகின்றன.
அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன
1, இறைவனுடைய கோவிலை தரிசித்தலும் வலம் வந்து பூசை கண்டு இன்புறுதலும் ஆகும்
2, அவனுடைய பிரதிமையை நாமே முறையான உபச்சாரங்களுடன் பூசிப்பது
3, நம்மில் அவனை காண விழைதல் யோகமாகும்.
4, மெய் என்றும், பொய் என்றும் தேறி தெளிதல் ஞானமாகும்.
புறத்தே செய்யும் வழிபாட்டோடு நின்றுவிட்டால் இலைகள் தழைத்து மரம் பூக்காமல் இருப்பது போன்றதாகும். அல்லது அரும்பாகி பிறகு பூவாகி உதிர்ந்து விடுதல் போன்றதாகும். மேலே காயாகி, கனிந்தால்தான் முழுபயன் உண்டாகும், இந்த நான்கு நிலையினை அரும்பு, மலர், காய், கனி என தாயுமானவர் கூறுகின்றார்,
விரும்பும் சரியை முதல்
மெய்ஞானம் நான்கும்
அரும்பும் மலர், காய், கனி
போல அன்றோ பராபரமே, ---- என்பது திருவாக்கு
சரியையானன் பிறப்பு ஒராயிரம் பிறப்பு. கிரியைாளனுக்கு பிறப்பு நூறாகும், முற்றுகின்ற கிரியா யோகிக்கு ஒரு பிறப்பு. உண்மையான சிவயோகிக்கு இப்பிறப்பில் முக்தி . எனவே இறைவனை காண பக்தியில் திழைக்க, உத்தம குணங்களால் இறைவனை அர்ச்சித்தல் வேண்டும்,. அன்பு கருணை, பக்தி, அருள், பேரின்பம், முக்தி என்ற நிலையினை அடையவேண்டும்.
தன்னைப் போல் பிறரையும் அன்பால் நோக்குதல்
அன்பினால் பெருக்கெடுத்து உதவிபுரிதல்
உதவிபுரிவதால் பக்தி செலுத்துதல்
பக்தி செலுத்தினால் அருள் உண்டாகும்
அருளினால் சித்து என்னும் புற இன்பம்
புற இன்பத்தால் அக இன்பம் காணுதல்
புறநீக்கி அக இன்பமே பெரிதென முடிவாகுதல்
முடிவான இடமே முக்தி என்றும்
சத்து, சித்து, ஆனந்தம்,
இந்த நிலை அடைவதே பேரின்ப நிலை ஆகும்.
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://vpoompalani05.blogspot.in/
http://www.weebly.com/weebly/main.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக