தமிழே ஈசன்- ஈசன் உள்ள இடமே செல்வ செழிப்பு
தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணி நல்ல
முழவமொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
...........
...........
கமழும் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே.
( நீர்மை - இனிமை, மேன்மை) ....... திருஞான சம்பந்தர் தமிழ் வேதம் 1
எந்த இடத்தில் தமிழின் மேன்மைகளைப் பேசி வீணை முழவம், தாளம், மொந்தை முதலிய துணைக்கருவிகளுடன் தமிழ் வேதப் பாடல்கள் பாடப்படுகின்றனவோ, அந்த இடத்தில்( பவள வண்ணர்) பவளம் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் எழுந்தருளுவார் என்பது இறந்தாரை எழுப்பும் திறம் பெற்ற திருஞானசம்பந்த பெருமானுடைய அனுபவ அருளுரையாகும்.
இறைவர் தமிழாய் இருக்கின்றார் என்பது ஞான சம்பந்தருடைய அனுபவம்,
" பண்ணும் பதம் ஏழும் பலவோசைத் தமிழ் அவையும்
............
விண்ணும் முழுதானான் இடம் வீழிம் மிழலையே," தமிழ் முதல் வேதம்
எனவே தமிழன் பெருமையை பேசுவது என்பது பரம்பொருளைப் பற்றி பேசுவதே ஆகும். நம்முடைய வீடுகளில் வாரம் ஒருநாள் அன்பர்கள் சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தலாம், வந்துள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து தமிழின் பெருமைகளைப் பேசியும், திருமுறைகளை இசையுடன் பாடியும் வழிபடலாம். அவ்வாறு தமிழால் தமிழ் திருமுறை பாடல்கள் பாடும் போது ஈசன் சிவபெருமான் அங்கு விளங்கி தோன்றுவார், அவ்வாறு ஈசனே அங்கு தோன்றும் போது, அவரின் கீழ் உள்ள அனைத்து தேவாதி தேவர்களான, குபேரன், இந்திரன், வருணன் ஆகிய அனைவரும் வருவர், அப்போது அங்கு செல்வ செழிப்பும், வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஒரு உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி வரும் போது அவரின் கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளும் வருவதுதானே இயல்பு. எனவே எங்கு தமிழ் பாடல் தமிழ் இயல் இசை நடமாடுகிறதோ அங்கு ஈசனும், அனைத்து வளங்களும் வந்து சேரும் என்பது அருளாளர்கள் வாக்கு.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வேதம்.!!
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக