சாக்கிய நாயனார்
"எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை ெபாருள் என்றே
துன்னிய வேடந்தன்னைத் துறவாத தூயசிவம்
தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்.
பெரியபுராணம் / சாக்கிய நாயனார் வரலாறு
எந்நிலையிலும் சிவபரம்பொருளை மறவாமல் வாழ்ந்து பிறவாமையை எய்தியவர் சாக்கிய நாயனார்.
சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் இந்த நாயனார்.
பிறப்பும் இறப்பும் வேண்டாம் எனக்கருதிய இவர் காஞ்சி மாநகர் வந்தடைந்தார். சாக்கிய மதம் சேர்ந்தார். அம்மத நூல்கள் எல்லாம் ஓதி உணர்ந்தார். மனதில் நிறைவு ஏற்பட வில்ைல. இறையருள் கூட்ட சைவ சமயம் சேர்ந்தார். சிவமே பரம்பொருள் எனத் தெளிவடைந்தார். சாக்கிய மதக் கோலத்திலேயே நின்று சிவபெருமானுடைய திருவடியை மறவாமல் வாழந்தார. புறக்கோலம் கொள்ளவில்லை.
திருநீரும் உருத்திராட்சமும் அணிதல் வேண்டும். அக்காலச் சூழலில் இந்த நாயனார் அப்படி வாழ்ந்தார்.
சிவலிங்க வழிபாடே எல்லா வழிபாடுகளிலும் சிறந்தது எனக் கொண்டார். நாள்தோறும் சிவலிங்கத் திருமேனி கண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும் எனும் நியதியை மேற்கொண்டார். இவர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் வெட்ட வெளியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். என்ன செய்வது என்று அறியதவராய் அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது பூவால் எறிவது போல் எறிந்தாார். இதனை இறைவர் மிக இனிமையாக ஏற்றுக் கொண்டார் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள், குழந்தைகள் அன்பின் மிகுதியால் தாய் தந்தையரின் மேல் உபத்திர தொந்தரவுகள் கொடுப்பது போல் இறையனாரும் இதை ஒரு தந்தையாகவே கல்லால் அடியும் பெற்றுவந்தார். இதனையே பட்டிணத்தடிகளும், ஒரு வரியில்
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா இல்லாததால் அல்லவோ,
இறைவா கச்சிஏகம்பனே. ............. என்கிறார்
அன்றாடம் உணவு உண்பதன் முன் கல்லெறிந்து விட்டு தான் உணவு உண்பார். ஒரு நாள் இதனை மறந்து உணவு உண்பதற்கு அமர்ந்தார். " கெட்டேன் பெருமான் காணாமல் இருந்தேன்." எனக் கூறி எழுந்தார். அளவிலா அன்புடன் மிக விரைந்து வந்தார். குறி தவறாமல் கல் எறியும் பொருட்டு உணவை விட்டு ஓடி வரும் நாயனார் முன் கண்ணுதற் கடவுள் விண்ணிடை உமாதேவியாருடன் தோன்றியருளினார்.
மூவரும் தேவரும் காணமுடியாத முழுமுதற் பொருளைக் கண்குளிரக் கண்ட சாக்கிய நாயனார் ஆறாத அன்புடன் பபன்முறை பணிந்தார். இறைவர் நாயனாருக்கு சிவலோகம் ெகாடுத்தருளினார். எந்நிலையிலும் ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்ந்தார் நாயனார். அதிலேயே வெற்றியும் பெற்றார்.
சாக்கிய நாயனார் வழிப்ட்ட சிவாலயம் காஞ்சிபரத்தில் உள்ளது.
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய ஓம்
நன்றி ; தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக