செவ்வாய், 29 மார்ச், 2016

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

ஏழ்மை வெட்கத்திறிகுரியது அல்ல !

இந்தியா முழுவதும் ஜெகஜோதியாக நடந்து கொண்டிருப்பது கல்வி வியாபாரமும், கல்யான சந்தையில் வரதட்சணை என்ற பெயரில் நடக்கும் மணமகள் வியாபாரமும் தான்.
  தனியார் சுயநிதிக்கல்லூரிகள் வந்தபின் மருத்துவம், பொறியல்  படிப்பவர்கள் எண்ணிக்கை பலமடங்காக பெருகிவிட்டது. இதில் படிப்பவர்கள் அனைவரும் கல்வி நோக்கோடு படிப்பவர்களா? என்பது சந்தேகம் தான்? அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளையே கொண்டவர்களாகவே திகழ்கின்றனர்.
  இன்றைய கல்வி சந்தையில் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் இடையே பொருளாதார இடைவெளி பூதாகரமாக தெரிகிறது.
  தினந்தோறும் ஒரு புதிய சுடிதாரில்  வரும் பணக்கார மாணவிகளும், வருடம் முழுவதும் ஆறு சுடிதாா் கூட இ்ல்லாத ஏழை மாணவிகளுக்கும் பளி்ச சென்று வித்தியாசம் தெரிகிறது. பைக்கிலும், காரிலும் வரும் பணக்கார இளைஞனுக்கும் ,தினம் பஸ்ஸிலும், சைக்கிளிலும், இரயிலும் வரும் ஏழை இளைஞனுக்கும் இடைவெளி கூடிவிட்டது.
   எவ்வளவு கெட்டாலும், தாங்கிப் பிடிக்கும் பணவசதி உடைய பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை. நடுத்தர, ஏழை மாணவ, மாணவியர் தாழ்வு மனப்பான்மை கொள்வது தடுக்கப்பட வேண்டியது அவசியமே.
  பணத்தை வீசுயெறயும் ஒருவன் பின்னால் பத்துபேர் நிற்கிறார்களே என்று கூச்சப்படாதீர்கள், படிப்பில் கெட்டிக்காரராய் உங்களை நிரூபித்தால் அதே பத்துப் பேர் உங்கள் பின்னால் சந்தேகம் கேட்டு வருவார்கள் என்பதை உணர வே்ண்டும்.
  பணக்கார பிள்ளைகள் மகாலட்சுமியால் பலரை ஆளுகிறார்கள்,
 ஏழைப்பிள்ளைகள் சரஸ்வதியால் பலரை ஆளட்டுமே.
  இராமேஸ்வரத்தில் சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போட்டு படித்து மேதையானவர்தான் பாரதப் பிரதமரும், அணு விஞ்ஞானியுமான திரு அப்துல்கலாம்,
  வயலில்வேலை பார்த்தபடியே மண்வெட்டியில் கரித்துண்டால் எழுதி எழுதிப் படித்தவர்தான் ஆப்ரகாம் லிங்கன்.  ஆப்ரகாம் லிங்கனின் தாடியை பற்றி மட்டும் தெரிந்தால் போதாது. அவரின் தன்னம்பிக்கையையும் தெரிய வேண்டாமா?


   ஆப்ரகாம் லிங்கனின்  தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி, ஆனால் அவரது மகனோ அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார்.
  உழைப்பாலும், முயற்சியாலும் உயர்ந்த ஜனாதிபதி லிங்கனை அவமானப் படடுத்தும் எண்ணத்துடன் அமெரிக்க பாராளு மன்றத்தில் ஒருவர், " மிஸ்டர் லி்ங்கன் உங்களை இங்கே பலபேர் பராட்டி பேசினார்கள், அதுகுறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம், உங்கள் பழமை, வறுமை, குறித்து நினைவு கொள்ளுங்கள்,உங்கள் அப்பா எனக்கு தைத்துக் கொடுத்த   "சூ" இன்னும் எனது காலில் இருக்கிறது, ஞாபகம் இருக்கட்டும் " என்று லிங்கன் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதை குத்திக் காட்டினார்.
  இதற்கு லிஙகனோ சற்றும் பதட்டப் படாமல், எழுந்து, " நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த "சூ" 
இன்னும் உங்களிடம்உழைக்கிறது என்றால் அவர் எவ்வளவு தேர்ந்த சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது. அவருக்கு மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அதுமட்டுமல்ல இப்போது உம் " சூ" கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள் அதை நான்சரி செய்து தைத்துக் தருகிறேன். அந்தத்  தொழிலும் நான் நன்கு அறிவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும், இரண்டுமே நன்றாகத் தெரியும் என்றார்.  ஏழ்மையிலும் தனது தானும் உயர்ந்தவன் தான் என்ற தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் அவருக்கு அவ்வாறு சபையிலேயே தைரியம் அளித்தது கண்டு யாவரும் வியந்தனர்.
  ஏழ்மையோ வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல, தாழ்வு மனப்பான்மையை தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

படித்ததில் பிடித்தது " சுகி சிவத்தின் / வெற்றி நிச்சயம்  கட்டுரை
தொகுத்தவர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக