புதன், 29 அக்டோபர், 2014

மெய் அறிவே பேரின்பம்


மெய் அறிவே பேரின்பம் மனிதனாக பிறந்த எவனுக்கும் வினை விடாது பற்றும், அந்த வினைப்பயனை, துயரங்களை பிறவி யெடுக்க வைக்கும் வினை இந்த ஸ்தூல சரீரத்தினால் சாதனை புரிந்தால், சுட்சும சரீரத்தில் , பிறவி மறுபடியும் பிறக்காது செய்து விடும். சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தவன் மனிதன், அப்படி சிந்திக்கத் தெரிந்த மனிதனின் சிந்தனை முழுவதும் செயலாவதில்லை. கோடிக்கணக்கான மக்களுள் சிலரது சிந்தனை வளம்தான் செயலாகிறது,அத்தகைய செயற்கரிய செயல்கள் புரிந்தவர்கள்தான் ஞானியர்களும் சித்தர்களும். இப்பிரபஞ்ச இயக்கத்தில் சிறந்தது வாயு ஆகும். இந்த வாயு நின்று விட்டால் உலக இயக்கமும் உயிர் வாழும் சீவராசிகளும் தாவர ஐங்கமங்களும் அழிந்து விடும். ஓடும் மனம் ஒடுங்கிவிட்டால் உள்ளம் அமுத கடலாகும். ஒடுங்குவது எங்ஙனம்? அலைபாயும் மனதை அலைய விடாது ஒருநிலைப்படுத்தும் சாதனை யோகமாகும். இதுவே நம்முள் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்தும். மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாைசை ஆகிய மூன்று ஆசைகள் மீது பற்றுக் கொண்டவன். இந்த ஆசையே அவன் உணர்ந்த தெய்வீக அடைய தடையாகும், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவில் முடிகிறது, பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது, மூன்று ஆசைகளையும் அற்றவர்கள் மனிதர்களில் குறைவே ஆகும், ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதிக்கின்றது.ஆசையில் பற்று இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன்தான் பிறவி பெருங்கடலை தாண்ட முடியும். எனவேதான் அருணகிரி நாதர் திருப்புகழில் மாவேழ் சன்னங்கெட மாயைவிடா மூவேவடனை " என்று பாடுகிறார், எனவே பிறந்து இந்த உலகில் வாழ்வதற்கு ஆசையே காரணமாகும். செல்வம் நிலையான காரணமாக துக்கத்தையே தருகின்றன. எனவே எதிலும் அளவுடன் சம்பாதித்து, அளவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நேர்மை, ஒழுக்கம், தெய்வ வழிபாடு, பெருந்தன்மை உயிர்களிடம்இரக்கம், போன்ற உத்தம குணங்களுடன் வாழ்பவனுக்கு துன்பம் ஏது? ஒழுக்கத்திலும், அறிவிலும், அன்பிலும் உயர்ந்த பெரியோர்கள் நட்பைப் பெறுவதும், செல்வம் வந்தபோது ெசெருக்கு அடையாமல் தெய்வ திருவருள் பெற்ற மெய் அன்பர்கள் நூல்களை ஆராய்ந்து அதன்படி நடப்பதும், மற்றவர்குளுக்கும் போதிப்பதும், தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கும் அளித்து பேரின்ப நலையை அடைய வேண்டும். உத்தம குணத்தவனாய் இருக்க வேண்டும். வீணாக வேண்டாத கேள்விகளை கேட்டு தெய்வத்தை பற்றி எதுவும் புரியாதவர்கள், விதண்டாவாதம் செய்து தானும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடும் மனிதர்களிடம் பழகாது இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். எல்லா சீவன்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும், சீவனிடம் கருனை வந்தால் ஈஸ்வரனிடம் பற்று உண்டாகும், ஈஸ்வரப் பற்றால் ஆசாபாசங்கள் தோசங்கள் அகன்று விடும். ஆசை முதலிய தோசங்கள் அகன்று விட்டால் நிராசை என்ற நிலைபெறும், சீவாத்மாவினை அறியும் தன்மை உண்டாகும். அறிவு வடிவமான பேரின்ப நிலையை அடைந்து துன்பம் ஒழிந்து இன்பம் பெறலாம். அருள் கடாட்சம் பெற்று பேரின்ப ம் அளித்து பேதமற்ற சொரூபமாமனந்தத்தில் அமருவர் என்பது விதியாகும். மனிதனுக்கு உயர்ந்த நிலை எய்த பல அறிவான வழிகள் உண்டு. அவை இசையறிவு, இயலறிவு, சுயஅறிவு, ஐயஅறிவு, உடலறிவு, உயிரறிவு, உலகறிவு முதலியன. இவற்றில் மேன்மையான மெய்அறிவை அறிபவனே அழியாத சீவமுத்தியைஅடைகின்றான். அந்த பேரின்ப பெரிய நிலை அடையவது எப்படி? என்று பக்தி மார்க்கத்தில்வாழ்நது முக்தியடைந்த நாயன்மார்கள் சித்தர்கள், ஆழ்வார்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழிகாட்டி சென்றுள்ளார்கள். அந்த பக்தி மார்க்கமே முதல்படியாகும், மேன்மையடைய விரும்பும் மனிதனுக்கு சத்ஸங்கம் தேவார இசைப்பாடல்கள், பசனை போன்ற இறை வழிகளே முக்திக்கு வழி வகுக்கின்றன. பக்தியின்று முக்திக்கு வழிவகுக்காது. பரமார்த்திக்க மார்க்கத்தை கடைபிடித்து, பிறருக்கு போதித்து முக்தி அடைந்த சைவ சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்கள், இவர்களின் தேவார பண்ணிசையகளையும் பக்த சேவைகளையும் செய்து மேன்மையடைய வழிகோள வேண்டும். இறைவனுடைய அரிய, பெரிய திருவிளையாடல்களையும்,அடியார்களை ஆட்கொண்ட கதைகளையும் கூறி நம்மை பரவசப்படுத்தி அவ்வழி நடக்க வழிகோழியுள்ளார்கள். அவ்வழியே நடந்தவர்களுக்கு இறைவனே குருபகவானாக வந்து உபதேசித்தார்கள் என்பது உண்மை. இதுபோன்ற அதிசயங்கள் அனேகம் உண்டு. இறைவனின் கருணையால் பிறப்பது அருள், அன்பின்றி அருள் சுரக்காது. அருளினால் இம்மை மறுமை என்ற இரு பயனும் அடையலாம், ஞானம்பெற்ற மகான்கள் தமக்குரிய நாள் வரும் வரை நம்மோடு நடமாடி நல்ல வழிகாட்டியாக இருந்து பிறவிப் பயனை பெற வழி வகுப்பார்கள். அவர்களை இனம் கண்டு தரிசித்து அவர்களின் அன்பையும் ஆசியையும்இறையருளையும் பெற்றுய்வோம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக