ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சிவசொரூபம்

சிவசொரூபம்
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை காட்டுவதே சிவசொரூபம்.

சந்திரன் ; ஈசனின் ஜடாமுடியில் உள்ள சந்திரன் நம்முடைய வாழ்வில் வரும் இன்பமும், துன்பமும் மாறி மாறி  வளர்பிறையாகவும், தெய்பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகிறது.

கங்கை; தலையில் இருக்கும் கங்கை  எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும் நம்முடைய மனம் அதனால் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

கழுத்திலிருக்கும் பாம்பும் விசமும் ; ஒவ்வொரு நிமிடமும் ந்ம்மைப் பாவக்குழியில் தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை சுற்றிக்கொண்டு காத்திருக்கிறது. ஆனால் அந்த விசம் உள்ளே இறங்க நாம் விட்டுவிடக்கூடாது. இதையே பரமனின் கழுத்தைச்சுற்றிய பாம்பும் அவர் விஷத்தை கண்டத்தில் தேக்கி வைத்திருப்பதும் உணர்த்துகிறது.

புலித்தோல்;மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து நீங்கிட உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழ வேண்டும் என்பதை புலித்தோல் உடை அறிவுறுத்துகிறது.

உமையொருபாகம்; தேகத்தில் பாதியாக தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும் சிவபெருமான் காமத்தை வென்றவர். காமனையே எரித்தவர். அதைப் போல நாமும் உலகியலைப் பற்றி லெவ்விக வாழ்வில் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகாமல் அதை தூய்மைப்படுத்தி ஆன்மீகமாக வாழ பழகி்க் கொள்ள ேவண்டும்.

சிவம் உணர்த்தும் தத்துவங்கள் ;
1, வாழ வேண்டும்  ; சிவநெறி
2. வளர்க வேண்டும் ; அன்பு
3. ஓங்க வேண்டும் ; பண்பு
4.நிலைக்க வேண்டும் ; தர்மம்
5. ஜெயிக்க வேண்டும் ; சத்தியம்
6. தழைக்க வேண்டும் ; குடும்பம்

பிரபஞ்ச ரகசியம் ;

1. வழிபாடு, 2. தன்னை அறிதல், 3. பரபஞ்ச ரகசியம்
4.உணர்ச்சி  5. மன்னித்தல்   6. மன்னிப்பு கேட்டல்
7. நன்றி உணர்வு  8. தியானித்தல்,  9. சக்கரங்களின் சூட்சமம்

திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய ஓம்

தொகுப்பு ; வை. பூமாலை. சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக