புதன், 22 பிப்ரவரி, 2017

தமிழ் வேதங்கள் போற்றும் சிவபெருமான்

"தாயவன் காண் உலகிற்கு்த் தன்ஒப்பில்லாத்
   தத்துவன்காண் மைலமங்கை பங்கா என்பார்
வாயவன் காண் வரும் பிறவி நோய்தீர்ப்பான் காண்
   வானவர்க்குந் தானவர்க்கும்      மண்ணுள்ளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்கு சித்த மாரத்
  திருவடியே உள்கி நினைந் தெழுவார் உள்ளம்
எயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
   ஏகம்பன் காண் அவன்என் எண்ணத்தானே.  
                             அப்பர் தேவாரம் 6

1. உலகதிற்கு தாயாகத் திகழ்பவர் சிவபெருமான்
2.தமக்கு ஒப்பான வேறு ஒருவர் உலகில் இல்லாத தனித்தன்மை உடையவர்
3. உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் "அருளது சக்தியாகும் அரன்தனக்கு " என்பார் சிவஞான சித்தர்
4. அவரை வாழ்த்தி வழிபடும் அடியார்களின் சொல்லின்கண் விளங்கி நின்று பெரும் பயனை அளிப்பவர்
5.பிறவியாகிய நோய் தீர்ப்பவர்
6.வானவருக்கும், அசூரர்களுக்கும், மண்ணுலகில் வாழும் மக்களுக்கும் எட்டாதவர்
7. அப்பெருமானுடைய திருவடியை முழுமனதுடன் யார் நினைந்து வழிபடுகிறார்களோ அவர்களுடைய உள்ளத்தில் பொருந்தி விளங்குபவர். நிறைந்த நெஞ்சுடன் வழிபடும் அடியவர்களின் நெஞ்சினுள்ளே குடி கொள்ளும் ஏகம்பப் பெருமான், ஆடம்பரமான வழிபாட்டை வேண்டுவதில்லை. இப்பெருமான் அன்பான வழிபாட்டில் விளங்கித் தோன்றுவார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக