- சிவபெருமானுக்கும் ஐந்துக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில...
- பஞ்சாட்சரம்
- நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
- சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
- சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
- சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
- சி - மகா காரண பஞ்சாட்சரம்
- சிவமூர்த்தங்கள்
- பைரவர் - வக்கிர மூர்த்தி
- தட்சிணாமூர்த்தி - சாந்த மூர்த்தி
- பிச்சாடனர் - வசீகர மூர்த்தி
- நடராசர் - ஆனந்த மூர்த்தி
- சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி
- பஞ்சலிங்கத் தலங்கள்
- முக்திலிங்கம் - கேதாரம்
- வரலிங்கம் - நேபாளம்
- போகலிங்கம் - சிருங்கேரி
- ஏகலிங்கம் - காஞ்சி
- மோட்சலிங்கம் - சிதம்பரம்
- பஞ்சவனத்தலங்கள்
- முல்லை வனம் - திருக்கருகாவூர்
- பாதிரி வனம் - அவளிவணல்லூர்
- வன்னிவனம் - அரதைபெரும்பாழி
- பூளை வனம் - திருஇரும்பூளை
- வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
- பஞ்ச ஆரண்யத் தலங்கள்
- இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
- மூங்கில் காடு - திருப்பாசூர்
- ஈக்காடு - திருவேப்பூர்
- ஆலங்காடு - திருவாலங்காடு
- தர்ப்பைக்காடு - திருவிற்குடி
- பஞ்ச சபைகள்
- திருவாலங்காடு - இரத்தின சபை
- சிதம்பரம் - பொன் சபை
- மதுரை - வெள்ளி சபை
- திருநெல்வேலி - தாமிர சபை
- திருக்குற்றாலம் - சித்திர சபை
- ஐந்தொழில்கள்
- படைத்தல்
- காத்தல்
- அழித்தல்
- மறைத்தல்
- அருளல்
- ஐந்து தாண்டவங்கள்
- காளிகா தாண்டவம்
- சந்தியா தாண்டவம்
- திரிபுரத் தாண்டவம்
- ஊர்த்துவ தாண்டவம்
- ஆனந்த தாண்டவம்
- பஞ்சபூதத் தலங்கள்
- நிலம் - திருவாரூர்
- நீர் - திருவானைக்கா
- நெருப்பு - திருவண்ணாமலை
- காற்று - திருக்காளத்தி
- ஆகாயம் - தில்லை
- இறைவனும் பஞ்சபூதமும்
- நிலம் - 5 வகை பண்புகளையுடையது (மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை)
- நீர் - 4 வகை பண்புகளையுடையது (சுவை, ஒளி, ஊறு, ஓசை)
- நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது. (ஒளி, ஊறு, ஓசை)
- காற்று - 2 வகை பண்புகளையுடையது. (ஊறு, ஓசை)
- ஆகாயம் - 1 வகை பண்புடையது. (ஓசை)
- ஆன் ஐந்து
- பால்
- தயிர்
- நெய்
- கோமியம்
- கோசலம்
- ஐங்கலைகள்
- நிவர்த்திக் கலை
- பிரதிட்டைக் கலை
- வித்தைக் கலை
- சாந்திக் கலை
- சாந்தி அதீத கலை
- பஞ்ச வில்வம்
- நொச்சி
- விளா
- வில்வம்
- கிளுவை
- மாவிலங்கம்
- ஐந்து முகங்கள்
- ஈசானம் - மேல் நோக்கி
- தத்புருடம் - கிழக்கு
- .அகோரம் - தெற்கு
- வாம தேவம் - வடக்கு
- சத்யோசாதம் - மேற்கு
- ஐந்து நிறங்கள்
- ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
- தத்புருடம் - கிழக்கு - பொன் நிறம்
- அகோரம் - தெற்கு - கருமை நிறம்
- வாம தேவம் - வடக்கு - சிவப்பு நிறம்
- சத்யோசாதம் - மேற்கு - வெண்மை நிறம்
- பஞ்ச புராணம்
- தேவாரம்
- திருவாசகம்
- திருவிசைப்பா
- திருப்பல்லாண்டு
- பெரியபுராணம்
- இறைவன் விரும்ப பக்தகள் செய்யும் ஐந்து
- திருநீறு பூசுதல்
- உருத்ராட்சம் அணிதல்
- பஞ்சாட்சரம் ஜெபித்தல்
- வில்வ அர்ச்சனை புரிதல்
- திருமுறை ஓதுதல்
- பஞ்சோபசாரம்
- சந்தனமிடல்
- மலர் தூவி அர்ச்சித்தல்
- தூபமிடல்
- தீபமிடல்
- அமுதூட்டல்
- பஞ்ச பிரம்ம மந்திரங்கள்
- ஓம் தனியொளி தலைவா போற்றி ( ஓம் ஈசானமூர்த்தியே நம)
- ஓம்உயிரொளி பிரானே போற்றி ( ஓம் தத்புருஷ வக்தராயநம)
- ஓம் அவிரொளி இயவுள் போற்றி (ஓம்அகோர இருதயாய நம)
- ஓம்உமையொரு கூறா போற்றி ( ஓம் வாமதேவ ஹற்யாய நம)
- ஓம் மன்னொளி முதலே போற்றி ( ஓம்சத்யோஜாத மூர்த்தியே நம)
- திருச்சிற்றம்பலம்
- தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
செவ்வாய், 14 பிப்ரவரி, 2017
சிவபெருமானும் ஐந்துக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக