திங்கள், 14 மார்ச், 2016

பட்டீச்சரம் - தேனுபுரீஸ்வரர் கோவில்

பட்டீச்சரம் - தேனுபுரீஸ்வரர் கோவில்


காமதேனு பசுவின் மகள் பட்டி பூஜித்ததால் பட்டீச்சரம் என பெயர் ஏற்பட்டது.












வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயாஹத்தி தோஷத்தை இராமர் இந்த இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டார். இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.

பராசக்தி தவம் செய்து வழிபட்ட ஸ்தலம்.

மேதாவி முனிவரின் சாபத்தால் நாய் வடிவம் பெற்ற தர்மசர்மா என்ற அந்தணன் ஞானவாவியில் நீராடி சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம்.

விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.

சோழர்கள் காலத்தில் பிரதிஷ்டை செய்த துர்க்கை. இந்த துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள்.

திருவலஞ்சுழி, பழையாறை, மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் ஞானசம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியை விலகியிருக்குமாறு சொல்லி அருளிய சிறப்புடையது. இங்குள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக