செவ்வாய், 8 செப்டம்பர், 2015

சமயம்


சமயம் சமயம் என்ற சொல் " சமைத்தல்" என்ற சொல்லிருந்து தோன்றியது. சமைத்தல் என்றால் பக்குவப் படுத்துதல் என்று பொருள் படும். அதாவது அரிசியை நாம் உண்பதற்கு ஏற்ற வகையில் உலையில் வைத்து, சூடேற்றி உணவாகப் பக்குவப்படுத்துவது போல பல்வேறு எண்ணங்களின் பிறப்பிடமாக திகழும் மனத்தை திருத்தி அதனை இறைவழிக்கு திருப்புவதற்காகப் பக்குவப்படுத்துவதே " சமயம்" ஆகும். சமையல் என்ற சொல் சமையம் என்றாகி, பிறகு சமயம் என்று ஆனது. அனைத்துச் சமயங்களின் அடிப்படை நோக்கமே மக்களின் மனத்தை பக்குவப் படுத்தி அவர்களை நல்ல வழியில் வாழச் ெசய்வதுதான், எனவே சமயம் சிறந்த ஓன்றாகும். நம் நாடு ஆன்மீக நாடு. ஆன்மிகம் மட்டும் நம் நாட்டில் வேரூன்றி இருக்காவிட்டால், நம் நாடு என்றைக்கோ அழிந்து போயிருக்கும். இறையச்சமும், இறை பக்தியும்தான் மக்களைத் தவறான வழிகளுக்கு ச் செல்லாமல் தடுத்து ஆட் கொண்டுள்ளன. எனவே சமய உணர்வு, அனைவருக்கும் இருந்தே ஆக வேண்டிய ஒன்றாகும். முதலில் இறைவனை அறிதல், பிறகு தன்னை அறிந்து கொண்டு தானே இறை நிலைக்கு உயர்தல் என்பதே ஆன்மிகத்தின் உண்மையான படி, இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவன் நடிகனாவதற்கு முன் இரசிகனாக இருக்க வேண்டும் என்று கூறலாம். யார் ஒருவர் எந்த ஒன்றை முதலில் இரசிக்கிறாரோ பிறகு அதுவாக ஆகி விடுகிறார். முதலில் ஜீவத்தமா, பிறகு பரமாத்மா. எனவே ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாக உயர்வதற்கு சமயம் வழிகாட்டுகிறது. சமயங்கள் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவரே உலகை இயக்குகிறார் என்பதையும் , அவரவர் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ற பலன்கள் அவரவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்றும், ஆணித்தரமாக கூறுகின்றன. மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு என்றும் கூறுகின்றன. சமயங்களே மக்களின் வாழ்க்கை நெறியினை அமைத்து, அதன்படி நல்ல நெறியினை கடைபிடிக்க வழிகளை கூறி வந்துள்ளன. மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லெவ்விக வாழ்க்கைக்கும் வழிநெறிகளை அமைத்து அவர்களை இறைபக்குவம் அடைய வழி சொல்கின்றன. அறவழியில் மக்கள் வாழ சமயம் தான் என்றால் அது மிகையாகாது. திருச்சிற்றம்பலம். ( படித்ததில் பிடித்தது) ஆன்மீகம் அறிவோம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக