சித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை
திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெய்வ ஆகர்ஷண சக்திக்காக அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.
1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 2 கிலோ
2. படிகார பஸ்பம் - 10 கிராம்
3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-
4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-
5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-
7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-
8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-
9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-
10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-
11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-
12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.
இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத
வேண்டும்.
சித்தர்கள் திருநீறு தயாரிக்கும் முறை ..2
திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.
மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறை
1. பசுமாட்டுச் சாணம்
2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)
3. வில்வப்பழ ஓடுகள்
மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.
நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.
இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.
எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.
நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.
இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.
பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...
புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு
என்று குரு அகத்தியர் கூறுகிறார்.
இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி சித்தர்தாசன் சுந்தர்ஜி மற்றும் மிஷ்டிக் செல்வம் ஐயா,சதானந்த சுவாமிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக