புதன், 16 செப்டம்பர், 2015

திரு ஐந்தெழுத்தின் பெருமை


திரு ஐந்தெழுத்தின் பெருமை திரு ஐந்தெழுத்தின் பெருமை "அஞ்செழுத்துங்கண்டீர் அருமறைகள் ஆவனவும் அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் / நஞ்சவித்த காளத்தி யார்யார்க்குங் காண்டற்கு அரிதாய்ப்பேய் நீளத்தே நின்ற நெறி ..... " நக்கீர தேவநாயனார் தி,முறை 11 திரு ஐந்தெழுத்தே அருமறை ஆகும்.அஞ்செழுத்தை ஓதி மந்திர யோகம் கைவரப் பெற்றவர்கட்கு முத்தி நெறி ( பிறவா நெறி) மிக எளிதாகும் மற்றவர்கட்கு அரிதாகும். பிறவாமை வேண்டுவோர் பல வழிகளை மேற்கொள்கிறார்கள் இது இயல்பே ஆகும். மிக எளிய வழி திரு ஐந்தெழுத்தை எப்போதும் ஓதுவது தான் என்பது நக்கீர தேவ நாயனாரின் அனுபவ வாக்கு ஆகும். கோபம் வரும் காலங்களிலும், துன்பம் வரும் காலங்களிலும் நோய் மிகும் காலங்களிலும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லிப் பழகிவிட வேண்டும், பழக்கத்தினால் இதனை செய்யலாம், காளத்தியிலிருந்தே கயிலையைக் கண்டு வணங்கிய நக்கீர தேவ நாயனார் அல்லவா இதனைக் கூறுகிறார், எனவே இது ஒரு மகா மந்ததிரம் நாமும் அனுதினமும் ஓதி பழகுவோம், நற்பயன் பெறுவோம், நன்றி ; தமிழ் வேதம் திருச்சிற்றம்பலம் ........ ஓம் நமசிவாய ஓம் ஆனமீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக