வியாழன், 5 பிப்ரவரி, 2015

தமிழகத்துச் சிவஞானியார்


தமிழகத்துச் சிவஞானியார் தமிழகத்து சிறந்த சிவஞானியாராகத் திகழ்ந்தவர் தருமை ஆதீன 13 வது சந்நிதானம் தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் ஆவார், தவத்திரு ஞான சம்பந்த தேசிகர் காசிக் கங்கை நீரைத் தங்கள் ஆன்மார்த்த மூர்த்தியின் திருமுன்பிற்கு வருவித்து, அதில் தமக்கு முற்பட்ட மகா சந்நிதானங்களையும் நினைந்து நினைந்து மூழ்கியவர், இச்செயலுக்கு பெரிதும் முன்னின்று உதவியவர், ஆதீனத்திருக்கூட்டத்து அடியவருள் ஒருவராகிய விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள். மகா சந்நிதானம் அவர்கள் தம் ஆன்மார்த்த மூர்த்தியுடன் காசியாத்திரை சென்று திரும்புவதில் இடர்பாடுகள் உள்ளன என எண்ணினார், " தமது ஆதீனத் திருக்கூட்டத்தில் யாரேனும் கங்கையைத் தருமைக்கு கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர் ஒருவராகினும் இல்லையோ" என்று கேட்டார்கள். அச்சமயத்தில் அங்கிருந்த விருத்தாசலத்தம்பிரான் மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் " திருவருளையும் குருவருளையும் துணைக் கொண்டு அடியேன் இப்பணியை நிறைவேற்றுகிறேன், " என்றார், அதன்படி குருமகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருவாங்கூர் மன்னரது ஆட்சிக்குட்பட்ட பத்மநாதபுரத்திற்கு சென்றார்கள். அங்குள்ள சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானார் திருமுன் நின்று தம்மை மறந்து சாராங்கி வாத்தியத்துடன் திருமுறைப்பாடல்களை கண்ணீர் மல்க இனிமையாக பாடி பரவச முற்றிருந்தார், இந்நிலையில் இவருடைய தோளில் இறைவர் நின்று நடனம் புரிந்தார், ஆலய வழிபாட்டிற்காக வந்த அரசன் இக்காட்சியினைக் கண்டு வியந்து போனார், தம்பிரான் சுவாமிகளை வணங்கி அரண்மனைக்கு அழைத்து சென்று உபசரித்து " அடியேனால் ஆகத்தக்க பணி ஏதேனும் உண்டோ? " என கேட்டார், தம்பிரான் சுவாமிகள் கங்கை நீர் தருமைக்கு வரவேண்டிய நிலைமையை தெரிவித்தார்கள், உடனே அரசன் யானைகள் ஒட்டங்கள், பலவற்றை அனுப்பி அளவற்ற பாத்திரங்களால் கங்கை நீரைக் கொணரச் செய்து தருமை ஆதீனத்தின் பூசை முற்றத்தில் ஏராளமாக நிரப்பி வைக்கப்பட்டது. முன் கூறியது போல குருமகாசந்நிதானம் அவர்கள் கங்கை நீரில் மூழ்கி மகிழ்ந்தார்கள், இதிலிருந்து நாம் உணரக்கூடியவை: விருத்தாசலத் தம்பிரான் சுவாமிகள் திருமுறைகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர் சாரங்கி வாத்தியம் வாசிப்பதிலும் வல்லவர், தம்முடைய அரிய வேலை கங்கை நீரைக் கொண்டு வருவது என்பதே தனது ஆத்மானந்த குறிக்கோளும், மகா சந்நிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார், பத்மநாபபுரம் சிவலாயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் முன்பு திருமுறைப் பாடல்களை சாரங்கி மூலம் இசைத்து பாடி உள்ளம் உருகினார், தம்மையே மறந்திருந்தார், அந்நிலையில் அரசரை அங்கே வரவழைத்தது இறையருள் , திருமுறைப் பாடல்கள் இறையாற்றலை நாம் உணர்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முதலில் இறைவர் மீதும் தாம் எடுத்துக் கொண்ட பணி மீதும் உறுதியான நம்பிக்கை , திருமுறைப்பாடல்கள் இறைவரை ஈர்க்கும் என்ற தளராத எண்ணம், இத்துடன் அப்பாடல்களில் மனம் ஒன்றி பாட வேண்டும் ,இறைவரை நம்பால் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை நம் தமிழ் வேத திருமுறைப்பாடல்கள். " தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்திலும் தில்லை மன்றிலும் நடமாடும் அம்பலவாண!" - கோயில் நான் மணிகமாலை பட்டினத்து அடிகள் நன்றி ! தமிழ் வேதம் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு: http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

6 கருத்துகள்:

  1. If you are looking for the best institute that guarantees top notch study materials, it is just here VMware Online Training in Hyderabad

    பதிலளிநீக்கு
  2. hi,i read your blog,its good,I am really happy reading your well written articles online hadoop training thanks for sharing this.

    பதிலளிநீக்கு